பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Job  யோபு  אִיּוֹב

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42

யோபு 41 | Job 41

The LORD’s Power Shown in Leviathan

1תִּמְשֹׁ֣ךְ לִוְיָתָ֣ן בְּחַכָּ֑ה וּ֝בְחֶ֗בֶל תַּשְׁקִ֥יעַ לְשֹׁנֽוֹ׃

1 லிவியாதானை தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கக்கூடுமோ?
1 “Can you pull in Leviathan with a hook or tie down his tongue with a rope?
1 தூண்டிலால் லிவியத்தனைத் தூக்கிடுவாயோ? கயிற்றினால் அதன் நாக்கினைக் கட்டிடுவாயோ?*

2הֲתָשִׂ֣ים אַגְמ֣וֹן בְּאַפּ֑וֹ וּ֝בְח֗וֹחַ תִּקּ֥וֹב לֶֽחֱיוֹ׃

2 அதின் மூக்கை நார்க்கயிறுபோட்டுக் கட்டக்கூடுமோ? குறட்டினால் அதின் தாடையை உருவக் குத்தக்கூடுமோ.
2 Can you put a cord through his nose or pierce his jaw with a hook?
2 அதன் மூக்கிற்குச் கயிறு இட உன்னால் முடியுமோ? அதன் தாடையில் கொக்கியினால் குத்த முடியுமோ?

3הֲיַרְבֶּ֣ה אֵ֭לֶיךָ תַּחֲנוּנִ֑ים אִם־יְדַבֵּ֖ר אֵלֶ֣יךָ רַכּֽוֹת׃

3 அது உன்னைப் பார்த்து அநேக விண்ணப்பஞ்செய்யுமோ? உன்னை நோக்கி இச்சக வார்த்தைகளை சொல்லுமோ?
3 Will he beg you for mercy or speak to you softly?
3 வேண்டுகோள் பல அது உன்னிடம் விடுக்குமோ? கனிவாக உன்னிடம் கெஞ்சுமோ?

4הֲיִכְרֹ֣ת בְּרִ֣ית עִמָּ֑ךְ תִּ֝קָּחֶ֗נּוּ לְעֶ֣בֶד עוֹלָֽם׃

4 அது உன்னோடே உடன்படிக்கைபண்ணுமோ? அதைச் சதாகாலமும் அடிமைகொள்வாயோ?
4 Will he make a covenant with you to take him as a slave for life?
4 என்றும் உனக்கு ஏவல்புரிய உன்னுடன் அது உடன்படிக்கை செய்யுமோ?

5הֽ͏ַתְשַׂחֶק־בּ֭וֹ כַּצִּפּ֑וֹר וְ֝תִקְשְׁרֶ֗נּוּ לְנַעֲרוֹתֶֽיךָ׃

5 ஒரு குருவியோடே விளையாடுகிறதுபோல், நீ அதனோடே விளையாடி, அதை நீ உன் பெண்மக்களண்டையிலே கட்டிவைப்பாயோ?
5 Can you pet him like a bird or put him on a leash for your maidens?
5 பறவைபோல் துள்ளி அதனுடன் ஆடுவாயா? உம் மகளிர்க்கென அதனைக் கட்டிவைப்பாயா?

6יִכְר֣וּ עָ֭לָיו חַבָּרִ֑ים יֶ֝חֱצ֗וּהוּ בֵּ֣ין כְּֽנַעֲנִֽים׃

6 கூட்டாளிகள் அதைப் பிடிக்கப் பிரயத்தனப்பட்டு, அதை வியாபாரிகளுக்குப் பங்கிடுவார்களோ?
6 Will traders barter for him or divide him among the merchants?
6 மீனவர் குழுவினர் அதன்மேல் பேரம் பேசுவார்களோ? அவர்கள் வணிகரிடையே அதைக் கூறுபோடுவார்களோ?

7הַֽתְמַלֵּ֣א בְשֻׂכּ֣וֹת עוֹר֑וֹ וּבְצִלְצַ֖ל דָּגִ֣ים רֹאשֽׁוֹ׃

7 நீ அதின் தோலை அநேக அம்புகளினாலும், அதின் தலையை எறிவல்லையங்களினாலும் எறிவாயோ?
7 Can you fill his hide with harpoons or his head with fishing spears?
7 கூரிய முட்களால் அதன் தோலையும் மீன் எறி வேல்களால் அதன் தலையையும் குத்தி நிரப்புவாயோ?

8שִׂים־עָלָ֥יו כַּפֶּ֑ךָ זְכֹ֥ר מִ֝לְחָמָ֗ה אַל־תּוֹסַֽף׃

8 அதின்மேல் உன் கையைப்போடு, யுத்தத்தை நினைத்துக்கொள்; இனி அப்படிச் செய்யத் துணியமாட்டாய்.
8 If you lay a hand on him, you will remember the battle and never repeat it!
8 உன் கையை அதன்மேல் வைத்துப்பார்; எழும் போராட்டத்தை மறக்கமாட்டாய். மீண்டும் அதைச் செய்ய மாட்டோம்.

9הֵן־תֹּחַלְתּ֥וֹ נִכְזָ֑בָה הֲגַ֖ם אֶל־מַרְאָ֣יו יֻטָֽל׃

9 இதோ, அதைப் பிடிக்கலாம் என்று நம்பினவன் மோசம்போய், அதைப் பார்த்தவுடனே விழுவான் அல்லவோ?
9 Surely hope of overcoming him is false. Is not the sight of him overwhelming?
9 இதோ! தொடுவோர் நம்பிக்கை தொலைந்துபோம்; அதனைக் கண்டாலே ஒருவர் கதிகலங்குவார்.

10לֹֽא־אַ֭כְזָר כִּ֣י יְעוּרֶ֑נּוּ וּמִ֥י ה֝֗וּא לְפָנַ֥י יִתְיַצָּֽב׃

10 அதை எழுப்பத்தக்க தைரியவான் இல்லாதிருக்க, எனக்கு முன்பாக நிற்பவன் யார்?
10 No one is so fierce as to rouse Leviathan. Then who is able to stand against Me?
10 அதை எழுப்பும் வீரம் எவருக்கும் இல்லை; பின்பு அதன்முன் நிற்கத் துணிபவர் யார்?

11מִ֣י הִ֭קְדִּימַנִי וַאֲשַׁלֵּ֑ם תַּ֖חַת כָּל־הַשָּׁמַ֣יִם לִי־הֽוּא׃

11 தனக்குப் பதில் கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள்.
11 Who has given to Me that I should repay him?a Everything under heaven is Mine.
11 அதனை எதிர்த்து உயிரோடிருந்தவர் எவராவது உண்டோ? விண்ணகத்தின்கீழ் அப்படிப்பட்டவர் யாருமில்லை!

12לא־אַחֲרִ֥ישׁ בַּדָּ֑יו וּדְבַר־גְּ֝בוּר֗וֹת וְחִ֣ין עֶרְכּֽוֹ׃

12 அதின் அங்கங்களும், அதின் வீரியமும், அதின் உடல் இசைவின் நேர்த்தியும் இன்னதென்று நான் சொல்லாமல் மறைக்கமாட்டேன்.
12 I cannot keep silent about his limbs, his power and graceful form.
12 அதன் உறுப்புகள், அதன் ஆற்றல் அதன் அமைப்பின் அழகு அனைத்தையும் பற்றி அறிவிக்காது விடேன்.

13מִֽי־גִ֭לָּה פְּנֵ֣י לְבוּשׁ֑וֹ בְּכֶ֥פֶל רִ֝סְנ֗וֹ מִ֣י יָבֽוֹא׃

13 அது மூடியிருக்கிற அதின் போர்வையைக் கிளப்பக்கூடியவன் யார்? அதின் இரண்டு தாடைகளின் நடுவே கடிவாளம் போடத்தக்கவன் யார்?
13 Who can strip off his outer coat? Who can approach him with a bridle?b
13 அதன் மேல்தோலை உரிப்பவர் யார்? அதன் தாடை இரண்டுக்குமிடையே நுழைபவர் யார்?

14דַּלְתֵ֣י פָ֭נָיו מִ֣י פִתֵּ֑חַ סְבִיב֖וֹת שִׁנָּ֣יו אֵימָֽה׃

14 அதின் முகத்தின் கதவைத் திறக்கக்கூடியவன் யார்? சுற்றிலுமிருக்கிற அதின் பற்கள் பயங்கரமானவைகள்.
14 Who can open his jaws, ringed by his fearsome teeth?
14 அதன் முகத்தில் வாயிலைத் திறப்பவன் யார்? அதன் பற்களைச் சூழ்ந்து பேரச்சமே உள்ளது.

15גַּ֭אֲוָה אֲפִיקֵ֣י מָֽגִנִּ֑ים סָ֝ג֗וּר חוֹתָ֥ם צָֽר׃

15 முத்திரைப் பதிப்புப் போல அழுத்தங்கொண்டு அடர்த்தியாயிருக்கிற அதின் பரிசைகளின் அரணிப்பு மகா சிறப்பாயிருக்கிறது.
15 His rows of scales are his pride, tightly sealed together.
15 அதன் முதுகு கேடய வரிசையாம்; நெருங்க மூடி முத்திரை இடப்பட்டதாம்.

16אֶחָ֣ד בְּאֶחָ֣ד יִגַּ֑שׁוּ וְ֝ר֗וּחַ לֹא־יָב֥וֹא בֵֽינֵיהֶֽם׃

16 அவைகள் நடுவே காற்றும் புகமாட்டாத நெருக்கமாய் அவைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது.
16 One scale is so near to another that no air can pass between them.
16 ஒன்றோடு ஒன்று ஒட்டி உள்ளது. காற்றும் அதனிடையே கடந்திடாது;

17אִישׁ־בְּאָחִ֥יהוּ יְדֻבָּ֑קוּ יִ֝תְלַכְּד֗וּ וְלֹ֣א יִתְפָּרָֽדוּ׃

17 அவைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு இணைபிரியாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது.
17 They are joined to one another; they clasp and cannot be separated.
17 ஒன்றோடு ஒன்றாய் இணைந்துள்ளன; பிரிக்கமுடியாதவாறு ஒன்றாய்ப் பிடித்துள்ளன.

18עֲ‍ֽ֭טִישֹׁתָיו תָּ֣הֶל א֑וֹר וְ֝עֵינָ֗יו כְּעַפְעַפֵּי־שָֽׁחַר׃

18 அது தும்முகையில் ஒளிவீசும், அதின் கண்கள் அருணோதயத்தின் புருவங்களைப்போல் இருக்கிறது.
18 His snorting flashes with light, and his eyes are like the rays of dawn.
18 துலங்கும் மின்னல் அதன் தும்மல்; வைகறை இமைகள் அதன் கண்கள்.

19מִ֭פִּיו לַפִּידִ֣ים יַהֲלֹ֑כוּ כִּיד֥וֹדֵי אֵ֝֗שׁ יִתְמַלָּֽטוּ׃

19 அதின் வாயிலிருந்து எரிகிற பந்தங்கள் புறப்பட்டு, அக்கினிப்பொறிகள் பறக்கும்.
19 Firebrands stream from his mouth; fiery sparks shoot forth!
19 அதன் வாயினின்று புறப்படுவது தீப்பிழம்பு; அங்கிருந்து பறப்பது நெருப்புப் பொறிகளே.

20מִ֭נְּחִירָיו יֵצֵ֣א עָשָׁ֑ן כְּד֖וּד נָפ֣וּחַ וְאַגְמֹֽן׃

20 கொதிக்கிற சட்டியிலும் கொப்பரையிலும் இருந்து புறப்படுகிறதுபோல, அதின் நாசிகளிலிருந்து புகை புறப்படும்.
20 Smoke billows from his nostrils as from a boiling pot over burning reeds.
20 நாணல் நெருப்புக் கொதிகலனின்று வருவதுபோல் அதன் நாசியினின்று புகை கிளம்பும்.

21נַ֭פְשׁוֹ גֶּחָלִ֣ים תְּלַהֵ֑ט וְ֝לַ֗הַב מִפִּ֥יו יֵצֵֽא׃

21 அதின் சுவாசம் கரிகளைக் கொளுத்தும், அதின் வாயிலிருந்து ஜுவாலை புறப்படும்.
21 His breath sets coals ablaze, and flames pour from his mouth.
21 அதன் மூச்சு கரிகளைப் பற்றவைக்கும்; அதன் வாயினின்று தீப்பிழம்பு கிளம்பிவரும்.

22בְּֽ֭צַוָּארוֹ יָלִ֣ין עֹ֑ז וּ֝לְפָנָ֗יו תָּד֥וּץ דְּאָבָֽה׃

22 அதின் கழுத்திலே பெலன் குடிகொண்டிருக்கும்; பயங்கரம் அதற்குமுன் கூத்தாடும்.
22 Strength resides in his neck, and dismay leaps before him.
22 அதன் கழுத்தில் வலிமை வதிகின்றது; நடுக்கம் அதன்முன் துள்ளியாடுகின்றது.

23מַפְּלֵ֣י בְשָׂר֣וֹ דָבֵ֑קוּ יָצ֥וּק עָ֝לָ֗יו בַּל־יִמּֽוֹט׃

23 அதின் உடற்கூறுகள், அசையாத கெட்டியாய் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும்.
23 The folds of his flesh are tightly joined; they are firm and immovable.
23 அதன் தசைமடிப்புகள் ஒட்டியிருக்கும்; கெட்டியாயிருக்கும் அவற்றை அசைக்க ஒண்ணாது.

24לִ֭בּוֹ יָצ֣וּק כְּמוֹ־אָ֑בֶן וְ֝יָצ֗וּק כְּפֶ֣לַח תַּחְתִּֽית׃

24 அதின் நெஞ்சு கல்லைப்போலவும், எந்திரத்தின் அடிக்கல்லைப்போலவும் கெட்டியாயிருக்கும்.
24 His chest is as hard as a rock, as hard as a lower millstone!
24 அதன் நெஞ்சம் கல்லைப்போல் கடினமானது; திரிகையின் அடிக்கல்போல் திண்மையானது.

25מִ֭שֵּׂתוֹ יָג֣וּרוּ אֵלִ֑ים מִ֝שְּׁבָרִ֗ים יִתְחַטָּֽאוּ׃

25 அது எழும்பும்போது பலசாலிகள் அஞ்சி பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள்.
25 When Leviathan rises up, the mighty are terrified; they withdraw before his thrashing.
25 அது எழும்பொழுதே தெய்வங்கள் அஞ்சுகின்றன; அது அறையவரும்போதே நிலைகுலைகின்றன.

26מַשִּׂיגֵ֣הוּ חֶ֭רֶב בְּלִ֣י תָק֑וּם חֲנִ֖ית מַסָּ֣ע וְשִׁרְיָֽה׃

26 அதைத் தாக்குகிறவனுடைய பட்டயம், ஈட்டி, வல்லையம், கவசமொன்றும் அதற்குமுன் நிற்காது.
26 The sword that reaches him has no effect, nor does the spear or dart or arrow.
26 வாள் அதைத் தாக்கிடினும், ஊடுருவாது; ஈட்டியோ அம்போ, எறிவேலோ உட்செல்லாது.

27יַחְשֹׁ֣ב לְתֶ֣בֶן בַּרְזֶ֑ל לְעֵ֖ץ רִקָּב֣וֹן נְחוּשָֽׁה׃

27 அது இரும்பை வைக்கோலாகவும், வெண்கலத்தை உளுத்த மரமாகவும் எண்ணும்.
27 He regards iron as straw and bronze as rotten wood.
27 இரும்பை அது துரும்பெனக் கருதும்; வெண்கலத்தை உளுத்த கட்டையெனக் கொள்ளும்.

28לֹֽא־יַבְרִיחֶ֥נּוּ בֶן־קָ֑שֶׁת לְ֝קַ֗שׁ נֶהְפְּכוּ־ל֥וֹ אַבְנֵי־קָֽלַע׃

28 அம்பு அதைத் துரத்தாது; கவண்கற்கள் அதற்குத் துரும்பாகும்.
28 No arrow can make him flee; slingstones become like chaff to him.
28 வில்வீரன் அதை விரட்ட முடியாது; கவண் கல்லும் கூளம்போல் ஆகுமே.

29כְּ֭קַשׁ נֶחְשְׁב֣וּ תוֹתָ֑ח וְ֝יִשְׂחַ֗ק לְרַ֣עַשׁ כִּידֽוֹן׃

29 அது பெருந்தடிகளைத் தாளடிகளாக எண்ணி, ஈட்டியின் அசைவை இகழும்.
29 A club is regarded as straw, and he laughs at the sound of the lance.c
29 பெருந்தடியைத் தாளடி எனக்கருதும்; எறிவேல் ஒலிகேட்டு எள்ளி நகைக்கும்.

30תַּ֭חְתָּיו חַדּ֣וּדֵי חָ֑רֶשׂ יִרְפַּ֖ד חָר֣וּץ עֲלֵי־טִֽיט׃

30 அதின் கீழாகக் கூர்மையான கற்கள் கிடந்தாலும், அது சேற்றின்மேல் ஓடுகிறதுபோலக் கருக்கான அவைகளின்மேலும் ஓடும்.
30 His undersides are jagged potsherds, spreading out the mud like a threshing sledge.
30 அதன் வயிற்றுப்புறம் ஒட்டுத் துண்டுகளின் அடுக்கு; அது சேற்றில் படுத்துக்கிடக்கையில் பரம்புக் கட்டை.

31יַרְתִּ֣יחַ כַּסִּ֣יר מְצוּלָ֑ה יָ֝֗ם יָשִׂ֥ים כַּמֶּרְקָחָֽה׃

31 அது ஆழத்தை உலைப்பானையைபபோல் பொங்கப்பண்ணி, கடலைத் தைலம்போல் கலக்கிவிடும்.
31 He makes the depths seethe like a cauldron; he makes the sea like a jar of ointment.
31 கொதிகலமென அது கடலைப் பொங்கச் செய்யும்; தைலச் சட்டியென அது ஆழியைக் கொப்பளிக்கச் செய்யும்.

32אַ֭חֲרָיו יָאִ֣יר נָתִ֑יב יַחְשֹׁ֖ב תְּה֣וֹם לְשֵׂיבָֽה׃

32 அது தனக்குப் பின்னாகப் பாதையைத் துலங்கப்பண்ணும்; ஆழமானது வெளுப்பான நரையைப்போல் விளங்கும்.
32 He leaves a glistening wake behind him; one would think the deep had white hair!
32 அது போனபிறகு பாதை பளபளக்கும்; கடலே நரைத்ததெனக் கருதத்தோன்றும்.

33אֵֽין־עַל־עָפָ֥ר מָשְׁל֑וֹ הֶ֝עָשׂ֗וּ לִבְלִי־חָת׃

33 பூமியின்மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை; அது நிர்ப்பயமாயிருக்க உண்டுபண்ணப்பட்டது.
33 Nothing on earth is his equal—a creature devoid of fear!
33 அகிலத்தில் அதற்கு இணையானது இல்லை; அச்சம் கொண்டிலாப் படைப்பு அதுவே.

34אֵֽת־כָּל־גָּבֹ֥הַּ יִרְאֶ֑ה ה֝֗וּא מֶ֣לֶךְ עַל־כָּל־בְּנֵי־שָֽׁחַץ׃

34 அது மேட்டிமையானதையெல்லாம் அற்பமாய் எண்ணுகிறது; அது அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல்லாம் ராஜாவாயிருக்கிறது என்றார்.
34 He looks down on all the haughty; he is king over all the proud.”
34 செருக்குற்ற படைப்பு அனைத்தையும் ஏளனமாய் நோக்கும்; வீறுகொண்ட விலங்குகட்கு வேந்தனும் அதுவே.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Job Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42

Gen   Exo   Lev   Num   Deut   Josh   Judg   Ruth   1Sam   2Sam   1Kgs   2Kgs   1Chr   2Chr   Ezra   Neh   Esth   Job   Pslm   Prov
Ecc   Song   Isa   Jer   Lam   Eze   Dan   Hos   Joel   Amos   Obad   Jnh   Mic   Nah   Hab   Zeph   Hag   Zech   Mal

Footnotes:
11 a Cited in Romans 11:35
13 b Or Who can come within his double mail?
29 c Or javelin

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.