பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Proverbs நீதிமொழிகள் מִשְלֵי
நீதிமொழிகள் 23 | Proverbs 23
True Riches (1 Timothy 6:17–19; James 5:1–6)
Saying 7
1 நீ ஒரு அதிபதியோடே போஜனம்பண்ண உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப்பார்.
1 When you sit down to dine with a ruler, consider carefully what is set before you,a
1 ஆளுநர் வீட்டில் நீ உணவு கொள்ள உட்காரும்போது, உனக்குமுன் இருப்பதை நன்றாய்க் கவனித்துப் பார்.
2 நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை.
2 and put a knife to your throat if you possess a great appetite.
2 உனக்கு அப்போது அடங்காப் பசி இருந்தாலும், உன் தொண்டையில் கத்தி இருப்பதாக நினைத்துக்கொள்.
3 அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே; அவைகள் கள்ளப்போஜனமாமே.
3 Do not crave his delicacies, for that food is deceptive.
3 அவர் தரும் சுவையான உண்டியை உண்ண ஆவல் கொள்ளாதே; அது உன்னை வஞ்சிக்க விழையும் உணவாயிருக்கலாம்.
Saying 8
4 ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே.
4 Do not wear yourself out to get rich; be wise enough to restrain yourself.
4 செல்வராக வேண்டுமென்று பாடுபட்டு உருக்குலைந்து போகாதே; அதனால் உனது அறிவை இழந்து விடாதே.
5 இல்லாமற்போகும் பொருள்மேல் உன்கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்.
5 When you glance at wealth, it disappears, for it makes wings for itself and flies like an eagle to the sky.
5 இல்லாமற்போகும் பொருள் மேல் நீ கண்ணும் கருத்துமாய் இருப்பானேன்? கழுகுபோல அது தனக்குச் சிறகுகளை வளர்த்துக்கொண்டு வானத்தில் பறந்து போகுமன்றோ?
Saying 9
6 வன்கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே.
6 Do not eat the bread of a stingy man,b and do not crave his delicacies;
6 கஞ்சர் தரும் உணவை உண்ணாதே; அவரது அறுசுவை உண்டியை உண்ண ஆவல் கொள்ளாதே.
7 அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; புசியும், பானம்பண்ணும் என்று அவன் உன்னோடே சொன்னாலும், அவன் இருதயம் உன்னோடே இராது.
7 for he is keeping track, inwardly counting the cost.c “Eat and drink,” he says to you, but his heart is not with you.
7 அவர் தமக்குள் கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பார்; "உண்டு பருகு" என்று அவர் சொன்னாலும், அவருக்கு உன்மீது அக்கறை இல்லாதிருக்கலாம்.
8 நீ புசித்த துணிக்கையை வாந்திபண்ணி, உன் இனிய சொற்களை இழந்துபோவாய்.
8 You will vomit up what little you have eaten and waste your pleasant words.
8 நீ உண்ட உணவை வாந்தியெடுக்க நேரிடும்; நீ உரைத்த புகழுரை பயனற்றதாகும்.
Saying 10
9 மூடனுடைய செவிகள் கேட்கப்பேசாதே; அவன் உன் வார்த்தைகளின் ஞானத்தை அசட்டைபண்ணுவான்.
9 Do not speak to a fool, for he will despise the wisdom of your words.
9 மதிகேடர் காதில் விழும்படி எதையும் பேசாதே; உன் அறிவுரைகளை அவர் மதிக்கமாட்டார்.
Saying 11
10 பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே.
10 Do not move an ancient boundary stone or encroach on the fields of the fatherless,
10 வழிவழிச் சொத்தின் எல்லையை மாற்றி அமைக்காதே; உன் நிலத்தின் எல்லையைத் தள்ளித் தள்ளி, திக்கற்றவர்களின் நிலத்தை எடுத்துக்கொள்ள முயலாதே.
11 அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.
11 for their Redeemer is strong; He will take up their case against you.
11 ஏனெனில் அவர்களின் மீட்பர் வல்லவர். அவர் அவர்கள் சார்பில் உனக்கு எதிராக வழக்காடுவார்.
Saying 12
12 உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக.
12 Apply your heart to instruction and your ears to words of knowledge.
12 நல்லுரை கேட்பதில் சிந்தனையைச் செலுத்து; அறிவூட்டும் மொழிகளுக்குச் செவிகொடு.
Saying 13
13 பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.
13 Do not withhold discipline from a child; although you strike him with a rod, he will not die.
13 பிள்ளைகளைத் தண்டித்துத் திருத்தத் தயங்காதே; பிரம்பினால் அடித்தால் சாகமாட்டார்கள்.
14 நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.
14 Strike him with a rod, and you will deliver his soul from Sheol.
14 நீ பிரம்பினால் அவர்களை அடித்தால், அவர்களைப் பாதாளத்துக்குத் தப்புவிக்கிறவனாவாய்.
Saying 14
15 என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும்.
15 My son, if your heart is wise, my own heart will indeed rejoice.
15 பிள்ளாய், நீ ஞானமுள்ளவனாயிருந்தால், நான் மனமகிழ்ச்சி அடைவேன்.
16 உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், என் உள்ளிந்திரியங்கள் மகிழும்.
16 My inmost beingd will rejoice when your lips speak what is right.
16 உன் நாவு நேர்மையானவற்றைப் பேசினால், என் உள்ளம் களிகூரும்.
Saying 15
17 உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.
17 Do not let your heart envy sinners, but always continue in the fear of the LORD.
17 வளமுடன் இருக்கும் பாவிகளைப்போல் நீயும் இருக்கவேண்டுமென்று ஏங்காதே; ஆண்டவரிடம் எப்போதும் அச்சம் உள்ளவனாயிரு.
18 நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.
18 For surely there is a future, and your hope will not be cut off.
18 அப்பொழுது உன் வருங்காலம் வளமானதாயிருக்கும்; உன் நம்பிக்கையும் வீண்போகாது.
Saying 16
19 என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து, உன் இருதயத்தை நல்வழியிலே நடத்து.
19 Listen, my son, and be wise, and guide your heart on the right course.
19 பிள்ளாய், இதைக் கவனி; ஞானமுள்ளவனாயிரு; உன் மனத்தை நன்னெறியில் செலுத்து.
20 மதுபானப்பிரியரையும் மாம்சப்பெருந்தீனிக்காரரையும் சேராதே.
20 Do not join those who drink too much wine or gorge themselves on meat.
20 குடிகாரரோடு சேராதே; பெருந்தீனியரோடு சேர்ந்து கொண்டு அவர்களைப் போலப் புலால் உண்ணாதே.
21 குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்.
21 For the drunkard and the glutton will come to poverty, and drowsiness will clothe them in rags.
21 குடிகாரரும் பெருந்தீனியரும் முடிவில் ஏழைகளாவர்; உண்டு குடித்த மயக்கம் கந்தையை உடுத்தும்.
Saying 17
22 உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.
22 Listen to your father who gave you life, and do not despise your mother when she is old.
22 பெற்ற தந்தைக்குச் செவிகொடு; உன் தாய் முதுமை அடையும்போது அவளை இழிவாக எண்ணாதே.
23 சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு.
23 Invest in truth and never sell it—in wisdom and instruction and understanding.
23 மெய்ம்மையை விலைகொடுத்தாயினும் வாங்கு; ஆனால் அதை விற்பனை செய்யாதே; அவ்வாறே ஞானத்தையும் நல்லுரையையும் உணர்வையும் விலை கொடுத்துப்பெறு.
24 நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.
24 The father of a righteous man will greatly rejoice, and he who fathers a wise son will delight in him.
24 நேர்மையான பிள்ளையின் தந்தை மிகவும் களிகூர்வார்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்ற தகப்பன் அவர் பொருட்டு மகிழ்ச்சி அடைவார்.
25 உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள்.
25 May your father and mother be glad, and may she who gave you birth rejoice!
25 நீ உன் தந்தையையும் உன் தாயையும் மகிழ்விப்பாயாக; உன்னைப் பெற்றவளைக் களிகூரச் செய்வாயாக.
Saying 18
26 என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.
26 My son, give me your heart, and let your eyes delight in my ways.
26 மகனே, நான் சொல்வதைக் கவனி; என் வழிகளில் உன் கவனத்தைச் செலுத்து.
27 வேசி ஆழமான படுகுழி; பரஸ்திரீ இடுக்கமான கிணறு.
27 For a prostitute is a deep pit, and an adulteresse is a narrow well.
27 விலைமகள் ஒரு படுகுழி; பரத்தை ஓர் ஆழ்கிணறு.
28 அவள் கொள்ளைக்காரனைப்போல பதிவிருந்து, மனுஷருக்குள்ளே பாதகரைப் பெருகப்பண்ணுகிறாள்.
28 Like a robber she lies in wait and multiplies the faithless among men.
28 அவள் கள்வனைப்போலப் பதுங்கி இருப்பாள்; அவள் ஏராளமான பேரை வஞ்சிப்பவள்.
Saying 19
29 ஐயோ! யாருக்கு வேதனை யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?
29 Who has woe? Who has sorrow? Who has contentions? Who has complaints? Who has needless wounds? Who has bloodshot eyes?
29 துன்பக் கதறல், துயரக் கண்ணீர், ஓயாத சண்டை, ஒழியாத புலம்பல், காரணம் தெரியாமல் கிடைத்த புண்கள், கலங்கிச் சிவந்திருக்கும் கண்கள் — இவை அனைத்தையும் அனுபவிப்பவர் யார்?
30 மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே.
30 Those who linger over wine, who go to taste mixed drinks.
30 திராட்சை இரச மதுவில் நீந்திக் கொண்டிருப்பவர்களே, புதுப்புது மதுக் கலவையைச் சுவைத்துக் களிப்பவர்களே,
31 மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.
31 Do not gaze at wine while it is red, when it sparkles in the cup and goes down smoothly.
31 மதுவைப் பார்த்து, "இந்த இரசத்தின் சிவப்பென்ன! பாத்திரத்தில் அதன் பளபளப்பென்ன!" எனச் சொல்லி மகிழாதீர். அது தொண்டைக்குள் செல்லும்போது இனிமையாயிருக்கும்;
32 முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.
32 In the end it bites like a snake and stings like a viper.
32 பிறகோ அது பாம்புபோலக் கடிக்கும்; விரியனைப் போலத் தீண்டும்.
33 உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.
33 Your eyes will see strange things, and your mind will utter perversities.
33 உன் கண் என்னென்னவோ வகையான காட்சிகளைக் காணும்; உன் உள்ளத்திலிருந்து ஏறுமாறான சொற்கள் வெளிப்படும்.
34 நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப்போலும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய்.
34 You will be like one sleeping on the high seas or lying on the top of a mast:
34 கடல் அலைமீது மிதந்து செல்வது போலவும், பாய்மர நுனியில் படுத்துறங்குவது போலவும் உனக்குத் தோன்றும்.
35 என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரணையில்லை; நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய்.
35 “They struck me, but I feel no pain! They beat me, but I did not know it! When can I wake up to search for another drink?”
35 "என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், நான் அதை உணரவில்லை; நான் எப்போது விழித்தெழுவேன்? அதை இன்னும் கொடுக்கும்படி கேட்பேன்" என்று நீ சொல்வாய்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a Or who is before you
6 b Literally of him whose eye is evil
7 c Or for as he calculates in his soul, so is he
16 d Hebrew My kidneys
27 e Or a foreign woman or a wayward wife
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.