பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Nehemiah  நெகேமியா  נְחֶמְיָה

அதிகாரம்    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13

நெகேமியா 11 | Nehemiah 11

Jerusalem’s New Settlers

1וַיֵּשְׁב֥וּ שָׂרֵֽי־הָעָ֖ם בִּירוּשָׁלָ֑͏ִם וּשְׁאָ֣ר הָ֠עָם הִפִּ֨ילוּ גוֹרָל֜וֹת לְהָבִ֣יא ׀ אֶחָ֣ד מִן־הָעֲשָׂרָ֗ה לָשֶׁ֙בֶת֙ בִּֽירוּשָׁלִַ֙ם֙ עִ֣יר הַקֹּ֔דֶשׁ וְתֵ֥שַׁע הַיָּד֖וֹת בֶּעָרִֽים׃

1 ஜனத்தின் அதிகாரிகள் எருசலேமிலே குடியிருந்தார்கள்; மற்ற ஜனங்கள், தங்களுக்குள்ளே பத்துப்பேரில் ஒருவனை எருசலேமென்னும் பரிசுத்த நகரத்திலும் ஒன்பதுபேரை மற்றப் பட்டணங்களிலும் குடியிருக்கப்பண்ணி, சீட்டுகளைப் போட்டார்கள்.
1 Now the leaders of the people settled in Jerusalem, and the rest of the people cast lots to bring one out of ten to live in the holy city of Jerusalem, while the remaining ninea were to dwell in their own towns.
1 மக்கள் தலைவர்கள் எருசலேமில் குடியிருந்தனர். ஏனைய மக்களில் பத்தில் ஒருவர் புனித நகரான எருசலேமில் வாழ்வதற்குக் கொண்டு வரப்படச் சீட்டுப் போட்டார்கள். மற்ற ஒன்பது பேர் தங்கள் நகர்களிலேயே வாழ்ந்தார்கள்.

2וַֽיְבָרֲכ֖וּ הָעָ֑ם לְכֹל֙ הֽ͏ָאֲנָשִׁ֔ים הַמִּֽתְנַדְּבִ֔ים לָשֶׁ֖בֶת בִּירוּשָׁלָֽ͏ִם׃

2 ஆனாலும் எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாய்ச் சம்மதித்த மனுஷர்களையெல்லாம் ஜனங்கள் வாழ்த்தினார்கள்.
2 And the people blessed all the men who volunteered to live in Jerusalem.
2 எருசலேமில் மனமுவந்து வாழ முன்வந்த மனிதர்கள் அனைவரையும் மக்கள் வாழ்த்தினர்.

3וְאֵ֙לֶּה֙ רָאשֵׁ֣י הַמְּדִינָ֔ה אֲשֶׁ֥ר יָשְׁב֖וּ בִּירוּשָׁלָ֑͏ִם וּבְעָרֵ֣י יְהוּדָ֗ה יָֽשְׁב֞וּ אִ֤ישׁ בַּאֲחֻזָּתוֹ֙ בְּעָ֣רֵיהֶ֔ם יִשְׂרָאֵ֤ל הַכֹּהֲנִים֙ וְהַלְוִיִּ֣ם וְהַנְּתִינִ֔ים וּבְנֵ֖י עַבְדֵ֥י שְׁלֹמֹֽה׃

3 யூதாவின் பட்டணங்களில் இஸ்ரவேலரும் ஆசாரியரும், லேவியரும் நிதனீமியரும் சாலொமோனுடைய வேலைக்காரரின் புத்திரரும், அவரவர் தங்கள் பட்டணங்களிலுள்ள தங்கள் காணிபூமியிலே குடியிருந்தார்கள்; எருசலேமிலே குடியிருந்த நாடுகளின் தலைவர் யாரென்றால்:
3 These are the heads of the provinces who settled in Jerusalem. (In the villages of Judah, however, each lived on his own property in their towns—the Israelites, priests, Levites, temple servants,b and descendants of Solomon’s servants—
3 இஸ்ரயேல் மக்கள், குருக்கள், லேவியர்கள், கோவில் பணியாளர்கள், சாலமோனின் பணியாளரின் வழிமரபினர் ஆகியோர் யூதாவின் நகர்களில், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த மனைகளில் சொந்த நகர்களில் வாழ்ந்து வந்தார்கள்.*

4וּבִֽירוּשָׁלִַ֙ם֙ יָֽשְׁב֔וּ מִבְּנֵ֥י יְהוּדָ֖ה וּמִבְּנֵ֣י בִנְיָמִ֑ן מִבְּנֵ֣י יְ֠הוּדָה עֲתָיָ֨ה בֶן־עֻזִּיָּ֜ה בֶּן־זְכַרְיָ֧ה בֶן־אֲמַרְיָ֛ה בֶּן־שְׁפַטְיָ֥ה בֶן־מַהֲלַלְאֵ֖ל מִבְּנֵי־פָֽרֶץ׃

4 எருசலேமிலே யூதா புத்திரரில் சிலரும், பென்யமீன் புத்திரரில் சிலரும் குடியிருந்தார்கள்; யூதா புத்திரரிலே பேரேசின் புத்திரருக்குள் ஒருவனான மகலாலெயேலின் குமாரனாகிய செபதியாவின் குமாரன் அமரியாவுக்குப் பிறந்த சகரியாவுக்குக் குமாரனான உசியாவின் மகன் அத்தாயாவும்,
4 while some of the descendants of Judah and Benjamin settled in Jerusalem.) From the descendants of Judah: Athaiah son of Uzziah, the son of Zechariah, the son of Amariah, the son of Shephatiah, the son of Mahalalel, a descendant of Perez;
4 எருசலேமில் வாழ்ந்து வந்த மாநிலத் தலைவர்கள் பின்வருமாறு; இவர்கள் யூதா புதல்வர் சிலரும், பென்யமின் புதல்வர் சிலரும் ஆவர். யூதாவின் புதல்வர் பின்வருமாறு; உசியா மகன் அத்தாயா — உசியா செக்கரியாவின் மகன்; இவர் அமரியாவின் மகன்; இவர் செபற்றியாவின் மகன்; இவர் மகலலேலின் மகன். பேரேட்சின் வழிமரபினர்:

5וּמַעֲשֵׂיָ֣ה בֶן־בָּר֣וּךְ בֶּן־כָּל־חֹ֠זֶה בֶּן־חֲזָיָ֨ה בֶן־עֲדָיָ֧ה בֶן־יוֹיָרִ֛יב בֶּן־זְכַרְיָ֖ה בֶּן־הַשִּׁלֹנִֽי׃

5 சீலோனின் குமாரன் சகரியாவுக்குக் குமாரனாகிய யோயாரிபுக்குக் குமாரனான அதாயாவுக்குப் பிறந்த அசாயாவின் குமாரன் கொல்லோசேபெற்ற பாருக்கின் மகன் மாசெயாவுமே.
5 and Maaseiah son of Baruch, the son of Col-hozeh, the son of Hazaiah, the son of Adaiah, the son of Joiarib, the son of Zechariah, a descendant of Shelah.c
5 மாவேசியா பாரூக்கின் மகன்; இவர் கொல்கோசியின் மகன்; இவர் அசாயாவின் மகன்; இவர் அதாயாவின் மகன்; இவர் யோயாரிபின் மகன்; இவர் செக்கரியாவின் மகன்; இவர் சீலோனியின் மகன்.

6כָּל־בְּנֵי־פֶ֕רֶץ הַיֹּשְׁבִ֖ים בִּירוּשָׁלָ֑͏ִם אַרְבַּ֥ע מֵא֛וֹת שִׁשִּׁ֥ים וּשְׁמֹנָ֖ה אַנְשֵׁי־חָֽיִל׃

6 எருசலேமிலே குடியிருக்கிற பேரேசின் புத்திரரெல்லாரும் நானூற்று அறுபத்தெட்டுப் பராக்கிரமசாலிகளாயிருந்தார்கள்.
6 The descendants of Perez who settled in Jerusalem totaled 468 men of valor.
6 எருசலேமில் குடியிருந்த பேரேட்சியின் புதல்வர் நானூற்று அறுபத்து எட்டு மாபெரும் வீரர்கள்.

7וְאֵ֖לֶּה בְּנֵ֣י בִנְיָמִ֑ן סַלֻּ֡א בֶּן־מְשֻׁלָּ֡ם בֶּן־יוֹעֵ֡ד בֶּן־פְּדָיָה֩ בֶן־ק֨וֹלָיָ֧ה בֶן־מַעֲשֵׂיָ֛ה בֶּן־אִֽיתִיאֵ֖ל בֶּן־יְשַֽׁעְיָֽה׃

7 பென்யமீன் புத்திரரில் யாரென்றால் சல்லு என்பவன்; இவன் மெசுல்லாமுக்கும், இவன் யோவேலுக்கும், இவன் பெதாயாவுக்கும், இவன் கொலாயாவுக்கும், இவன் மாசெயாவுக்கும், இவன் இதியேலுக்கும், இவன் எசாயாவுக்கும் குமாரனானவன்.
7 From the descendants of Benjamin: Sallu son of Meshullam, the son of Joed, the son of Pedaiah, the son of Kolaiah, the son of Maaseiah, the son of Ithiel, the son of Jeshaiah;
7 பென்யமினின் புதல்வர் இவர்களே; சல்லூ மெசுல்லாமின் மகன்; இவர் யோபேதுவின் மகன்; இவர் பெத்யாவின் மகன்; இவர் கொலயாவின் மகன்; இவர் மாசேயாவின் மகன்; இவர் இத்தியேலின் மகன்; இவர் ஏசாயாவின் மகன்.

8וְאַחֲרָ֖יו גַּבַּ֣י סַלָּ֑י תְּשַׁ֥ע מֵא֖וֹת עֶשְׂרִ֥ים וּשְׁמֹנָֽה׃

8 அவனுக்குப்பின் கப்பாய், சல்லாய் முதலானவர்கள் தொளாயிரத்து இருபத்தெட்டுப்பேர்.
8 and his followers Gabbai and Sallai—928 men.
8 அவருக்குப் பின் கபாயும் சல்லாயும். இவர்கள் மொத்தம் தொள்ளாயிரத்து இருபத்தெட்டுப் பேர்.

9וְיוֹאֵ֥ל בֶּן־זִכְרִ֖י פָּקִ֣יד עֲלֵיהֶ֑ם וִיהוּדָ֧ה בֶן־הַסְּנוּאָ֛ה עַל־הָעִ֖יר מִשְׁנֶֽה׃

9 அவர்கள்மேல் விசாரிப்புக்காரனான சிக்ரியின் குமாரன் யோவேலும் பட்டணத்தின்மேல் இரண்டாவது விசாரிப்புக்காரனான செனுவாவின் குமாரன் யூதாவுமே.
9 Joel son of Zichri was the officer over them, and Judah son of Hassenuah was over the Second District of the city.d
9 சிக்ரியின் மகன் யோவேல் அவர்களுக்குத் தலைவராய் இருந்தார். அசனுவாவின் மகன் யூதா மற்றோர் ஊருக்குத் தலைவராக விளங்கினார்.

10מִן־הַֽכֹּהֲנִ֑ים יְדַֽעְיָ֥ה בֶן־יוֹיָרִ֖יב יָכִֽין׃

10 ஆசாரியர்களில் யோயாரிபின் குமாரன் யெதாயா, யாகின் என்பவர்களும்,
10 From the priests: Jedaiah son of Joiarib;e Jachin;
10 குருக்கள்: யோயாரிபு மகன் எதாயா, யாக்கின்;

11שְׂרָיָ֨ה בֶן־חִלְקִיָּ֜ה בֶּן־מְשֻׁלָּ֣ם בֶּן־צָד֗וֹק בֶּן־מְרָיוֹת֙ בֶּן־אֲחִיט֔וּב נְגִ֖ד בֵּ֥ית הָאֱלֹהִֽים׃

11 அகிதூபின் குமாரன் மெராயோத்துக்குப் பிறந்த சாதோக்கின் குமாரன் மெசுல்லாம் பெற்ற இல்க்கியாவின் மகன் செராயா என்னும் தேவனுடைய ஆலயத்தின் விசாரணைக்கர்த்தனும்,
11 Seraiah son of Hilkiah, the son of Meshullam, the son of Zadok, the son of Meraioth, the son of Ahitub, the chief official of the house of God;
11 செராயா; இவர் இல்க்கியாவின் மகன்; இவர் மெசுல்லாவின் மகன்; இவர் சாதோக்கின் மகன்; இவர் மெரயோத்தின் மகன்; இவர் கோவில் மேற்பார்வையாளரான அகித்தூபின் மகன்.

12וַאֲחֵיהֶ֗ם עֹשֵׂ֤י הַמְּלָאכָה֙ לַבַּ֔יִת שְׁמֹנֶ֥ה מֵא֖וֹת עֶשְׂרִ֣ים וּשְׁנָ֑יִם וַ֠עֲדָיָה בֶּן־יְרֹחָ֤ם בֶּן־פְּלַלְיָה֙ בֶּן־אַמְצִ֣י בֶן־זְכַרְיָ֔ה בֶּן־פַּשְׁח֖וּר בֶּן־מַלְכִּיָּֽה׃

12 ஆலயத்திலே பணிவிடை செய்கிற அவர்கள் சகோதரராகிய எண்ணூற்று இருபத்திரண்டுபேரும், மல்கியாவின் குமாரன் பஸ்கூருக்கு மகனான சகரியாவின் குமாரன் அம்சிக்குப் பிறந்த பெல்லியாவின் குமாரன் எரோகாமுக்குப் பிறந்த அதாயாவும்,
12 and their associates who did the work at the temple—822 men; Adaiah son of Jeroham, the son of Pelaliah, the son of Amzi, the son of Zechariah, the son of Pashhur, the son of Malchijah;
12 கோவில் திருப்பணி செய்துவந்த இவர்களுடைய சகோதரர் எண்ணூற்று இருபத்திரண்டு பேர். அதாயா எரோகாமின் மகன்; இவர் பெலலியாவின் மகன்; இவர் அம்சியின் மகன்; இவர் செக்கரியாவின் மகன்; இவர் பஸ்கூரின் மகன்; இவர் மல்கியாவின் மகன்.

13וְאֶחָיו֙ רָאשִׁ֣ים לְאָב֔וֹת מָאתַ֖יִם אַרְבָּעִ֣ים וּשְׁנָ֑יִם וַעֲמַשְׁסַ֧י בֶּן־עֲזַרְאֵ֛ל בֶּן־אַחְזַ֥י בֶּן־מְשִׁלֵּמ֖וֹת בֶּן־אִמֵּֽר׃

13 பிதா வம்சத்தலைவனாகிய அவனுடைய சகோதரர் இருநூற்று நாற்பத்திரண்டுபேரும் இம்மேரின் குமாரன் மெசில்லேமோத்தின் மகனாகிய அகசாய்க்குப் பிறந்த அசரெயேலின் மகனான அமாசாயும்,
13 and his associates, the leaders of families—242 men; Amashai son of Azarel, the son of Ahzai, the son of Meshillemoth, the son of Immer;
13 குலத்தலைவர்களான இவர் சகோதரர் இருநூற்று நாற்பத்திரண்டு பேர். அம்சசாய் அசரியேலின் மகன்; இவர் அகிசாயின் மகன்; இவர் மெசில்ல மோத்தின் மகன்; இவர் இம்மேரின் மகன்.

14וַאֲחֵיהֶם֙ גִּבּ֣וֹרֵי חַ֔יִל מֵאָ֖ה עֶשְׂרִ֣ים וּשְׁמֹנָ֑ה וּפָקִ֣יד עֲלֵיהֶ֔ם זַבְדִּיאֵ֖ל בֶּן־הַגְּדוֹלִֽים׃

14 அவர்களுடைய சகோதரராகிய பராக்கிரமசாலிகள் நூற்று இருபத்தெட்டுப்பேருமே, இவர்கள்மேல் அகெதோலிமின் குமாரன் சப்தியேல் விசாரிப்புக்காரனாயிருந்தான்.
14 and his associatesf—128 mighty men of valor. Zabdiel son of Haggedolim was their overseer.
14 படைவீரர்களான அவர்களுடைய சகோதரர் நூற்று இருபத்து எட்டு. அக்கெதோலியின் மகன் சப்தியேல் அவர்களுக்குத் தலைவராக இருந்தார்.

15וּמִֽן־הַלְוִיִּ֑ם שְׁמַעְיָ֧ה בֶן־חַשּׁ֛וּב בֶּן־עַזְרִיקָ֥ם בֶּן־חֲשַׁבְיָ֖ה בֶּן־בּוּנִּֽי׃

15 லேவியரிலே புன்னியின் குமாரன் சபியாவின் மகனாகிய அஸ்ரிக்காமின் குமாரனான அசூபின் மகன் செமாயாவும்,
15 From the Levites: Shemaiah son of Hasshub, the son of Azrikam, the son of Hashabiah, the son of Bunni;
15 லேவியர்: செமாயா; இவர் அசூபாவின் மகன்; இவர் அசபியாவின் மகன்; இவர் பூனியின் மகன்.

16וְשַׁבְּתַ֨י וְיוֹזָבָ֜ד עַל־הַמְּלָאכָ֤ה הַחִֽיצֹנָה֙ לְבֵ֣ית הָאֱלֹהִ֔ים מֵרָאשֵׁ֖י הַלְוִיִּֽם׃

16 தேவனுடைய ஆலயத்தின் வெளிவேலையை விசாரிக்கிற லேவியரின் தலைவரிலே சபெதாயும், யோசபாத்தும்,
16 Shabbethai and Jozabad, two leaders of the Levites, who supervised the work outside the house of God;
16 கடவுளின் இல்லத்தின் வெளிப்புற வேலைக்குப் பொறுப்பானவர்களாகவும், லேவியருக்குத் தலைவர்களாகவும் இருந்த சபத்தாய்; யோசபாத்து;

17וּמַתַּנְיָ֣ה בֶן־מִ֠יכָה בֶּן־זַבְדִּ֨י בֶן־אָסָ֜ף רֹ֗אשׁ הַתְּחִלָּה֙ יְהוֹדֶ֣ה לַתְּפִלָּ֔ה וּבַקְבֻּקְיָ֖ה מִשְׁנֶ֣ה מֵאֶחָ֑יו וְעַבְדָּא֙ בֶּן־שַׁמּ֔וּעַ בֶּן־גָּלָ֖ל בֶּן־ידיתון

17 ஆசாபின் குமாரன் சப்தியின் குமாரனாகிய மீகாவின் மகன் மத்தனியா ஜெபத்தில் ஸ்தோத்திரப்பாட்டைத் துவக்குகிற தலைவனும் அவன் சகோதரரில் இரண்டாவதான பக்பூக்கியா என்னும் ஒருவனும், எதுத்தூனின் குமாரன் காலாவின் மகனாகிய சமுவாவின் குமாரன் அப்தாவுமே.
17 Mattaniah son of Mica, the son of Zabdi, the son of Asaph, who led in thanksgiving and prayer; Bakbukiah, second among his associates; and Abda son of Shammua, the son of Galal, the son of Jeduthun.
17 மன்றாட்டில் நன்றிப்பண் ஆரம்பிக்கும் தலைவர் மத்தனியா; இவர் மீக்காவின் மகன்; இவர் சப்தியின் மகன்; இவர் ஆசாபின் மகன்; பக்புக்கியா அவருடைய சகோதரரில் இரண்டாம் இடத்தை வகித்தார். அப்தா சம்முவாவின் மகன்; இவர் காலாயின் மகன்; இவர் எதுத்தூனின் மகன்.

18כָּל־הַלְוִיִּם֙ בְּעִ֣יר הַקֹּ֔דֶשׁ מָאתַ֖יִם שְׁמֹנִ֥ים וְאַרְבָּעָֽה׃

18 பரிசுத்த பட்டணத்திலிருந்த லேவியர் எல்லாரும் இருநூற்று எண்பத்துநாலுபேர்.
18 The Levites in the holy city totaled 284.
18 புனித நகரில் வாழ்ந்த லேவியர் மொத்தம் இருநூற்று எண்பத்துநான்கு பேர்.

19וְהַשּֽׁוֹעֲרִים֙ עַקּ֣וּב טַלְמ֔וֹן וַאֲחֵיהֶ֖ם הַשֹּׁמְרִ֣ים בַּשְּׁעָרִ֑ים מֵאָ֖ה שִׁבְעִ֥ים וּשְׁנָֽיִם׃

19 வாசல் காவலாளர் அக்கூபும், தல்மோனும் வாசல்களில் காவல்காக்கிற அவர்கள் சகோதரரும் நூற்றுஎழுபத்திரண்டுபேர்.
19 And the gatekeepers: Akkub, Talmon, and their associates, who kept watch at the gates—172 men.
19 வாயிற்காவலர்: வாயில் காக்கும் அக்கூபு, தல்மோன், இவர்களுடைய சகோதரர் மொத்தம் நூற்று எழுபத்திரண்டு பேர்.

Residents Outside Jerusalem

20וּשְׁאָ֨ר יִשְׂרָאֵ֜ל הַכֹּהֲנִ֤ים הַלְוִיִּם֙ בְּכָל־עָרֵ֣י יְהוּדָ֔ה אִ֖ישׁ בְּנַחֲלָתֽוֹ׃

20 மற்ற இஸ்ரவேலரும், ஆசாரியரும், லேவியரும் யூதாவின் சகல பட்டணங்களிலும், அவரவர் தங்கள் சுதந்தரத்திலிருந்தார்கள்.
20 The rest of the Israelites, with the priests and Levites, were in all the villages of Judah, each on his own inheritance.
20 ஏனைய இஸ்ரயேல் மக்களும், குருக்களும், லேவியரும், யூதாவின் எல்லா நகர்களிலும் அவரவர் தம் உரிமைச் சொத்தில் குடியிருந்தனர்.

21וְהַנְּתִינִ֖ים יֹשְׁבִ֣ים בָּעֹ֑פֶל וְצִיחָ֥א וְגִשְׁפָּ֖א עַל־הַנְּתִינִֽים׃

21 நிதனீமியர் ஒபேலிலே குடியிருந்தார்கள்; அவர்கள்மேல் சீகாவும் கிஸ்பாவும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.
21 The temple servants lived on the hill of Ophel, with Ziha and Gishpa over them.
21 கோவில் பணியாளர் ஒபேலில் குடியிருந்தனர். சிகாவும் கிஸ்பாவும் கோவில் பணியாளருக்குத் தலைவர்களாக இருந்தனர்.

22וּפְקִ֤יד הַלְוִיִּם֙ בִּיר֣וּשָׁלִַ֔ם עֻזִּ֤י בֶן־בָּנִי֙ בֶּן־חֲשַׁבְיָ֔ה בֶּן־מַתַּנְיָ֖ה בֶּן־מִיכָ֑א מִבְּנֵ֤י אָסָף֙ הַמְשֹׁ֣רְרִ֔ים לְנֶ֖גֶד מְלֶ֥אכֶת בֵּית־הָאֱלֹהִֽים׃

22 எருசலேமிலிருக்கிற லேவியரின் விசாரிப்புக்காரன் மீகாவின் குமாரன் மத்தனியாவின் மகனாகிய அசபியாவுக்குப் பிறந்த பானியின் குமாரன் ஊசி என்பவன் தேவனுடைய ஆலயத்தின் ஊழியத்துக்கு நிற்கிற பாடகராகிய ஆசாபின் குமாரரில் ஒருவன்.
22 Now the overseer of the Levites in Jerusalem was Uzzi son of Bani, the son of Hashabiah, the son of Mattaniah, the son of Mica.g He was one of Asaph’s descendants, who were the singers in charge of the service of the house of God.
22 எருசலேமில் வாழ்ந்துவந்த லேவியருக்குத் தலைவராயிருந்த உசி, பானின் மகன்; இவர் அசபியாவின் மகன்; இவர் மத்தனியாவின் மகன்; இவர் மீக்காவின் மகன்; இவர் கடவுளின் கோவில் பணிசெய்கின்ற பாடகர்களாகிய ஆசாபின் மக்களில் ஒருவர்.

23כִּֽי־מִצְוַ֥ת הַמֶּ֖לֶךְ עֲלֵיהֶ֑ם וַאֲמָנָ֥ה עַל־הַמְשֹׁרְרִ֖ים דְּבַר־י֥וֹם בְּיוֹמֽוֹ׃

23 பாடகராகிய அவர்களுக்காக அன்றாடகப்படி கொடுக்கப்படும்படி ராஜாவினால் கட்டளையிடப்பட்டிருந்தது.
23 For there was a command from the king concerning the singers, an ordinance regulating their daily activities.
23 பாடகர்களைக் குறித்து அரச கட்டளை ஒன்று இருந்தது. அதன்படி அவர்களின் அன்றாடப் படி வரையறுக்கப்பட்டிருந்தது.

24וּפְתַֽחְיָ֨ה בֶּן־מְשֵֽׁיזַבְאֵ֜ל מִבְּנֵי־זֶ֤רַח בֶּן־יְהוּדָה֙ לְיַ֣ד הַמֶּ֔לֶךְ לְכָל־דָּבָ֖ר לָעָֽם׃

24 யூதாவின் குமாரனாகிய சேராக்கின் புத்திரரில் மெசசாபெயேலின் குமாரன் பெத்தகியா ஜனத்தின் காரியங்களுக்கெல்லாம் ராஜாவின் சமுகத்தில் நின்றான்.
24 Pethahiah son of Meshezabel, a descendant of Zerah son of Judah, was the king’s agenth in every matter concerning the people.
24 மேலும் யூதாவின் மகனான செராகின் வழித்தோன்றிய மெசசபேலின் மகன் பெத்தகியா மக்களைக் குறித்த எல்லாக் காரியங்களிலும் அரசருக்கு உதவியாக இருந்தார்.

25וְאֶל־הַחֲצֵרִ֖ים בִּשְׂדֹתָ֑ם מִבְּנֵ֣י יְהוּדָ֗ה יָֽשְׁב֞וּ בְּקִרְיַ֤ת הָֽאַרְבַּע֙ וּבְנֹתֶ֔יהָ וּבְדִיבֹן֙ וּבְנֹתֶ֔יהָ וּבִֽיקַּבְצְאֵ֖ל וַחֲצֵרֶֽיהָ׃

25 தங்கள் நாட்டுப்புறங்களான கிராமங்களில் இருக்கிறவர்களுக்குள்ளே யூதாவின் புத்திரரில் சிலர் கீரியாத்அர்பாவிலும் அதின் கிராமங்களிலும், தீபோனிலும் அதின் கிராமங்களிலும், எகாப்செயேலிலும் அதின் கிராமங்களிலும்,
25 As for the villages with their fields, some of the people of Judah lived in Kiriath-arba, Dibon, Jekabzeel, and their villages;
25 சிற்றூர்கள், அவைகளைச் சார்ந்த நிலங்களைப்பற்றிய குறிப்பு பின்வருமாறு: யூதா மக்கள் கிரியத்து அர்பாவிலும் அதன் குடியிருப்புகளிலும், தீபோனிலும் அதன் குடியிருப்புகளிலும் எக்கபட்சவேலிலும் அதன் நிலங்களிலும் குடியிருந்தனர்;

26וּבְיֵשׁ֥וּעַ וּבְמוֹלָדָ֖ה וּבְבֵ֥ית פָּֽלֶט׃

26 யெசுவாவிலும், மோலாதாகிலும், பெத்பெலேதிலும்,
26 in Jeshua, Moladah, and Beth-pelet;
26 மேலும் ஏசுவாபிலும், மோலதாவிலும், பெத்பலேத்திலும்

27וּבַחֲצַ֥ר שׁוּעָ֛ל וּבִבְאֵ֥ר שֶׁ֖בַע וּבְנֹתֶֽיהָ׃

27 ஆத்சார்சூகாவிலும், பெயெர்செபாவிலும், அதின் கிராமங்களிலும்,
27 in Hazar-shual; in Beersheba and its villages;
27 அட்சர்சூவாவிலும் பெயேர்சபாவிலும் அதன் குடியிருப்புகளிலும்,

28וּבְצִֽקְלַ֥ג וּבִמְכֹנָ֖ה וּבִבְנֹתֶֽיהָ׃

28 சிக்லாகிலும், மேகோனாகிலும், அதின் கிராமங்களிலும்,
28 in Ziklag; in Meconah and its villages;
28 சிக்லாசிலும், மெக்கோனாவிலும், அதன் குடியிருப்புகளிலும்,

29וּבְעֵ֥ין רִמּ֛וֹן וּבְצָרְעָ֖ה וּבְיַרְמֽוּת׃

29 என்ரிம்மோனிலும், சாரேயாகிலும், யர்மூத்திலும்,
29 in En-rimmon, Zorah, Jarmuth,
29 ஏன்ரிம்மோனிலும், சோராவிலும், யார்முத்திலும்,

30זָנֹ֤חַ עֲדֻלָּם֙ וְחַצְרֵיהֶ֔ם לָכִישׁ֙ וּשְׂדֹתֶ֔יהָ עֲזֵקָ֖ה וּבְנֹתֶ֑יהָ וַיַּחֲנ֥וּ מִבְּאֵֽר־שֶׁ֖בַע עַד־גֵּֽיא־הִנֹּֽם׃

30 சானோவாலும், அதுல்லாமிலும் அவைகளின் கிராமங்களிலும், லாகீசிலும் அதின் நாட்டுப்புறங்களிலும், அசெக்காவிலும் அதின் கிராமங்களிலும், பெயெர்செபா தொடங்கி இன்னோமின் பள்ளத்தாக்குமட்டும் குடியேறினார்கள்.
30 Zanoah, Adullam, and their villages; in Lachish and its fields; and in Azekah and its villages. So they settled from Beersheba all the way to the Valley of Hinnom.
30 சானோவாகிலும், அதுல்லாமிலும், அதன் குடியிருப்புகளிலும், இலாக்கிசிலும் அதன் நிலங்களிலும், அசேக்காவிலும் அதன் குடியிருப்புகளிலும், ஆகப் பெயேர்செபா முதல் இன்னோம் பள்ளத்தாக்கு வரை குடியிருந்தனர்.

31וּבְנֵ֥י בִנְיָמִ֖ן מִגָּ֑בַע מִכְמָ֣שׂ וְעַיָּ֔ה וּבֵֽית־אֵ֖ל וּבְנֹתֶֽיהָ׃

31 கேபாவின் ஊராராயிருந்த பென்யமீன் புத்திரர், மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதின் கிராமங்களிலும்,
31 The descendants of Benjamin from Geba lived in Michmash, Aija, and Bethel with its villages;
31 பென்யமின் மக்கள் கெபா முதல் மிக்மாசிலும், அயாவிலும், பெத்தேலிலும் அதன் குடியிருப்புகளிலும்,

32עֲנָת֥וֹת נֹ֖ב עֲנָֽנְיָֽה׃

32 ஆனதோத், நோப், அனனியா,
32 in Anathoth, Nob, Ananiah,
32 அனத்தோத்திலும், நோபிலும் அனனியாவிலும்

33חָצ֥וֹר ׀ רָמָ֖ה גִּתָּֽיִם׃

33 ஆத்சோர், ஆமா, கித்தாயிம்,
33 Hazor, Ramah, Gittaim,
33 ஆட்சோரிலும், இராமாவிலும், கித்தயிமிலும்

34חָדִ֥יד צְבֹעִ֖ים נְבַלָּֽט׃

34 ஆதீத், செபோயிம், நெபலாத்,
34 Hadid, Zeboim, Neballat,
34 ஆதிது, சேபோயிம் நேபல்லாற்று,

35לֹ֥ד וְאוֹנ֖וֹ גֵּ֥י הַחֲרָשִֽׁים׃

35 லோத், ஓனோ என்னும் ஊர்களிலும், சிற்பாசாரிகளின் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தார்கள்.
35 Lod, and Ono; and in the Valley of the Craftsmen.i
35 லோது, ஒனோ என்ற ஊர்களிலும், தொழிலாளர் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தனர்.

36וּמִן־הַלְוִיִּ֔ם מַחְלְק֥וֹת יְהוּדָ֖ה לְבִנְיָמִֽין׃

36 லேவியரிலே சில வகுப்பார் யூதாவிலும், சிலர் பென்யமீனிலும் இருந்தார்கள்.
36 And some divisions of the Levites of Judah settled in Benjamin.
36 லேவியரில் சில பிரிவினர் யூதாவிலும் பென்யமினிலும் குடியிருந்தனர்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Nehemiah Chapter     1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13

Gen   Exo   Lev   Num   Deut   Josh   Judg   Ruth   1Sam   2Sam   1Kgs   2Kgs   1Chr   2Chr   Ezra   Neh   Esth   Job   Pslm   Prov
Ecc   Song   Isa   Jer   Lam   Eze   Dan   Hos   Joel   Amos   Obad   Jnh   Mic   Nah   Hab   Zeph   Hag   Zech   Mal

Footnotes:
a Hebrew nine hands
3 b Hebrew Nethinim ; also in verse 21
5 c Or of the Shilonite
9 d Or was over the Second Quarter of the city , a newer section of Jerusalem; or was second in command of the city
10 e Or Jedaiah; the son of Joiarib;
14 f Most LXX manuscripts; Hebrew their associates
22 g Mica  is a variant of Micaiah ; see Nehemiah 12:35.
24 h Hebrew hand
35 i Hebrew in Ge-harashim

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.