பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Nehemiah நெகேமியா נְחֶמְיָה
நெகேமியா 12 | Nehemiah 12
The Priests and Levites Who Returned
1 செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலோடும் யெசுவாவோடும் வந்த ஆசாரியரும் லேவியரும் யாரென்றால்: செராயா எரேமியா, எஸ்றா,
1 Now these are the priests and Levites who went up with Zerubbabel son of Shealtiel and with Jeshua: Seraiah, Jeremiah, Ezra,
1 செயல்தியேலின் மகன் செருபாபேலுடனும், ஏசுவாவுடனும், வந்த குருக்களும், லேவியரும் பின்வருமாறு: செராயா, எரேமியா, எஸ்ரா,
2 அமரியா, மல்லூக், அத்தூஸ்,
2 Amariah, Malluch,a Hattush,
2 அமரியா, மல்லூக்கு, அத்தூசு,
3 செகனியா, ரெகூம், மெரெமோத்,
3 Shecaniah, Rehum,b Meremoth,
3 செக்கனியா, இரகூம், மெரமோத்து,
4 இத்தோ, கிநேதோ, அபியா,
4 Iddo, Ginnethon,c Abijah,
4 இத்தோ, கின்னத்தோய், அபியா,
5 மியாமின், மாதியா, பில்கா,
5 Mijamin,d Maadiah,e Bilgah,f
5 மியாமின், மாதியா, பில்கா,
6 செமாயா, யோயாரிப், யெதாயா,
6 Shemaiah, Joiarib, Jedaiah,
6 செமாயா, யோயாரிபு, எதாயா,
7 சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா என்பவர்கள்; இவர்கள் யெசுவாவின் நாட்களில், ஆசாரியருக்கும் தங்கள் சகோதரருக்கும் தலைவராயிருந்தார்கள்.
7 Sallu, Amok, Hilkiah, and Jedaiah. These were the leaders of the priests and their associates in the days of Jeshua.
7 சல்லூ, அமோக்கு, இல்க்கியா, எதாயா ஆகியோர் ஏசுவாவின் நாள்களில், குருக்களுக்கும் — தங்கள் சகோதரர்களுக்கும் தலைவர்களாக விளங்கினர்.
8 லேவியர் யாரென்றால்: யெசுவா பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா, மத்தனியா என்பவர்கள்; இவனும் இவன் சகோதரரும் துதிசெய்தலை விசாரித்தார்கள்.
8 The Levites were Jeshua, Binnui, Kadmiel, Sherebiah, Judah, and Mattaniah, who, with his associates, led the songs of thanksgiving.
8 லேவியர்களில் ஏசுவா, பின்னூய், கத்மியேல், செரேபியா, யூதா, மத்தனியா ஆகியோரும், இவர்கள் சகோதரர்களும் நன்றிப் பாடல்களுக்குப் பொறுப்பாளர்களாக இருந்தார்கள்.
9 பக்புக்கியா, உன்னி என்கிற அவர்கள் சகோதரர் அவர்களுக்கு எதிரே காவல்காத்திருந்தார்கள்.
9 Bakbukiah and Unni, their associates, stood across from them in the services.
9 பக்புக்கியாவும், உன்னியும் இவர்களின் சகோதரர்களும் அவர்களுக்கு எதிரே நின்று கவனித்துக் கொண்டு வந்தார்கள்.
10 யெசுவா யொயகீமைப் பெற்றான், யொயகீம் எலியாசிபைப் பெற்றான், எலியாசிப் யொயதாவைப் பெற்றான்.
10 Jeshua was the father of Joiakim, Joiakim was the father of Eliashib, Eliashib was the father of Joiada,
10 ஏசுவாவுக்கு யோவாக்கிம் பிறந்தார்; யோவாக்கிமுக்கு எலியாசிபு பிறந்தார்; எலியாசிபுக்கு யோயாதா பிறந்தார்.
11 யொயதா யோனத்தானைப் பெற்றான், யோனத்தான் யதுவாவைப் பெற்றான்.
11 Joiada was the father of Jonathan,g and Jonathan was the father of Jaddua.
11 யோயாதாவுக்கு யோனத்தான் பிறந்தார்; யோனத்தானுக்கு யாதுவா பிறந்தார்.
12 யொயகீமின் நாட்களிலே பிதா வம்சங்களின் தலைவரான ஆசாரியர்கள் யாரென்றால்: செராயாவின் சந்ததியில் மெராயா, எரேமியாவின் சந்ததியில் அனனியா,
12 In the days of Joiakim, these were the heads of the priestly families: of the family of Seraiah, Meraiah; of Jeremiah, Hananiah;
12 யோவாக்கிமின் நாள்களில் குலத் தலைவர்களாக இருந்த குருக்கள் பின்வருமாறு; செராயா வழிவந்த மெராயா; எரேமியா வழிவந்த அனனியா;
13 எஸ்றாவின் சந்ததியில் மெசுல்லாம், அமரியாவின் சந்ததியில் யோகனான்,
13 of Ezra, Meshullam; of Amariah, Jehohanan;
13 எஸ்ரா வழிவந்த மெசுல்லாம்; அமரியா வழிவந்த யோகனான்;
14 மெலிகுவின் சந்ததியில் யோனத்தான், செபனியாவின் சந்ததியில் யோசேப்பு,
14 of Malluchi, Jonathan; of Shebaniah, Joseph;
14 மல்லூக்கி வழிவந்த யோனத்தான்; செபனியா வழி வந்த யோசேப்பு;
15 ஆரீமின் சந்ததியில் அத்னா, மெராயோதின் சந்ததியில் எல்காய்,
15 of Harim, Adna; of Meraioth, Helkai;
15 ஆரிம் வழிவந்த அத்னா; மெரயோத்து வழிவந்த எல்க்காய்;
16 இத்தோவின் சந்ததியில் சகரியா, கிநெதோனின் சந்ததியில் மெசுல்லாம்,
16 of Iddo, Zechariah; of Ginnethon, Meshullam;
16 இத்தோ வழிவந்த செக்கரியா; கின்னத்தோன் வழிவந்த மெசுல்லாம்;
17 அபியாவின் சந்ததியில் சிக்ரி, மினியாமீன்மொவதியா, என்பவர்களின் சந்ததியில் பில்தாய்,
17 of Abijah, Zichri; of Miniamin and of Moadiah,k Piltai;
17 அபியா வழிவந்த சிக்ரி; மின்யமீன், மோவதியா, பில்த்தாய்;
18 பில்காவின் சந்ததியில் சம்முவா, செமாயாவின் சந்ததியில் யோனத்தான்.
18 of Bilgah, Shammua; of Shemaiah, Jonathan;
18 பில்கா வழிவந்த சம்முவா; செமாயா வழிவந்த யோனத்தான்;
19 யோயாரிபின் சந்ததியில் மத்தனா, யெதாயாவின் சந்ததியில் ஊசி,
19 of Joiarib, Mattenai; of Jedaiah, Uzzi;
19 யோயாரிபு வழிவந்த மத்தனாய்; எதாயா வழிவந்த உசீ;
20 சல்லாயின் சந்ததியில் கல்லாய், ஆமோக்கின் சந்ததியில் ஏபேர்,
20 of Sallai,l Kallai; of Amok, Eber;
20 சல்லாம் வழிவந்த கல்லாய்; அமோக்கு வழிவந்த ஏபேர்;
21 இல்க்கியாவின் சந்ததியில் அசபியா, யெதாயாவின் சந்ததியில் நெதனெயேல் என்பவர்கள்.
21 of Hilkiah, Hashabiah; and of Jedaiah, Nethanel.
21 இல்க்கியா வழிவந்த அசுபியா; யாதாய் வழிவந்த நத்தானியேல் ஆவர்.
22 எலியாசிபின் நாட்களில் யொயதா, யோகனான், யதுவா என்கிற லேவியர் பிதா வம்சங்களின் தலைவராக எழுதப்பட்டார்கள்; பெர்சியனாகிய தரியுவின் ராஜ்யபாரமட்டும் இருந்த ஆசாரியர்களும் அப்படியே எழுதப்பட்டார்கள்;
22 In the days of Eliashib, Joiada, Johanan,m and Jaddua, during the reign of Darius the Persian, the heads of the families of the Levites and priests were recorded.
22 லேவியரில், எல்யாசிபு, யோயாதா, யோகானான், யாதுவா ஆகிய தலைமைக் குருக்களின் காலத்திலிருந்து பாரசீகரான தாரியுவின் காலம் வரையுள்ள லேவியர் குலத் தலைவர்களும் குருக்களும் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
23 லேவி புத்திரராகிய பிதா வம்சங்களின் தலைவர் எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் நாட்கள்மட்டும் நாளாகமப் புஸ்தகத்தில் எழுதப்பட்டார்கள்.
23 As for the descendants of Levi, the family heads up to the days of Johanan son of Eliashib were recorded in the Book of the Chronicles.n
23 லேவியின் மக்களான குலத்தலைவர்கள், குறிப்பேட்டில் எல்யாசிபின் மகன் யோகனானின் நாள்கள் வரை பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
24 லேவியரின் தலைவராகிய அசபியாவும், செரெபியாவும், கத்மியேலின் குமாரன் யெசுவாவும், அவர்களுக்கு எதிரே நிற்கிற அவர்கள் சகோதரரும், தேவனுடைய மனுஷனாகிய தாவீதினுடைய கற்பனையின்படியே துதிக்கவும், தோத்திரிக்கவும், ஒருவருக்கொருவர் எதிர்முகமாக முறைமுறையாயிருந்தார்கள்.
24 The leaders of the Levites were Hashabiah, Sherebiah, and Jeshua son of Kadmiel,o along with their associates, who stood across from them to give praise and thanksgiving as one section alternated with the other, as prescribed by David the man of God.
24 லேவியரின் தலைவர்களான அசபியா, சேரேபியா, கத்மியேலின் மகன் ஏசுவா ஆகியோரும் அவர்களுக்கு எதிரில் அவர்களின் சகோதரரும் நின்று கொண்டு, கடவுளின் மனிதர் தாவீது கொடுத்த கட்டளையின்படி, புகழும் நன்றியும் முறைமுறையாகச் செலுத்தி வந்தனர்.
25 மத்தனியா, பக்புக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப் என்பவர்கள் வாசல்களிலிருக்கிற பொக்கிஷ அறைகளைக் காவல்காக்கிறவர்களாயிருந்தார்கள்.
25 Mattaniah, Bakbukiah, Obadiah, Meshullam, Talmon, and Akkub were gatekeepers who guarded the storerooms at the gates.
25 மத்தனியா, பக்புக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூபு ஆகிய வாயிற்காப்போர், வாயிலருகில் இருந்த கருவூல அறைகளைக் காத்து வந்தனர்.
26 யோத்சதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரன் யொயகீமின் நாட்களிலும், அதிபதியாகிய நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும் இருக்கிற நாட்களிலும் அவர்கள் இருந்தார்கள்.
26 They served in the days of Joiakim son of Jeshua, the son of Jozadak,p and in the days of Nehemiah the governor and Ezra the priest and scribe.
26 இவர்கள் யோசாதாக்கிற்குப் பிறந்த ஏசுவாவின் மகன் யோவாக்கிமின் காலத்திலும், ஆளுநர் நெகேமியா, குருவும் சட்ட வல்லுநருமான எஸ்ரா ஆகியோரின் காலத்திலும் வாழ்ந்தனர்.
The Dedication of the Wall
27 எருசலேமின் அலங்கத்தைப் பிரதிஷ்டைபண்ணுகையில், துதியினாலும், பாடலினாலும் கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியரை எருசலேமுக்கு வரும்படி தேடினார்கள்.
27 At the dedication of the wall of Jerusalem, the Levites were sought out from all their homes and brought to Jerusalem to celebrate the joyous dedication with thanksgiving and singing, accompanied by cymbals, harps, and lyres.
27 எருசலேம் மதிலின் அர்ப்பண நாள் வந்தபோது லேவியர்களை எல்லா இடங்களிலிருந்தும் தேடி எருசலேமுக்குக் கொண்டு வந்தார்கள். ஏனெனில், மதில் அர்ப்பணம் மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும், கைத்தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகியவை ஒலிக்கப் பாடல்களுடனும் கொண்டாட வேண்டியிருந்தது.
28 அப்படியே பாடகரின் புத்திரர் எருசலேமின் சுற்றுப்புறங்களான சமபூமியிலும், நெத்தோபாத்தியரின் கிராமங்களிலும்,
28 The singers were also assembled from the region around Jerusalem, from the villages of the Netophathites,
28 பாடகர்கள், எருசலேமைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் நெற்றோபாயரின் சிற்றூர்களிலிருந்தும்,
29 பெத்கில்காலிலும், கேபா, அஸ்மாவேத் ஊர்களின் நாட்டுப்புறங்களிலுமிருந்துவந்து கூடினார்கள்; பாடகர் எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்குக் கிராமங்களைக் கட்டியிருந்தார்கள்.
29 from Beth-gilgal, and from the fields of Geba and Azmaveth, for they had built villages for themselves around Jerusalem.
29 பெத்கில்காலிலிருந்தும், கேபா, அஸ்மவேத்து ஆகிய பகுதிகளிலிருந்தும் ஒன்று சேர்க்கப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் எருசலேமைச் சுற்றிக் குடியிருப்புகள் அமைத்திருந்தார்கள்.
30 ஆசாரியரும் லேவியரும் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, ஜனத்தையும் பட்டணவாசல்களையும் அலங்கத்தையும் சுத்தம்பண்ணினார்கள்.
30 After the priests and Levites had purified themselves, they purified the people, the gates, and the wall.
30 குருக்களும் லேவியரும் தங்களைத் தூய்மை செய்துகொண்டு மக்களையும் வாயில்களையும் மதில்களையும் தூய்மைப்படுத்தினர்.
31 அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை அலங்கத்தின்மேல் ஏறப்பண்ணி, துதிசெய்து நடந்துபோகும்படி இரண்டு பெரிய கூட்டத்தாரை நிறுத்தினேன்; அவர்களில் ஒரு கூட்டத்தார் அலங்கத்தின்மேல் வலதுபுறமாகக் குப்பைமேட்டு வாசலுக்குப் போனார்கள்.
31 Then I brought the leaders of Judah up on the wall, and I appointed two great thanksgiving choirs. One was to proceed along the top of the wallq to the right, toward the Dung Gate.
31 அப்பொழுது நான், யூதாவின் தலைவர்களை மதில்மேல் ஏறச் சொல்லி, புகழ்பாட இரண்டு பாடகர் குழுக்களை நிறுத்தினேன். ஒரு குழுவினர் வலப்பக்கம் இருந்த குப்பைமேட்டு வாயிலை நோக்கி, மதிலின்மேல் பவனியாகச் சென்றார்கள்.
32 அவர்கள் பிறகாலே ஒசாயாவும், யூதாவின் பிரபுக்களில் பாதிப்பேரும்,
32 Hoshaiah and half the leaders of Judah followed,
32 அவர்களுக்குப் பின்னால் ஒசயாவும், யூதாவின் தலைவர்களில் பாதிப்பேரும்,
33 அசரியா, எஸ்றா, மெசுல்லாம்,
33 along with Azariah, Ezra, Meshullam,
33 அசரியா, எஸ்ரா, மெசுல்லாம்,
34 யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா என்பவர்களும்,
34 Judah, Benjamin, Shemaiah, Jeremiah,
34 யூதா, பென்யமின், செமாயா, எரேமியா ஆகியோரும் சென்றனர்.
35 பூரிகைகளைப் பிடிக்கிற ஆசாரியரின் புத்திரரில் ஆசாப்பின் குமாரன் சக்கூரின் மகனாகிய மிகாயாவுக்குக் குமாரனான மத்தனியாவின் மகன் செமாயாவுக்குப் பிறந்த யோனத்தானின் குமாரன் சகரியாவும்,
35 and some of the priests with trumpets, and also Zechariah son of Jonathan, the son of Shemaiah, the son of Mattaniah, the son of Micaiah,r the son of Zaccur, the son of Asaph,
35 மேலும் எக்காளம் ஏந்தி இருந்த குருத்துவப் புதல்வர்கள்; ஆசாபு வழி வந்த சக்கூருக்குப் பிறந்த மீக்காயாவின் மைந்தனான மத்தனியாவின் புதல்வனான செமாயாவின் மைந்தனான யோனத்தானின் மகன் செக்கரியாவும்,
36 தேவனுடைய மனுஷனாகிய தாவீதின் கீதவாத்தியங்களை வாசிக்கிற அவன் சகோதரரான செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி என்பவர்களும் போனார்கள்; வேதபாரகனாகிய எஸ்றா இவர்களுக்கு முன்பாக நடந்தான்.
36 and his associates—Shemaiah, Azarel, Milalai, Gilalai, Maai, Nethanel, Judah, and Hanani—with the musical instruments prescribed by David the man of God. Ezra the scribe led the procession.
36 அவர் சகோதரர்களான செமாயா, அசரியேல், மில்லலாய், கில்லேல், மாவாய், நெத்தனேல், யூதா, அனானி என்பவர்களும் கடவுளின் மனிதர் தாவீதின் இசைக்கருவிகளை ஏந்தியிருந்தனர். நீதிச் சட்ட வல்லுநரான எஸ்ரா அவர்களுக்கு முன்பாகச் சென்றார்.
37 அங்கேயிருந்து அவர்கள் தங்களுக்கு எதிரான ஊருணிவாசலுக்கு வந்தபோது, அலங்கத்தைப்பார்க்கிலும் உயரமான தாவீது நகரத்தின் படிகளில் ஏறி, தாவீது வீட்டின்மேலாகக் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசல்மட்டும் போனார்கள்.
37 At the Fountain Gate they climbed the steps of the City of David on the ascent to the wall and passed above the house of David to the Water Gate on the east.
37 அவர்கள் ஊருணி வாயிலைக் கடந்து தங்களுக்கு எதிரே இருந்த தாவீது நகரின் படிகளின் வழியாக மேலே சென்று தாவீதின் அரண்மணைக்கு மேலே செல்லும் மதிற்சுவரின் படிகளைக் கடந்து கிழக்கே இருந்த தண்ணீர் வாயில்வரை சென்றனர்.
38 துதிசெய்கிற இரண்டாம் கூட்டத்தார் எதிரேயிருக்கிற வழியாய் நடந்துபோனார்கள், அவர்கள் பிறகாலே நான் போனேன்; ஜனத்தில் பாதிப்பேர் அலங்கத்தின்மேல் சூளைகளின் கொம்மையைக்கடந்து, அகழ் மதில்மட்டும் நெடுகப்போய்,
38 The second thanksgiving choir proceeded to the left, and I followed it with half the people along the top of the wall, past the Tower of the Ovens to the Broad Wall,
38 இரண்டாவது பாடற் குழுவினர் இடப்பக்கமாக நடந்து செல்லுகையில், நானும் மக்களில் பாதிப்பேரும் மதிலின் மேல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றோம். சூளைக் காவல் மாடத்தைக் கடந்து அகன்ற மதில்வரை வந்தோம்.
39 எப்பிராயீம் வாசலையும் பழையவாசலையும், மீன் வாசலையும், அனானெயேலின் கொம்மையையும், மேயா என்கிற கொம்மையையும் கடந்து, ஆட்டுவாசல்மட்டும் புறப்பட்டுக் காவல்வீட்டுவாசலிலே நின்றார்கள்.
39 over the Gate of Ephraim, the Jeshanah Gate,s the Fish Gate, the Tower of Hananel, and the Tower of the Hundred, as far as the Sheep Gate. And they stopped at the Gate of the Guard.
39 எப்ராயிம் வாயில்மேலும், பழைய வாயில்மேலும், மீன்வாயில்மேலும், அனனியேல் காவல் மாடம், மேயா காவல் மாடம் ஆகியவை வழியாகவும் ஆட்டு வாயிலை அடைந்தோம். அவர்களோ 'காவலர்' வாயிலில் நின்று கொண்டார்கள்.
40 அதற்குப்பின்பு துதி செய்கிற இரண்டு கூட்டத்தாரும் தேவனுடைய ஆலயத்திலே வந்து நின்றார்கள்; நானும் என்னோடேகூட இருக்கிற தலைவரில் பாதிப்பேரும்,
40 The two thanksgiving choirs then stood in the house of God, as did I, along with the half of the officials accompanying me,
40 பின்பு, இரண்டு பாடகர் குழுவினர்களும் கடவுளின் இல்லத்தில் நின்றுகொண்டார்கள். நானும் என்னோடு அலுவலர்களில் பாதிப்பேரும் அங்கு இருந்தோம்.
41 பூரிகைகளைப் பிடிக்கிற எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனானியா என்கிற ஆசாரியர்களும்,
41 as well as the priests with their trumpets—Eliakim, Maaseiah, Miniamin, Micaiah, Elioenai, Zechariah, and Hananiah—
41 குருக்களில் எலியாக்கிம், மாசேயா, மின்யமின், மீக்காயா, எலியோனாய், செக்கரியா, அனனியா ஆகியோர் எக்காளம் தாங்கி இருந்தனர்.
42 மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் என்பவர்களும் நின்றோம்; பாடகரும் அவர்கள் விசாரிப்புக்காரனாகிய யெஷரகியாவும சத்தமாய்ப் பாடினார்கள்.
42 and also Maaseiah, Shemaiah, Eleazar, Uzzi, Jehohanan, Malchijah, Elam, and Ezer. Then the choirs sang out under the direction of Jezrahiah.
42 மாசேயா, செமாயா, எலயாசர், உசீ, யோகனான், மல்கியா, ஏலாம், ஆசேர் ஆகியோரும் நின்றனர். பாடகர்களும், அவர்களின் தலைவர் இஸ்ரகியாவும், உரக்கப் பாடினார்கள்.
43 அந்நாளிலே மிகுதியான பலிகளைச் செலுத்தி தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினால் மகிழ்ச்சியாயிருந்தார்கள்; ஸ்திரீகளும் பிள்ளைகளுங்கூடக் களிகூர்ந்தார்கள்; எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது.
43 On that day they offered great sacrifices, rejoicing because God had given them great joy. The women and children also rejoiced, so that the joy of Jerusalem was heard from afar.
43 அன்று அவர்கள் மிகுதியாகப் பலி செலுத்தி மகிழ்ந்தனர். ஏனெனில், கடவுள் அவர்களைப் பெரும் மகிழ்ச்சியால் நிரப்பினார். அவர்களின் மனைவியரும் பிள்ளைகளும் மகிழ்ச்சி கொண்டாடினர். எருசலேமின் ஆரவாரம் வெகுதூரம்வரை கேட்டது.
Provisions for Temple Worship
44 அன்றையதினம் பொக்கிஷங்களையும், படைப்புகளையும், முதல் கனிகளையும், தசமபாகங்களையும் வைக்கும் அறைகளின்மேல், ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் நியாயப்பிரமாணத்தின்படியே வரவேண்டிய பட்டணங்களுடைய நிலங்களின் பங்குகளை அவைகளில் சேர்க்கும்படிக்கு, சில மனுஷர் விசாரிப்புக்காரராக வைக்கப்பட்டார்கள்; ஊழியஞ்செய்து நிற்கிற ஆசாரியர்மேலும் லேவியர்மேலும் யூதா மனிதர் சந்தோஷமாயிருந்தார்கள்.
44 And on that same day men were appointed over the rooms that housed the supplies, contributions, firstfruits, and tithes. The portions specified by the Law for the priests and Levites were gathered into these storerooms from the fields of the villages, because Judah rejoiced over the priests and Levites who were serving.
44 கருவூலம், படையல்கள், முதற்கனி, பத்திலொரு பகுதி ஆகியவைகளுக்கான அறைகளின் பொறுப்பாளர்களையும், திருச்சட்டத்தின்படி, குருக்களுக்கும் லேவியருக்கும் உரிய பகுதிகளை நகர்களின் வயல்களில் தண்டல் செய்யும் ஆள்களையும் அன்று நியமித்தார்கள். ஏனெனில் அங்கே பணிபுரிந்த குருக்களையும் லேவியர்களையும் குறித்து யூதா மகிழ்ச்சி கொண்டது.
45 பாடகரும், வாசல் காவலாளரும், தாவீதும் அவன் குமாரனாகிய சாலொமோனும் கற்பித்தபடியே தங்கள் தேவனுடைய காவலையும், சுத்திகரிப்பின் காவலையும் காத்தார்கள்.
45 They performed the service of their God and the service of purification, along with the singers and gatekeepers, as David and his son Solomon had prescribed.
45 தாவீது, அவருடைய மகன் சாலமோன் ஆகியோரின் கட்டளைப்படி, இவர்கள் தங்கள் கடவுளின் பணியிலும், தூய்மை செய்யும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். அவ்வாறே பாடகர்களும் வாயிற்காப்போரும் பணி செய்தனர்.*
* 1 குறி 25:1-8; 26:12.
46 தாவீதும் ஆசாப்பும் இருந்த பூர்வநாட்களில் பாடகரின் தலைவரும் வைக்கப்பட்டு, தேவனுக்குத் துதியும் தோத்திரங்களும் செலுத்துகிற சங்கீதங்கள் திட்டம்பண்ணப்பட்டிருந்தது.
46 For long ago, in the days of David and Asaph, there were directors for the singers and for the songs of praise and thanksgiving to God.
46 ஏனெனில், தாவீது, ஆசாபு ஆகியோரின் பழங்காலத்திலிருந்தே பாடகர் தலைவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கடவுளுக்குரிய புகழ்ப் பாடல்களும் நன்றிப் பாடல்களும் இருந்தன.
47 ஆகையால் செரூபாபேலின் நாட்களிலும், நெகேமியாவின் நாட்களிலும் இஸ்ரவேலர் எல்லாரும் பாடகருக்கும் வாசல் காவலாளருக்கும் அன்றாடகத் திட்டமாகிய பங்குகளைக் கொடுத்தார்கள்; அவர்கள் லேவியருக்கென்று பிரதிஷ்டைபண்ணிக் கொடுத்தார்கள்; லேவியர் ஆரோனின் புத்திரருக்கென்று அவர்கள் பங்கைப் பிரதிஷ்டைபண்ணிக் கொடுத்தார்கள்.
47 So in the days of Zerubbabel and Nehemiah, all Israel contributed the daily portions for the singers and gatekeepers. They also set aside daily portions for the Levites, and the Levites set aside daily portions for the descendants of Aaron.
47 மேலும் செருபாபேலின் நாள்களிலிருந்தும் நெகேமியாவின் நாள்களிலிருந்தும், இஸ்ரயேல் மக்கள் யாவரும், பாடகர்களுக்கும், வாயிற்காப்போருக்கும் உரிய பகுதிகளை நாள்தோறும் கொடுத்து வந்தனர். அவர்கள் லேவியர்க்கு உரியதைப் பிரித்து வைத்தனர். லேவியர் ஆரோனின் மக்களுக்கு உரியதைப் பிரித்து வைத்தனர்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
2 a Malluch is a variant of Malluchi ; see verse 14.
3 b Rehum is a variant of Harim ; see verse 15, Nehemiah 7:42, and Ezra 2:39.
4 c Many Hebrew manuscripts and Vulgate (see also verse 16); most MT manuscripts Ginnethoi
5 d Mijamin is a variant of Miniamin ; see verse 17.
5 e Maadiah is a variant of Moadiah ; see verse 17.
5 f Bilgah is a variant of Bilgai ; also in verse 18; see Nehemiah 10:8.
11 g Jonathan is a variant of Johanan ; see verse 22.
14 h Malluchi is a variant of Malluch ; see verse 2.
14 i Shebaniah is a variant of Shecaniah ; see verse 3; see also Syriac and some Hebrew and LXX manuscripts.
15 j Meraioth is a variant of Meremoth ; see verse 3 and also some LXX manuscripts.
17 k Moadiah is a variant of Maadiah ; see verse 5.
20 l Sallai is a variant of Sallu ; see verse 7.
22 m Johanan is a variant of Jonathan ; see verse 11.
23 n Or the Book of the Annals or the Book of the Historical Events
24 o Or Sherebiah, Jeshua, Binnui, and Kadmiel
26 p Jozadak is a variant of Jehozadak ; see 1 Chronicles 6:14.
31 q Or alongside the wall ; also in verse 38
35 r Micaiah is a variant of Mica ; see Nehemiah 11:22.
39 s Or the Old City Gate
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.