பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Joshua  யோசுவா  יְהוֹשֻעַ

அதிகாரம்    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

யோசுவா 18 | Joshua 18

The Remainder Divided

1וַיִּקָּ֨הֲל֜וּ כָּל־עֲדַ֤ת בְּנֵֽי־יִשְׂרָאֵל֙ שִׁלֹ֔ה וַיַּשְׁכִּ֥ינוּ שָׁ֖ם אֶת־אֹ֣הֶל מוֹעֵ֑ד וְהָאָ֥רֶץ נִכְבְּשָׁ֖ה לִפְנֵיהֶֽם׃

1 இஸ்ரவேல் புத்திரரின் சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை நிறுத்தினார்கள். தேசம் அவர்கள் வசமாயிற்று.
1 Then the whole congregation of Israel assembled at Shiloh and set up the Tent of Meeting there. And though the land was subdued before them,
1 இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பு முழுவதும் சீலோவில் ஒன்று கூடியது. அங்குச் சந்திப்பு கூடாரத்தை அமைத்தனர். ஏற்கெனவே அவர்கள் நிலத்தைக் கைப்பற்றியிருந்தனர்.

2וַיִּוָּֽתְרוּ֙ בִּבְנֵ֣י יִשְׂרָאֵ֔ל אֲשֶׁ֥ר לֹֽא־חָלְק֖וּ אֶת־נֽ͏ַחֲלָתָ֑ם שִׁבְעָ֖ה שְׁבָטִֽים׃

2 இஸ்ரவேல் புத்திரரில் தங்கள் சுதந்தரத்தை இன்னும் பங்கிட்டுக்கொள்ளாத ஏழு கோத்திரங்கள் இருந்தது.
2 there were still seven tribes of Israel who had not yet received their inheritance.
2 இஸ்ரயேல் மக்களில் ஏழு குலங்களுக்கு அவர்களுடைய உரிமைச் சொத்துப் பிரித்துத் தரப்படவில்லை.

3וַיֹּ֥אמֶר יְהוֹשֻׁ֖עַ אֶל־בְּנֵ֣י יִשְׂרָאֵ֑ל עַד־אָ֙נָה֙ אַתֶּ֣ם מִתְרַפִּ֔ים לָבוֹא֙ לָרֶ֣שֶׁת אֶת־הָאָ֔רֶץ אֲשֶׁר֙ נָתַ֣ן לָכֶ֔ם יְהוָ֖ה אֱלֹהֵ֥י אֲבֽוֹתֵיכֶֽם׃

3 ஆகையால் யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப்போகிறதற்கு, நீங்கள் எந்தமட்டும் அசதியாயிருப்பீர்கள்.
3 So Joshua said to the Israelites, “How long will you put off entering and possessing the land that the LORD, the God of your fathers, has given you?
3 இஸ்ரயேல் மக்களிடம் யோசுவா, "உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டைப் பெற்றுக்கொள்ளாமல் எவ்வளவு காலம் சோம்பேறிகளாக இருப்பீர்கள்?

4הָב֥וּ לָכֶ֛ם שְׁלֹשָׁ֥ה אֲנָשִׁ֖ים לַשָּׁ֑בֶט וְאֶשְׁלָחֵ֗ם וְיָקֻ֜מוּ וְיִֽתְהַלְּכ֥וּ בָאָ֛רֶץ וְיִכְתְּב֥וּ אוֹתָ֛הּ לְפִ֥י נַֽחֲלָתָ֖ם וְיָבֹ֥אוּ אֵלָֽי׃

4 கோத்திரத்திற்கு மும்மூன்று மனுஷரைத் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, தேசத்திலே சுற்றித்திரிந்து அதைத் தங்கள் சுதந்தரத்துக்குத் தக்கதாக விவரமாய் எழுதி, என்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களை அனுப்புவேன்.
4 Appoint three men from each tribe, and I will send them out to survey the land and map it out, according to the inheritance of each. Then they will return to me
4 குலத்திற்கு மும்மூன்று பேரைத் தேர்ந்தெடுங்கள். அவர்கள் நான் அனுப்ப, அவர்கள் புறப்பட்டு, நாடெங்கும் சுற்றிச் சென்று அவரவர் உரிமைச்சொத்து இன்னதென்று வரைந்து, என்னிடம் கொண்டு வருவார்கள்.

5וְהִֽתְחַלְּק֥וּ אֹתָ֖הּ לְשִׁבְעָ֣ה חֲלָקִ֑ים יְהוּדָ֞ה יַעֲמֹ֤ד עַל־גְּבוּלוֹ֙ מִנֶּ֔גֶב וּבֵ֥ית יוֹסֵ֛ף יַעַמְד֥וּ עַל־גְּבוּלָ֖ם מִצָּפֽוֹן׃

5 அதை ஏழு பங்காகப் பகிரக்கடவர்கள்; யூதா வம்சத்தார் தெற்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும், யோசேப்பு வம்சத்தார் வடக்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும் நிலைத்திருக்கட்டும்.
5 and divide the land into seven portions. Judah shall remain in their territory in the south, and the house of Joseph shall remain in their territory in the north.
5 அவர்கள் நாட்டை ஏழு பிரிவுகளாகப் பிரிப்பர். யூதா தெற்கில் தங்கள் எல்லையில் தங்கியிருப்பர். யோசேப்பின் வீட்டார் வடக்கில் அதன் எல்லையில் தொடர்ந்து தங்கியிருப்பர்.

6וְאַתֶּ֞ם תִּכְתְּב֤וּ אֶת־הָאָ֙רֶץ֙ שִׁבְעָ֣ה חֲלָקִ֔ים וֽ͏ַהֲבֵאתֶ֥ם אֵלַ֖י הֵ֑נָּה וְיָרִ֨יתִי לָכֶ֤ם גּוֹרָל֙ פֹּ֔ה לִפְנֵ֖י יְהוָ֥ה אֱלֹהֵֽינוּ׃

6 நீங்கள் தேசத்தை ஏழு பங்காக விவரித்து எழுதி, இங்கே என்னிடத்தில் கொண்டுவாருங்கள்; அப்பொழுது இவ்விடத்திலே நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன்.
6 When you have mapped out the seven portions of land and brought it to me, I will cast lots for you here in the presence of the LORD our God.
6 நீங்கள் நிலத்தை ஏழு பிரிவுகளாக வரைந்து என்னிடம் கொண்டு வருவீர்கள். நான் இங்கு உங்களுக்குக் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் திருவுளச்சீட்டுப் போடுவேன்.

7כִּ֠י אֵֽין־חֵ֤לֶק לַלְוִיִּם֙ בְּקִרְבְּכֶ֔ם כִּֽי־כְהֻנַּ֥ת יְהוָ֖ה נַחֲלָת֑וֹ וְגָ֡ד וּרְאוּבֵ֡ן וַחֲצִי֩ שֵׁ֨בֶט הַֽמְנַשֶּׁ֜ה לָקְח֣וּ נַחֲלָתָ֗ם מֵעֵ֤בֶר לַיַּרְדֵּן֙ מִזְרָ֔חָה אֲשֶׁר֙ נָתַ֣ן לָהֶ֔ם מֹשֶׁ֖ה עֶ֥בֶד יְהוָֽה׃

7 லேவியருக்கு உங்கள் நடுவே பங்கில்லை; கர்த்தருடைய ஆசாரியப்பட்டமே அவர்கள் சுதந்தரம்; காத்தும் ரூபனும் மனாசேயின் பாதிக்கோத்திரமும் யோர்தானுக்கு அப்புறத்திலே கிழக்கே கர்த்தரின் தாசனாகிய மோசே தங்களுக்குக் கொடுத்த தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது என்றான்.
7 The Levites, however, have no portion among you, because their inheritance is the priesthood of the LORD. And Gad, Reuben, and half the tribe of Manasseh have already received the inheritance that Moses the servant of the LORD gave them beyond the Jordan to the east.”
7 லேவியர்க்கு உங்கள் நடுவில் பங்கு இல்லை. ஏனெனில், ஆண்டவருக்குக் குருத்துவப்பணி புரிவதே அவர்கள் உரிமைச் சொத்து" என்றார். ஆண்டவரின் ஊழியர் மோசே அவர்களுக்குக் கொடுத்தபடி, காத்து, ரூபன், மனாசேயின் அரைக்குலம் ஆகியோர் தங்களுடைய உரிமைச் சொத்தினை யோர்தானுக்கு அப்பால் கிழக்கில் பெற்றனர்.

8וַיָּקֻ֥מוּ הָאֲנָשִׁ֖ים וַיֵּלֵ֑כוּ וַיְצַ֣ו יְהוֹשֻׁ֡עַ אֶת־הַהֹלְכִים֩ לִכְתֹּ֨ב אֶת־הָאָ֜רֶץ לֵאמֹ֗ר לְ֠כוּ וְהִתְהַלְּכ֨וּ בָאָ֜רֶץ וְכִתְב֤וּ אוֹתָהּ֙ וְשׁ֣וּבוּ אֵלַ֔י וּ֠פֹה אַשְׁלִ֨יךְ לָכֶ֥ם גּוֹרָ֛ל לִפְנֵ֥י יְהוָ֖ה בְּשִׁלֹֽה׃

8 அப்பொழுது அந்த மனுஷர் எழுந்து புறப்பட்டுப்போனார்கள்; தேசத்தைக்குறித்து விவரம் எழுதப்போகிறவர்களை யோசுவா நோக்கி: நீங்கள் போய், தேசத்திலே சுற்றித்திரிந்து, அதின் விவரத்தை எழுதி, என்னிடத்தில் திரும்பிவாருங்கள்; அப்பொழுது இங்கே சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன் என்று சொன்னான்.
8 As the men got up to go out, Joshua commanded them to map out the land, saying, “Go and survey the land, map it out, and return to me. Then I will cast lots for you here in Shiloh in the presence of the LORD.”
8 அவ்வாறே அம்மனிதர் புறப்பட்டுச் சென்றனர். நிலத்தை வரையுமாறு செல்பவர்களுக்கு யோசுவா கட்டளையிட்டுக் கூறியது: "சென்று, நிலத்தைச் சுற்றிப்பார்த்து வரைந்து கொண்டு வாருங்கள். நான் உங்களுக்கு ஆண்டவர் முன்னிலையில் சீலோவில் திருவுளச்சீட்டுப் போடுவேன்".

9וַיֵּלְכ֤וּ הֽ͏ָאֲנָשִׁים֙ וַיַּעַבְר֣וּ בָאָ֔רֶץ וַיִּכְתְּב֧וּהָ לֶֽעָרִ֛ים לְשִׁבְעָ֥ה חֲלָקִ֖ים עַל־סֵ֑פֶר וַיָּבֹ֧אוּ אֶל־יְהוֹשֻׁ֛עַ אֶל־הַֽמַּחֲנֶ֖ה שִׁלֹֽה׃

9 அந்த மனுஷர் போய், தேசம் எங்கும் அந்தந்தப் பட்டணங்களின்படியே ஏழு பங்காக ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொண்டு, சீலோவிலே இருக்கிற பாளயத்திலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்.
9 So the men departed and went throughout the land, mapping it city by city into seven portions. Then they returned with the document to Joshua at the camp in Shiloh.
9 அம்மனிதர் சென்று நிலத்தைச் சுற்றிப் பார்த்தனர். நகர்களின் பட்டியலை ஏழு தொகுதிகளாகப் புத்தகத்தில் எழுதினர். சீலோவில் பாளையம் இறங்கியிருந்த யோசுவாவிடம் திரும்பி வந்தனர்.

10וַיַּשְׁלֵךְ֩ לָהֶ֨ם יְהוֹשֻׁ֧עַ גּוֹרָ֛ל בְּשִׁלֹ֖ה לִפְנֵ֣י יְהוָ֑ה וַיְחַלֶּק־שָׁ֨ם יְהוֹשֻׁ֧עַ אֶת־הָאָ֛רֶץ לִבְנֵ֥י יִשְׂרָאֵ֖ל כְּמַחְלְקֹתָֽם׃

10 அப்பொழுது யோசுவா அவர்களுக்காகச் சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் சீட்டுப்போட்டு, அங்கே இஸ்ரவேல் புத்திரருக்குத் தேசத்தை அவர்கள் பங்குவீதப்படி பங்கிட்டான்.
10 And Joshua cast lots for them in the presence of the LORD at Shiloh, where he distributed the land to the Israelites according to their divisions.
10 யோசுவா சீலோவில் ஆண்டவர் முன்னிலையில் அவர்களுக்குத் திருவுளச்சீட்டுப் போட்டார். அங்கே யோசுவா இஸ்ரயேல் மக்களுக்கு அவர்களுடைய பிரிவுகளின்படி நிலத்தைப் பங்கிட்டார்.

Benjamin’s Inheritance

11וַיַּ֗עַל גּוֹרַ֛ל מַטֵּ֥ה בְנֵֽי־בִנְיָמִ֖ן לְמִשְׁפְּחֹתָ֑ם וַיֵּצֵא֙ גְּב֣וּל גּֽוֹרָלָ֔ם בֵּ֚ין בְּנֵ֣י יְהוּדָ֔ה וּבֵ֖ין בְּנֵ֥י יוֹסֵֽף׃

11 பென்யமீன் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படியே அவர்களுடைய கோத்திரத்துக்குச் சீட்டு விழுந்தது; அவர்கள் பங்குவீதத்தின் எல்லையானது யூதா புத்திரருக்கும் யோசேப்பின் புத்திரருக்கும் நடுவே இருந்தது.
11 The first lot came up for the clans of the tribe of Benjamin. Their allotted territory lay between the tribes of Judah and Joseph:
11 முதல் சீட்டு பென்யமின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. அவர்களது எல்லை யூதா மக்களுக்கும் யோசேப்பின் மக்களுக்கும் இடையில் விழுந்தது.

12וַיְהִ֨י לָהֶ֧ם הַגְּב֛וּל לִפְאַ֥ת צָפ֖וֹנָה מִן־הַיַּרְדֵּ֑ן וְעָלָ֣ה הַגְּבוּל֩ אֶל־כֶּ֨תֶף יְרִיח֜וֹ מִצָּפ֗וֹן וְעָלָ֤ה בָהָר֙ יָ֔מָּה והיה תֹּֽצְאֹתָ֔יו מִדְבַּ֖רָה בֵּ֥ית אָֽוֶן׃

12 அவர்களுடைய வட எல்லை, யோர்தானிலிருந்து வந்து, எரிகோவுக்கு வடபக்கமாய்ச் சென்று, அப்புறம் மேற்கே மலையில் ஏறி, பெத்தாவேன் வனாந்தரத்தில் போய் முடியும்.
12 On the north side their border began at the Jordan, went up past the northern slope of Jericho, headed west through the hill country, and came out at the wilderness of Beth-aven.
12 அவர்களது எல்லை வடக்குப் பகுதியில் யோர்தானிலிருந்து தொடங்கிப் பின்னர் எரிகோவில் வட சரிவில் ஏறி, பிறகு மேற்கில் மலைப்பக்கம் சென்று பெத்சாவேன் பாலைநிலத்தில் முடிவடைகிறது.

13וְעָבַר֩ מִשָּׁ֨ם הַגְּב֜וּל ל֗וּזָה אֶל־כֶּ֤תֶף ל֙וּזָה֙ נֶ֔גְבָּה הִ֖יא בֵּֽית־אֵ֑ל וְיָרַ֤ד הַגְּבוּל֙ עַטְר֣וֹת אַדָּ֔ר עַל־הָהָ֕ר אֲשֶׁ֛ר מִנֶּ֥גֶב לְבֵית־חֹר֖וֹן תַּחְתּֽוֹן׃

13 அங்கேயிருந்து அந்த எல்லை, பெத்தேலாகிய லுூசுக்கு வந்து, லுூசுக்குத் தென்பக்கமாய்ப் போய், அதரோத் அதாருக்குத் தாழ்வான பெத்தரோனுக்குத் தெற்கேயிருக்கிற மலையருகே இறங்கும்.
13 From there the border crossed over to the southern slope of Luz (that is, Bethel) and went down to Ataroth-addar on the hill south of Lower Beth-horon.
13 மீண்டும் அவ்வெல்லை அங்கிருந்து தெற்குப்பக்கமாகப் பெத்தேல் என்னும் லூசின் சரிவை நோக்கிச் சென்று அதனைக் கடக்கிறது. பின்னர், அவ்வெல்லை கீழ் பெத்கோரோனுக்குத் தெற்கே மலைமீது உள்ள அத்தராத்து அதாரை நோக்கிச் செல்கிறது.

14וְתָאַ֣ר הַגְּבוּל֩ וְנָסַ֨ב לִפְאַת־יָ֜ם נֶ֗גְבָּה מִן־הָהָר֙ אֲשֶׁ֨ר עַל־פְּנֵ֥י בֵית־חֹרוֹן֮ נֶגְבָּה֒ והיה תֹֽצְאֹתָ֗יו אֶל־קִרְיַת־בַּ֙עַל֙ הִ֚יא קִרְיַ֣ת יְעָרִ֔ים עִ֖יר בְּנֵ֣י יְהוּדָ֑ה זֹ֖את פְּאַת־יָֽם׃

14 அங்கேயிருந்து எல்லை மேற்கு மூலைக்குப் பெத்தரோனுக்கு எதிரே தெற்காக இருக்கிற மலைக்குத் தென்புறமாய்ப் போய்த் திரும்பி, கீரியாத்பாகால் என்னப்பட்ட யூதா புத்திரரின் பட்டணமாகிய கீரியாத்யெயாரீம் அருகே போய் முடியும்; இது மேற்கு எல்லை.
14 On the west side the border curved southward from the hill facing Beth-horon on the south and came out at Kiriath-baal (that is, Kiriath-jearim), a city of the sons of Judah. This was the western side.
14 பின்பு, அவ்வெல்லை மேற்கு முகமாகத் திரும்பி அங்குள்ள மலைக்குத் தெற்காக பெத்கோரோனுக்கு எதிராக யூதா மக்களுக்குரிய கிரியத்துஎயாரிம் எனப்படும் கிரியத்துபாகாலில் முடிவடைகிறது. இதுவே மேற்கு எல்லை.

15וּפְאַת־נֶ֕גְבָּה מִקְצֵ֖ה קִרְיַ֣ת יְעָרִ֑ים וְיָצָ֤א הַגְּבוּל֙ יָ֔מָּה וְיָצָ֕א אֶל־מַעְיַ֖ן מֵ֥י נֶפְתּֽוֹחַ׃

15 தென் எல்லை கீரியாத்யெயாரீமின் முடிவிலிருக்கிறது; அங்கேயிருந்து எல்லை மேற்கே போய், நெப்தோவாவின் நீரூற்றிற்குச் சென்று,
15 On the south side the border began at the outskirts of Kiriath-jearim and extended westward to the spring at the Waters of Nephtoah.
15 அதன் தென் எல்லை கிரியத்து எயாரிமின் எல்லைப்புறத்தில் தொடங்கி மேற்காகச் சென்று, பிறகு நெப்தோவாகு நீர்நிலைகள்வரை போகிறது.

16וְיָרַ֨ד הַגְּב֜וּל אֶל־קְצֵ֣ה הָהָ֗ר אֲשֶׁר֙ עַל־פְּנֵי֙ גֵּ֣י בֶן־הִנֹּ֔ם אֲשֶׁ֛ר בְּעֵ֥מֶק רְפָאִ֖ים צָפ֑וֹנָה וְיָרַד֩ גֵּ֨י הִנֹּ֜ם אֶל־כֶּ֤תֶף הַיְבוּסִי֙ נֶ֔גְבָּה וְיָרַ֖ד עֵ֥ין רֹגֵֽל׃

16 அங்கேயிருந்து இராட்சதரின் பள்ளத்தாக்கில் வடக்கேயிருக்கிற இன்னோமுடைய குமாரரின் பள்ளத்தாக்குக்கு எதிரான மலையடிவாரத்திற்கு இறங்கி, அப்புறம் தெற்கே எபூசியருக்குப் பக்கமான இன்னோமின் பள்ளத்தாக்குக்கும், அங்கேயிருந்து என்ரொகேலுக்கும் இறங்கிவந்து,
16 Then it went down to the foot of the hill that faces the Valley of Hinnom at the northern end of the Valley of Rephaim and ran down the Valley of Hinnom toward the southern slope of the Jebusites and downward to En-rogel.
16 மேலும், அவ்வெல்லை இரபாயிம் பள்ளத்தாக்கின் வடகோடியில் உள்ள இன்னோம் மகனின் பள்ளத்தாக்கை நோக்கி நிற்கும் மலைவரை செல்கிறது. பின்னர், அது எபூசியரின் மலைச்சரிவிற்குத் தெற்கேயுள்ள இன்னோம் பள்ளத்தாக்கை நோக்கி ஏன்ரோகேல் பக்கமாக இறங்குகிறது.

17וְתָאַ֣ר מִצָּפ֗וֹן וְיָצָא֙ עֵ֣ין שֶׁ֔מֶשׁ וְיָצָא֙ אֶל־גְּלִיל֔וֹת אֲשֶׁר־נֹ֖כַח מַעֲלֵ֣ה אֲדֻמִּ֑ים וְיָרַ֕ד אֶ֥בֶן בֹּ֖הַן בֶּן־רְאוּבֵֽן׃

17 வடக்கே போய், என்சேமேசுக்கும், அங்கேயிருந்து, அதும்மீம் மேட்டுக்கு எதிரான கெலிலோத்திற்கும், அங்கேயிருந்து ரூபன் குமாரனாகிய போகனின் கல்லினிடத்திற்கும் இறங்கிவந்து,
17 From there it curved northward and proceeded to En-shemesh and on to Geliloth facing the Ascent of Adummim, and continued down to the Stone of Bohan son of Reuben.
17 பிறகு, அது வட பக்கம் திரும்பி அதும்மிம் மேட்டுக்கு எதிரில் உள்ள கெலிலோத்துப் பக்கம் திரும்பி ரூபனின் மகன் போகனின் கல் பக்கம் செல்கிறது.

18וְעָבַ֛ר אֶל־כֶּ֥תֶף מוּל־הֽ͏ָעֲרָבָ֖ה צָפ֑וֹנָה וְיָרַ֖ד הָעֲרָבָֽתָה׃

18 அரபாவுக்கு எதிரான வடபக்கமாய்ப்போய், அராபாவுக்கு இறங்கும்.
18 Then it went on to the northern slope of Beth-arabaha and went down into the valley.
18 பிறகு, அது வடக்கே மலைச்சரிவில் அராபாவின் எதிராகச் சென்று அராபாவில் இறங்குகிறது.

19וְעָבַ֨ר הַגְּב֜וּל אֶל־כֶּ֣תֶף בֵּית־חָגְלָה֮ צָפוֹנָה֒ והיה תצאותיו הַגְּב֗וּל אֶל־לְשׁ֤וֹן יָם־הַמֶּ֙לַח֙ צָפ֔וֹנָה אֶל־קְצֵ֥ה הַיַּרְדֵּ֖ן נֶ֑גְבָּה זֶ֖ה גְּב֥וּל נֶֽגֶב׃

19 அப்புறம் அந்த எல்லை, பெத்ஓக்லாவுக்கு வடபக்கமாய்ப்போய், யோர்தானின் முகத்துவாரத்திற்குத் தெற்கான உப்புக்கடலின் வடமுனையிலே முடிந்துபோம்; இது தென் எல்லை.
19 The border continued to the northern slope of Beth-hoglah and came out at the northern bay of the Salt Sea,b at the mouth of the Jordan. This was the southern border.
19 பிறகு, அது பெத்தொகிலாவின் வடசரிவைக் கடந்து உப்புக் கடலின் வடக்கு வளைவில் யோர்தானின் தென்பகுதியில் முடிவடைகிறது. இதுவே தென் எல்லை.

20וְהַיַּרְדֵּ֥ן יִגְבֹּל־אֹת֖וֹ לִפְאַת־קֵ֑דְמָה זֹ֡את נַחֲלַת֩ בְּנֵ֨י בִנְיָמִ֧ן לִגְבֽוּלֹתֶ֛יהָ סָבִ֖יב לְמִשְׁפְּחֹתָֽם׃

20 கிழக்குப்புறத்தின் எல்லை யோர்தானே; இது பென்யமீன் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலும் இருக்கிற எல்லைகளுக்கான சுதந்தரம்.
20 On the east side the border was the Jordan. These were the borders around the inheritance of the clans of the tribe of Benjamin.
20 கிழக்கே யோர்தான் நதி எல்லையாக அமைந்துள்ளது. இது பென்யமின் மக்களின் குடும்பங்களுக்கு கிடைத்த, சுற்றிலும் எல்லையிடப்பட்ட உரிமைச் சொத்து.

21וְהָי֣וּ הֽ͏ֶעָרִ֗ים לְמַטֵּ֛ה בְּנֵ֥י בִנְיָמִ֖ן לְמִשְׁפְּחֽוֹתֵיהֶ֑ם יְרִיח֥וֹ וּבֵית־חָגְלָ֖ה וְעֵ֥מֶק קְצִֽיץ׃

21 பென்யமீன் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி இருக்கிற பட்டணங்களாவன: எரிகோ, பெத்ஓக்லா, கேசீஸ் பள்ளத்தாக்கு,
21 These were the cities of the clans of the tribe of Benjamin: Jericho, Beth-hoglah, Emek-keziz,
21 பென்யமின் மக்களின் குலத்திற்கு அவர்கள் குடும்பங்களின்படி உடைமையான நகர்கள்; எரிக்கோ, பெத்தொகிலா, ஏமக்கசீசு

22וּבֵ֧ית הֽ͏ָעֲרָבָ֛ה וּצְמָרַ֖יִם וּבֵֽית־אֵֽל׃

22 பெத்அரபா, செமராயீம், பெத்தேல்,
22 Beth-arabah, Zemaraim, Bethel,
22 பெத்தராபா, செமாரயிம், பெத்தேல்,

23וְהָעַוִּ֥ים וְהַפָּרָ֖ה וְעָפְרָֽה׃

23 ஆவீம், பாரா, ஓப்ரா,
23 Avvim, Parah, Ophrah,
23 அவ்விம், பாரா, ஒபிரா,

24וּכְפַ֧ר העמני וְהָֽעָפְנִ֖י וָגָ֑בַע עָרִ֥ים שְׁתֵּים־עֶשְׂרֵ֖ה וְחַצְרֵיהֶֽן׃

24 கேப்பார்அமோனாய், ஒப்னி, காபா என்னும் பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
24 Chephar-ammoni, Ophni, and Geba—twelve cities, along with their villages.
24 கெபரம்மோனி, ஒப்னி, கேபா ஆகிய பன்னிரு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.

25גִּבְע֥וֹן וְהָֽרָמָ֖ה וּבְאֵרֽוֹת׃

25 கிபியோன், ராமா, பேரோத்,
25 Gibeon, Ramah, Beeroth,
25 கிபயோன், இராமா, பெயரோத்து,

26וְהַמִּצְפֶּ֥ה וְהַכְּפִירָ֖ה וְהַמֹּצָֽה׃

26 மிஸ்பே, கெப்பிரா, மோத்சா,
26 Mizpeh, Chephirah, Mozah,
26 மிஸ்பே, கெப்பிரா, மோசா,

27וְרֶ֥קֶם וְיִרְפְּאֵ֖ל וְתַרְאֲלָֽה׃

27 ரெக்கேம், இர்பெயேல், தாராலா,
27 Rekem, Irpeel, Taralah,
27 இரக்கேம், இரிப்பயேல், தராலா,

28וְצֵלַ֡ע הָאֶ֜לֶף וְהַיְבוּסִ֨י הִ֤יא יְרֽוּשָׁלִַ֙ם֙ גִּבְעַ֣ת קִרְיַ֔ת עָרִ֥ים אַרְבַּֽע־עֶשְׂרֵ֖ה וְחַצְרֵיהֶ֑ן זֹ֛את נַֽחֲלַ֥ת בְּנֵֽי־בִנְיָמִ֖ן לְמִשְׁפְּחֹתָֽם׃

28 சேலா, எலேப், எருசலேமாகிய எபூசி, கீபெயாத், கீரெயாத் என்னும் பதினான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே; பென்யமீன் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி இருக்கிற சுதந்தரம் இதுவே.
28 Zelah, Haeleph, Jebusc (that is, Jerusalem), Gibeah,d and Kiriath-jearime—fourteen cities, along with their villages. This was the inheritance of the clans of the tribe of Benjamin.
28 சேலா, எலேபு, எருசலேம் என்னும் எபூசி, கிபயத்து, கிரியத்து ஆகிய பதினான்கு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க. இது பென்யமின் மக்களுக்கு அவர்களின் குடும்பங்களின்படிக் கிடைத்த உடைமை.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Joshua Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21  22   23   24

Gen   Exo   Lev   Num   Deut   Josh   Judg   Ruth   1Sam   2Sam   1Kgs   2Kgs   1Chr   2Chr   Ezra   Neh   Esth   Job   Pslm   Prov
Ecc   Song   Isa   Jer   Lam   Eze   Dan   Hos   Joel   Amos   Obad   Jnh   Mic   Nah   Hab   Zeph   Hag   Zech   Mal

Footnotes:
18 a LXX; Hebrew slope facing the Arabah
19 b That is, the Dead Sea
28 c LXX, Syriac, and Vulgate; Hebrew the Jebusite
28 d Hebrew Gibeath
28 e LXX; Hebrew Kiriath

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.