பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Numbers எண்ணாகமம் בְּמִדְבַּר
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36
எண்ணாகமம் 8 | Numbers 8
The Lampstand (Exodus 25:31–40; Exodus 37:17–24)
1 கர்த்தர் மோசேயை நோக்கி:
1 Then the LORD said to Moses,
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ விளக்குகளை ஏற்றும்போது ஏழு விளக்குகளும் விளக்குத்தண்டிற்கு நேரே எரியவேண்டும் என்று சொல் என்றார்.
2 “Speak to Aaron and tell him: ‘When you set up the seven lamps, they are to light the area in front of the lampstand.’”
2 "ஆரோனிடம் சொல்: நீ விளக்குகளை ஏற்றும்போது ஏழு அகல்களும் விளக்குத் தண்டுக்கு முன்பக்கம் ஒளிதர வேண்டும்".
3 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபிரகாரம் ஆரோன் செய்து, விளக்குத்தண்டிற்கு நேரே ஒழுங்காக அதின் விளக்குகளை ஏற்றினான்.
3 And Aaron did so; he set up the lamps facing toward the front of the lampstand, just as the LORD had commanded Moses.
3 ஆரோன் அப்படியே செய்தார்; ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி விளக்குத்தண்டுக்கு முன்பக்கம் ஒளி தரும்படி அதன் அகல்களை ஏற்றினார்.
4 இந்தக் குத்துவிளக்கு, அதின் பாதமுதல் பூக்கள்வரைக்கும் பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்பட்டிருந்தது; கர்த்தர் மோசேக்குக் காண்பித்த மாதிரியின்படியே அவன் குத்துவிளக்கை உண்டாக்கினான்.
4 This is how the lampstand was constructed: it was made of hammered gold from its base to its blossoms, fashioned according to the pattern the LORD had shown Moses.
4 விளக்குத் தண்டின் வேலைப்பாடு; அது பொன் அடிப்பு வேலையால் செய்யப்பட்டிருந்தது; அதன் பாதம் முதல் மலர்கள் வரை அடிப்பு வேலையால் செய்யப்பட்டது; ஆண்டவர் மோசேக்குக் காட்டிய வடிவமைப்பின்படியே அவர் விளக்குத் தண்டைச் செய்தார்.1
1 விப 25:31-40; 37:17-24.
Cleansing the Levites
5 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
5 Again the LORD spoke to Moses, saying,
5 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
6 நீ இஸ்ரவேல் சந்ததியாரினின்று லேவியரைப் பிரித்தெடுத்து, அவர்களைச் சுத்திகரிப்பாயாக.
6 “Take the Levites from among the Israelites and make them ceremonially clean.
6 "இஸ்ரயேல்மக்களிடமிருந்து லேவியரைப் பிரித்தெடுத்து அவர்களைத் தூய்மைப்படுத்து;
7 அவர்களைச் சுத்திரிக்கும்படி அவர்களுக்குச் செய்யவேண்டியதாவது: அவர்கள்மேல் சுத்திகரிக்கும் ஜலத்தைத் தெளிப்பாயாக; பின்பு அவர்கள் சர்வாங்க சவரம்பண்ணி தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து, தங்களைச் சுத்திகரிக்கக்கடவர்கள்.
7 This is what you must do to cleanse them: Sprinkle them with the water of purification. Have them shave their whole bodies and wash their clothes, and so purify themselves.
7 அவர்களைத் தூய்மைப்படுத்த நீ செய்யவேண்டியது; பாவம் போக்கும் பலியின் நீரை அவர்கள் மேல் தெளிப்பாய்; அவர்கள் உடல் முழுவதையும் சிரைத்து, தங்கள் துணிகளைத் துவைத்துத் தங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ளட்டும்.
8 அப்பொழுது ஒரு காளையையும், அதற்கேற்ற எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவாகிய போஜனபலியையும் கொண்டுவரக்கடவர்கள்; பாவநிவாரணபலியாக வேறொரு காளையையும் நீ வாங்கி,
8 Then have them take a young bull with its grain offering of fine flour mixed with oil, and you are to take a second young bull for a sin offering.
8 அதன் பின் அவர்கள் இளங்காளை ஒன்றையும் எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவான அதன் உணவுப்படையலையும் எடுத்துக் கொள்ளட்டும்; நீயோ பாவம் போக்கும் பலிக்கென வேறோர் இளங்காளையை எடுத்துக்கொள்.
9 லேவியரை ஆசரிப்புக் கூடாரத்துக்குமுன் வரச்செய்து, இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரையும் கூடிவரப்பண்ணுவாயாக.
9 Bring the Levites before the Tent of Meeting and assemble the whole congregation of Israel.
9 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் ஒன்று திரட்டு; சந்திப்புக் கூடாரத்தின் முன் லேவியரை அழைத்து வந்து நிறுத்து.
10 நீ லேவியரைக் கர்த்தருடைய சந்நிதியில் வரப்பண்ணினபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கைகளை லேவியர்மேல் வைக்கக்கடவர்கள்.
10 You are to present the Levites before the LORD and have the Israelites lay their hands upon them.
10 நீ லேவியரை ஆண்டவர் திருமுன் நிறுத்தும்போது, இஸ்ரயேல் மக்கள் தங்கள் கைகளை லேவியர் மேல் வைப்பார்கள்;
11 லேவியர் கர்த்தருக்குரிய பணிவிடை செய்யும்பொருட்டு, ஆரோன் அவர்களை இஸ்ரவேல் புத்திரரின் காணிக்கையாகக் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டப்படும் காணிக்கையாய் நிறுத்தக்கடவன்.
11 Aaron is to present the Levites before the LORD as a wave offering from the sons of Israel, so that they may perform the service of the LORD.
11 பின் ஆரோன் லேவியரை இஸ்ரயேல் மக்களிடமிருந்து வரும் ஆரத்திபலியாக ஆண்டவர் திருமுன் அர்ப்பணிப்பான்; அதனால் ஆண்டவர் பணியைச் செய்ய மக்கள் சார்பில் இவர்கள் இருப்பார்கள்.
12 அதன்பின் லேவியர் தங்கள் கைகளைக் காளைகளுடைய தலையின்மேல் வைப்பார்களாக; பின்பு நீ லேவியருக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, கர்த்தருக்கு அவைகளில் ஒன்றைப் பாவநிவாரண பலியாகவும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி,
12 And the Levites are to lay their hands on the heads of the bulls, and offer to the LORD one as a sin offering and the other as a burnt offering, to make atonement for the Levites.
12 அதன்பின், லேவியர் தங்கள் கைகளைக் காளைகளின் தலைகள்மேல் வைப்பர்; லேவியருக்குக் கறைநீக்கம் செய்யும்படி நீ ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும், மற்றதை ஆண்டவருக்கு எரி பலியாகவும் செலுத்துவாய்.
13 லேவியரை ஆரோனுக்கும் அவன் குமாரனுக்கும் முன்பாக நிறுத்தி, அவர்களைக் கர்த்தருக்கு அசைவாட்டப்படும் காணிக்கையாக்கி,
13 You are to have the Levites stand before Aaron and his sons and then present them before the LORD as a wave offering.
13 மேலும், நீ லேவியரை ஆரோன், அவன் புதல்வர் முன் நிற்கச் செய்து, ஆரத்திபலியாக அவர்களை ஆண்டவருக்கு அர்ப்பணம் செய்.
14 இப்படி நீ லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்தெடுக்கக்கடவாய்; லேவியர் என்னுடையவர்களாயிருப்பார்கள்.
14 In this way you shall separate the Levites from the rest of the Israelites, and the Levites will belong to Me.
14 இவ்வாறு, இஸ்ரயேல் மக்களிடமிருந்து லேவியரைப் பிரித்தெடுக்க வேண்டும். லேவியர் எனக்கே உரியவர்.
15 இப்படி அவர்களைச் சுத்திகரித்து, அவர்களை அசைவாட்டும் காணிக்கையாக்கக்கடவாய்; அதன்பின்பு லேவியர் ஆசரிப்புக் கூடாரத்தில் பணிவிடை செய்யப் பிரவேசிக்கக்கடவர்கள்.
15 After you have cleansed them and presented them as a wave offering, they may come to serve at the Tent of Meeting.
15 நீ அவர்களைத் தூய்மைப்படுத்தி, ஆரத்திபலியாக அர்ப்பணித்த சந்திப்புக் கூடாரத்தில் பணி செய்ய அவர்கள் உள்ளே போவார்கள்.
16 இஸ்ரவேல் புத்திரரிலிருந்து அவர்கள் எனக்கு முற்றிலும் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்; இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற சகல முதற்பேறுக்கும் பதிலாக அவர்களை எனக்கு எடுத்துக்கொண்டேன்.
16 For the Levites have been wholly given to Me from among the sons of Israel. I have taken them for Myself in place of all who come first from the womb, the firstborn of all the sons of Israel.
16 இஸ்ரயேல் மக்களிடமிருந்து அவர்கள் முற்றிலும் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறார்கள்; இஸ்ரயேல் மக்களில் கருப்பையைத் திறந்து பிறக்கும் தலைப்பேறு அனைத்திற்கும் ஈடாக அவர்களை நான் எனக்கென உரிமையாக்கிக் கொண்டேன்.
17 இஸ்ரவேல் புத்திரரில் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் முதற்பேறானதெல்லாம் என்னுடையது; நான் எகிப்துதேசத்திலே முதற்பேறான யாவையும் சங்கரித்த நாளிலே அவைகளை எனக்கென்று பரிசுத்தப்படுத்தி,
17 For every firstborn male in Israel is Mine, both man and beast. I set them apart for Myself on the day I struck down all the firstborn in the land of Egypt.
17 ஏனெனில், இஸ்ரயேல் மக்களிடையே மனிதரிலும் கால்நடைகளிலும் தலைப்பேறனைத்தும் என்னுடையவை; எகிப்து நாட்டில் நான் தலைப்பேறனைத்தையும் சாகடித்த நாளில் அவர்களை நான் எனக்கென அர்ப்பணித்துக் கொண்டேன்.2
2 விப 13:2.
18 பின்பு லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறு சகலத்திற்கும் பதிலாக எடுத்துக்கொண்டு,
18 But I have taken the Levites in place of all the firstborn among the sons of Israel.
18 இஸ்ரயேல் மக்களில் தலைப்பேறு அனைத்துக்கும் ஈடாக லேவியரை நான் உரிமையாக்கிக் கொண்டேன்.
19 லேவியர் இஸ்ரவேல் புத்திரருடைய பணிவிடையை ஆசரிப்புக் கூடாரத்தில் செய்யும்படிக்கும், இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கும், இஸ்ரவேல் புத்திரர் தாங்களே பரிசுத்தஸ்தலத்தில் சேருகிறதினால் இஸ்ரவேல் புத்திரரில் வாதையுண்டாகாதபடிக்கும், லேவியரை அவர்களிலிருந்து எடுத்து, ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் தத்தமாகக் கொடுத்தேன் என்றார்.
19 And I have given the Levites as a gift to Aaron and his sons from among the Israelites, to perform the service for the Israelites at the Tent of Meeting and to make atonement on their behalf, so that no plague will come against the Israelites when they approach the sanctuary.”
19 இஸ்ரயேல் மக்களுள் லேவியரை நான் ஆரோனிடமும், அவன் புதல்வரிடமும் கொடையாக அளித்துவிட்டேன்; இஸ்ரயேல் மக்களுக்காக அவர்கள் சந்திப்புக் கூடாரத்தில் பணி செய்வார்கள்; இஸ்ரயேல் மக்களுக்காகக் கறை நீக்கப் பலியையும் செலுத்துவார்கள்; இதனால், இஸ்ரயேல் மக்கள் தூயகத்தை அடுத்து வரவேண்டியிருந்தாலும், இஸ்ரயேல் மக்களுக்குத் தீங்கு ஏதும் நேரிடாது."
20 அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரரின் சபையார் யாவரும் கர்த்தர் லேவியரைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் லேவியருக்குச் செய்தார்கள்.
20 So Moses, Aaron, and the whole congregation of Israel did with the Levites everything that the LORD had commanded Moses they should do.
20 மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் லேவியருக்கு இவ்வாறே செய்தனர்; லேவியரைப் பற்றி ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாம் இஸ்ரயேல் மக்கள் அவர்களுக்குச் செய்தனர்.
21 லேவியர் சுத்திகரிக்கப்பட்டு, தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள்; பின்பு ஆரோன் அவர்களைக் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக நிறுத்தி, அவர்களைச் சுத்திகரிக்க அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தான்.
21 The Levites purified themselves and washed their clothes, and Aaron presented them as a wave offering before the LORD. Aaron also made atonement for them to cleanse them.
21 லேவியர் பாவத்திலிருந்து தங்களை தூய்மைப்படுத்திக் கொண்டார்; தங்கள் துணிகளைத் துவைத்தனர். ஆரோன் அவர்களை ஆரத்திப்பலியாக ஆண்டவர் திருமுன் அர்ப்பணித்தார்; அவர்களைத் தூய்மைப்படுத்தும்படி ஆரோன் அவர்களுக்காகக் கறை நீக்கப் பலியாகச் செலுத்தினார்.
22 அதற்குப்பின்பு லேவியர் ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் முன்பாக ஆசரிப்புக் கூடாரத்தில் தங்கள் பணிவிடையைச் செய்யும்படி பிரவேசித்தார்கள்; கர்த்தர் லேவியரைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்களுக்குச் செய்தார்கள்.
22 After that, the Levites came to perform their service at the Tent of Meeting in the presence of Aaron and his sons. Thus they did with the Levites just as the LORD had commanded Moses.
22 அதன்பின், ஆரோனுக்கும் அவர் புதல்வருக்கும் முன்பாகச் சந்திப்புக் கூடாரத்தில் தங்களுக்குரிய பணி செய்யும்படி லேவியர் உள்ளே சென்றனர். ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் லேவியருக்குச் செய்தனர்.
Retirement for Levites
23 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
23 And the LORD said to Moses,
23 மேலும், ஆண்டவர் மோசேயிடம்,
24 லேவியருக்குரிய கட்டளை என்னவென்றால்: இருபத்தைந்து வயதுமுதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள யாவரும் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்யும் சேனையிலே சேவிக்க வரவேண்டும்.
24 “This applies to the Levites: Men twenty-five years of age or older shall enter to perform the service in the work at the Tent of Meeting.
24 லேவியர் பற்றிக் கூறியது: "இருபத்தைந்து வயதும், அதற்கு மேலுமானோர் சந்திப்புக் கூடார வேலையின் பணிகளைச் செய்யச் செல்வர்.
25 ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலைசெய்யாமல் திருப்பணி சேனையை விட்டு,
25 But at the age of fifty, they must retire from performing the work and no longer serve.
25 ஐம்பது வயதுக்கும் மேலானோர் வேலையின் பணிகளிலிருந்து விலகிக் கொள்வார்; அதன் பின் பணிகள் ஏதும் கிடையாது.
26 ஆசரிப்புக் கூடாரத்தின் காவலைக் காக்கிறதற்குத் தங்கள் சகோதரரோடே ஊழியஞ்செய்வதேயன்றி, வேறொரு சேவகமும் செய்யவேண்டியதில்லை; இப்படி லேவியர் செய்யவேண்டிய வேலைகளைக்குறித்துத் திட்டம்பண்ணக்கடவாய் என்றார்.
26 After that, they may assist their brothers in fulfilling their duties at the Tent of Meeting, but they themselves are not to do the work. This is how you are to assign responsibilities to the Levites.”
26 ஆனால், சந்திப்புக் கூடாரத்தில் தங்கள் சகோதரரின் பணிக்குத் துணை நிற்பர்; தாங்களாக ஏதும் செய்யலாகாது; லேவியர் பணிகளை நீ இவ்வாறு ஒழுங்குபடுத்துவாய்".
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inCopyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.