பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Joshua யோசுவா יְהוֹשֻעַ
யோசுவா 19 | Joshua 19
Simeon’s Inheritance
1 இரண்டாம் சீட்டு சிமியோனுக்கு விழுந்தது; சிமியோன் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம், யூதா புத்திரருடைய சுதந்தரத்தின் நடுவே இருக்கிறது.
1 The second lot came out for the clans of the tribe of Simeon: Their inheritance lay within the territory of Judah
1 இரண்டாவது சீட்டு சிமியோனின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. அவர்களது உரிமைச்சொத்து யூதா மக்களின் பங்கிற்கு நடுவில் அமைந்திருந்தது.
2 அவர்களுக்குச் சுதந்தரமாகக் கிடைத்த பட்டணங்களாவன: பெயெர்செபா, சேபா, மொலாதா,
2 and included Beersheba (or Sheba), Moladah,
2 அவர்களுக்கு உடைமையான நகர்கள்; பேயேர்செபா, சேபா, மோலாதா,
3 ஆசார் சூகால், பாலா, ஆத்சேம்,
3 Hazar-shual, Balah, Ezem,
3 அட்சர்சூவால், பாலா எட்சேம்,
4 எல்தோலாத், பெத்தூல், ஒர்மா,
4 Eltolad, Bethul, Hormah,
4 எல்தோலகு, பெத்தூல், ஓர்மா,
5 சிக்லாக், பெத்மார்காபோத், ஆக்சார் சூசா,
5 Ziklag, Beth-marcaboth, Hazar-susah,
5 சிக்லாகு, பெத்மர்க்கபோத்து, அட்சர்சூசா,
6 பெத்லெபாவோத், சருகேன் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்படப் பதின்மூன்று.
6 Beth-lebaoth, and Sharuhen—thirteen cities, along with their villages.
6 பெத்லாபாவோத்து, சாருகன் ஆக பதின்மூன்று நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
7 மேலும் ஆயின், ரிம்மோன், எத்தேர், ஆசான் என்னும் நாலு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
7 Ain, Rimmon, Ether, and Ashan—four cities, along with their villages,
7 அயின், ரிம்மோன், எக்தேர், ஆசான், ஆக நான்கு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
8 இந்தப் பட்டணங்களைச் சுற்றிலும் பாலாத்பெயேர்மட்டும், தெற்கேயிருக்கிற ராமாத்மட்டும் இருக்கிற எல்லாக் கிராமங்களுமே; இவை சிமியோன் புத்திரருடைய கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.
8 and all the villages surrounding these cities as far as Baalath-beer (Ramah of the Negev). This was the inheritance of the clans of the tribe of Simeon.
8 இவைகளன்றித் தெற்கே இராமாது எனப்படும் பாகலாத்பெயேர்வரை உள்ள நகர்களும் அவற்றின் சிற்றூர்கள் அனைத்தும். இதுவே சிமியோன் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உரிமைச் சொத்து.1
9 சிமியோன் புத்திரருடைய சுதந்தரம் யூதா புத்திரரின் பங்குவீதத்திற்குள் இருக்கிறது; யூதா புத்திரரின் பங்கு அவர்களுக்கு மிச்சமாயிருந்தபடியால், சிமியோன் புத்திரர் அவர்கள் சுதந்தரத்தின் நடுவிலே சுதந்தரம் பெற்றார்கள்.
9 The inheritance of the Simeonites was taken from the territory of Judah, because the share for Judah’s descendants was too large for them. So the Simeonites received an inheritance within Judah’s portion.
9 சிமியோன் மக்களின் உரிமைச்சொத்து யூதா மக்களுக்குரிய பங்கில் ஒரு பகுதி. யூதா மக்களுக்கு ஏராளமான உடைமை இருந்தது. அவர்களின் உரிமைச் சொத்தின் நடுவில் சிமியோனின் மக்கள் உரிமைச் சொத்தைப் பெற்றனர்.
Zebulun’s Inheritance
10 மூன்றாம் சீட்டு செபுலோன் புத்திரருக்கு விழுந்தது; அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரபங்குவீதம் சாரீத்மட்டுமுள்ளது.
10 The third lot came up for the clans of the tribe of Zebulun: The border of their inheritance stretched as far as Sarid.
10 மூன்றாவது சீட்டு செபுலோன் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. அவர்கள் உடைமையின் எல்லை சாரீதுவரை சென்றது.
11 அவர்களுடைய எல்லை மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்துக்கு வந்து, யொக்கினேயாமுக்கு எதிரான ஆற்றுக்குப் போம்.
11 It went up westward to Maralah, reached Dabbesheth, and met the brook east of Jokneam.
11 அவர்களது எல்லை மேற்கே மரியலாவுக்கு ஏறி, தபா சேத்துக்கு வந்து யோக்னயாமுக்கு எதிரில் உள்ள ஓடையைத் தொடுகின்றது.
12 சாரீதிலிருந்து அது கிழக்கே சூரியன் உதிக்கும் முனையாய்க் கிஸ்லோத்தாபோரின் எல்லையினிடத்துக்குத் திரும்பி, தாபராத்துக்குச் சென்று, யப்பியாவுக்கு ஏறி,
12 From Sarid it turned eastward along the border of Chisloth-tabor and went on to Daberath and up to Japhia.
12 சாரீதிலிருந்து கதிரவன் உதிக்கும் கிழக்குப்பக்கம் திரும்பி கிஸ்லோத்து தாபோரையும், தாபராத்தையும் நோக்கிச் சென்று யாப்பியாமேல் ஏறுகிறது.
13 அங்கேயிருந்து கிழக்குப்புறத்திலே கித்தாஏபேரையும் இத்தாகாத்சீனையும் கடந்து, ரிம்மோன்மெத்தோவாருக்கும் நேயாவுக்கும் போம்.
13 From there it crossed eastward to Gath-hepher and to Eth-kazin; it extended to Rimmon and curved around toward Neah.
13 அங்கிருந்து கிழக்காகக் காத்கேப்பேரையும் இத்தகாச்சினையும் ரிம்மோனையும் கடந்து சென்று நேயா பக்கம் வளைகிறது.
14 அப்புறம் அந்த எல்லை வடக்கே அன்னத்தோனுக்குத் திரும்பி, இப்தாவேலின் பள்ளத்தாக்கிலே முடியும்.
14 Then the border circled around the north side of Neah to Hannathon and ended at the Valley of Iphtah-el.
14 மேலும் இவ்வெல்லை வடக்கில் அன்னாத்தோனைச் சுற்றுகிறது. இது இப்தாவேல் பள்ளத்தாக்கில் முடிவடைகிறது.
15 காத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்,
15 It also included Kattath, Nahalal, Shimron, Idalah, and Bethlehem. There were twelve cities, along with their villages.
15 கற்றாத்து, நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் ஆக பன்னிரு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
16 செபுலோன் புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.
16 This was the inheritance of the clans of the tribe of Zebulun, including these cities and their villages.
16 இந்நகர்களும் அவற்றின் சிற்றூர்களுமே செபுலோன் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உரிமைச்சொத்து.
Issachar’s Inheritance
17 நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது.
17 The fourth lot came out for the clans of the tribe of Issachar:
17 நான்காவது சீட்டு இசக்காரின் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது.
18 இசக்கார் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, யெஸ்ரயேல், கெசுல்லோத், சூனேம்,
18 Their territory included Jezreel, Chesulloth, Shunem,
18 அவர்களது எல்லை; இஸ்ரியேல், கெசுல்லோத்து, சூனேம்,
19 அப்பிராயீம், சீகோன், அனாகராத்,
19 Hapharaim, Shion, Anaharath,
19 அப்பாராயிம், சியோன், அனகராத்து,
20 ராப்பித், கிஷியோன், அபெத்ஸ்,
20 Rabbith, Kishion, Ebez,
20 இரப்பீத்து, கிசியோன், எபெசு,
21 ரெமேத், என்கன்னீம், என்காதா, பெத்பாத்செஸ் இவைகளே.
21 Remeth, En-gannim, En-haddah, and Beth-pazzez.
21 இரமேத்து, ஏன்கன்னிம், ஏன்கத்தா, பெத்-பசேசு என்பவையே.
22 அப்புறம் அந்த எல்லை தாபோருக்கும், சகசீமாவுக்கும், பெத்ஷிமேசுக்கும் வந்து யோர்தானிலே முடியும்; அதற்குள் பதினாறு பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுண்டு.
22 The border reached Tabor, Shahazumah, and Beth-shemesh, and ended at the Jordan. There were sixteen cities, along with their villages.
22 அவ்வெல்லை தாபோரையும் சகட்சிமாவையும் பெத்சமேசையும் தொட்டு, யோர்தானில் முடிவடைகின்றது. ஆக, பதினாறு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
23 இந்தப் பட்டணங்களும் இவைகளைச் சேர்ந்த கிராமங்களும் இசக்கார் புத்திரரின் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.
23 This was the inheritance of the clans of the tribe of Issachar, including these cities and their villages.
23 இவை இசக்கார் மக்களின் குலத்தாருக்கு அவர்களின் குடும்பங்களின்படி உரிமைச் சொத்தாகக் கிடைத்த நகர்களும் அவற்றின் சிற்றூர்களும்.
Asher’s Inheritance
24 ஐந்தாம் சீட்டு ஆசேர் புத்திரருடைய கோத்திரத்துக்கு விழுந்தது.
24 The fifth lot came out for the clans of the tribe of Asher:
24 ஐந்தாவது சீட்டு ஆசேர் மக்களின் குலத்திற்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது.
25 அவர்களுடைய வம்சங்களின்படி அவர்களுக்குக் கிடைத்த எல்லை, எல்காத், ஆலி, பேதேன், அக்சாப்,
25 Their territory included Helkath, Hali, Beten, Achshaph,
25 அவர்களின் எல்லை; எல்காத்து, அலீ, பெத்தேன், அக்சாபு,
26 அலம்மேலெக், ஆமாத், மிஷயால் இவைகளே; பின்பு அது மேற்கே கர்மேலுக்கும் சீகோர்லிப்னாத்திற்கும் சென்று,
26 Allammelech, Amad, and Mishal. On the west the border touched Carmel and Shihor-libnath,
26 அல்லமெலக்கு, அமாது, மிசால் என்பவை. மேற்குப்பக்கம் கர்மேலையும் சகோர் லிப்னாத்தையும் தொட்டு,
27 கிழக்கே பெத்தாகோனுக்குத் திரும்பி, செபுலோனுக்கு வடக்கேயிருக்கிற இப்தாவேலின் பள்ளத்தாக்குக்கும் பெத்தேமேக்குக்கும் நேகியெலுக்கும் வந்து, இடதுபுறமான காபூலுக்கும்,
27 then turned eastward toward Beth-dagon, touched Zebulun and the Valley of Iphtah-el, and went north to Beth-emek and Neiel, passing Cabul on the left.
27 கிழக்குப் பக்கம் திரும்பி, பெத்தாகோன் சென்று செபுலுன், இப்தாவேல் பள்ளத்தாக்கையும், பெத்தேமக்கு நெகியேலுக்கு வடக்காகத் தொட்டு, காபூலில் இடப்பக்கம் திரும்புகின்றது.
28 எபிரோனுக்கும், ரேகோபுக்கும், அம்மோனுக்கும், கானாவுக்கும், பெரிய சீதோன்மட்டும் போம்.
28 It went on to Ebron,a Rehob, Hammon, and Kanah, as far as Greater Sidon.
28 எபிரோன், இரகோபு, அம்மோன், தானா, பெரிய சீதோன்வரை சென்று,
29 அப்புறம் அந்த எல்லை ராமாவுக்கும் தீரு என்னும் அரணிப்பான பட்டணம்மட்டும் திரும்பும்; பின்பு அந்த எல்லை ஓசாவுக்குத் திரும்பி, அக்சீபின் எல்லை ஓரத்திலுள்ள சமுத்திரத்திலே முடியும்.
29 The border then turned back toward Ramah as far as the fortified city of Tyre, turned toward Hosah, and came out at the Seab in the region of Achzib,
29 பிறகு இராமா பக்கம் திரும்புகின்றது. அரண்சூழ் நகரான தீர் வரை சென்று, கோசா பக்கம் திரும்பிக் கடலில் முடிவடைகிறது. மேகேபல், அக்சீபை ஒட்டிய கடலில் முடிவடைகிறது.
30 உம்மாவும், ஆப்பெக்கும், ரேகோபும் அதற்கு அடுத்திருக்கிறது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் இருபத்திரண்டு.
30 Ummah, Aphek, and Rehob. There were twenty-two cities, along with their villages.
30 உம்மா, அபேக்கு, இரகோபு, ஆக இருபத்திரண்டு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
31 இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.
31 This was the inheritance of the clans of the tribe of Asher, including these cities and their villages.
31 இவையே ஆசேர் மக்கள் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உரிமைச் சொத்தாகிய நகர்களும் அவற்றின் சிற்றூர்களும்.
Naphtali’s Inheritance
32 ஆறாம் சீட்டு நப்தலி புத்திரருக்கு விழுந்தது.
32 The sixth lot came out for the clans of the tribe of Naphtali:
32 ஆறாவது சீட்டு நப்தலியின் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது.
33 நப்தலி புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை ஏலேப்பிலும், சானானிமிலுள்ள அல்லோனிலுமிருந்து வந்த ஆதமி, நெக்கேபின்மேலும் யாப்னியேலின்மேலும், லக்கூம்மட்டும் போய், யோர்தானில் முடியும்.
33 Their border started at Heleph and the great tree of Zaanannim, passing Adami-nekeb and Jabneel as far as Lakkum and ending at the Jordan.
33 அவர்களது எல்லை ஏலப்பிலிருந்து சானான்னிமிலுள்ள கருவாலி மரத்திலிருந்து, அதாமி நெகேபு, யப்னவேல், இலக்கம்வரை சென்று யோர்தானில் முடிகின்றது.
34 அப்புறம் அந்த எல்லை மேற்கே அஸ்னோத்தாபோருக்குத் திரும்பி, அங்கேயிருந்து உக்கோருக்குச் சென்று தெற்கே செபுலோனையும், மேற்கே ஆசேரையும் சூரியோதயப்புறத்திலே யோர்தானிலே யூதாவையும் சேர்ந்து வரும்.
34 Then the border turned westward to Aznoth-tabor and ran from there to Hukkok, touching Zebulun on the south side, Asher on the west, and Judah at the Jordanc on the east.
34 பிறகு, அவ்வெல்லை மேற்கில் அசனோத்துதாபோர் பக்கம் திரும்புகின்றது; அங்கிருந்து உக்கோகில் வெளியேறுகின்றது. தெற்கில் செபுலோனையும், மேற்கில் ஆசேரையும் கிழக்கில் யோர்தானையும் எல்லையாகக் கொண்டுள்ளது.
35 அரணிப்பான பட்டணங்களாவன; சீத்திம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரேத்,
35 The fortified cities were Ziddim, Zer, Hammath, Rakkath, Chinnereth,
35 அரண்சூழ் நகர்கள்; சித்திம், சேர், அம்மாத்து, இரக்காத்து, கினரேத்து,
36 ஆதமா, ராமா, ஆத்சோர்,
36 Adamah, Ramah, Hazor,
36 அதாமா, இராமா, ஆட்சோர்,
37 கேதேஸ், எத்ரேயி, என்ஆத்சோர்.
37 Kedesh, Edrei, En-hazor,
37 கெதேசு, எதிரேயி, ஏன் ஆட்சோர்,
38 ஈரோன், மிக்தாலேல் ஓரேம், பெதானாத், பெத்ஷிமேஸ் முதலானவைகளே; பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமுட்படப் பத்தொன்பது.
38 Iron, Migdal-el, Horem, Beth-anath, and Beth-shemesh. There were nineteen cities, along with their villages.
38 ஈரோன், மிக்தலேல், ஒரேம், பெத்தனாத்து, பெத்சமேசு, ஆக பத்தொன்பது நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
39 இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் நப்தலி புத்திரருடைய கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, உண்டான சுதந்தரம்.
39 This was the inheritance of the clans of the tribe of Naphtali, including these cities and their villages.
39 இவை நப்தலியின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி உரிமைச் சொத்தாகக் கிடைத்த நகர்களும் அவற்றின் சிற்றூர்களும்.
Dan’s Inheritance
40 ஏழாம் சீட்டு தாண் புத்திரருடைய கோத்திரத்திற்கு விழுந்தது.
40 The seventh lot came out for the clans of the tribe of Dan:
40 ஏழாவது சீட்டு தாண் மக்களின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது.
41 அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரத்தின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ்,
41 The territory of their inheritance included Zorah, Eshtaol, Ir-shemesh,
41 அவர்களது உரிமைச் சொத்தின் எல்லை; சோரா, எசுத்தாவோல், ஈர்சமேசு
42 சாலாபீன், ஆயலோன், பெத்லா,
42 Shaalabbin, Aijalon, Ithlah,
42 சாயலாபிம், அய்யலோன், இதிலா,
43 ஏலோன், திம்னாதா, எக்ரோன்,
43 Elon, Timnah, Ekron,
43 ஏலோன், திமினா, எக்ரோன்,
44 எல்தெக்கே, கிபெத்தோன் பாலாத்
44 Eltekeh, Gibbethon, Baalath,
44 எல்தெக்கே, கிபதோன், பாகலாத்து,
45 யெகூத், பெனபெராக், காத்ரிம்மோன்,
45 Jehud, Bene-berak, Gath-rimmon,
45 எகூது, பெனபராக்கு, காத்ரிம்மோன்,
46 மேயார்கோன், ராக்கோன் என்னும் பட்டணங்களும், யாப்போவுக்கு எதிரான எல்லையுமே,
46 Me-jarkon, and Rakkon, including the territory across from Joppa.
46 மேயர்க்கோன், இரக்கோன் ஆகிய இந்நகர்களும் யோப்பாவுக்கு எதிரே எல்லைப் பகுதியும்.
47 தாண் புத்திரரின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாயிருந்தபடியால், அவர்கள் புறப்பட்டுப்போய், லேசேமின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, பட்டயக்கருக்கினால் சங்கரித்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதிலே குடியிருந்து, லேசேமுக்குத் தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.
47 (Later, when the territory of the Danites was lost to them, they went up and fought against Leshem, captured it, and put it to the sword. So they took possession of Leshem, settled there, and renamed it after their father Dan.)
47 தாண் மக்களின் எல்லை ஒடுக்கமாக இருந்ததால், அவர்கள் புறப்பட்டுப்போய் இலசேமை முற்றுகையிட்டு வளைத்துக் கொண்டனர்; அதை வாள் முனையில் தாக்கித் தங்கள் உடைமையாக்கிக் கொண்டு அங்கு வாழ்ந்தனர். தங்கள் மூதாதையான தாணின் பெயரை ஒட்டி, இலசேமிற்குத் 'தாண்' என்று பெயரிட்டார்கள்.2
48 இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் தாண் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான சுதந்தரம்.
48 This was the inheritance of the clans of the tribe of Dan, including these cities and their villages.
48 இந்நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் தாண் மக்களின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உரிமைச் சொத்து.
Joshua’s Inheritance
49 தேசத்தை அதின் எல்லைகளின்படி சுதந்தரமாகப் பங்கிட்டுத் தீர்ந்தபோது, இஸ்ரவேல் புத்திரர் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்குத் தங்கள் நடுவிலே ஒரு சுதந்தரத்தைக் கொடுத்தார்கள்.
49 When they had finished distributing the land into its territories, the Israelites gave Joshua son of Nun an inheritance among them,
49 நாட்டுக்கு எல்லை வகுத்து அவரவர்களுக்கு உரிமைச்சொத்து பிரித்துக் கொடுத்தபின், நூனின் மகன் யோசுவாவுக்கு இஸ்ரயேல் மக்கள் தங்கள் நடுவில் உரிமைச்சொத்து அளித்தனர்.
50 எப்பீராயீமின் மலைத்தேசத்திலிருக்கிற திம்னாத்சேரா என்னும் அவன் கேட்ட பட்டணத்தை அவனுக்குக் கர்த்தருடைய வாக்கின்படியே கொடுத்தார்கள்: அந்தப் பட்டணத்தை அவன் கட்டி, அதிலே குடியிருந்தான்.
50 as the LORD had commanded. They gave him the city of Timnath-serahd in the hill country of Ephraim, as he requested. He rebuilt the city and settled in it.
50 எப்ராயிம் மலைநாட்டில் அவர் கேட்ட நகரான திம்னத்செராவை ஆண்டவரின் கட்டளைப்படி அவருக்குக் கொடுத்தனர். அவர் அந்நகரைக் கட்டியெழுப்பி அதில் வாழ்ந்தார்.
51 ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும், கோத்திரப்பிதாக்களுடைய தலைவரும் சீலோவிலே ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் இஸ்ரவேல் புத்திரரின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்த சுதந்தரங்கள் இவைகளே; இவ்விதமாய் அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள்.
51 These are the inheritances that Eleazar the priest, Joshua son of Nun, and the heads of the families distributed by lot to the tribes of Israel at Shiloh before the LORD at the entrance to the Tent of Meeting. So they finished dividing up the land.
51 இவ்வாறு, குரு எலயாசர், நூனின் மகன் யோசுவா, இஸ்ரயேல் குலங்களின் முதுபெரும் தலைவர்கள் ஆகியோர் இவற்றை இஸ்ரயேல் மக்களின் குடும்பங்களுக்கு உரிமைச் சொத்தாகச் சீலோவில் ஆண்டவர் முன்னிலையில் சந்திப்புக் கூடார வாயிலில் திருவுளச்சீட்டுப் போட்டு உரிமையாக்கி, நாட்டின் பங்கீட்டுப் பணியை நிறைவு செய்தனர்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
28 a Some Hebrew manuscripts Abdon ; see Joshua 21:30.
29 b That is, the Mediterranean Sea, also called the Great Sea
34 c Hebrew; LXX west, and the Jordan
50 d Timnath-serah is also known as Timnath-heres ; see Judges 2:9.
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.