பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Numbers  எண்ணாகமம்  בְּמִדְבַּר

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36

எண்ணாகமம் 1 | Numbers 1

The First Census of Israel (Numbers 26:1–4)

1וַיְדַבֵּ֨ר יְהוָ֧ה אֶל־מֹשֶׁ֛ה בְּמִדְבַּ֥ר סִינַ֖י בְּאֹ֣הֶל מוֹעֵ֑ד בְּאֶחָד֩ לַחֹ֨דֶשׁ הַשֵּׁנִ֜י בַּשָּׁנָ֣ה הַשֵּׁנִ֗ית לְצֵאתָ֛ם מֵאֶ֥רֶץ מִצְרַ֖יִם לֵאמֹֽר׃

1 இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி:
1 On the first day of the second month of the second year after the Israelites had come out of the land of Egypt, the LORD spoke to Moses in the Tent of Meeting in the Wilderness of Sinai. He said:
1 இஸ்ரயேலர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய இரண்டாம் ஆண்டு, இரண்டாம் மாதம், முதல் நாளன்று, சீனாய்ப் பாலைநிலத்தில் சந்திப்புக் கூடாரத்தில் ஆண்டவர் மோசேயுடன் பேசினார். அவர் கூறியது:

2שְׂא֗וּ אֶת־רֹאשׁ֙ כָּל־עֲדַ֣ת בְּנֵֽי־יִשְׂרָאֵ֔ל לְמִשְׁפְּחֹתָ֖ם לְבֵ֣ית אֲבֹתָ֑ם בְּמִסְפַּ֣ר שֵׁמ֔וֹת כָּל־זָכָ֖ר לְגֻלְגְּלֹתָֽם׃

2 நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச்சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணித் தொகையேற்றுங்கள்.
2 “Take a census of the whole congregation of Israel by their clans and families, listing every man by name, one by one.
2 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள ஆண்கள் அனைவரையும் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி தலைக்கட்டு வாரியாகக் கணக்கெடுங்கள்.

3מִבֶּ֨ן עֶשְׂרִ֤ים שָׁנָה֙ וָמַ֔עְלָה כָּל־יֹצֵ֥א צָבָ֖א בְּיִשְׂרָאֵ֑ל תִּפְקְד֥וּ אֹתָ֛ם לְצִבְאֹתָ֖ם אַתָּ֥ה וְאַהֲרֹֽן׃

3 இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் அவர்கள் சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப் பார்ப்பீர்களாக.
3 You and Aaron are to number those who are twenty years of age or older by their divisions—everyone who can serve in Israel’s army.
3 இஸ்ரயேலில் இருபதோ அதற்கு மேலோ வயதுடைய போருக்குச் செல்லத்தக்க அனைவரையும் அணி அணியாக நீயும், ஆரோனும் எண்ணுங்கள்.

4וְאִתְּכֶ֣ם יִהְי֔וּ אִ֥ישׁ אִ֖ישׁ לַמַּטֶּ֑ה אִ֛ישׁ רֹ֥אשׁ לְבֵית־אֲבֹתָ֖יו הֽוּא׃

4 ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொரு மனிதன் உங்களோடே இருப்பானாக; அவன் தன் பிதாக்களின் வம்சத்துக்குத் தலைவனாயிருக்கவேண்டும்.
4 And one man from each tribe, the head of each family, must be there with you.
4 ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒருவன் உங்களோடிருப்பான்; அவன் தன் மூதாதையரின் வீட்டுத் தலைவனாக இருக்க வேண்டும்.

The Leaders of the Tribes

5וְאֵ֙לֶּה֙ שְׁמ֣וֹת הָֽאֲנָשִׁ֔ים אֲשֶׁ֥ר יַֽעַמְד֖וּ אִתְּכֶ֑ם לִרְאוּבֵ֕ן אֱלִיצ֖וּר בֶּן־שְׁדֵיאֽוּר׃

5 உங்களோடே நிற்கவேண்டிய மனிதருடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய குமாரன் எலிசூர்.
5 These are the names of the men who are to assist you: From the tribe of Reuben, Elizur son of Shedeur;
5 உங்களுக்குத் துணை நிற்க வேண்டியவர்களின் பெயர்களாவன; ரூபன் குலத்திலிருந்து எலிட்சூர்; இவன் செதேயூர் மகன்;

6לְשִׁמְע֕וֹן שְׁלֻמִיאֵ֖ל בֶּן־צוּרִֽישַׁדָּֽי׃

6 சிமியோன் கோத்திரத்தில் சூரிஷதாயின் குமாரன் செலுூமியேல்.
6 from Simeon, Shelumiel son of Zurishaddai;
6 சிமியோன் குலத்திலிருந்து செலுமியேல்; இவன் சுரிசத்தாய் மகன்;

7לִֽיהוּדָ֕ה נַחְשׁ֖וֹן בֶּן־עַמִּינָדָֽב׃

7 யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் குமாரன் நகசோன்.
7 from Judah, Nahshon son of Amminadab;
7 யூதா குலத்திலிருந்து நகுசோன்; இவன் அம்மினதாபின் மகன்;

8לְיִ֨שָּׂשכָ֔ר נְתַנְאֵ֖ל בֶּן־צוּעָֽר׃

8 இசக்கார் கோத்திரத்தில் சூவாரின் குமாரன் நெதனெயேல்.
8 from Issachar, Nethanel son of Zuar;
8 இசக்கார் குலத்திலிருந்து நெத்தனியேல்; இவன் சூவார் மகன்;

9לִזְבוּלֻ֕ן אֱלִיאָ֖ב בֶּן־חֵלֹֽן׃

9 செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் குமாரன் எலியாப்.
9 from Zebulun, Eliab son of Helon;
9 செபுலோன் குலத்திலிருந்து எலியாபு; இவன் கேலோன் மகன்;

10לִבְנֵ֣י יוֹסֵ֔ף לְאֶפְרַ֕יִם אֱלִישָׁמָ֖ע בֶּן־עַמִּיה֑וּד לִמְנַשֶּׁ֕ה גַּמְלִיאֵ֖ל בֶּן־פְּדָהצֽוּר׃

10 யோசேப்பின் குமாரராகிய எப்பிராயீம் கோத்திரத்தில் அம்மியூதின் குமாரன் எலிஷாமா; மனாசே கோத்திரத்தில் பெதாசூரின் குமாரன் கமாலியேல்.
10 from the sons of Joseph: from Ephraim, Elishama son of Ammihud, and from Manasseh, Gamaliel son of Pedahzur;
10 யோசேப்பின் மைந்தருள் எப்ராயிம் குலத்திலிருந்து எலிசாமா; இவன் அம்மிகூதின் மகன்; மனாசே குலத்திலிருந்து கமாலியேல்; இவன் பெதாசூரின் மகன்;

11לְבִ֨נְיָמִ֔ן אֲבִידָ֖ן בֶּן־גִּדְעֹנִֽי׃

11 பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் குமாரன் அபீதான்.
11 from Benjamin, Abidan son of Gideoni;
11 பென்யமின் குலத்திலிருந்து அபிதான்; இவன் கிதயோனின் மகன்;

12לְדָ֕ן אֲחִיעֶ֖זֶר בֶּן־עַמִּֽישַׁדָּֽי׃

12 தாண் கோத்திரத்தில் அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர்.
12 from Dan, Ahiezer son of Ammishaddai;
12 தாண் குலத்திலிருந்து அகியசேர்; இவன் அம்மிசத்தாயின் மகன்;

13לְאָשֵׁ֕ר פַּגְעִיאֵ֖ל בֶּן־עָכְרָֽן׃

13 ஆசேர் கோத்திரத்தில் ஓகிரானின் குமாரன் பாகியேல்.
13 from Asher, Pagiel son of Ocran;
13 ஆசேர் குலத்திலிருந்து பகியேல்; இவன் ஒக்ரானின் மகன்;

14לְגָ֕ד אֶלְיָסָ֖ף בֶּן־דְּעוּאֵֽל׃

14 காத் கோத்திரத்தில் தேகுவேலின் குமாரன் எலியாசாப்.
14 from Gad, Eliasaph son of Deuel;
14 காத்து குலத்திலிருந்து எல்யாசாபு; இவன் தெகுவேலின் மகன்;

15לְנַ֨פְתָּלִ֔י אֲחִירַ֖ע בֶּן־עֵינָֽן׃

15 நப்தலி கோத்திரத்தில் ஏனானின் குமாரன் அகீரா.
15 and from Naphtali, Ahira son of Enan.”
15 நப்தலி குலத்திலிருந்து அகிரா; இவன் ஏனானின் மகன்;

16אֵ֚לֶּה קריאי הָעֵדָ֔ה נְשִׂיאֵ֖י מַטּ֣וֹת אֲבוֹתָ֑ם רָאשֵׁ֛י אַלְפֵ֥י יִשְׂרָאֵ֖ל הֵֽם׃

16 இவர்களே சபையில் ஏற்படுத்தப்பட்டவர்களும், தங்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களில் பிரபுக்களும், இஸ்ரவேலில் ஆயிரவர்களுக்குத் தலைவருமாயிருப்பவர்கள் என்றார்.
16 These men were appointed from the congregation; they were the leaders of the tribes of their fathers, the heads of the clans of Israel.
16 மக்கள் கூட்டமைப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இவர்களே. இவர்கள் தங்கள் மூதாதையர் குலங்களின் முதல்வர்களும் இஸ்ரயேலில் ஆயிரவர் தலைவர்களும் ஆவர்.

The Number of Every Tribe

17וַיִּקַּ֥ח מֹשֶׁ֖ה וְאַהֲרֹ֑ן אֵ֚ת הָאֲנָשִׁ֣ים הָאֵ֔לֶּה אֲשֶׁ֥ר נִקְּב֖וּ בְּשֵׁמֽוֹת׃

17 அப்படியே மோசேயும் ஆரோனும் பேர்பேராகக் குறிக்கப்பட்ட இந்த மனிதரைக் கூட்டிக்கொண்டு,
17 So Moses and Aaron took these men who had been designated by name,
17 பெயர் குறிக்கப்பட்ட இவர்களை மோசேயும் ஆரோனும் தங்களுடன் சேர்த்துக்கொண்டனர்.

18וְאֵ֨ת כָּל־הָעֵדָ֜ה הִקְהִ֗ילוּ בְּאֶחָד֙ לַחֹ֣דֶשׁ הַשֵּׁנִ֔י וַיִּתְיַֽלְד֥וּ עַל־מִשְׁפְּחֹתָ֖ם לְבֵ֣ית אֲבֹתָ֑ם בְּמִסְפַּ֣ר שֵׁמ֗וֹת מִבֶּ֨ן עֶשְׂרִ֥ים שָׁנָ֛ה וָמַ֖עְלָה לְגֻלְגְּלֹתָֽם׃

18 இரண்டாம் மாதம் முதல் தேதியில் சபையார் எல்லாரையும் கூடிவரச்செய்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் தங்கள் குடும்பத்தின்படிக்கும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும், நாமத்தொகையின்படிக்கும், இருபது வயதுள்ளவர்கள் முதல் தலைதலையாகத் தங்கள் வம்ச உற்பத்தியைத் தெரிவித்தார்கள்.
18 and on the first day of the second month they assembled the whole congregation and recorded their ancestry by clans and families, counting one by one the names of those twenty years of age or older,
18 இரண்டாம் மாதம் முதல் நாளன்று அவர்கள் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் ஒன்றுகூட்டினர். அவர்கள் தங்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி, தலைக்கட்டுவாரியாக இருபதோ அதற்குமேலோ வயதுடையவர்களைப் பதிவு செய்தனர்.

19כַּאֲשֶׁ֛ר צִוָּ֥ה יְהוָ֖ה אֶת־מֹשֶׁ֑ה וַֽיִּפְקְדֵ֖ם בְּמִדְבַּ֥ר סִינָֽי׃

19 இப்படிக் கர்த்தர் கட்டளையிட்டபடியே, மோசே அவர்களைச் சீனாய் வனாந்தரத்தில் எண்ணிப்பார்த்தான்.
19 just as the LORD had commanded Moses. So Moses numbered them in the Wilderness of Sinai:
19 ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டிருந்தும் இதுவே; அவ்வாறே அவர் சீனாய்ப் பாலைநிலத்தில் அவர்களை எண்ணினார்.

20וַיִּהְי֤וּ בְנֵֽי־רְאוּבֵן֙ בְּכֹ֣ר יִשְׂרָאֵ֔ל תּוֹלְדֹתָ֥ם לְמִשְׁפְּחֹתָ֖ם לְבֵ֣ית אֲבֹתָ֑ם בְּמִסְפַּ֤ר שֵׁמוֹת֙ לְגֻלְגְּלֹתָ֔ם כָּל־זָכָ֗ר מִבֶּ֨ן עֶשְׂרִ֤ים שָׁנָה֙ וָמַ֔עְלָה כֹּ֖ל יֹצֵ֥א צָבָֽא׃

20 இஸ்ரவேலின் மூத்தகுமாரனாகிய ரூபன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டுவம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,
20 From the sons of Reuben, the firstborn of Israel, according to the records of their clans and families, counting one by one the names of every male twenty years of age or older who could serve in the army,
20 இஸ்ரயேலின் தலைப்பேறான ரூபன் மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி, தலைக்கட்டுவாரியாக, இருபதோ, அதற்கு மேலோ வயதுடைய போருக்குப் போகத்தக்க மொத்த ஆண்கள்;

21פְּקֻדֵיהֶ֖ם לְמַטֵּ֣ה רְאוּבֵ֑ן שִׁשָּׁ֧ה וְאַרְבָּעִ֛ים אֶ֖לֶף וַחֲמֵ֥שׁ מֵאֽוֹת׃

21 ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.
21 those registered to the tribe of Reuben numbered 46,500.
21 ரூபன் குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறு பேர்.

22לִבְנֵ֣י שִׁמְע֔וֹן תּוֹלְדֹתָ֥ם לְמִשְׁפְּחֹתָ֖ם לְבֵ֣ית אֲבֹתָ֑ם פְּקֻדָ֗יו בְּמִסְפַּ֤ר שֵׁמוֹת֙ לְגֻלְגְּלֹתָ֔ם כָּל־זָכָ֗ר מִבֶּ֨ן עֶשְׂרִ֤ים שָׁנָה֙ וָמַ֔עְלָה כֹּ֖ל יֹצֵ֥א צָבָֽא׃

22 சிமியோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,
22 From the sons of Simeon, according to the records of their clans and families, counting one by one the names of every male twenty years of age or older who could serve in the army,
22 சிமியோன் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி தலைக்கட்டு வாரியாக இருபதோ அதற்கு மேலோ வயதுடைய போருக்குப் போகத்தக்க மொத்த ஆண்கள்;

23פְּקֻדֵיהֶ֖ם לְמַטֵּ֣ה שִׁמְע֑וֹן תִּשְׁעָ֧ה וַחֲמִשִּׁ֛ים אֶ֖לֶף וּשְׁלֹ֥שׁ מֵאֽוֹת׃

23 சிமியோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தொன்பதினாயிரத்து முந்நூறுபேர்.
23 those registered to the tribe of Simeon numbered 59,300.
23 சிமியோன் குலத்தில் எண்ணப்பட்டோர் ஐம்பத்தொன்பதாயிரத்து முந்நூறு பேர்.

24לִבְנֵ֣י גָ֔ד תּוֹלְדֹתָ֥ם לְמִשְׁפְּחֹתָ֖ם לְבֵ֣ית אֲבֹתָ֑ם בְּמִסְפַּ֣ר שֵׁמ֗וֹת מִבֶּ֨ן עֶשְׂרִ֤ים שָׁנָה֙ וָמַ֔עְלָה כֹּ֖ל יֹצֵ֥א צָבָֽא׃

24 காத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
24 From the sons of Gad, according to the records of their clans and families, counting the names of all those twenty years of age or older who could serve in the army,
24 காத்து மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்;

25פְּקֻדֵיהֶ֖ם לְמַטֵּ֣ה גָ֑ד חֲמִשָּׁ֤ה וְאַרְבָּעִים֙ אֶ֔לֶף וְשֵׁ֥שׁ מֵא֖וֹת וַחֲמִשִּֽׁים׃

25 காத் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பதுபேர்.
25 those registered to the tribe of Gad numbered 45,650.
25 காத்து குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பத்தையாயிரத்து அறுநூற்றைம்பது பேர்.

26לִבְנֵ֣י יְהוּדָ֔ה תּוֹלְדֹתָ֥ם לְמִשְׁפְּחֹתָ֖ם לְבֵ֣ית אֲבֹתָ֑ם בְּמִסְפַּ֣ר שֵׁמֹ֗ת מִבֶּ֨ן עֶשְׂרִ֤ים שָׁנָה֙ וָמַ֔עְלָה כֹּ֖ל יֹצֵ֥א צָבָֽא׃

26 யூதா புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
26 From the sons of Judah, according to the records of their clans and families, counting the names of all those twenty years of age or older who could serve in the army,
26 யூதா மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்;

27פְּקֻדֵיהֶ֖ם לְמַטֵּ֣ה יְהוּדָ֑ה אַרְבָּעָ֧ה וְשִׁבְעִ֛ים אֶ֖לֶף וְשֵׁ֥שׁ מֵאֽוֹת׃

27 யூதா கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், எழுபத்து நாலாயிரத்து அறுநூறுபேர்.
27 those registered to the tribe of Judah numbered 74,600.
27 யூதா குலத்தில் எண்ணப்பட்டோர் எழுபத்து நாலாயிரத்து அறுநூறு பேர்.

28לִבְנֵ֣י יִשָּׂשכָ֔ר תּוֹלְדֹתָ֥ם לְמִשְׁפְּחֹתָ֖ם לְבֵ֣ית אֲבֹתָ֑ם בְּמִסְפַּ֣ר שֵׁמֹ֗ת מִבֶּ֨ן עֶשְׂרִ֤ים שָׁנָה֙ וָמַ֔עְלָה כֹּ֖ל יֹצֵ֥א צָבָֽא׃

28 இசக்கார் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
28 From the sons of Issachar, according to the records of their clans and families, counting the names of all those twenty years of age or older who could serve in the army,
28 இசக்கார் மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்;

29פְּקֻדֵיהֶ֖ם לְמַטֵּ֣ה יִשָּׂשכָ֑ר אַרְבָּעָ֧ה וַחֲמִשִּׁ֛ים אֶ֖לֶף וְאַרְבַּ֥ע מֵאֽוֹת׃

29 இசக்கார் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்து நாலாயிரத்து நானூறுபேர்.
29 those registered to the tribe of Issachar numbered 54,400.
29 இசக்கார் குலத்தில் எண்ணப்பட்டோர் ஐம்பத்து நாலாயிரத்து நானூறு பேர்.

30לִבְנֵ֣י זְבוּלֻ֔ן תּוֹלְדֹתָ֥ם לְמִשְׁפְּחֹתָ֖ם לְבֵ֣ית אֲבֹתָ֑ם בְּמִסְפַּ֣ר שֵׁמֹ֗ת מִבֶּ֨ן עֶשְׂרִ֤ים שָׁנָה֙ וָמַ֔עְלָה כֹּ֖ל יֹצֵ֥א צָבָֽא׃

30 செபுலோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
30 From the sons of Zebulun, according to the records of their clans and families, counting the names of all those twenty years of age or older who could serve in the army,
30 செபுலோன் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்;

31פְּקֻדֵיהֶ֖ם לְמַטֵּ֣ה זְבוּלֻ֑ן שִׁבְעָ֧ה וַחֲמִשִּׁ֛ים אֶ֖לֶף וְאַרְבַּ֥ע מֵאֽוֹת׃

31 செபுலோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தேழாயிரத்து நானூறுபேர்.
31 those registered to the tribe of Zebulun numbered 57,400.
31 செபுலோன் குலத்தில் எண்ணப்பட்டோர் ஐம்பத்தேழாயிரத்து நானூறு பேர்.

32לִבְנֵ֤י יוֹסֵף֙ לִבְנֵ֣י אֶפְרַ֔יִם תּוֹלְדֹתָ֥ם לְמִשְׁפְּחֹתָ֖ם לְבֵ֣ית אֲבֹתָ֑ם בְּמִסְפַּ֣ר שֵׁמֹ֗ת מִבֶּ֨ן עֶשְׂרִ֤ים שָׁנָה֙ וָמַ֔עְלָה כֹּ֖ל יֹצֵ֥א צָבָֽא׃

32 யோசேப்பின் குமாரரில் எப்பிராயீம் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
32 From the sons of Joseph: From the sons of Ephraim, according to the records of their clans and families, counting the names of all those twenty years of age or older who could serve in the army,
32 யோசேப்பின் மைந்தருள் எப்ராயிம் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்;

33פְּקֻדֵיהֶ֖ם לְמַטֵּ֣ה אֶפְרָ֑יִם אַרְבָּעִ֥ים אֶ֖לֶף וַחֲמֵ֥שׁ מֵאֽוֹת׃

33 எப்பிராயீம் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பதினாயிரத்து ஐந்நூறுபேர்.
33 those registered to the tribe of Ephraim numbered 40,500.
33 எப்ராயிம் குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பதாயிரத்து ஐந்நூறுபேர்.

34לִבְנֵ֣י מְנַשֶּׁ֔ה תּוֹלְדֹתָ֥ם לְמִשְׁפְּחֹתָ֖ם לְבֵ֣ית אֲבֹתָ֑ם בְּמִסְפַּ֣ר שֵׁמ֗וֹת מִבֶּ֨ן עֶשְׂרִ֤ים שָׁנָה֙ וָמַ֔עְלָה כֹּ֖ל יֹצֵ֥א צָבָֽא׃

34 மனாசே புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
34 And from the sons of Manasseh, according to the records of their clans and families, counting the names of all those twenty years of age or older who could serve in the army,
34 மனாசே மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்;

35פְּקֻדֵיהֶ֖ם לְמַטֵּ֣ה מְנַשֶּׁ֑ה שְׁנַ֧יִם וּשְׁלֹשִׁ֛ים אֶ֖לֶף וּמָאתָֽיִם׃

35 மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.
35 those registered to the tribe of Manasseh numbered 32,200.
35 மனாசே குலத்தில் எண்ணப்பட்டோர் முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.

36לִבְנֵ֣י בִנְיָמִ֔ן תּוֹלְדֹתָ֥ם לְמִשְׁפְּחֹתָ֖ם לְבֵ֣ית אֲבֹתָ֑ם בְּמִסְפַּ֣ר שֵׁמֹ֗ת מִבֶּ֨ן עֶשְׂרִ֤ים שָׁנָה֙ וָמַ֔עְלָה כֹּ֖ל יֹצֵ֥א צָבָֽא׃

36 பென்யமீன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
36 From the sons of Benjamin, according to the records of their clans and families, counting the names of all those twenty years of age or older who could serve in the army,
36 பென்யமின் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்;

37פְּקֻדֵיהֶ֖ם לְמַטֵּ֣ה בִנְיָמִ֑ן חֲמִשָּׁ֧ה וּשְׁלֹשִׁ֛ים אֶ֖לֶף וְאַרְבַּ֥ע מֵאֽוֹת׃

37 பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தையாயிரத்து நானூறுபேர்.
37 those registered to the tribe of Benjamin numbered 35,400.
37 பென்யமின் குலத்தில் எண்ணப்பட்டோர் முப்பத்தையாயிரத்து நானூறு பேர்.

38לִבְנֵ֣י דָ֔ן תּוֹלְדֹתָ֥ם לְמִשְׁפְּחֹתָ֖ם לְבֵ֣ית אֲבֹתָ֑ם בְּמִסְפַּ֣ר שֵׁמֹ֗ת מִבֶּ֨ן עֶשְׂרִ֤ים שָׁנָה֙ וָמַ֔עְלָה כֹּ֖ל יֹצֵ֥א צָבָֽא׃

38 தாண் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
38 From the sons of Dan, according to the records of their clans and families, counting the names of all those twenty years of age or older who could serve in the army,
38 தாண் மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்;

39פְּקֻדֵיהֶ֖ם לְמַטֵּ֣ה דָ֑ן שְׁנַ֧יִם וְשִׁשִּׁ֛ים אֶ֖לֶף וּשְׁבַ֥ע מֵאֽוֹת׃

39 தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர்.
39 those registered to the tribe of Dan numbered 62,700.
39 தாண் குலத்தில் எண்ணப்பட்டோர் அறுபத்தீராயிரத்து எழுநூறு பேர்.

40לִבְנֵ֣י אָשֵׁ֔ר תּוֹלְדֹתָ֥ם לְמִשְׁפְּחֹתָ֖ם לְבֵ֣ית אֲבֹתָ֑ם בְּמִסְפַּ֣ר שֵׁמֹ֗ת מִבֶּ֨ן עֶשְׂרִ֤ים שָׁנָה֙ וָמַ֔עְלָה כֹּ֖ל יֹצֵ֥א צָבָֽא׃

40 ஆசேர் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
40 From the sons of Asher, according to the records of their clans and families, counting the names of all those twenty years of age or older who could serve in the army,
40 ஆசேர் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்;

41פְּקֻדֵיהֶ֖ם לְמַטֵּ֣ה אָשֵׁ֑ר אֶחָ֧ד וְאַרְבָּעִ֛ים אֶ֖לֶף וַחֲמֵ֥שׁ מֵאֽוֹת׃

41 ஆசேர் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தோராயிரத்து ஐந்நூறுபேர்.
41 those registered to the tribe of Asher numbered 41,500.
41 ஆசேர் குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பத்தோராயிரத்து ஐந்நூறு பேர்.

42בְּנֵ֣י נַפְתָּלִ֔י תּוֹלְדֹתָ֥ם לְמִשְׁפְּחֹתָ֖ם לְבֵ֣ית אֲבֹתָ֑ם בְּמִסְפַּ֣ר שֵׁמֹ֗ת מִבֶּ֨ן עֶשְׂרִ֤ים שָׁנָה֙ וָמַ֔עְלָה כֹּ֖ל יֹצֵ֥א צָבָֽא׃

42 நப்தலி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
42 From the sons of Naphtali, according to the records of their clans and families, counting the names of all those twenty years of age or older who could serve in the army,
42 நப்தலி மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்;

43פְּקֻדֵיהֶ֖ם לְמַטֵּ֣ה נַפְתָּלִ֑י שְׁלֹשָׁ֧ה וַחֲמִשִּׁ֛ים אֶ֖לֶף וְאַרְבַּ֥ע מֵאֽוֹת׃

43 நப்தலி கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர்.
43 those registered to the tribe of Naphtali numbered 53,400.
43 நப்தலி குலத்தில் எண்ணப்பட்டோர் ஐம்பத்து மூவாயிரத்து நானூறு பேர்.

44אֵ֣לֶּה הַפְּקֻדִ֡ים אֲשֶׁר֩ פָּקַ֨ד מֹשֶׁ֤ה וְאַהֲרֹן֙ וּנְשִׂיאֵ֣י יִשְׂרָאֵ֔ל שְׁנֵ֥ים עָשָׂ֖ר אִ֑ישׁ אִישׁ־אֶחָ֥ד לְבֵית־אֲבֹתָ֖יו הָיֽוּ׃

44 எண்ணப்பட்டவர்கள் இவர்களே; மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலுடைய பிதாக்களின் வம்சத்தில் ஒவ்வொரு வம்சத்துக்கு ஒவ்வொரு பிரபுவாகிய பன்னிரண்டுபேரும் எண்ணினார்கள்.
44 These were the men numbered by Moses and Aaron, with the assistance of the twelve leaders of Israel, each one representing his family.
44 மூதாதையர் ஒவ்வொருவரின் வீட்டு முதல்வர்களான தலைவர் பன்னிருவரின் துணையுடன் மோசேயாலும் ஆரோனாலும் எண்ணப்பட்டவர்கள் இவர்களே.

45וַיִּֽהְי֛וּ כָּל־פְּקוּדֵ֥י בְנֵֽי־יִשְׂרָאֵ֖ל לְבֵ֣ית אֲבֹתָ֑ם מִבֶּ֨ן עֶשְׂרִ֤ים שָׁנָה֙ וָמַ֔עְלָה כָּל־יֹצֵ֥א צָבָ֖א בְּיִשְׂרָאֵֽל׃

45 இஸ்ரவேல் புத்திரருடைய பிதாக்களின் வம்சத்தில் இருபது வயதுள்ளவர்கள்முதல், இஸ்ரவேலில் யுத்தத்திற்குப் புறப்படத்தக்கவர்களாகிய எண்ணப்பட்ட பேர்கள் எல்லாரும்,
45 So all the Israelites twenty years of age or older who could serve in Israel’s army were counted according to their families.
45 ஆக மொத்தம் இஸ்ரயேலில் மூதாதையர் வீடுகள் வாரியாக இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்களாக எண்ணப்பட்ட இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை;

46וַיִּֽהְיוּ֙ כָּל־הַפְּקֻדִ֔ים שֵׁשׁ־מֵא֥וֹת אֶ֖לֶף וּשְׁלֹ֣שֶׁת אֲלָפִ֑ים וַחֲמֵ֥שׁ מֵא֖וֹת וַחֲמִשִּֽׁים׃

46 ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள்.
46 And all those counted totaled 603,550.
46 மொத்தம் எண்ணப்பட்டோர் ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது பேர்.*

The Exemption of the Levites

47וְהַלְוִיִּ֖ם לְמַטֵּ֣ה אֲבֹתָ֑ם לֹ֥א הָתְפָּקְד֖וּ בְּתוֹכָֽם׃

47 லேவியர் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின்படியே, மற்றவர்களுடனே எண்ணப்படவில்லை.
47 The Levites, however, were not numbered along with them by the tribe of their fathers.
47 ஆனால், இவர்களோடு லேவியர் தங்கள் மூதாதையர் குலப்படி எண்ணப்படவில்லை.

48וַיְדַבֵּ֥ר יְהוָ֖ה אֶל־מֹשֶׁ֥ה לֵּאמֹֽר׃

48 கர்த்தர் மோசேயை நோக்கி:
48 For the LORD had said to Moses:
48 ஏனெனில், ஆண்டவர் மோசேயிடம் சொன்னது:

49אַ֣ךְ אֶת־מַטֵּ֤ה לֵוִי֙ לֹ֣א תִפְקֹ֔ד וְאֶת־רֹאשָׁ֖ם לֹ֣א תִשָּׂ֑א בְּת֖וֹךְ בְּנֵ֥י יִשְׂרָאֵֽל׃

49 நீ லேவி கோத்திரத்தாரைமாத்திரம் எண்ணாமலும், இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே அவர்கள் தொகையை ஏற்றாமலும்,
49 “Do not number the tribe of Levi in the census with the other Israelites.
49 "லேவி குலத்தை மட்டும் நீ எண்ணவேண்டாம்; இஸ்ரயேல் மக்களுக்குள் அவர்களை நீ கணக்கெடுப்புச் செய்ய வேண்டாம்;

50וְאַתָּ֡ה הַפְקֵ֣ד אֶת־הַלְוִיִּם֩ עַל־מִשְׁכַּ֨ן הָעֵדֻ֜ת וְעַ֣ל כָּל־כֵּלָיו֮ וְעַ֣ל כָּל־אֲשֶׁר־לוֹ֒ הֵ֜מָּה יִשְׂא֤וּ אֶת־הַמִּשְׁכָּן֙ וְאֶת־כָּל־כֵּלָ֔יו וְהֵ֖ם יְשָׁרְתֻ֑הוּ וְסָבִ֥יב לַמִּשְׁכָּ֖ן יַחֲנֽוּ׃

50 லேவியரைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய சகல பணிமுட்டுகளுக்கும், அதிலுள்ள சமஸ்த பொருள்களுக்கும் விசாரிப்புக்காரராக ஏற்படுத்து; அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் சுமப்பார்களாக; அதினிடத்தில் ஊழியம்செய்து, வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கக்கடவர்கள்.
50 Instead, you are to appoint the Levites over the tabernacle of the Testimony, all its furnishings, and everything in it. They shall carry the tabernacle and all its articles, care for it, and camp around it.
50 லேவியரை உடன்படிக்கைக் கூடாரம், அதன் பணிப்பொருள்கள், அதற்குச் சொந்தமான அனைத்துப் பொருள்கள் ஆகியவற்றின் பொறுப்பாளராக ஏற்படுத்து; அவர்கள் கூடாரத்தையும் அதன் பணிப் பொருள்களையும் சுமந்து செல்ல வேண்டியவர்கள்; அவர்கள் கூடாரத்தைச் சுற்றித் தங்கியிருந்து அதைப் பேணி வருவார்கள்.

51וּבִנְסֹ֣עַ הַמִּשְׁכָּ֗ן יוֹרִ֤ידוּ אֹתוֹ֙ הַלְוִיִּ֔ם וּבַחֲנֹת֙ הַמִּשְׁכָּ֔ן יָקִ֥ימוּ אֹת֖וֹ הַלְוִיִּ֑ם וְהַזָּ֥ר הַקָּרֵ֖ב יוּמָֽת׃

51 வாசஸ்தலம் புறப்படும்போது, லேவியர் அதை இறக்கிவைத்து, அது ஸ்தாபனம் பண்ணப்படும்போது, லேவியர் அதை எடுத்து நிறுத்தக்கடவர்கள்; அந்நியன் அதற்குச் சமீபத்தில் வந்தால் கொலைசெய்யப்படக்கடவன்.
51 Whenever the tabernacle is to move, the Levites are to take it down, and whenever it is to be pitched, the Levites are to set it up. Any outsider who goes near it must be put to death.
51 புறப்பட வேண்டிய நேரத்தில் லேவியரே கூடாரத்தைப் பிரித்து வைப்பர்; கூடாரம் இடிக்கும்போது லேவியரே அதனை எழுப்பி நிறுத்துவர். வேறு எவனும் அதன் அருகில் வந்தால் அவன் கொல்லப்படுவான்.

52וְחָנ֖וּ בְּנֵ֣י יִשְׂרָאֵ֑ל אִ֧ישׁ עַֽל־מַחֲנֵ֛הוּ וְאִ֥ישׁ עַל־דִּגְל֖וֹ לְצִבְאֹתָֽם׃

52 இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தங்கள் பாளயத்தோடும், தங்கள் தங்கள் சேனையின் கொடியோடும் கூடாரம் போடக்கடவர்கள்.
52 The Israelites are to camp by their divisions, each man in his own camp and under his own standard.
52 இஸ்ரயேல் மக்கள் அணி அணியாகச் சென்று ஒவ்வொருவரும் தம் பாளையம், கொடி இவற்றுக்கேற்பத் தங்கியிருப்பர்.

53וְהַלְוִיִּ֞ם יַחֲנ֤וּ סָבִיב֙ לְמִשְׁכַּ֣ן הָעֵדֻ֔ת וְלֹֽא־יִהְיֶ֣ה קֶ֔צֶף עַל־עֲדַ֖ת בְּנֵ֣י יִשְׂרָאֵ֑ל וְשָׁמְרוּ֙ הַלְוִיִּ֔ם אֶת־מִשְׁמֶ֖רֶת מִשְׁכַּ֥ן הָעֵדֽוּת׃

53 இஸ்ரவேல் புத்திரராகிய சபையின்மேல் கடுங்கோபம் வராதபடிக்கு லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கி, லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைக் காவல்காப்பார்களாக என்றார்.
53 But the Levites are to camp around the tabernacle of the Testimony and watch over it, so that no wrath will fall on the congregation of Israel. So the Levites are responsible for the tabernacle of the Testimony.”
53 லேவியரோ இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் மேல் சினம் வராதபடி உடன்படிக்கைக் கூடாரத்தைச் சுற்றிப் பாளையமிறங்குவர்; உடன்படிக்கைக் கூடாரத்தைக் காவல் செய்ய வேண்டியவரும் லேவியரே.

54וַֽיַּעֲשׂ֖וּ בְּנֵ֣י יִשְׂרָאֵ֑ל כְּ֠כֹל אֲשֶׁ֨ר צִוָּ֧ה יְהוָ֛ה אֶת־מֹשֶׁ֖ה כֵּ֥ן עָשֽׂוּ׃

54 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.
54 Thus the Israelites did everything just as the LORD had commanded Moses.
54 இஸ்ரயேல் மக்கள் இவ்வாறே செய்தனர்; ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவர்கள் செய்தனர்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Numbers Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.