பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Isaiah ஏசாயா יְשַׁעְיָהוּ
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66
ஏசாயா 65 | Isaiah 65
Judgments and Promises (Romans 10:1–21)
1 என்னைக்குறித்து விசாரித்துக்கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்.
1 “I revealed Myself to those who did not ask for Me; I was found by those who did not seek Me.a To a nation that did not call My name, I said, ‘Here I am! Here I am!’
1 முன்பு என்னிடம் எதுவும் கேளாதவர்கள் என்னைத் தேடி அடைய இடமளித்தேன்; என்னை நாடாதவர்கள் என்னைக் கண்டுபிடிக்க இசைந்தேன்; என் பெயரை வழிபடாத மக்களினத்தை நோக்கி, "இதோ நான், இதோ நான்" என்றேன்.1
1 உரோ 10:20.
2 நலமல்லாத வழியிலே தங்கள் நினைவுகளின்படி நடக்கிற முரட்டாட்டமான ஜனத்தண்டைக்கு நான் முழுதும் என் கைகளை நீட்டினேன்.
2 All day long I have held out My hands to an obstinate peopleb who walk in the wrong path, who follow their own imaginations,
2 தங்கள் எண்ணங்களின்படி நடந்து பயனற்ற வழிமுறைகளைப் பின்பற்றும் கலகக்கார மக்களினத்தின் மீது நாள் முழுவதும் என் கைகளை விரித்து நீட்டினேன்.2
2 உரோ 10:21.
3 அந்த ஜனங்கள் என் சந்நிதியிலே நித்தம் எனக்குக் கோபமுண்டாக்கி, தோட்டங்களிலே பலியிட்டு, செங்கற்களின்மேல் தூபங்காட்டி,
3 to a people who continually provoke Me to My face, sacrificing in the gardens and burning incense on altars of brick,
3 அந்த மக்களினத்தார் என் கண் எதிரே இவற்றைச் செய்து இடையறாது எனக்குச் சினமூட்டுகின்றனர்; தோட்டங்களில் பலியிட்டு, செங்கற்கள்மேல் தூபம் காட்டுகின்றனர்.
4 பிரேதக்குழிகளண்டையில் உட்கார்ந்து, பாழான ஸ்தலங்களில் இராத்தங்கி, பன்றியிறைச்சியைத் தின்று, தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் ஆணத்தை வைத்திருந்து:
4 sitting among the graves, spending nights in secret places, eating the meat of pigs and polluted broth from their bowls.
4 கல்லறைகளிடையே அமர்ந்து மறைவிடங்களில் இரவைக் கழிக்கின்றனர்; பன்றி இறைச்சியைத் தின்கின்றனர்; தீட்டான கறிக்குழம்பைத் தம் கலங்களில் வைத்துள்ளனர்.
5 நீ உன்மட்டிலிரு, என் சமீபத்தில் வராதே, உன்னைப்பார்க்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள்முழுதும் எரிகிற அக்கினியுமாயிருப்பார்கள்.
5 They say, ‘Keep to yourself; do not come near me, for I am holier than you!’ Such people are smoke in My nostrils, a fire that burns all day long.
5 இவ்வாறிருந்தும், "எட்டி நில், என் அருகில் வராதே, நான் உன்னைவிடத் தூய்மையானவன்" என்கின்றனர். என் சினத்தால் மூக்கிலிருந்து வெளிப்படும் புகைபோலும் நாள்முழுவதும் எரியும் நெருப்புப் போலும் இவர்கள் இருக்கின்றனர்.
6 இதோ, அது எனக்கு முன்பாக எழுதியிருக்கிறது; நான் மவுனமாயிராமல் சரிக்குச் சரிக்கட்டுவேன்.
6 Behold, it is written before Me: I will not keep silent, but I will repay; I will pay it back into their laps,
6 அவர்களுக்குரியது என்முன் எழுதப்பட்டாயிற்று; நான் அமைதியாய் இருப்பதில்லை; அவர்களுக்குத் தகுந்த கைம்மாறை அவர்கள் மடியில் அளந்து கொட்டுவேன்.
7 உங்கள் அக்கிரமங்களுக்கும் மலைகளில் தூபங்காட்டி, மேடைகளின்மேல் என்னை நிந்தித்த உங்கள் பிதாக்களுடைய அக்கிரமங்களுக்கும் தக்கதாக அவர்கள் மடியிலே சரிக்கட்டுவேன்; நான் அவர்கள் முந்தின செய்கையின் பலனை அவர்கள் மடியிலே அளப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.
7 both for your iniquities and for those of your fathers,” says the LORD. “Because they burned incense on the mountains and scorned Me on the hills, I will measure into their laps full payment for their former deeds.”
7 அவர்கள் தீச்செயலுக்கும் அவர்கள் மூதாதையர் தீச்செயலுக்கும் சேர்த்துக் கொட்டுவேன், என்கிறார் ஆண்டவர். ஏனெனில் அவர்கள் மலைமேல் தூபம் காட்டினார்கள்; குன்றுகளின்மேல் என்னைப் பற்றி இழிவாகப் பேசினார்கள்; அவர்களுடைய முன்னைய செயல்களுக்குரிய கைம்மாறை அவர்கள் மடியில் அளந்து கொட்டுவேன்.
8 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஒரு திராட்சக்குலையில் இரசம் காணப்படும்போது அதை அழிக்காதே, அதிலே ஆசீர்வாதம் உண்டென்று சொல்லுகிறபடி, நான் என் ஊழியக்காரரினிமித்தம் அனைத்தையும் அழிக்காதபடி செய்வேன்.
8 This is what the LORD says: “As the new wine is found in a cluster of grapes, and men say, ‘Do not destroy it, for it contains a blessing,’ so I will act on behalf of My servants; I will not destroy them all.
8 ஆண்டவர் கூறுவது இதுவே: திராட்சைக்குலையில் புது இரசம் கிடைக்கும்போது, 'அதை அழிக்காதே, அதில் ஆசி உள்ளது' என்பார்கள். அவ்வாறே என் ஊழியரை முன்னிட்டும் நான் செயலாற்றுவேன்; அவர்கள் அனைவரையும் அழிந்துவிட மாட்டேன்.
9 யாக்கோபிலிருந்து ஒரு வித்தையும், யூதாவிலிருந்து என் மலைகளைச் சுதந்தரிப்பவரையும் எழும்பப்பண்ணுவேன்; நான் தெரிந்துகொண்டவர்கள் அதைச் சுதந்தரித்துக்கொண்டு, என் ஊழியக்காரர் அங்கே வாசம்பண்ணுவார்கள்.
9 And I will bring forth descendants from Jacob, and heirs from Judah; My elect will possess My mountains,c and My servants will dwell there.
9 யாக்கோபினின்று வழிமரபினரையும், யூதாவினின்று என் மலைகளை உடைமையாக்குவோரையும் தோன்றச் செய்வேன். நான் தேர்ந்துகொண்டோர் நாட்டை உரிமையாக்கிக் கொள்வர்; என் ஊழியர் அங்கே வாழ்வர்.
10 என்னைத் தேடுகிற என் ஜனத்துக்குச் சாரோன் ஆட்டுத்தொழுவமாகவும், ஆகோரின் பள்ளத்தாக்கு மாட்டுக்கிடையாகவும் இருக்கும்.
10 Sharon will become a pasture for flocks, and the Valley of Achor a resting place for herds, for My people who seek Me.
10 என்னை வழிபடும் என் மக்களுக்குச் சாரோன் சமவெளி ஆடுகளுக்கு மேய்நிலமாகவும் ஆக்கோர் பள்ளத்தாக்கு மாடுகளுக்குத் தொழுவமாகவும் அமையும்.3
3 யோசு 7:24-26.
11 ஆனாலும் கர்த்தரை விட்டு, என் பரிசுத்த பர்வதத்தை மறந்து காத் என்னும் தெய்வத்துக்குப் பந்தியை ஆயத்தம்பண்ணி, மேனி என்னும் தெய்வத்துக்குப் பானபலியை நிறையவார்க்கிறவர்களே,
11 But you who forsake the LORD, who forget My holy mountain, who set a table for Fortuned and fill bowls of mixed wine for Destiny,e
11 ஆண்டவராகிய என்னைக் கைவிட்டு விட்டு, என் திருமலையை மறந்தவர்களே! கத்து* தெய்வத்திற்கு விருந்து படைத்து, மெனீ** தெய்வத்திற்கு நறுமணத்திராட்சை இரசத்தைக் கிண்ணங்களில் வார்ப்பவர்களே!45
4 எபிரேயத்தில் 'செல்வம்' என்பது பொருள்.
5 எபிரேயத்தில் 'விதி' என்பது பொருள்.
12 உங்களை நான் பட்டயத்துக்கு எண்ணிக்கொடுப்பேன்; நீங்கள் அனைவரும் கொலைசெய்யப்படக் குனிவீர்கள்; நான் கூப்பிட்டும் நீங்கள் மறுஉத்தரவு கொடுக்கவில்லை; நான் பேசியும் நீங்கள் கேட்கவில்லை; என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, எனக்குப் பிரியமல்லாததைத் தெரிந்துகொண்டீர்கள்.
12 I will destine you for the sword, and you will all kneel down to be slaughtered, because I called and you did not answer, I spoke and you did not listen; you did evil in My sight and chose that in which I did not delight.”
12 உங்களை வாளுக்கு இரையெனக் குறிப்பேன்; நீங்கள் அனைவரும் கொலைக்குத் தலைதாழ்த்துவீர்கள்; ஏனெனில், நான் அழைப்பு விடுத்தேன்; நீங்கள் மறுமொழி தரவில்லை; நான் பேசினேன், நீங்கள் கவனிக்கவில்லை; என் பார்வைக்குத் தீமையெனப்பட்டதைச் செய்தீர்கள்; எனக்கு விருப்பமில்லாததைத் தேர்ந்து கொண்டீர்கள்.
13 ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள்.
13 Therefore this is what the Lord GOD says: “My servants will eat, but you will go hungry; My servants will drink, but you will go thirsty; My servants will rejoice, but you will be put to shame.
13 ஆதலால் என் தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் ஊழியர்கள் உண்பார்கள்; நீங்களோ பசியால் வாடுவீர்கள். என் வேலையாள்கள் பானம் பருகுவார்கள்; நீங்களோ தாகத்தால் தவிப்பீர்கள்; என் அடியார்கள் அக்களிப்பார்கள்; நீங்களோ அவமதிக்கப்படுவீர்கள்.
14 இதோ, என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், நீங்களோ மனநோவிலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள்.
14 My servants will shout for joy with a glad heart, but you will cry out with a heavy heart and wail with a broken spirit.
14 என் ஊழியர் உள்ளம் மகிழ்ந்து ஆர்ப்பரிப்பார்கள்; நீங்களோ நெஞ்சம் உடைந்து கூக்குரலிடுவீர்கள்; ஆவி சோர்ந்து கதறியழுவீர்கள்.
15 நான் தெரிந்துகொண்டவர்களுக்கு நீங்கள் உங்கள் நாமத்தைச் சாபவார்த்தையாகப் பின்வைத்துப்போவீர்கள்; கர்த்தராகிய ஆண்டவர் உன்னைக் கொன்றுபோட்டு, தம்முடைய ஊழியக்காரருக்கு வேறே நாமத்தைத் தரிப்பார்.
15 You will leave behind your name as a curse for My chosen ones, and the Lord GOD will slay you; but to His servants He will give another name.
15 நான் தேர்ந்தெடுத்தவர்களுக்கு உங்கள் பெயரைச் சாபப் பெயராய் விட்டுச் செல்வீர்கள்; என் தலைவராகிய ஆண்டவர் உங்களைக் கொன்றொழிப்பார்; தம் ஊழியருக்கோ புதுப்பெயர் சூட்டுவார்.
16 அதினாலே பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் சத்திய தேவனுக்குள் தன்னை ஆசீர்வதிப்பான்; பூமியிலே ஆணையிடுகிறவன் சத்திய தேவன்பேரில் ஆணையிடுவான்; முந்தின இடுக்கண்கள் மறக்கப்பட்டு, அவைகள் என் கண்களுக்கு மறந்துபோயின.
16 Whoever invokes a blessing in the land will do so by the God of truth, and whoever takes an oath in the land will swear by the God of truth. For the former troubles will be forgotten and hidden from My sight.
16 மண்ணுலகில் ஆசி பெற விழைபவன் உண்மைக் கடவுளின் பெயரால் ஆசிபெறுவான்; பூவுலகில் ஆணையிடுபவன் மெய்க் கடவுளின் பெயரால் ஆணையிடுவான்; ஏனெனில், முந்நாளைய துன்பங்கள் மறந்து போயின; அவை என் பார்வையிலிருந்து மறைந்து போயின.
A New Heaven and a New Earth (Revelation 21:1–8)
17 இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.
17 For behold, I will create new heavens and a new earth.f The former things will not be remembered, nor will they come to mind.
17 இதோ! புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்; முந்தியவை நினைத்துப் பார்க்கப்படுவதில்லை; மனத்தில் எழுதுவதுமில்லை.6
18 நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன்.
18 But be glad and rejoice forever in what I create; for I will create Jerusalem to be a joy and its people to be a delight.
18 நான் படைப்பனவற்றில் நீங்கள் என்றென்றும் மகிழ்ந்து களிகூருங்கள். இதோ நான் எருசலேமை மகிழ்ச்சிக்குரியதாகவும் அதன் மக்களைப் பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன்.
19 நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் ஜனத்தின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை.
19 I will rejoice in Jerusalem and take delight in My people. The sounds of weeping and crying will no longer be heard in her.
19 நானும் எருசலேமை முன்னிட்டு மகிழ்ச்சியடைவேன்; என் மக்களைக் குறித்துப் பூரிப்படைவேன்; இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா.7
7 திவெ 21:4.
20 அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான்; நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.
20 No longer will a nursing infant live but a few days, or an old man fail to live out his years. For the youth will die at a hundred years, and he who fails to reach a hundred will be considered accursed.
20 இனி அங்கே சில நாள்களுக்குள் இறக்கும் பச்சிளங்குழந்தையே இராது; தம் வாழ்நாளை நிறைவு செய்யாத முதியவர் இரார்; ஏனெனில், நூறாண்டு வாழ்ந்து இறப்பவனும் இளைஞனாகக் கருதப்படுவான். பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும் சாபத்திற்கு உட்பட்டிருப்பான்.
21 வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்.
21 They will build houses and dwell in them; they will plant vineyards and eat their fruit.
21 அவர்கள் வீடு கட்டி அங்குக் குடியிருப்பார்கள்; திராட்சை நட்டு அதன் கனிகளை உண்பார்கள்.
22 அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.
22 No longer will they build houses for others to inhabit, nor plant for others to eat. For as is the lifetime of a tree, so will be the days of My people, and My chosen ones will fully enjoy the work of their hands.
22 வேறொருவர் குடியிருக்க அவர்கள் கட்டுவதில்லை; மற்றொருவர் உண்ண அவர்கள் நடுவதில்லை; மரங்களின் வாழ்நாள் போன்றே என் மக்களின் வாழ்நாளும் இருக்கும்; நான் தேர்ந்து கொண்டவர்கள் தங்கள் உழைப்பின் பயனை நெடுநாள் துய்ப்பார்கள்.
23 அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை, அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.
23 They will not labor in vain or bear children doomed to disaster; for they will be a people blessed by the LORD—they and their descendants with them.
23 வீணாக அவர்கள் உழைப்பதில்லை; தங்கள் பிள்ளைகளை அழிவுக்கெனப் பெற்றெடுப்பதில்லை; ஏனெனில், அவர்கள் ஆண்டவரது ஆசியைப் பெற்றோரின் வழிமரபினர்! அவர்களின் தலைமுறையினர் அவர்களுடன் இருப்பார்கள்.
24 அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவுகொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.
24 Even before they call, I will answer, and while they are still speaking, I will hear.
24 அவர்கள் வேண்டுவதற்கு முன்னே நான் மறுமொழி தருவேன்; அவர்கள் பேசிமுடிப்பதற்கு முன்னே பதிலளிப்பேன்.
25 ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
25 The wolf and the lamb will feed together, and the lion will eat straw like the ox, but the food of the serpentg will be dust. They will neither harm nor destroy on all My holy mountain,” says the LORD.
25 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்; பாம்பு புழுதியைத் தின்னும்; என் திருமலை முழுவதிலும் தீங்கு செய்வாரும் கேடு விளைவிப்பாரும் எவருமில்லை, என்கிறார் ஆண்டவர்.8
8 எசா 11:6-9.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a Cited in Romans 10:20
2 b LXX to a disobedient and obstinate people ; cited in Romans 10:21
9 c Or and heirs to My mountains out of Judah; My elect will possess them
11 d Hebrew Gad , the Babylonian god of fortune
11 e Hebrew Meni , the Babylonian god of fate
17 f LXX a new heaven and a new earth ; see also Isaiah 66:22 and Revelation 21:1.
25 g Hebrew nachash ; translated in most cases as snake
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.