பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Jeremiah எரேமியா יִרְמְיָהוּ
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
எரேமியா 5 | Jeremiah 5
No One Is Just
1 நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன்.
1 “Go up and down the streets of Jerusalem. Look now and take note; search her squares. If you can find a single person, anyone who acts justly, anyone who seeks the truth, then I will forgive the city.
1 நீதியைக் கடைப்பிடித்து உண்மையை நாடும் ஒரு மனிதரைக் கண்டுபிடிக்க முடியுமாவென எருசலேமின் தெருக்களில் சுற்றிப் பார்த்துத் தெரிந்துகொள்; அவளுடைய பொது இடங்களில் கவனமாய்த் தேடிப்பார்; கண்டுபிடித்தால், அவளுக்கு மன்னிப்பு அளிப்பேன்.
2 அவர்கள்: கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறோம் என்றாலும், பொய்யாணையிடுகிறார்களே.
2 Although they say, ‘As surely as the LORD lives,’ they are swearing falsely.”
2 வாழும் ஆண்டவர் மேல் அவர்கள் ஆணையிடலாம்; ஆனால் அது பொய்யாணையே.
3 கர்த்தாவே, உம்முடைய கண்கள் சத்தியத்தை அல்லவோ நோக்குகின்றது; அவர்களை அடிக்கிறீர், ஆனாலும் அவர்களுக்கு நோகாது; அவர்களை நிர்மூலமாக்குகிறீர், ஆனாலும் புத்தியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்கிறார்கள்; தங்கள் முகங்களைக் கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கி, திரும்பமாட்டோம் என்கிறார்கள்.
3 O LORD, do not Your eyes look for truth? You struck them, but they felt no pain. You finished them off, but they refused to accept discipline. They have made their faces harder than stone and refused to repent.
3 ஆண்டவரே, உம் கண்கள் பற்றுறுதியை அன்றோ நோக்குகின்றன! நீர் அவர்களை நொறுக்கினீர்; அவர்களோ வேதனையை உணரவில்லை; நீர் அவர்களை அழித்தீர்; அவர்களோ திருந்த மறுத்தனர்; அவர்கள் தங்கள் முகத்தைப் பாறையினும் கடியதாக இறுக்கிக்கொண்டனர். உம்மிடம் திரும்பிவர மறுத்தனர்.
4 அப்பொழுது நான்: இவர்கள் நீசராமே, இவர்கள் மதியற்றவர்கள்; கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறியாதிருக்கிறார்கள் என்றும்;
4 Then I said, “They are only the poor; they have played the fool, for they do not know the way of the LORD, the justice of their God.
4 நான் 'அவர்கள் தாழ்நிலையில் உள்ளவர்கள்; அறிவற்றுச் செயலாற்றுகின்றார்கள்' என எண்ணினேன்; ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் வழிமுறைகளையும், தம் கடவுளின் நெறிமுறைகளையும் அறியாதிருக்கின்றார்கள்.
5 நான் பெரியோர்களிடத்திலே போய், அவர்களோடே பேசுவேன்; அவர்கள் கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறிவார்களென்றும் சொன்னேன்; அவர்களோ ஏகமாய் நுகத்தடியை முறித்து, கட்டுகளை அறுத்துப்போட்டார்கள்.
5 I will go to the powerful and speak to them. Surely they know the way of the LORD, the justice of their God.” But they too, with one accord, had broken the yoke and torn off the chains.
5 நான் உயர் நிலையில் உள்ளவர்களிடம் போய், அவர்களிடம் பேசுவேன். ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் வழிமுறைகளையும், தம் கடவுளின் நெறிமுறைகளையும் அறிந்தவர்களாய் இருக்கிறார்கள்என நினைத்தேன். ஆனால், அவர்களும் நுகத்தை முறித்தார்கள்; தளைகளை அறுத்தார்கள்.
6 ஆகையால் காட்டிலிருந்து வரும் சிங்கம் அவர்களைக் கொல்லும், வனாந்தரத்திலுள்ள ஓநாய்கள் அவர்களைப் பீறும், சிவிங்கி அவர்கள் பட்டணங்களின்மேல் நோக்கமாயிருக்கும்; அவைகளிலிருந்து புறப்படுகிறவன் எவனும் பீறப்படுவான்; அவர்கள் மீறுதல்கள் பெருகி, அவர்கள் சீர்கேடுகள் அதிகரித்தது.
6 Therefore a lion from the forest will strike them down, a wolf from the desert will ravage them. A leopard will lie in wait near their cities, and everyone who ventures out will be torn to pieces. For their rebellious acts are many, and their unfaithful deeds are numerous.
6 எனவே காட்டுச் சிங்கம் அவர்களைக் கொல்லும், பாலைநிலத்து ஓநாய் அவர்களை அழிக்கும், சிறுத்தை அவர்கள் நகர்கள் மேல் கண்வைத்திருக்கும்; அவற்றிலிருந்து வெளியேறும் அனைவரும் பீறிக் கிழித்தெறியப்படுவர். ஏனெனில், அவர்கள் வன்செயல்கள் பல செய்தனர்; என்னை விட்டுப் பன்முறை விலகிச் சென்றனர்.
7 இவைகளை நான் உனக்கு மன்னிப்பது எப்படி? உன் பிள்ளைகள் என்னை விட்டுவிட்டு, தெய்வம் அல்லாதவைகள்பேரில் ஆணையிடுகிறார்கள்; நான் திருப்தியாக்கின அவர்கள் விபசாரம்பண்ணி வேசிவீட்டிலே கூட்டங்கூடுகிறார்கள்
7 “Why should I forgive you? Your children have forsaken Me and sworn by gods that are not gods. I satisfied their needs, yet they committed adultery and assembled at the houses of prostitutes.
7 நான் ஏன் உன்னை மன்னிக்க வேண்டும்? உன் மக்கள் என்னைப் புறக்கணித்தார்கள்; தெய்வங்கள் அல்லாதவைமீது ஆணையிட்டார்கள்; அவர்கள் உண்டு நிறைவடையுமாறு செய்தேன்; அவர்களோ விபசாரம் பண்ணினார்கள்; விலைமாதர் வீட்டில் கூடினார்கள்;
8 அவர்கள் கொழுத்த குதிரைகளைப்போல் காலமே எழும்பி, அவனவன் தன்தன் அயலானுடைய பெண்ஜாதியின் பின்னாலே கனைக்கிறான்.
8 They are well-fed, lusty stallions, each neighing after his neighbor’s wife.
8 தின்று கொழுத்து மோக வெறி கொண்ட குதிரைகள்போல், ஒவ்வொருவனும் தனக்கு அடுத்திருப்பவன் மனைவியை நோக்கிக் கனைக்கிறான்.
9 இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
9 Should I not punish them for these things?” declares the LORD. “Should I not avenge Myself on such a nation as this?
9 இவற்றிற்காக நான் தண்டிக்க மாட்டேனா? என்கிறார் ஆண்டவர். இத்தகைய மக்களை நான் பழி வாங்காமல் இருப்பேனா?
10 அதின் மதில்கள்மேலேறி அழித்துப்போடுங்கள், ஆனாலும் சர்வசங்காரம் செய்யாதிருங்கள்; அதின் கொத்தளங்களை இடித்துப்போடுங்கள்; அவைகள் கர்த்தருடையவைகள் அல்ல.
10 Go up through her vineyards and ravage them, but do not finish them off. Strip off her branches, for they do not belong to the LORD.
10 திராட்சைத் தோட்டச் சுவர்கள் மீது ஏறி அழியுங்கள்; எனினும் முற்றிலும் அழிக்க வேண்டாம். அதன் படர்கொடிகளை ஒடித்தெறியுங்கள். அவை ஆண்டவருடையவை அல்ல.
11 இஸ்ரவேல் வம்சத்தாரும், யூதா வம்சத்தாரும் எனக்கு விரோதமாய் மிகுதியும் துரோகம்பண்ணினார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
11 For the house of Israel and the house of Judah have been utterly unfaithful to Me,” declares the LORD.
11 ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாரும் யூதா வீட்டாரும் எனக்கு எதிராக நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டனர், என்கிறார் ஆண்டவர்.
12 அவர் அப்படிப்பட்டவர் அல்லவென்றும், பொல்லாப்பு நம்மேல் வராது, நாம் பட்டயத்தையாகிலும், பஞ்சத்தையாகிலும் காண்பதில்லையென்றும்,
12 They have lied about the LORD and said: “He will not do anything; harm will not come to us; we will not see sword or famine.
12 அவர்கள் ஆண்டவரைக் குறித்துப் பொய்யாகச் சொன்னது: "அவர் ஒன்றும் செய்யமாட்டார்; நமக்குத் தீமை எதுவும் வராது; வாளையும் பஞ்சத்தையும் நாம் காணப்போதில்லை."
13 தீர்க்கதரிசிகள் காற்றாய்ப்போவார்கள்; திருவாக்கு அவர்களில் இல்லை; அவர்களுக்கே அப்படி ஆகக்கடவதென்றும், அவர்கள் சொல்லிக் கர்த்தரை மறுதலித்தார்கள்.
13 The prophets are but wind, for the word is not in them. So let their own predictions befall them.a”
13 இறைவாக்கினர் பேசுவதெல்லாம் காற்றோடு காற்றாய்ப் போகும். இறைவாக்கு அவர்களிடம் இல்லை; அவர்கள் கூறியவாறு அவர்களுக்கே நிகழும்.
Judgment Proclaimed
14 ஆகையால் சேனைகளின் தேவனாகி கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இந்த வார்த்தையைச் சொன்னபடியினால், இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும், இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன், அது இவர்களைப் பட்சிக்கும்.
14 Therefore this is what the LORD God of Hosts says: “Because you have spoken this word, I will make My words a fire in your mouth and this people the wood it consumes.
14 ஆகவே படைகளின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "அவர்கள் இப்படிப் பேசியதால் நான் உன் வாயில் வைக்கும் என் சொற்கள் நெருப்பாகும். உன் வாயில் வைத்த அவை மரக்கட்டைகளாகிய இம்மக்களை எரித்துவிடும்.
15 இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, தூரத்திலிருந்து நான் உங்கள்மேல் ஒரு ஜாதியைக் கொண்டுவருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பலத்த ஜாதி, அது பூர்வகாலத்து ஜாதி, அவர்கள் நீ அறியாத பாஷையைப் பேசும் ஜாதி, அவர்கள் பேசுகிறது இன்னதென்று உனக்கு விளங்காது.
15 Behold, I am bringing a distant nation against you, O house of Israel,” declares the LORD. “It is an established nation, an ancient nation, a nation whose language you do not know and whose speech you do not understand.
15 இஸ்ரயேல் வீட்டாரே, இதோ! தொலையிலிருந்து உங்களுக்கு எதிராக ஓரினத்தை அழைத்து வருவேன், என்கிறார் ஆண்டவர். அது எதையும் தாங்கும் இனம்; தொன்று தொட்டு நிலைத்து நிற்கும் இனம். அதன் மொழி உனக்குப் புரியாது; அவர்கள் பேசுவது உனக்குப் புரியாது.
16 திறந்த பிரேதக்குழிகளைப்போல் அவர்கள் அம்பறாத்தூணிகள் இருக்கும்; அவர்கள் அனைவரும் பாக்கிரமசாலிகள்.
16 Their quivers are like open graves; they are all mighty men.
16 அவர்களது அம்புக் கூடு திறந்த கல்லறை போன்றது. அவர்கள் அனைவரும் வலிமை வாய்ந்தவர்கள்.
17 அவர்கள் உன் குமாரரும் உன் குமாரத்திகளும் சாப்பிடவேண்டிய உன் விளைச்சலையும் உன் அப்பத்தையும் சாப்பிட்டு, உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் பட்சித்து, உன் திராட்சப்பழங்களையும் உன் அத்திப்பழங்களையும் சாப்பிட்டு, நீ நம்பின உன்னுடைய அரணான பட்டணங்களைப் பட்டயத்தாலே வெறுமையாக்குவார்கள்.
17 They will devour your harvest and food; they will consume your sons and daughters; they will eat up your flocks and herds; they will feed on your vines and fig trees. With the sword they will destroy the fortified cities in which you trust.”
17 அவர்கள் உன் விளைச்சலையும் உணவையும் விழுங்கிவிடுவார்கள்; புதல்வர், புதல்வியரை விழுங்கிவிடுவார்கள்; உன் ஆடு மாடுகளை விழுங்கிவிடுவார்கள்; உன் திராட்சைக் கொடிகளையும் அத்தி மரங்களையும் விழுங்கிவிடுவார்கள்; நீ நம்பியிருக்கும் உன் அரண்சூழ் நகர்களை வாளால் அழிப்பார்கள்.
18 ஆகிலும் நான் அந்நாட்களிலும் உங்களைச் சர்வசங்காரம் செய்யாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
18 “Yet even in those days,” declares the LORD, “I will not make a full end of you.
18 அந்நாள்களில்கூட நான் உங்களை முற்றும் அழிக்கமாட்டேன்," என்கிறார் ஆண்டவர்.
19 எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இவைகளையெல்லாம் எதினிமித்தம் செய்தார் என்று நீங்கள் கேட்டால், அப்பொழுது நீ அவர்களைப் பார்த்து நீங்கள் என்னைவிட்டு, உங்களுடைய தேசத்திலே அந்நிய தேவர்களைச் சேவித்ததுபோல, உங்களுடையதல்லாத தேசத்திலே அந்நியர்களைச் சேவிப்பீர்களென்று சொல்வாயாக.
19 And when the people ask, ‘For what offense has the LORD our God done all these things to us?’ You are to tell them, ‘Just as you have forsaken Me and served foreign gods in your land, so will you serve foreigners in a land that is not your own.’”
19 "எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களுக்கு இவற்றை எல்லாம் ஏன் செய்தார்?" என அவர்கள் கேட்கும்போது, நீ அவர்களிடம், "நீங்கள் என்னைப் புறக்கணித்து வேற்றுத் தெய்வங்களுக்கு உங்கள் நாட்டில் ஊழியம் செய்ததுபோல் உங்களுக்கு உரிமை இல்லாத நாட்டில் வேற்று நாட்டாருக்கு நீங்கள் ஊழியம் செய்வீர்கள்" என்று சொல்.
20 நீங்கள் யாக்கோபின் வீட்டிலே அறிவித்து, யூதாவிலே சொல்லிக் கூறவேண்டியது என்னவென்றால்,
20 Declare this in the house of Jacob and proclaim it in Judah:
20 யாக்கோபின் வீட்டாருக்கு இதைப்பறைசாற்றுங்கள்; யூதாவின் வீட்டாருக்கு அறிவியுங்கள்.
21 கண்கள் இருந்தும் காணாமலும், காதுகள் இருந்தும் கேளாமலுமிருக்கிற அறிவில்லாத ஜனங்களே, கேளுங்கள்.
21 “Hear this, O foolish and senseless people, who have eyes but do not see, who have ears but do not hear.
21 கண்ணிருந்தும் காணாத, காதிருந்தும் கேளாத மதிகெட்ட, இதயமற்ற மக்களே, கேளுங்கள்;1
1 எசா 6:9-10; எசே 12:2; மாற் 8:18.
22 எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக் கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ?
22 Do you not fear Me?” declares the LORD. “Do you not tremble before Me, the One who set the sand as the boundary for the sea, an enduring barrier it cannot cross? The waves surge, but they cannot prevail. They roar but cannot cross it.
22 உங்களுக்கு என் மீது அச்சமில்லையா? என்கிறார் ஆண்டவர். என் முன்னிலையில் நீங்கள் நடுங்க வேண்டாமா? கடலுக்கு எல்லையாக மணலை வைத்தேன். இது என்றென்றும் உள்ள ஒரு வரம்பு, அதனைக் கடக்க முடியாது. அலைகள் அதன் மீது மோதியடிக்கலாம்; எனினும் அதன்மேல் வெற்றி கொள்ள முடியாது. அவைகள் சீறி முழங்கலாம்; எனினும் அதனை மீற முடியாது.2
2 யோபு 38:8-11.
23 இந்த ஜனங்களோ முரட்டாட்டமும் கலகமுமான இருதயமுள்ளவர்கள்; முரட்டாட்டம்பண்ணிப் போய்விடுகிறார்கள்.
23 But these people have stubborn and rebellious hearts. They have turned aside and gone away.
23 இம்மக்களோ கட்டுக்கடங்காதவர், பிடிவாத குணத்தினர், என்னை விட்டு விலகிச் சென்றனர்.
24 அந்தந்தப் பருவத்திலே எங்களுக்கு மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுகிறதில்லை.
24 They have not said in their hearts, ‘Let us fear the LORD our God, who gives the rains, both autumn and spring, in season, who keeps for us the appointed weeks of harvest.’
24 "தக்க காலத்தில் முன் மாரி, பின் மாரியைத் தருபவரும், விளைச்சலுக்காகக் குறிக்கப்பட்ட வாரங்களை நமக்காகக் காத்து வருபவருமான நம் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சுவோம்" என்னும் எண்ணம் அவர்கள் உள்ளத்தில் எழவில்லை.
25 உங்கள் அக்கிரமங்கள் இவைகளை விலக்கி, உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவொட்டாதிருக்கிறது.
25 Your iniquities have diverted these from you; your sins have deprived you of My bounty.
25 உங்கள் குற்றங்கள் இவற்றை எல்லாம் தடுத்தன; உங்கள் பாவங்களே உங்களுக்கு நன்மை வராமலிருக்கச் செய்தன.
26 குருவிபிடிக்கிறவர்கள் பதுங்குகிறது போல் பதுங்கி, மனுஷரைப் பிடிக்கக் கண்ணிகளை வைக்கிற துன்மார்க்கர் என் ஜனங்களில் காணப்படுகிறார்கள்.
26 For among My people are wicked men; they watch like fowlers lying in wait; they set a trap to catch men.
26 ஏனெனில், என் மக்களிடையே தீயோர் காணப்படுகின்றனர்; வேடர் பதுங்கியிருப்பதுபோல் அவர்கள் மறைந்து கண்ணி வைத்து மனிதர்களைப் பிடிக்கின்றனர்.
27 குருவிகளால் கூண்டு நிறைந்திருக்கிறதுபோல், அவர்கள் வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது; ஆதலால் அவர்கள் பெருகி ஐசுவரியவான்களாகிறார்கள்.
27 Like cages full of birds, so their houses are full of deceit. Therefore they have become powerful and rich.
27 பறவைகளால் கூண்டு நிறைந்திருப்பது போல, அவர்களின் வீடுகள் சூழ்ச்சிவழி கிடைத்த பொருள்களினால் நிறைந்துள்ளன. இவ்வாறு அவர்கள் பெரியவர்களும் செல்வர்களும் ஆனார்கள்.
28 கொழுத்து, சளுக்குப்பண்ணுகிறார்கள்; துன்மார்க்கனுடைய செயல்களைக் கண்டிக்காமல் விடுகிறார்கள்; திக்கற்றவனுடைய வழக்கை விசாரியாமல், தாங்கள்மாத்திரம் வாழுகிறார்கள்; எளியவர்களின் நியாயத்தைத் தீரார்கள்.
28 They have grown fat and sleek, and have excelled in the deeds of the wicked. They have not taken up the cause of the fatherless, that they might prosper; nor have they defended the rights of the needy.
28 அவர்கள் கொழுத்துத் தளதள வென்றிருக்கின்றார்கள்; அவர்களின் தீச்செயல்களுக்குக் கணக்கில்லை; வழக்குகளை நீதியுடன் விசாரிப்பதில்லை; அனாதைகள் வளம்பெறும் வகையில் அவர்கள் வழக்கை விசாரிப்பதில்லை. ஏழைகளின் உரிமைகளை நிலைநாட்டுவதுமில்லை.
29 இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
29 Should I not punish them for these things?” declares the LORD. “Should I not avenge Myself on such a nation as this?
29 இவற்றிற்காக நான் இவர்களைத் தண்டிக்க வேண்டாமா? என்கிறார் ஆண்டவர். இத்தகைய மக்களினத்தை நான் பழிவாங்காமல் விடுவேனா?
30 திகைத்துத் திடுக்கிடத்தக்க காரியம் தேசத்திலே நடந்துவருகிறது.
30 A horrible and shocking thing has happened in the land.
30 திகைப்பும் திகிலும் ஊட்டும் நிகழ்ச்சி நாட்டில் நடக்கின்றது.
31 தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள்; இப்படியிருப்பது என் ஜனத்துக்குப் பிரியமாயிருக்கிறது; ஆனாலும் முடிவிலே என்னசெய்வீர்கள்?
31 The prophets prophesy falsely, and the priests rule by their own authority. My people love it so, but what will you do in the end?
31 இறைவாக்கினர் பொய்யை இறைவாக்காக உரைக்கின்றனர்; குருக்கள் தங்கள் விருப்பப்படியே அதிகாரம் செலுத்துகின்றனர்; இதையே என் மக்களும் விரும்புகின்றனர்; ஆனால் முடிவில் என்ன செய்வீர்கள்?
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
13 a Literally let this befall them.
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.