பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Jeremiah  எரேமியா  יִרְמְיָהוּ

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42   43   44   45   46   47   48   49   50   51   52

எரேமியா 28 | Jeremiah 28

Hananiah’s False Prophecy

1וַיְהִ֣י ׀ בַּשָּׁנָ֣ה הַהִ֗יא בְּרֵאשִׁית֙ מַמְלֶ֙כֶת֙ צִדְקִיָּ֣ה מֶֽלֶךְ־יְהוּדָ֔ה בשנת הָֽרְבִעִ֔ית בַּחֹ֖דֶשׁ הַחֲמִישִׁ֑י אָמַ֣ר אֵלַ֡י חֲנַנְיָה֩ בֶן־עַזּ֨וּר הַנָּבִ֜יא אֲשֶׁ֤ר מִגִּבְעוֹן֙ בְּבֵ֣ית יְהוָ֔ה לְעֵינֵ֧י הַכֹּהֲנִ֛ים וְכָל־הָעָ֖ם לֵאמֹֽר׃

1 யூதாவுடைய ராஜாவாகிய சிதேக்கியா அரசாளத் துவக்கின நாலாம்வருஷம் ஐந்தாம் மாதத்திலே, அசூரின் குமாரனாகிய அனனியா என்னப்பட்ட கிபியோன் ஊரானாகிய தீர்க்கதரிசி கர்த்தருடைய ஆலயத்திலே ஆசாரியர்களும் சகல ஜனங்களும் பார்த்திருக்க என்னை நோக்கி:
1 In the fifth month of that same year, the fourth year, near the beginning of the reign of King Zedekiah of Judah, the prophet Hananiah son of Azzur, who was from Gibeon, said to me in the house of the LORD in the presence of the priests and all the people:
1 அதே ஆண்டில், அதாவது யூதாவின் அரசனான செதேக்கியாவினுடைய ஆட்சியின் நான்காம் ஆண்டு ஐந்தாம் மாதத்தில் அசூரின் மகனும் கிபயோனைச் சார்ந்தவனுமான அனனியா என்னும் இறைவாக்கினன் ஆண்டவரின் இல்லத்தில் குருக்கள் மற்றும் மக்கள் அனைவருடைய முன்னிலையிலும் என்னிடம் உரைத்தது;

2כֹּֽה־אָמַ֞ר יְהוָ֧ה צְבָא֛וֹת אֱלֹהֵ֥י יִשְׂרָאֵ֖ל לֵאמֹ֑ר שָׁבַ֕רְתִּי אֶת־עֹ֖ל מֶ֥לֶךְ בָּבֶֽל׃

2 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், பாபிலோன் ராஜாவின் நுகத்தை முறித்தேன்.
2 “This is what the LORD of Hosts, the God of Israel, says: ‘I have broken the yoke of the king of Babylon.
2 ❮2-3❯"இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; 'பாபிலோனிய மன்னனது நுகத்தை நான் முறித்தெறிந்துவிட்டேன். பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் இவ்விடத்தினின்று கவர்ந்து, பாபிலோனுக்கு எடுத்துச் சென்றுள்ள ஆண்டவரது இல்லத்தின் கலங்கள் எல்லாவற்றையும் இரண்டே ஆண்டுக் காலத்திற்குள் இவ்விடத்திற்குத் திரும்பக் கொண்டுவருவேன்.

3בְּע֣וֹד ׀ שְׁנָתַ֣יִם יָמִ֗ים אֲנִ֤י מֵשִׁיב֙ אֶל־הַמָּק֣וֹם הַזֶּ֔ה אֶֽת־כָּל־כְּלֵ֖י בֵּ֣ית יְהוָ֑ה אֲשֶׁ֨ר לָקַ֜ח נְבוּכַדנֶאצַּ֤ר מֶֽלֶךְ־בָּבֶל֙ מִן־הַמָּק֣וֹם הַזֶּ֔ה וַיְבִיאֵ֖ם בָּבֶֽל׃

3 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இவ்விடத்திலிருந்து எடுத்துப் பாபிலோனுக்குக் கொண்டுபோன கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையெல்லாம் நான் இரண்டு வருஷகாலத்திலே இவ்விடத்துக்குத் திரும்பக்கொண்டுவரப்பண்ணுவேன்.
3 Within two years I will restore to this place all the articles of the house of the LORD that Nebuchadnezzar king of Babylon removed from here and carried to Babylon.

4וְאֶת־יְכָנְיָ֣ה בֶן־יְהוֹיָקִ֣ים מֶֽלֶךְ־יְ֠הוּדָה וְאֶת־כָּל־גָּל֨וּת יְהוּדָ֜ה הַבָּאִ֣ים בָּבֶ֗לָה אֲנִ֥י מֵשִׁ֛יב אֶל־הַמָּק֥וֹם הַזֶּ֖ה נְאֻם־יְהוָ֑ה כִּ֣י אֶשְׁבֹּ֔ר אֶת־עֹ֖ל מֶ֥לֶךְ בָּבֶֽל׃

4 யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்கிற யூதாவுடைய ராஜாவையும் பாபிலோனுக்குச் சிறையாகக் கொண்டுபோகப்பட்ட யூதர் அனைவரையும் நான் இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணுவேன்; பாபிலோன் ராஜாவின் நுகத்தை உடைப்பேன் என்றார் என்று சொன்னான்.
4 And I will restore to this place Jeconiaha son of Jehoiakim king of Judah, along with all the exiles from Judah who went to Babylon,’ declares the LORD, ‘for I will break the yoke of the king of Babylon.’”
4 அத்தோடு யோயாக்கிமின் மகனும் யூதாவின் அரசனுமான எக்கோனியாவையும் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்ட யூதா மக்கள் அனைவரையும் இவ்விடத்திற்கு நான் திரும்பக் கொண்டு வருவேன். ஏனெனில், பாபிலோனிய மன்னனது நுகத்தை நான் முறித்தெறிவேன்', என்கிறார் ஆண்டவர்".

5וַיֹּ֙אמֶר֙ יִרְמְיָ֣ה הַנָּבִ֔יא אֶל־חֲנַנְיָ֖ה הַנָּבִ֑יא לְעֵינֵ֤י הַכֹּֽהֲנִים֙ וּלְעֵינֵ֣י כָל־הָעָ֔ם הָעֹמְדִ֖ים בְּבֵ֥ית יְהוָֽה׃

5 அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி ஆசாரியர்கள் பார்த்திருக்கவும், கர்த்தருடைய ஆலயத்தில் நின்றிருந்த ஜனங்களெல்லாரும் பார்த்திருக்கவும் அனனியா தீர்க்கதரிசியை நோக்கி:
5 Then the prophet Jeremiah replied to the prophet Hananiah in the presence of the priests and all the people who were standing in the house of the LORD.
5 அப்பொழுது ஆண்டவரின் இல்லத்தில் நின்று கொண்டிருந்த குருக்கள், மக்கள் அனைவர் முன்னிலையிலும், இறைவாக்கினர் எரேமியா இறைவாக்கினன் அனனியாவிடம் பேசினார்.

6וַיֹּ֙אמֶר֙ יִרְמְיָ֣ה הַנָּבִ֔יא אָמֵ֕ן כֵּ֖ן יַעֲשֶׂ֣ה יְהוָ֑ה יָקֵ֤ם יְהוָה֙ אֶת־דְּבָרֶ֔יךָ אֲשֶׁ֣ר נִבֵּ֗אתָ לְהָשִׁ֞יב כְּלֵ֤י בֵית־יְהוָה֙ וְכָל־הַגּוֹלָ֔ה מִבָּבֶ֖ל אֶל־הַמָּק֥וֹם הַזֶּֽה׃

6 ஆமென், கர்த்தர் அப்படியே செய்வாராக; கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையும் சிறைப்பட்டுப்போன அனைவரையும் பாபிலோனிலிருந்து திரும்பிவரப்பண்ணுவார் என்று நீ தீர்க்கதரிசனமாகச் சொன்ன உன் வார்த்தைகளைக் கர்த்தர் நிறைவேற்றுவாராக.
6 “Amen!” Jeremiah said. “May the LORD do so! May the LORD fulfill the words you have prophesied, and may He restore the articles of His house and all the exiles back to this place from Babylon.
6 இறைவாக்கினர் எரேமியா அவனை நோக்கி, "ஆமென்! ஆண்டவர் அவ்வாறே செய்வாராக! நீர் உரைத்த சொற்களை ஆண்டவர் நிறைவேற்றுவாராக! ஆண்டவர் இல்லத்தின் கலங்களையும் நாடுகடத்தப்பட்டோர் அனைவரையும் பாபிலோனிலிருந்து இவ்விடத்திற்குத் திரும்பக் கொண்டுவருவாராக!

7אַךְ־שְׁמַֽע־נָא֙ הַדָּבָ֣ר הַזֶּ֔ה אֲשֶׁ֥ר אָנֹכִ֖י דֹּבֵ֣ר בְּאָזְנֶ֑יךָ וּבְאָזְנֵ֖י כָּל־הָעָֽם׃

7 ஆகிலும், உன் செவிகளும் சகல ஜனத்தின் செவிகளும் கேட்க நான் சொல்லும் வார்த்தையைக் கேள்.
7 Nevertheless, listen now to this message I am speaking in your hearing and in the hearing of all the people.
7 ஆயினும் உம்செவிகளிலும் மக்கள் அனைவரின் செவிகளிலும் விழும்படி நான் உரைக்கும் இச்சொல்லைக் கவனித்துக் கேளும்.

8הַנְּבִיאִ֗ים אֲשֶׁ֨ר הָי֧וּ לְפָנַ֛י וּלְפָנֶ֖יךָ מִן־הָֽעוֹלָ֑ם וַיִּנָּ֨בְא֜וּ אֶל־אֲרָצ֤וֹת רַבּוֹת֙ וְעַל־מַמְלָכ֣וֹת גְּדֹל֔וֹת לְמִלְחָמָ֖ה וּלְרָעָ֥ה וּלְדָֽבֶר׃

8 பூர்வகாலமுதல் எனக்கு முன்னும் உனக்கு முன்னும் இருந்த தீர்க்கதரிசிகள் அநேகம் தேசங்களுக்கு விரோதமாகவும், பெரிய ராஜ்யங்களுக்கு விரோதமாகவும் யுத்தத்தையும் பஞ்சத்தையும் கொள்ளைநோயையும் குறித்துத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
8 The prophets of old who preceded you and me prophesied war, disaster, and plague against many lands and great kingdoms.
8 உமக்கும் எனக்கும் முன்பே பண்டைய நாள்களில் வாழ்ந்த இறைவாக்கினர், பல நாடுகள், பேரரசுகளுக்கு எதிராகப் போர், துன்பம், கொள்ளைநோய் ஆகியவைப்பற்றி இறைவாக்கு உரைத்திருக்கின்றனர்.

9הַנָּבִ֕יא אֲשֶׁ֥ר יִנָּבֵ֖א לְשָׁל֑וֹם בְּבֹא֙ דְּבַ֣ר הַנָּבִ֗יא יִוָּדַע֙ הַנָּבִ֔יא אֲשֶׁר־שְׁלָח֥וֹ יְהוָ֖ה בֶּאֱמֶֽת׃

9 சமாதானம் வரும் என்று தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் சொல்லியிருக்க, அந்தத் தீர்க்கதரிசி சொன்ன வார்த்தையின்படியே வந்தால், அப்பொழுது அவன் கர்த்தர் மெய்யாய் அனுப்பின தீர்க்கதரிசியாக விளங்குவானென்று எரேமியா தீர்க்கதரிசி சொன்னான்.
9 As for the prophet who prophesies peace, only if the word of the prophet comes true will the prophet be recognized as one the LORD has truly sent.”
9 நல்வாழ்வை முன்னறிவிக்கும் இறைவாக்கினரைப் பொறுத்தவரை, அவரது வாக்கு நிறைவேறும் பொழுதுதான், ஆண்டவர் அவரை உண்மையாகவே அனுப்பியுள்ளார் என்பது தெரியவரும்" என்றார்.

10וַיִּקַּ֞ח חֲנַנְיָ֤ה הַנָּבִיא֙ אֶת־הַמּוֹטָ֔ה מֵעַ֕ל צַוַּ֖אר יִרְמְיָ֣ה הַנָּבִ֑יא וַֽיִּשְׁבְּרֵֽהוּ׃

10 அப்பொழுது அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து அதை உடைத்துப்போட்டான்.
10 Then the prophet Hananiah took the yoke off the neck of Jeremiah the prophet and broke it.
10 அதைக் கேட்ட இறைவாக்கினன் அனனியா இறைவாக்கினர் எரேமியாவின் கழுத்திலிருந்து நுகத்தைப் பிடுங்கி முறித்தெறிந்தான்.

11וַיֹּ֣אמֶר חֲנַנְיָה֩ לְעֵינֵ֨י כָל־הָעָ֜ם לֵאמֹ֗ר כֹּה֮ אָמַ֣ר יְהוָה֒ כָּ֣כָה אֶשְׁבֹּ֞ר אֶת־עֹ֣ל ׀ נְבֻֽכַדְנֶאצַּ֣ר מֶֽלֶךְ־בָּבֶ֗ל בְּעוֹד֙ שְׁנָתַ֣יִם יָמִ֔ים מֵעַ֕ל צַוַּ֖אר כָּל־הַגּוֹיִ֑ם וַיֵּ֛לֶךְ יִרְמְיָ֥ה הַנָּבִ֖יא לְדַרְכּֽוֹ׃

11 பின்பு அனனியா சகல ஜனங்களுக்கு முன்பாகவும்: இந்தப்பிரகாரமாக இரண்டு வருஷகாலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய நுகத்தைச் சகல ஜாதிகளின் கழுத்திலுமிருந்து விலக உடைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி தன் வழியேபோனான்.
11 And in the presence of all the people Hananiah proclaimed, “This is what the LORD says: ‘In this way, within two years I will break the yoke of Nebuchadnezzar king of Babylon off the neck of all the nations.’” At this, Jeremiah the prophet went on his way.
11 மேலும், அனனியா எல்லா மக்கள் முன்னிலையிலும், "ஆண்டவர் கூறுவது இதுவே: இவ்வாறே பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் நுகத்தை இன்னும் இரண்டே ஆண்டுகளில் மக்களினத்தார் அனைவருடைய கழுத்தினின்றும் பிடுங்கி முறித்தெறிவேன்" என்றான். உடனே இறைவாக்கினர் எரேமியா அவ்விடம் விட்டு அகன்றார்.

12וַיְהִ֥י דְבַר־יְהוָ֖ה אֶֽל־יִרְמְיָ֑ה אַ֠חֲרֵי שְׁב֞וֹר חֲנַנְיָ֤ה הַנָּבִיא֙ אֶת־הַמּוֹטָ֔ה מֵעַ֗ל צַוַּ֛אר יִרְמְיָ֥ה הַנָּבִ֖יא לֵאמֹֽר׃

12 அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை உடைத்துப்போட்டபிற்பாடு, கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:
12 But shortly after Hananiah the prophet had broken the yoke off his neck, the word of the LORD came to Jeremiah:
12 இறைவாக்கினன் அனனியா இறைவாக்கினர் எரேமியாவின் கழுத்திலிருந்த நுகத்தை முறித்தெறிந்த சில நாள்களுக்குப் பின்னர், ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது;

13הָלוֹךְ֩ וְאָמַרְתָּ֨ אֶל־חֲנַנְיָ֜ה לֵאמֹ֗ר כֹּ֚ה אָמַ֣ר יְהוָ֔ה מוֹטֹ֥ת עֵ֖ץ שָׁבָ֑רְתָּ וְעָשִׂ֥יתָ תַחְתֵּיהֶ֖ן מֹט֥וֹת בַּרְזֶֽל׃

13 நீ போய், அனனியாவை நோக்கி: நீ மர நுகத்தை உடைத்தாய்; அதற்குப்பதிலாக இருப்பு நுகத்தை உண்டுபண்ணு என்று கர்த்தர் சொன்னார்.
13 “Go and tell Hananiah that this is what the LORD says: ‘You have broken a yoke of wood, but in its place you have fashioned a yoke of iron.’
13 "நீ யோய் அனனியாவிடம் சொல்; ஆண்டவர் கூறுவது இதுவே: நீ மர நுகத்தை முறித்தெறிந்தாய்; அதற்குப் பதிலாக இரும்பு நுகத்தைச் செய்து கொள்வாய்.

14כִּ֣י כֹֽה־אָמַר֩ יְהוָ֨ה צְבָא֜וֹת אֱלֹהֵ֣י יִשְׂרָאֵ֗ל עֹ֣ל בַּרְזֶ֡ל נָתַ֜תִּי עַל־צַוַּ֣אר ׀ כָּל־הַגּוֹיִ֣ם הָאֵ֗לֶּה לַעֲבֹ֛ד אֶת־נְבֻכַדְנֶאצַּ֥ר מֶֽלֶךְ־בָּבֶ֖ל וַעֲבָדֻ֑הוּ וְגַ֛ם אֶת־חַיַּ֥ת הַשָּׂדֶ֖ה נָתַ֥תִּי לֽוֹ׃

14 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைச் சேவிக்கும்படிக்கு இருப்பு நுகத்தை இந்த எல்லா ஜாதிகளுடைய கழுத்தின்மேலும் போட்டேன்; அவர்கள் அவனைச் சேவிப்பார்கள். வெளியின் மிருகஜீவன்களையும் அவனுக்கு ஒப்புக்கொடுத்தேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
14 For this is what the LORD of Hosts, the God of Israel, says: ‘I have put a yoke of iron on the neck of all these nations to make them serve Nebuchadnezzar king of Babylon, and they will serve him. I have even given him control of the beasts of the field.’”
14 ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுகிறார்; இந்த மக்களினத்தார் அனைவரின் கழுத்தில் இரும்பு நுகத்தை வைத்துள்ளேன். ஆதலால் அவர்கள் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசருக்கு அடிபணிந்து பணிவிடை செய்வார்கள். காட்டு விலங்குகளையும் அவனிடம் ஒப்புவித்திருக்கிறேன்."

15וַיֹּ֨אמֶר יִרְמְיָ֧ה הַנָּבִ֛יא אֶל־חֲנַנְיָ֥ה הַנָּבִ֖יא שְׁמַֽע־נָ֣א חֲנַנְיָ֑ה לֹֽא־שְׁלָחֲךָ֣ יְהוָ֔ה וְאַתָּ֗ה הִבְטַ֛חְתָּ אֶת־הָעָ֥ם הַזֶּ֖ה עַל־שָֽׁקֶר׃

15 பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா என்கிற தீர்க்கதரிசியை நோக்கி: இப்போதும் அனனியாவே, கேள், கர்த்தர் உன்னை அனுப்பினதில்லை; நீயோ இந்த ஜனத்தைப் பொய்யை நம்பும்படிச் செய்தாய்.
15 Then the prophet Jeremiah said to the prophet Hananiah, “Listen, Hananiah! The LORD did not send you, but you have persuaded this people to trust in a lie.
15 அப்பொழுது இறைவாக்கினர் எரேமியா இறைவாக்கினன் அனனியாவிடம் கூறியது: "அனனியாவே, கூர்ந்து கேள்: ஆண்டவர் உன்னை அனுப்பவில்லை. அப்படியிருந்தும் இம்மக்கள் பொய்யை நம்பும்படி நீ செய்துவிட்டாய்.

16לָכֵ֗ן כֹּ֚ה אָמַ֣ר יְהוָ֔ה הִנְנִי֙ מְשַֽׁלֵּֽחֲךָ֔ מֵעַ֖ל פְּנֵ֣י הָאֲדָמָ֑ה הַשָּׁנָה֙ אַתָּ֣ה מֵ֔ת כִּֽי־סָרָ֥ה דִבַּ֖רְתָּ אֶל־יְהוָֽה׃

16 ஆகையால், இதோ, உன்னைப் பூமியின்மேல் இராதபடிக்கு அகற்றிவிடுவேன்; இந்த வருஷத்திலே நீ சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம் உண்டாகப் பேசினாயே என்றான்.
16 Therefore this is what the LORD says: ‘I am about to remove you from the face of the earth. You will die this year because you have preached rebellion against the LORD.’”
16 எனவே, ஆண்டவர் கூறுகிறார்: இதோ! நான் இவ்வுலகினின்றே உன்னை அனுப்பி வைக்கப்போகிறேன். ஆண்டவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்யுமாறு நீ போதித்ததால், இந்த ஆண்டிலேயே நீ சாவாய்!"

17וַיָּ֛מָת חֲנַנְיָ֥ה הַנָּבִ֖יא בַּשָּׁנָ֣ה הַהִ֑יא בַּחֹ֖דֶשׁ הַשְּׁבִיעִֽי׃

17 அப்படியே அனனியா என்கிற தீர்க்கதரிசி அவ்வருஷத்திலேதானே ஏழாம் மாதத்தில் செத்துப்போனான்.
17 And in the seventh month of that very year, the prophet Hananiah died.
17 அவ்வாறே அதே ஆண்டு ஏழாம் மாதத்தில் இறைவாக்கினன் அனனியா மாண்டான்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Jeremiah Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42   43   44   45   46   47   48   49   50   51   52

Footnotes:
Jeconiah  is a variant of Jehoiachin ; see 2 Kings 24:12

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.