பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Jeremiah எரேமியா יִרְמְיָהוּ
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
எரேமியா 25 | Jeremiah 25
Seventy Years of Captivity
1 யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் நாலாம் வருஷத்துக்கு சரியான, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அரசாண்ட முதலாம் வருஷத்திலே யூதாவின் ஜனம் அனைத்தையும் குறித்து எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:
1 This is the word that came to Jeremiah concerning all the people of Judah in the fourth year of Jehoiakim son of Josiah king of Judah, which was the first year of Nebuchadnezzar king of Babylon.
1 யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில், அதாவது பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் ஆட்சியேற்ற முதல் ஆண்டில், யூதா மக்கள் அனைவரையும் குறித்து எரேமியாவுக்கு வாக்கு அருளப்பட்டது.1
2 அதைத் தீர்க்கதரிசியாகிய எரேமியா யூதாவின் ஜனம் அனைத்துக்கும், எருசலேமின் குடிகள் எல்லாருக்கும் அறிவிக்கிறதற்காக அவர்களை நோக்கி:
2 So the prophet Jeremiah spoke to all the people of Judah and all the residents of Jerusalem as follows:
2 அதனை இறைவாக்கினரான எரேமியா யூதாவின் அனைத்து மக்களுக்கும், எருசலேமில் குடியிருப்போர் யாவருக்கும் எடுத்துரைத்தார்;
3 ஆமோனின் குமாரனாகிய யோசியாவின் பதின்மூன்றாம் வருஷம்துவக்கி இந்நாள்மட்டும் சென்ற இந்த இருபத்துமூன்று வருஷமாகக் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாயிற்று; அதை நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிக்கொண்டுவந்தும் நீங்கள் கேளாமற்போனீர்கள்.
3 “From the thirteenth year of Josiah son of Amon king of Judah until this very day—twenty-three years—the word of the LORD has come to me, and I have spoken to you again and again,a but you have not listened.
3 ஆமோனின் மகனும் யூதாவின் அரசனுமான யோசியா ஆட்சியேற்ற பதின்மூன்றாம் ஆண்டிலிருந்து இன்றுவரை, அதாவது கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளாக, ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டு வந்துள்ளது. நானும் அதை உங்களிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளேன். நீங்களோ அதற்குச் செவிகொடுக்கவில்லை.
4 கர்த்தர் உங்களிடத்திற்குத் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய சகல ஊழிக்காரரையும் ஏற்கனவே அனுப்பிக்கொண்டே இருந்தும், நீங்கள் கேளாமலும், கேட்கும்படிக்கு நீங்கள் செவிகளைச் சாயாமலும் போனீர்கள்.
4 And the LORD has sent all His servants the prophets to you again and again, but you have not listened or inclined your ear to hear.
4 ஆண்டவர்தம் ஊழியர்களான இறைவாக்கினர் எல்லாரையும் தொடர்ந்து அனுப்பியுள்ளார். நீங்களோ காது கொடுத்துக் கேட்கவில்லை; கவனிக்கவுமில்லை.
5 அவர்களைக்கொண்டு அவர்: உங்களில் அவனவன் தன்தன் பொல்லாத வழியையும் உங்கள் கிரியைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திரும்பி, கர்த்தர் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் கொடுத்த தேசத்தில் சதாகாலமும் குடியிருந்து,
5 The prophets told you, ‘Turn now, each of you, from your evil ways and deeds, and you can dwell in the land that the LORD has given to you and your fathers forever and ever.
5 அவரது செய்தி இதுவே; "நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர்தம் தீய வழிகளையும் தீச்செயல்களையும் விட்டு விலகுங்கள். அப்போது ஆண்டவர் உங்களுக்கும் உங்கள் மூதாதையருக்கும் எக்காலத்திற்குமெனக் கொடுத்துள்ள நாட்டில் வாழ்வீர்கள்.
6 அந்நிய தேவர்களைப் பின்பற்றாமலும், அவைகளுக்கு ஆராதனைசெய்யாமலும், அவைகளைப் பணியாமலுமிருந்து, நான் உங்களுக்குத் தீமைசெய்யாதபடிக்கு உங்கள் கைகளின் செய்கைகளால் எனக்குக் கோபமுண்டாக்காமலும் இருங்கள் என்று சொல்லியனுப்பினேன்.
6 Do not follow other gods to serve and worship them, and do not provoke Me to anger with the works of your hands. Then I will do you no harm.’
6 வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றுக்கு ஊழியம் செய்து வழிபடாமலும், உங்கள் கைவேலைப்பாடுகளால் எனக்குச் சினமூட்டாமலும் இருந்தால், நான் உங்களுக்குத் தீங்கிழைக்க மாட்டேன்.
7 நீங்களோ, உங்களுக்குத் தீமையாக உங்கள் கைகளின் செய்கைகளாலே எனக்குக் கோபமூட்டும்படிக்கு, என் சொல்லைக் கேளாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
7 ‘But to your own harm, you have not listened to Me,’ declares the LORD, ‘so you have provoked Me to anger with the works of your hands.’
7 நீங்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை," என்கிறார் ஆண்டவர். உங்கள் கை வேலைப்பாடுகளால் உங்களுக்கே தீங்கிழைக்கும் வகையில் எனக்குச் சினமூட்டினீர்கள்.
8 நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியினால்,
8 Therefore this is what the LORD of Hosts says: ‘Because you have not obeyed My words,
8 ஆகவே படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; நீங்கள் என் சொற்களுக்குக் கீழ்ப்படியால் இருந்தீர்கள்.
9 இதோ, நான் வடக்கேயிருக்கிற சகல வம்சங்களையும், என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவையும் அழைத்தனுப்பி, அவர்களை இந்தத் தேசத்துக்கு விரோதமாகவும், இதின் குடிகளுக்கு விரோதமாகவும், சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா ஜாதிகளுக்கும் விரோதமாகவும் வரப்பண்ணி, அவைகளைச் சங்காரத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவைகளைப் பாழாகவும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல்போடுதலாகவும், நித்திய வனாந்தரங்களாகவும் செய்வேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
9 behold, I will summon all the families of the north, declares the LORD, and I will send for My servant Nebuchadnezzar king of Babylon, whom I will bring against this land, against its residents, and against all the surrounding nations. So I will devote them to destructionc and make them an object of horror and contempt, an everlasting desolation.
9 எனவே நான் வடநாட்டுக் குலங்கள் அனைத்தையும், என் ஊழியனான பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரையும் கூட்டிச் சேர்த்து, அவர்களை இந்த நாட்டுக்கும், இதன் குடிமக்களுக்கும், சுற்றியுள்ள எல்லா நாடுகளுக்கும் எதிராகக் கொண்டு வருவேன், என்கிறார் ஆண்டவர். நான் அவர்களை முற்றிலும் அழித்துவிடுவேன். அவர்கள் இகழ்ச்சிக் குறியாகக் காட்சியளிப்பார்கள்; ஏளனத்துக்கும் முடிவில்லா அழிவுக்கும் உள்ளாவார்கள்.
10 மகிழ்ச்சியின் சத்தத்தையும், சந்தோஷத்தின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்தத்தையும், ஏந்திரத்தின் சத்தத்தையும் விளக்கின் வெளிச்சத்தையும் அவர்களிலிருந்து நீங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
10 Moreover, I will banish from them the sounds of joy and gladness, the voices of the bride and bridegroom, the sound of the millstones, and the light of the lamp.
10 அவர்களிடம் மகிழ்ச்சி ஒலியும் உவகைக் குரலும் திருமண ஆரவாரமும் எழாதிருக்கச் செய்வேன்; இயந்திரக் கற்களின் ஓசையும் விளக்கின் ஒளியும் இல்லாதிருக்கச் செய்வேன்.2
2 எரே 7:34; 16:9; திவெ 18:22-23.
11 இந்தத் தேசமெல்லாம் வனாந்தரமும் பாழுமாகும்; இந்த ஜாதிகளோ, எழுபது வருஷமாகப் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பார்கள்.
11 And this whole land will become a desolate wasteland, and these nations will serve the king of Babylon for seventy years.
11 இந்நாடு முற்றிலும் அழிந்து பாழ்நிலமாகும். சுற்றியுள்ள நாடுகளும் எழுபது ஆண்டளவாய்ப் பாபிலோனிய மன்னனுக்கு அடிமையாகும்.3
3 2 குறி 3:21; எரே 29:10; தானி 9:2.
12 எழுபது வருஷம் நிறைவேறினபின்பு, நான் பாபிலோன் ராஜாவினிடத்திலும், அந்த ஜாதியினிடத்திலும், கல்தேயருடைய தேசத்தினிடத்திலும், அவர்களுடைய அக்கிரமத்தை விசாரித்து, அதை நித்தியபாழிடமாக்கி,
12 But when seventy years are complete, I will punish the king of Babylon and that nation, the land of the Chaldeans,d for their guilt, declares the LORD, and I will make it an everlasting desolation.
12 ஆனால் எழுபது ஆண்டுகள் முடிந்தபின் பாபிலோனிய மன்னனையும் அந்த நாட்டையும் தண்டிப்பேன், என்கிறார் ஆண்டவர். அவர்களது குற்றத்தின் காரணமாகக் கல்தேயரின் நாட்டை என்றென்றைக்கும் பாழ்நிலம் ஆக்குவேன்.
13 நான் அந்தத் தேசத்துக்கு விரோதமாய் உரைத்த என் வார்த்தைகளையெல்லாம், எரேமியா சகல ஜாதிகளுக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொன்னதும், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதுமான யாவையும் அதின்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
13 I will bring upon that land all the words I have pronounced against it, all that is written in this book, which Jeremiah has prophesied against all the nations.
13 நான் அந்த நாட்டுக்கு எதிராய்ப் பேசியுள்ள அனைத்துச் சொற்களும், எரேமியா வேற்று நாடுகளுக்கு எதிராய் உரைத்து இந்நூலில் எழுதப்பட்டுள்ள அனைத்து இறைவாக்குகளும் அந்நாட்டின் மேல் பலிக்கச் செய்வேன்.
14 அநேகம் ஜாதிகளும் பெரிய ராஜாக்களும் அவர்களை அடிமைகொள்வார்கள்; நான் அவர்களுக்கு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாகவும், அவர்கள் கைகளின் செய்கைகளுக்குதக்கதாகவும் பதில் அளிப்பேன் என்கிறார்.
14 For many nations and great kings will enslave them, and I will repay them according to their deeds and according to the work of their hands.’”
14 அந்நாட்டினரைக் கூடப் பல நாடுகளும் மாமன்னர்களும், அடிமையாக்குவர். அவர்களின் செயல்களுக்கும் நடத்தைக்கும் ஏற்றவாறு நான் அவர்களுக்குக் கைம்மாறு அளிப்பேன்.
The Cup of God’s Wrath
15 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்னை நோக்கி: நான் உன்னை அனுப்புகிற ஜாதிகள் குடித்து, நான் தங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தால் அவர்கள் தள்ளாடி, புத்திகெட்டுப்போகும்படிக்கு,
15 This is what the LORD, the God of Israel, said to me: “Take from My hand this cup of the wine of wrath, and make all the nations to whom I send you drink from it.
15 இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே; சீற்றத்தால் நிரம்பியுள்ள இந்த இரசக் கிண்ணத்தை என் கையிலிருந்து எடுத்து, நான் உன்னை எந்த மக்களினத்தாரிடம் அனுப்புகிறேனோ அந்த மக்களினத்தார் எல்லாம் குடிக்கக் கொடு.
16 இந்த உக்கிரமாகிய மதுபானத்தின் பாத்திரத்தை நீ என் கையிலிருந்து வாங்கி அவர்கள் எல்லாருக்கும் அதிலே குடிக்கக்கொடு என்றார்.
16 And they will drink and stagger and go out of their minds, because of the sword that I will send among them.”
16 நான் அவர்கள்மேல் அனுப்பப்போகும் வாளை முன்னிட்டு அவர்கள் குடித்துத் தள்ளாடி வெறிகொள்வார்கள்.
17 அப்பொழுது நான் அந்தப் பாத்திரத்தைக் கர்த்தருடைய கையிலிருந்து வாங்கி, கர்த்தர் என்னை அனுப்பின எல்லா ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தேன்.
17 So I took the cup from the LORD’s hand and made all the nations drink from it, each one to whom the LORD had sent me,
17 அப்போது நான் ஆண்டவரின் கையிலிருந்து அந்தக் கிண்ணத்தை எடுத்து ஆண்டவர் என்னை எந்த மக்களித்தாரிடம் அனுப்பியிருந்தாரோ அந்த மக்களினத்தார் எல்லாம் குடிக்கச் செய்தேன்.
18 எருசலேமுக்கும் யூதாவின் பட்டணங்களுக்கும் அதின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும் அவர்களை இந்நாளிலிருக்கிறபடி வனாந்தரமும் பாழும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல்போடுதலும் சாபமுமாக்கிப்போடும்படி குடிக்கக்கொடுத்தேன்.
18 to make them a ruin, an object of horror and contempt and cursing, as they are to this day—Jerusalem and the cities of Judah, its kings and officials;
18 எருசலேமும் யூதாவின் நகர்களும் அவற்றின் அரசர்களும் தலைவர்களும் அதனைக் குடிக்கச் செய்தேன். இன்று காண்பதுபோல், அவை அழிந்து பாழாகவும் ஏளத்துக்கும் சாபத்துக்கும் உள்ளாகவுமே இவ்வாறு செய்தேன்.
19 எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கும், அவன் ஊழியக்காரருக்கும் அவன் பிரபுக்களுக்கும், அவனுடைய எல்லா ஜனத்துக்கும்,
19 Pharaoh king of Egypt, his officials, his leaders, and all his people;
19 எகிப்திய மன்னன் பார்வோன், அவன் அலுவலர்கள், தலைவர்கள், மக்கள் எல்லாரும்,
20 கலந்து குடியிருக்கிற அனைவருக்கும், ஊத்ஸ் தேசத்தினுடைய எல்லா ராஜாக்களுக்கும் பெலிஸ்தருடைய தேசத்தில் இருக்கிற எல்லா ராஜாக்களுக்கும், அஸ்கலோனுக்கும் காசாவுக்கும், எக்ரோனுக்கும் அஸ்தோத்தில் மீதியானவர்களுக்கும்,
20 all the mixed tribes; all the kings of Uz; all the kings of the Philistines: Ashkelon, Gaza, Ekron, and the remnant of Ashdod;
20 அங்குள்ள வேற்றின மக்கள் அனைவரும், ஊசு நாட்டு மன்னர்கள் யாவரும், அனைத்துப் பெலிஸ்திய மன்னர்களும், அஸ்கலோன், காசா, எக்ரோன், அஸ்தோதில் எஞ்சியோர்,
21 ஏதோமுக்கும், மோவாபுக்கும், அம்மோன் புத்திரருக்கும்,
21 Edom, Moab, and the Ammonites;
21 ஏதோம், மோவாபு, அம்னோனின் புதல்வர்,
22 தீருவினுடைய எல்லா ராஜாக்களுக்கும், சீதோனுடைய எல்லா ராஜாக்களுக்கும், சமுத்திரத்துக்கு அக்கரையான தீவுகளின் ராஜாக்களுக்கும்,
22 all the kings of Tyre and Sidon; the kings of the coastlands across the sea;
22 தீர், சீதோன் மன்னர்கள் யாவரும், கடலுக்கு அப்பாலுள்ள கடற்கரை நாட்டு மன்னர்கள் எல்லாரும்,
23 தேதானுக்கும், தேமாவுக்கும், பூசுக்கும், கடையாந்தரங்களிலுள்ள அனைவருக்கும்,
23 Dedan, Tema, Buz, and all who cut the corners of their hair;
23 தெதான், தேமா, பூசு, முன்தலையை மழித்துக் கொள்ளும் எல்லாரும்,
24 அரபிதேசத்து எல்லா ராஜாக்களுக்கும், வனாந்தரத்தில் கலந்து குடியிருக்கிறவர்களுடைய எல்லா ராஜாக்களுக்கும்,
24 all the kings of Arabia, and all the kings of the mixed tribes who dwell in the desert;
24 அரேபியாவின் அனைத்து மன்னர்களும், பாலைநிலத்தில் வாழும் பல இன மக்களின் மன்னர்களும்,
25 சிம்ரியினுடைய எல்லா ராஜாக்களுக்கும், ஏலாமினுடைய எல்லா ராஜாக்களுக்கும் மேதியாவினுடைய எல்லா ராஜாக்களுக்கும்,
25 all the kings of Zimri, Elam, and Media;
25 சிம்ரியின் மன்னர்கள் யாவரும், ஏலாம் மன்னர்கள் எல்லாரும், மேதிய மன்னர்கள் அனைவரும்,
26 வடக்கேயிருக்கிற எல்லா ராஜாக்களுக்கும், சமீபமானவர்களும் தூரமானவர்களுமாகிய அவரவர்களுக்கும், பூமியின்மீதிலுள்ள சகலதேசத்து ராஜாக்களுக்கும் குடிக்கக்கொடுத்தேன்; சேசாக்கு என்கிற ராஜாவும் அவர்களுக்குப் பிற்பாடு குடிப்பான் என்றார்.
26 all the kings of the north, both near and far, one after another—all the kingdoms on the face of the earth. And after all of them, the king of Sheshache will drink it too.
26 ஒருவருக்குப் பின் ஒருவராய் அருகிலும் தொலையிலும் உள்ள வட நாட்டு மன்னர்கள் யாவரும், மண்ணுலக நாடுகளின் அரசுகள் அனைத்தும் அக்கிண்ணத்திலிருந்து குடிக்கச் செய்தேன். அவர்களுக்குப் பிறகு சேசாக்கு* மன்னனும் குடிப்பான்.4
4 - 'சேசாக்கு' என்னும் சொல் பாபிலோனைக் குறிக்கும்.
27 நீங்கள் குடித்து, வெறித்து, வாந்திபண்ணி, நான் உங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தாலே எழுந்திராதபடிக்கு விழுங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று நீ அவர்களுக்குச் சொல்லு.
27 “Then you are to tell them that this is what the LORD of Hosts, the God of Israel, says: ‘Drink, get drunk, and vomit. Fall down and never get up again, because of the sword I will send among you.’
27 இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: 'குடியுங்கள், போதையேறக் குடியுங்கள்; கக்குங்கள். நான் உங்கள்மேல் அனுப்பும் வாளால் வீழுங்கள்; எழவே மாட்டீர்கள்' என்று நீ அவர்களிடம் கூறு.
28 அவர்கள் குடிக்கிறதற்கு அந்தப் பாத்திரத்தை உன் கையில் வாங்கமாட்டோம் என்று சொல்வார்களானால், நீ அவர்களை நோக்கி: நீங்கள் குடித்துத் தீரவேண்டும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லு.
28 If they refuse to take the cup from your hand and drink it, you are to tell them that this is what the LORD of Hosts says: ‘You most certainly must drink it!
28 உன் கையிலிருந்து கிண்ணத்தை எடுத்துக் குடிக்க அவர்கள் மறுத்தால், "படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் குடித்துத்தான் ஆகவேண்டும்" என்று அவர்களிடம் கூறு.
29 இதோ, தீங்கைக் கட்டளையிட நான் என் நாமம் தரிக்கப்பட்ட நகரத்திலே துவக்கும்போது, நீங்கள் தண்டனைக்குத் தப்புவீர்களோ? நீங்கள் தப்புவதில்லை; நான் பூமியின் எல்லாக் குடிகளின்மேலும் பட்டயத்தை வரவழைக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
29 For behold, I am beginning to bring disaster on the city that bears My Name, so how could you possibly go unpunished? You will not go unpunished, for I am calling down a sword upon all the inhabitants of the earth, declares the LORD of Hosts.’
29 இதோ! என் பெயர் வழங்கும் இந்நகருக்குத் தீங்கு செய்யப் போகிறேன். நீங்கள் மட்டும் தண்டனையிலிருந்து தப்பிவிட முடியுமா? தப்பவே முடியாது. ஏனெனில், நாட்டில் வாழ்வோர் அனைவருக்கும் எதிராக வாளை வரவழைக்கப் போகிறேன், என்கிறார் படைகளின் ஆண்டவர்.
30 ஆதலால், அவர்களுக்கு விரோதமாக இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசனமாக உரைத்து, அவர்களை நோக்கி: கர்த்தர் உயரத்திலிருந்து கெர்ச்சித்து, தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து தம்முடைய சத்தத்தைக் காட்டி, தம்முடைய தாபரத்துக்கு விரோதமாய்க் கெர்ச்சிக்கவே கெர்ச்சித்து, ஆலையை மிதிக்கிறவர்கள் ஆர்ப்பரிப்பதுபோல் பூமியினுடைய எல்லாக் குடிகளுக்கும் விரோதமாக ஆர்ப்பரிப்பார் என்று சொல் என்றார்.
30 So you are to prophesy all these words against them and say to them: ‘The LORD will roar from on high; He will raise His voice from His holy habitation. He will roar loudly over His pasture; like those who tread the grapes, He will call out with a shout against all the inhabitants of the earth.
30 ஆகவே அவர்களுக்கு எதிராக இச்சொற்களை எல்லாம் இறைவாக்காக உரை: "ஆண்டவர் மேலிருந்து கர்ச்சனை செய்வார்; தமது தூய உறைவிடத்திலிருந்து குரல் எழுப்புவார்; தம் இருப்பிடத்திலிருந்து கடுமையாகக் கர்ச்சனை செய்வார்; திராட்சைப்பழம் மிதிப்போரின் ஆரவாரம்போல் பூவுலகில் வாழ்வோர் அனைவருக்கு எதிராகவும் குரல் எழுப்புவார்.
31 ஆரவாரம் பூமியின் கடையாந்தரமட்டும் போய் எட்டும்; ஜாதிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; மாம்சமான யாவரோடும் அவர் நியாயத்துக்குள் பிரவேசிப்பார்; துன்மார்க்கரைப் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பார் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
31 The tumult will resound to the ends of the earth because the LORD brings a charge against the nations. He brings judgment on all mankind and puts the wicked to the sword,’” declares the LORD.
31 அவரது கர்ச்சனை உலகின் எல்லைவரை எட்டும்; ஏனெனில், ஆண்டவர் மக்களினங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்போகிறார்; அவர் எல்லா மனிதர்க்கும் தீர்ப்பு வழங்கப்போகிறார்; தீயோரை அவர் வாளுக்கு இரையாக்குவார், என்கிறார் ஆண்டவர்."
32 இதோ, ஜாதிஜாதிக்குத் தீமைபரம்பும், பூமியின் எல்லைகளிலிருந்து மகா புசல் எழும்பும்.
32 This is what the LORD of Hosts says: “Behold! Disaster is spreading from nation to nation; a mighty storm is rising from the ends of the earth.”
32 படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ! தீமை நாட்டிலிருந்து நாட்டுக்குப் பரவுகின்றது. பூவுலகின் எல்லைகளிலிருந்து பெரும் புயலொன்று புறப்பட்டுப் போகின்றது.
33 அக்காலத்திலே பூமியின் ஒருமுனை துவக்கி பூமியின் மறுமுனைமட்டும் கர்த்தரால் கொலையுண்டவர்கள் கிடப்பார்கள்; அவர்கள் புலம்பப்படாமலும் சேர்க்கப்படாமலும் அடக்கம்பண்ணப்படாமலும் பூமியின்மேல் எருவாவார்கள்.
33 Those slain by the LORD on that day will be spread from one end of the earth to the other. They will not be mourned, gathered, or buried. They will be like dung lying on the ground.
33 அந்நாளில் ஆண்டவரால் கொல்லப்பட்டவர்கள், உலகின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை விழுந்து கிடப்பார்கள். புலம்புவாரற்று, எடுத்துச் சேர்ப்பாரற்று, புதைப்பாரற்றுத் தரையில் சாணம்போல் கிடப்பார்கள்.
The Cry of the Shepherds
34 மேய்ப்பர்களே, அலறுங்கள்; மந்தையில் பிரஸ்தாபமானவர்களே, சாம்பலில் புரண்டு கதறுங்கள்; நீங்கள் வெட்டப்படவும் சிதறடிக்கப்படவும் உங்கள் நாட்கள் நிறைவேறின; உச்சிதமான பாத்திரம்போல் விழுந்து நொறுங்குவீர்கள்.
34 Wail, you shepherds, and cry out; roll in the dust, you leaders of the flock. For the days of your slaughter have come; you will fall and be shattered like fine pottery.f
34 மேய்ப்பர்களே! ஒப்பாரி வையுங்கள்; கதறியழுங்கள். மந்தையின் தலைவர்களே! சாம்பலில் புரளுங்கள். ஏனெனில் நீங்கள் கொல்லப்படுவதற்கும் சிதறடிக்கப்படுவதற்குமான நாள்கள் நெருங்கிவிட்டன. விலையுயர்ந்த பாத்திரம் நொறுக்கப்படுவதுபோல், நீங்கள் அழிக்கப்படுவீர்கள்.
35 மேய்ப்பர்கள் ஓடிப்போகிறதற்கும், மந்தையில் பிரஸ்தாபமானவர்கள் தப்பித்துக்கொள்ளுகிறதற்கும் இடமிராது.
35 Flight will evade the shepherds, and escape will elude the leaders of the flock.
35 மேய்ப்பர்கள் ஓடி ஒளிய இயலாது. மந்தையின் தலைவர்களுக்குத் தப்ப வழியும் இராது.
36 தங்கள் மேய்ச்சலைக் கர்த்தர் பாழாக்கினதினிமித்தம் மேய்ப்பர்கள் கூப்பிடுகிறதும், மந்தையில் பிரஸ்தாபமானவர்கள் அலறுகிறதுமான சத்தமுண்டாகும்.
36 Hear the cry of the shepherds, the wailing of the leaders of the flock, for the LORD is destroying their pasture.
36 மேய்ப்பர்களின் ஆழுகுரலும் மந்தையின் தலைவர்களது ஒப்பாரியும் கேட்கின்றதே! ஏனெனில் ஆண்டவர் அவர்களின் மேய்ச்சல் நிலத்தை அழித்து விட்டார்.
37 அவர்கள் சுகித்திருந்த தாபரங்கள் கர்த்தருடைய கோபத்தின் எரிச்சலாலே சங்காரமாயின.
37 The peaceful meadows have been silenced because of the LORD’s burning anger.
37 ஆண்டவரின் கோபக்கனலால் அமைதியான பசும்புல் தரைகள் அழிந்து போயின.
38 அவர் பதிவிருந்து புறப்படும் சிங்கத்தைப்போலிருப்பார்; ஒடுக்குகிறவனுடைய உக்கிரத்தினாலும், அவனுடைய உக்கிரகோபத்தினாலும் அவர்கள் தேசம் பாழாயிற்றென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
38 He has left His den like a lion, for their land has been made a desolation by the swordg of the oppressor, and because of the fierce anger of the LORD.
38 தன் குகையில் இருந்து வெளியேறும் சிங்கத்தைப் போல் அவர் வெளியேறி விட்டார். கொடியோனின் வாளாலும் ஆண்டவரின் கோபக்கனலாலும் அவர்கள் நாடு பாழடைந்து போயிற்று.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
3 a Literally I have spoken to you, rising up early and speaking,
4 b Literally to you, rising up early and sending (them),
9 c Forms of the Hebrew cherem refer to the giving over of things or persons, either by destroying them or by giving them as an offering.
12 d That is, the Babylonians
26 e Sheshach is a code name for Babylon.
34 f Hebrew; LXX you will fall like the best of the rams
38 g Some Hebrew manuscripts and LXX (see also Jeremiah 46:16 and Jeremiah 50:16); most Hebrew manuscripts anger
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.