பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Numbers எண்ணாகமம் בְּמִדְבַּר
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36
எண்ணாகமம் 3 | Numbers 3
The Sons of Aaron (Leviticus 10:1–7)
1 சீனாய் மலையில் கர்த்தர் மோசேயோடே பேசின நாளிலே, ஆரோன் மோசே என்பவர்களுடைய வம்சவரலாறாவது:
1 This is the account of Aaron and Moses at the time the LORD spoke with Moses on Mount Sinai.
1 ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயுடன் பேசிய காலத்தில் ஆரோன், மோசே ஆகியோரின் வழிமரபினர் இவர்களே;
2 ஆரோனுடைய குமாரர், முதல் பிறந்தவனாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்களே.
2 These are the names of the sons of Aaron: Nadab the firstborn, then Abihu, Eleazar, and Ithamar.
2 ஆரோனின் புதல்வர் பெயர்கள் இவையே; தலைமகன் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர்.1
1 எண் 26:60.
3 ஆசாரிய ஊழியம்செய்கிறதற்கு அவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேகம்பெற்ற ஆசாரியரான ஆரோனுடைய குமாரரின் நாமங்கள் இவைகளே.
3 These were Aaron’s sons, the anointed priests, who were ordained to serve as priests.
3 இவை குருத்துவப் பணிக்கென அருள்பொழிவு பெற்றுத் திருநிலைப்படுத்தப்பட்ட குரு ஆரோனின் புதல்வர் பெயர்கள்;
4 நாதாபும் அபியூவும் சீனாய் வனாந்தரத்தில் அந்நிய அக்கினியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்தபோது, கர்த்தருடைய சந்நிதியில் மரித்துப்போனார்கள்; அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை; எலெயாசாரும் இத்தாமாருமே தங்கள் தகப்பனாகிய ஆரோனுக்கு முன்பாக ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.
4 Nadab and Abihu, however, died in the presence of the LORD when they offered unauthorizeda fire before the LORD in the Wilderness of Sinai. And since they had no sons, only Eleazar and Ithamar served as priests during the lifetime of their father Aaron.
4 ஆனால், நாதாபும் அபிகூவும் சீனாய்ப் பாலைநிலத்தில் ஆண்டவர் திருமுன் வேற்று நெருப்பைக் கொண்டு வந்ததால் ஆண்டவர் முன்னிலையிலேயே கொல்லப்பட்டனர்; அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே, எலயாசரும் இத்தாமரும் தங்கள் தந்தை ஆரோன் முன்னிலையில் குருக்களாகப் பணியாற்றினர்.2
2 லேவி 10:1-2; எண் 26:61.
The Duties of the Levites
5 கர்த்தர் மோசேயை நோக்கி:
5 Then the LORD said to Moses,
5 மேலும், ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
6 நீ லேவிகோத்திரத்தாரைச் சேர்த்து, அவர்கள் ஆசாரியனாகிய ஆரோனுக்குப் பணிவிடைசெய்யும்படி அவர்களை நிறுத்து.
6 “Bring the tribe of Levi and present them to Aaron the priest to assist him.
6 லேவிக் குலத்தை அழைத்து வந்து குரு ஆரோன் முன் அவர்களை நிறுத்து; அவர்கள் அவனுக்குப் பணிவிடை செய்யட்டும்.
7 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக அவனுடைய காவலையும் எல்லாச் சபையின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடை வேலைகளைச் செய்யக்கடவர்கள்.
7 They are to perform duties for him and for the whole congregation before the Tent of Meeting, attending to the service of the tabernacle.
7 திருஉறைவிடத்தில் அவர்கள் பணிசெய்யும்போது, சந்திப்புக் கூடாரத்தின் முன் அவனுக்காகவும் அனைத்து மக்கள் கூட்டமைப்புக்காகவும் தங்களுக்குரிய பொறுப்பை நிறைவேற்றுவர்.
8 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் தட்டுமுட்டு முதலானவைகளையும், இஸ்ரவேல் புத்திரரின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யக்கடவர்கள்.
8 They shall take care of all the furnishings of the Tent of Meeting and fulfill obligations for the Israelites by attending to the service of the tabernacle.
8 சந்திப்புக் கூடாரத்தின் அனைத்துப் பணிப் பொருட்களுக்கும் பொறுப்பு அவர்களே; திருஉறைவிடத்தில் அவர்கள் பணி செய்கையில் இஸ்ரயேல் மக்களுக்கானத் தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவர்.
9 ஆகையால் லேவியரை ஆரோனிடத்திலும் அவன் குமாரரிடத்திலும் ஒப்புக்கொடுப்பாயாக; இஸ்ரவேல் புத்திரரில் இவர்கள் முற்றிலும் அவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
9 Assign the Levites to Aaron and his sons; they have been given exclusively to himb from among the Israelites.
9 லேவியரை ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் ஒப்படைத்துவிடு; இஸ்ரயேல் மக்களுள் அவர்கள் முற்றிலும் அவனுக்குக் கொடுக்கப்பட்டடிருக்கிறார்கள்.
10 ஆரோனையும் அவன் குமாரரையுமோ, தங்கள் ஆசாரிய ஊழியத்தைச் செய்வதற்காக நியமிக்கக்கடவாய், அந்த ஊழியத்தைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன் என்றார்.
10 So you shall appoint Aaron and his sons to carry out the duties of the priesthood; but any outsider who approaches the tabernacle must be put to death.”
10 நீ ஆரோனையும் அவன் புதல்வரையும் அவர்கள் குருத்துவப் பொறுப்புகளை நிறைவேற்றுமாறு நியமனம் செய். ஆனால், வேறு எவனும் நெருங்கி வந்தால் அவன் கொல்லப்படுவான்.
11 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
11 Again the LORD spoke to Moses, saying,
11 மீண்டும் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
12 இஸ்ரவேல் புத்திரரில் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறான யாவுக்கும் பதிலாக, நான் லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து எடுத்துக்கொண்டேன்; அவர்கள் என்னுடையவர்களாயிருக்கிறார்கள்.
12 “Behold, I have taken the Levites from among the children of Israel in place of every firstborn Israelite from the womb. The Levites belong to Me,
12 இதோ! நான் இஸ்ரயேல் மக்களிலிருந்து லேவியரைப் பிரித்தெடுத்துள்ளேன்; இஸ்ரயேல் மக்களில் கருப்பையைத் திறக்கும் தலைப்பேறனைத்திற்கும் இவர்கள் ஈடாக இருப்பார்கள். லேவியர் எனக்கே உரியவர்.
13 முதற்பேறானவையெல்லாம் என்னுடையவை; நான் எகிப்துதேசத்தில் முதற்பேறான யாவையும் சங்கரித்த நாளில், இஸ்ரவேலில் மனிதர்முதல் மிருகஜீவன்மட்டுமுள்ள முதற்பேறான யாவையும் எனக்கென்று பரிசுத்தப்படுத்தினதினாலே, அவைகள் என்னுடையவைகளாயிருக்கும்; நான் கர்த்தர் என்றார்.
13 for all the firstborn are Mine. On the day I struck down every firstborn in the land of Egypt, I consecrated to Myself all the firstborn in Israel, both man and beast. They are Mine; I am the LORD.”
13 ஏனெனில், எல்லாத் தலைப்பேறும் என்னுடையது. எகிப்து நாட்டில் தலைப் பேறனைத்தையும் நான் சாகடித்த நாளில் இஸ்ரயேலின் தலைப்பேறனைத்தையும் மனிதரையும் விலங்கையும், எனக்கெனப் புனிதப்படுத்தினேன்; அவர்கள் எனக்கே உரியவர்கள்; நானே ஆண்டவர்.3
3 13:2.
The Numbering of the Levites
14 பின்னும் கர்த்தர் சீனாய் வனாந்தரத்தில் மோசேயை நோக்கி:
14 Then the LORD spoke to Moses in the Wilderness of Sinai, saying,
14 பின்னர், சீனாய்ப் பாலைநிலத்தில் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
15 லேவிபுத்திரரை அவர்கள் பிதாக்களின் வம்சங்களின்படியே எண்ணுவாயாக; அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணுவாயாக என்றார்.
15 “Number the Levites by their families and clans. You are to count every male a month old or more.”
15 மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக லேவியின் புதல்வரைக் கணக்கெடு; ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஒவ்வோர் ஆண்பிள்ளையையும் நீ எண்ண வேண்டும்.
16 அப்பொழுது கர்த்தருடைய வாக்கின்படி, மோசே தனக்குக் கற்பிக்கப்பட்ட பிரகாரம் அவர்களை எண்ணினான்.
16 So Moses numbered them according to the word of the LORD, as he had been commanded.
16 ஆண்டவர் கட்டளையிட்டுக் கூறிய அவர் வார்த்தையின்படி மோசே அவர்களை எண்ணினார்.
17 லேவியின் குமாரர் தங்கள் நாமங்களின்படியே, கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
17 These were the sons of Levi by name: Gershon, Kohath, and Merari.
17 பெயர் வாரியாக லேவியின் புதல்வர் இவர்களே; கேர்சோன், கோகாத்து, மொராரி ஆகியோர்.
18 தங்கள் வம்சத்தின்படியே கெர்சோனுடைய குமாரரின் நாமங்கள், லிப்னி, சீமேயி என்பவைகள்.
18 These were the names of the sons of Gershon by their clans: Libni and Shimei.
18 குடும்ப வாரியாகக் கேர்சேன் புதல்வர் பெயர்களாவன; லிப்னி, சிமயி.
19 தங்கள் வம்சங்களின்படியே கோகாத்துடைய குமாரர், அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
19 The sons of Kohath by their clans were Amram, Izhar, Hebron, and Uzziel.
19 குடும்ப வாரியாக கோகாத்தின் புதல்வர்; அம்ராம், இட்சகார், எபிரோன், உசியேல் ஆகியோர்.
20 தங்கள் வம்சங்களின்படியே மெராரியினுடைய குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; இவர்களே லேவியருடைய பிதாக்களின் வம்சத்தார்.
20 And the sons of Merari by their clans were Mahli and Mushi. These were the clans of the Levites, according to their families.
20 குடும்ப வாரியாக மெராரியின் புதல்வர்; மக்லி, மூசி ஆகியோர். மூதாதையர் வீடு வாரியாக லேவியர் குடும்பங்கள் இவைகளே.
The Gershonites (Numbers 4:21–28; 1 Chronicles 23:7–11)
21 கெர்சோனின் வழியாய் லிப்னீயரின் வம்சமும் சீமேயியர் வம்சமும் தோன்றின; இவைகளே கெர்சோனியரின் வம்சங்கள்.
21 From Gershon came the Libnite clan and the Shimeite clan; these were the Gershonite clans.
21 கேர்சோனிலிருந்து லிப்னியர், சிமயியர் ஆகிய குடும்பங்கள் தோன்றின; இவை கேர்சோனியக் குடும்பங்கள்.
22 அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் ஏழாயிரத்து ஐந்நூறுபேராயிருந்தார்கள்.
22 The number of all the males a month old or more was 7,500.
22 எண்ணிக்கைப்படி ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஆண்கள் அனைவரின் தொகை ஏழாயிரத்து ஐந்நூறு.
23 கெர்சோனியரின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் பின்புறத்தில் மேற்கே பாளயமிறங்கவேண்டும்.
23 The Gershonite clans were to camp on the west, behind the tabernacle,
23 திருஉறைவிடத்துக்குப் பின்னால் மேற்கே பாளையமிறங்க வேண்டியவர்கள் கேர்சோனியக் குடும்பங்கள்.
24 கெர்சோனியருடைய தகப்பன் வம்சத்துக்குத் தலைவன் லாயேலின் குமாரனாகிய எலியாசாப் என்பவன்.
24 and the leader of the families of the Gershonites was Eliasaph son of Lael.
24 இவர்களோடிருக்கும் எல்யாசாபு கேர்சோனிய மூதாதையர் வீட்டுக் குடும்பங்களின் தலைவன், இவன் இலாவேலின் மகன்.
25 ஆசரிப்புக் கூடாரத்திலே கெர்சோன் புத்திரரின் காவலாவது: வாசஸ்தலமும், கூடாரமும், அதின் மூடியும், ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவும்,
25 The duties of the Gershonites at the Tent of Meeting were the tabernacle and tent, its covering, the curtain for the entrance to the Tent of Meeting,
25 சந்திப்புக் கூடாரத்தில் கேர்சோன் புதல்வரின் பொறுப்பில் உள்ளவை; திருஉறைவிடம், கூடாரத்துடன் அதன் அடைப்பு, சந்திப்புக் கூடாரத்தின் வாயில் திரை,
26 வாசஸ்தலத்தண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தின் தொங்குதிரைகளும், பிராகாரவாசல் மூடுதிரையும், அவைகளின் வேலைகளுக்கெல்லாம் உரிய அவைகளின் கயிறுகளுமே.
26 the curtains of the courtyard, the curtain for the entrance to the courtyard that surrounds the tabernacle and altar, and the cords—all the service for these items.
26 தளத்திலுள்ள தொங்கு திரைகள், திருஉறைவிடத்தையும் பலிபீடத்தையும் சுற்றியுள்ள வாயில்திரை, அதன் கயிறுகள் ஆகியவையும் அவை தொடர்பான அனைத்துப் பணிகளுமே.
The Kohathites (Numbers 4:1–20; 1 Chronicles 23:12–20)
27 கோகாத்தின் வழியாய் அம்ராமியரின் வம்சமும் இத்சேயாரின் வம்சமும் எப்ரோனியரின் வம்சமும் ஊசியேலரின் வம்சமும் தோன்றின; இவைகளே கோகாத்தியரின் வம்சங்கள்.
27 From Kohath came the clans of the Amramites, the Izharites, the Hebronites, and the Uzzielites; these were the clans of the Kohathites.
27 கோகாத்திலிருந்து தோன்றியவை அம்ராமியர் குடும்பம், எபிரோனியர் குடும்பம், உசியேலியர் குடும்பம் ஆகியவை. இவை கோகாத்தியர் குடும்பங்கள்.
28 ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, பரிசுத்த ஸ்தலத்துக்குரியவைகளைக் காப்பவர்கள், எண்ணாயிரத்து அறுநூறுபேராயிருந்தார்கள்.
28 The number of all the males a month old or more was 8,600.c They were responsible for the duties of the sanctuary.
28 எண்ணிக்கைப்படி ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஆண்கள் எண்ணாயிரத்து அறுநூறு பேர்; இவர்கள் தூயகத்திற்குரிய பொறுப்புகளை நிறைவேற்றி வந்தனர்.
29 கோகாத் புத்திரரின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் தென்புறமான பக்கத்திலே பாளயமிறங்கவேண்டும்.
29 The clans of the Kohathites were to camp on the south side of the tabernacle,
29 திருஉறைவிடத்துக்குத் தெற்கே பாளையமிறங்க வேண்டியவர்கள் கோகாத்துப் புதல்வர் குடும்பங்கள்.
30 அவர்களின் தலைவன், ஊசியேலின் குமாரனாகிய எல்சாபான்.
30 and the leader of the families of the Kohathites was Elizaphand son of Uzziel.
30 இவர்களோடிருக்கும் எலிட்சாபான் கோகாத்தியக் குடும்பங்களின் மூதாதையர் வீட்டுத் தலைவன்; இவன் உசியேலின் மகன்.
31 அவர்களுடைய காவலாவது: பெட்டியும், மேஜையும், குத்துவிளக்கும், பீடங்களும், ஆராதனைக்கேற்ற பரிசுத்தஸ்தலத்தின் பணிமுட்டுகளும், தொங்குதிரையும், அதினுடைய எல்லா வேலைகளுக்கும் ஏற்றவைகளுமே.
31 Their duties were the ark, the table, the lampstand, the altars, the articles of the sanctuary used with them, and the curtain—all the service for these items.
31 அவர்களின் பொறுப்பில் உள்ளவை பேழை, மேசை, விளக்குத் தண்டு, பலிபீடங்கள், குரு தூயகப் பணிகளுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள், திரை ஆகியவையும் அவை தொடர்பான அனைத்துப் பணிகளுமே.
32 ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார் என்பவன் லேவியருடைய தலைவர்களுக்குத் தலைவனாய்ப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல்காக்கிறவர்களுக்கு விசாரிப்புக்காரனாயிருக்கவேண்டும்.
32 The chief of the leaders of the Levites was Eleazar son of Aaron the priest;1 Chronicles 23:21–23 he oversaw those responsible for the duties of the sanctuary.
32 மேலும், குரு ஆரோன் புதல்வன் எலயாசர் லேவியர் தலைவர்களுக்கெல்லாம் தலைவன்; தூயகத்துக்குப் பொறுப்பானவர்களை மேற்பார்வை செய்ய வேண்டியவன் இவனே.
The Merarites (Numbers 4:29–33; 1 Chronicles 23:21–23)
33 மெராரியின் வழியாய் மகேலியரின் வம்சமும் மூசியரின் வம்சமும் தோன்றின; இவைகளே மெராரியின் வம்சங்கள்.
33 From Merari came the clans of the Mahlites and Mushites; these were the Merarite clans.
33 மெராரியிடமிருந்து தோன்றியவை மக்லியர் குடும்பமும் மூசியர் குடும்பமுமாகும். இவை மெராரியின் குடும்பங்கள்.
34 அவர்களில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் ஆறாயிரத்து இருநூறுபேராயிருந்தார்கள்.
34 The number of all the males a month old or more was 6,200.
34 எண்ணிக்கைப்படி ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஆண்கள் அனைவரின் தொகை ஆறாயிரத்து இருநூறு.
35 அபியாயேலின் குமாரனாகிய சூரியேல் என்பவன் அவர்களுக்குத் தலைவனாயிருந்தான்; இவர்கள் வாசஸ்தலத்தின் வடபுறமான பக்கத்தில் பாளயமிறங்கவேண்டும்.
35 The leader of the families of the Merarites was Zuriel son of Abihail; they were to camp on the north side of the tabernacle.
35 மொராரி குடும்பங்களின் மூதாதையர் வீட்டுத் தலைவன் சூரியேல்; இவன் அபிகயிலின் மகன்; இவர்கள் திருஉறைவிடத்துக்கு வடக்கே பாளையமிறங்க வேண்டியவர்கள்.
36 அவர்களுடைய காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும் அதினுடைய எல்லாப் பணிமுட்டுகளும், அதற்கடுத்தவைகள் அனைத்தும்,
36 The duties assigned to the sons of Merari were the tabernacle’s frames, crossbars, posts, bases, and all its equipment—all the service for these items,
36 மெராரி புதல்வரின் பொறுப்பில் ஒப்புவிக்கப்பட்டவை; திருஉறைவிடத்தின் சட்டங்கள், குறுக்குச் சட்டங்கள், தூண்கள், பாதங்கள், அனைத்துத் துணைக்கலன்கள் ஆகியவையும் அவை தொடர்பான அனைத்துப் பணிகளுமே.
37 சுற்றுப்பிராகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளுமே.
37 as well as the posts of the surrounding courtyard with their bases, tent pegs, and ropes.
37 சுற்றுத்தளத் தூண்கள், அவற்றின் பாதங்கள், முளைகள், கயிறுகள் ஆகியவையும் அவர்கள் பொறுப்பே.
Moses and Aaron
38 ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்துக்கு முன்பாக, சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே மோசேயும் ஆரோனும் அவன் குமாரரும் கூடாரங்களைப் போட்டு இறங்கி, இஸ்ரவேல் புத்திரரின் காவலுக்குப் பதிலாகப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல் காக்கவேண்டும். வாசஸ்தலத்தில் சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன்.
38 Moses, Aaron, and Aaron’s sons were to camp to the east of the tabernacle, toward the sunrise, before the Tent of Meeting. They were to perform the duties of the sanctuary as a service on behalf of the Israelites; but any outsider who approached the sanctuary was to be put to death.
38 திருஉறைவிடத்தின் கிழக்கே சந்திப்புக் கூடாரத்தின் முன் கதிரவன் உதிக்கும் திசையில் பாளையமிறங்க வேண்டியோர் மோசே, ஆரோன், அவன் புதல்வர், திருஉறைவிடத்தில் இஸ்ரயேல் மக்களுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய அனைத்திற்கும் பொறுப்பும் உரிமையும் இவர்களுக்கே உண்டு. வேறு எவனும் நெருங்கி வந்தால் அவன் கொல்லப்படுவான்.
39 மோசேயும் ஆரோனும், கர்த்தருடைய வாக்கின்படி, லேவியரில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் அவர்களுடைய வம்சங்களின்படி எண்ணினார்கள்; அவர்கள் இருபத்தீராயிரம் பேராயிருந்தார்கள்.
39 The total number of Levites that Moses and Aaron counted by their clans at the LORD’s command, including all the males a month old or more, was 22,000.
39 ஆண்டவர் வார்த்தைப்படி மோசேயும் ஆரோனும் லேவியரைக் குடும்பங்கள் வாரியாக எண்ணியபோது அவர்களில் ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஆண்பிள்ளைகள் அனைவரின் தொகை இருபத்தீராயிரம்.
The Redemption of the Firstborn
40 அதன்பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரில் ஒருமாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணி, அவர்கள் நாமங்களைத் தொகையேற்றி,
40 Then the LORD said to Moses, “Number every firstborn male of the Israelites a month old or more, and list their names.
40 மேலும், ஆண்டவர் மோசேயிடம் கூறியது: இஸ்ரயேல் மக்களில் ஒரு மாதமும் அதற்கு மேலுமான தலைப்பேறான ஆண்கள் அனைவரையும் அவர்கள் பெயர்கள் வாரியாகக் கணக்கெடு.
41 இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவுக்கும் பதிலாக லேவியரையும், இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களிலுள்ள தலையீற்றான யாவுக்கும் பதிலாக லேவியரின் மிருகஜீவன்களையும் எனக்கென்று பிரித்தெடு; நான் கர்த்தர் என்றார்.
41 You are to take the Levites for Me—I am the LORD—in place of all the firstborn of Israel, and the livestock of the Levites in place of all the firstborn of the livestock of the Israelites.”
41 இஸ்ரயேல் மக்களுள் தலைப்பேறான ஆண்கள் அனைவருக்கும் பதிலாக லேவியரையும் இஸ்ரயேல் மக்களுடைய கால்நடைகளின் தலையீற்றுகள் அனைத்துக்கும் பதிலாக லேவியரின் கால்நடைகளையும் எனக்கென்று பிரித்தெடு; நானே ஆண்டவர்.
42 அப்பொழுது மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவரையும் எண்ணினான்.
42 So Moses numbered all the firstborn of the Israelites, as the LORD had commanded him.
42 ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே இஸ்ரயேல் மக்களில் தலைப்பேறுகள் அனைத்தையும் எண்ணினார்.
43 ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளெல்லாரும் பேர்பேராக எண்ணப்பட்டபோது, இருபத்தீராயிரத்து இருநூற்று எழுபத்துமூன்று பேராயிருந்தார்கள்.
43 The total number of the firstborn males a month old or more, listed by name, was 22,273.
43 பெயர்களின் எண்ணப்படி ஒரு மாதமும் அதற்கு மேலுமான தலைப்பேறான ஆண்கள் அனைவரின் தொகை இருபத்தீராயிரத்து இருநூற்று எழுபத்து மூன்று.
44 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:
44 Again the LORD spoke to Moses, saying,
44 பின் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
45 நீ இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவருக்கும் பதிலாக லேவியரையும், அவர்களுடைய மிருகஜீவன்களுக்குப்பதிலாக லேவியரின் மிருகஜீவன்களையும் பிரித்தெடு; லேவியர் என்னுடையவர்களாயிருப்பார்கள்; நான் கர்த்தர்.
45 “Take the Levites in place of all the firstborn of Israel, and the livestock of the Levites in place of their livestock. The Levites belong to Me; I am the LORD.
45 இஸ்ரயேல் மக்களுள் எல்லாத் தலைப்பேறுகளுக்கும் பதிலாக லேவியரையும் அவர்கள் கால்நடைகளுக்குப் பதிலாக லேவியரின் கால்நடைகளையும் பிரித்தெடு; லேவியர் எனக்கே உரியவர்; நானே ஆண்டவர்.
46 இஸ்ரவேல் புத்திரருடைய முதற்பேறுகளில் லேவியரின் தொகைக்கு அதிகமாயிருந்து, மீட்கப்படவேண்டிய இருநூற்று எழுபத்துமூன்றுபேரிடத்திலும்,
46 To redeem the 273 firstborn Israelites who outnumber the Levites,
46 இஸ்ரயேல் மக்களின் தலைப்பேறுகளில் எண்ணிக்கைக்கு மேலாக, மீட்கப்பட வேண்டியவர் இருநூற்று எழுபத்து மூன்றுபேர்.
47 நீ தலைக்கு ஐந்து சேக்கல் வீதமாகப் பரிசுத்த சேக்கல் கணக்கின்படி வாங்குவாயாக; அந்தச் சேக்கலானது இருபது கேரா.
47 you are to collect five shekelse for each one, according to the sanctuary shekel of twenty gerahs.f
47 இருபது கேரா மதிப்புடைய தூயகத்து செக்கேலில் தலைக்கு ஐந்து செக்கேல் வீதம் வாங்கிக்கொள்.
48 லேவியருடைய தொகைக்கு அதிகமானவர்கள் மீட்கப்படும் திரவியத்தை ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கொடுப்பாயாக என்றார்.
48 Give the money to Aaron and his sons as the redemption price for the excess among the Israelites.”
48 எண்ணிக்கைக்கு மேலாக இருப்போர் மீட்கப்படுவதற்காக வரும் இப்பணத்தை நீ ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் கொடுக்க வேண்டும்.
49 அப்படியே லேவியரால் மீட்கப்பட்டவர்களின் தொகைக்கு அதிகமாயிருந்து, இன்னும் மீட்கப்படவேண்டியவர்களுக்கு ஈடாக மோசே இஸ்ரவேல் புத்திரருடைய முதற்பேறானவர்களிடத்தில்,
49 So Moses collected the redemption money from those in excess of the number redeemed by the Levites.
49 லேவியரால் மீட்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாயிருந்தோரிடமிருந்து வந்த மீட்புப் பணத்தை மோசே எடுத்துக் கொண்டார்.
50 ஆயிரத்து முந்நூற்று அறுபத்தைந்து சேக்கலாகிய திரவியத்தை, பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி வாங்கி,
50 He collected the money from the firstborn of the Israelites: 1,365 shekels,g according to the sanctuary shekel.
50 இஸ்ரயேல் மக்களுள் தலைப்பேறாயிருந்தோரிடமிருந்து அவர் எடுத்த பணம் தூயகத்து செக்கேல் கணக்குப்படி ஆயிரத்து முந்நூற்று அறுபத்தைந்து செக்கேல்.
51 கர்த்தருடைய வாக்கின்படியே மீட்கப்பட்டவர்களின் கிரயத்தை ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும், கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே கொடுத்தான்.
51 And Moses gave the redemption money to Aaron and his sons in obedience to the word of the LORD, just as the LORD had commanded him.
51 ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டுக் கூறியபடியே மோசே மீட்புப் பணத்தை ஆரோனுக்கும் அவர் புதல்வருக்கும் கொடுத்தார்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
4 a Or strange
9 b Most MT manuscripts; some MT manuscripts, SP, and LXX (see also Numbers 8:16) to Me
28 c Hebrew; some LXX manuscripts 8,300 ; see the total in verse 39.
30 d Elizaphan is a variant of Elzaphan ; see Exodus 6:22 and Leviticus 10:4.
47 e 5 shekels is approximately 2 ounces or 57 grams.
47 f 20 gerahs is equivalent to one shekel (approximately 0.4 ounces or 11.4 grams).
50 g 1,365 shekels is approximately 34.3 pounds or 15.6 kilograms.
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.