பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Genesis ஆதியாகமம் בְּרֵאשִׁית
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
ஆதியாகமம் 10 | Genesis 10
The Table of Nations (1 Chronicles 1:4–27)
1 நோவாவின் குமாரராகிய சேம் காம் யாப்பேத் என்பவர்களின் வம்ச வரலாறு: ஜலப்பிரளயத்துக்குப்பின்பு அவர்களுக்குக் குமாரர் பிறந்தார்கள்.
1 This is the account of Noah’s sons Shem, Ham, and Japheth, who also had sons after the flood.
1 நோவாவின் புதல்வர் சேம், காம், எப்பேத்து ஆகியோரின் வழிமரபினர் இவர்களே. வெள்ளப் பெருக்குக்குப்பின் அவர்களுக்குப் புதல்வர் பிறந்தனர்.
The Japhethites
2 யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
2 The sons of Japheth: Gomer, Magog, Madai, Javan, Tubal, Meshech, and Tiras.
2 எப்பேத்தின் புதல்வர்: கோமேர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மெசேக்கு, தீராசு.
3 கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
3 The sons of Gomer: Ashkenaz, Riphath, and Togarmah.
3 கோமேரின் புதல்வர்: அஸ்கனாசு, இரிபாத்து, தோகர்மா.
4 யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.
4 And the sons of Javan: Elishah, Tarshish, the Kittites, and the Rodanites.a
4 யாவானின் புதல்வர்: எலிசா, தர்சீசு, கித்திம், தோதானிம்.
5 இவர்களால் ஜாதிகளுடைய தீவுகள், அவனவன் பாஷையின்படியேயும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும், ஜாதியின்படியேயும், வேறு வேறு தேசங்களாய்ப் பகுக்கப்பட்டன.
5 From these, the maritime peoples separated into their territories, according to their languages, by clans within their nations.
5 இவர்கள் வழிவந்த கடற்கரை நாட்டினர் மொழி, குடும்ப, இனவாரியாகப் பிரிந்து தம் நாடுகளில் பரவினர்.
The Hamites
6 காமுடைய குமாரர், கூஷ் மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.
6 The sons of Ham: Cush, Mizraim, Put, and Canaan.
6 காமின் புதல்வர்; கூசு, எகிப்து, பூற்று, கானான்.
7 கூஷுடைய குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள், ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள்.
7 The sons of Cush: Seba, Havilah, Sabtah,b Raamah, and Sabteca. And the sons of Raamah: Sheba and Dedan.
7 கூசின் புதல்வர்; செபா, அவிலா, சப்தா, இராமா, சப்தக்கா. இராமாவின் புதல்வர்; சேபா, தெதான்.
8 கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.
8 Cush was the father of Nimrod, who began to be a mighty onec on the earth.
8 மேலும் கூசுக்கு நிம்ரோது பிறந்தான். இவன்தான் முதன்முதலாக உலகத்தில் பேராற்றல் கொண்டவனாக விளங்கியவன்.
9 இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்; ஆகையால் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப் போல என்னும் வழக்கச்சொல் உண்டாயிற்று.
9 He was a mighty hunter befored the LORD; so it is said, “Like Nimrod, a mighty hunter before the LORD.”
9 ஆண்டவர் திருமுன் இவன் ஆற்றல்மிக்க வேடனாக இருந்தான். இதனால் "ஆண்டவர் திருமுன் நிம்ரோதைப் போன்ற ஆற்றல்மிக்க வேடன்" என்ற வழக்கு ஏற்படலாயிற்று.
10 சிநேயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதி ஸ்தானங்கள்.
10 His kingdom began in Babylon, Erech, Accad, and Calneh, in the land of Shinar.e
10 முதன்முதலில் சினயார் நாட்டிலிருந்த பாபேல், எரேக்கு, அக்காது, கல்னே ஆகியவை அவன் ஆட்சிக்குள் வந்தன.
11 அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகோபோத் பட்டணத்தையும், காலாகையும்,
11 From that land he went forth into Assyria, where he built Nineveh, Rehoboth-Ir, Calah,
11 அந்நாட்டிலிருந்து அசீரியா நாட்டுக்குச் சென்று, அங்கே நினிவே, இரகபோத்து, ஈர், காலாகு ஆகிய நகரங்களை அமைத்தான்.
12 நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான்; இது பெரிய பட்டணம்.
12 and Resen, which is between Nineveh and the great city of Calah.
12 நினிவேக்கும் காலாகிற்கும் இடையே மிகப்பெரிய நகரமாகிய இரசேனை அவன் நிறுவினான்.
13 மிஸ்ராயீம், லூதீமையும் அனாமீமையும், லெகாபீமையும், நப்தூகீமையும்,
13 Mizraim was the father of the Ludites, the Anamites, the Lehabites, the Naphtuhites,
13 எகிப்தின் புதல்வர்; லூதிம், அனாமிம், இலகாபிம், நப்துகிம்,
14 பத்ரூசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லூகீமையும், கப்தோரீமையும் பெற்றான்.
14 the Pathrusites, the Casluhites (from whom the Philistines came), and the Caphtorites.f
14 பத்ருசிம், பெலிஸ்தியரின் மூதாதையரான கஸ்லுகிம், கப்தோரிம்.
15 கானான் தன் மூத்த மகனாகிய சீதோனையும், கேத்தையும்,
15 And Canaan was the father of Sidon his firstborn,g and of the Hittites,
15 கானானின் தலைமகன் சீதோன், ஏனைய புதல்வர்; ஏத்து,
16 எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,
16 the Jebusites, the Amorites, the Girgashites,
16 எபுசி, எமோரி, கிர்காசி,
17 ஏவியரையும், அர்கீயரையும், சீநியரையும்,
17 the Hivites, the Arkites, the Sinites,
17 இவ்வி, அற்கி, சீனி,
18 அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும், பெற்றான்; பின்பு கானானியரின் வம்சத்தார் எங்கும் பரவினார்கள்.
18 the Arvadites, the Zemarites, and the Hamathites. Later the Canaanite clans were scattered,
18 அர்வாது, செமாரி, அமாத்தி. இந்தக் கானானின் குடும்பங்கள் பின்னர் பிரிந்து பரவலாயின.
19 கானானியரின் எல்லை, சீதோன்முதல் கேரார் வழியாய்க் காசாமட்டுக்கும், அது முதல் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் வழியாய் லாசாமட்டுக்கும் இருந்தது.
19 and the borders of Canaan extended from Sidon toward Gerar as far as Gaza, and then toward Sodom, Gomorrah, Admah, and Zeboiim, as far as Lasha.
19 கானானியர் நாட்டு எல்லை சீதோனிலிருந்து தெற்கே கெரார் செல்லும் திசையில் காஸாவரையும் கிழக்கில் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் செல்லும் திசையில் இலாசா வரையும் பரவியிருந்தது.
20 இவர்கள் தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும், காமுடைய சந்ததியார்.
20 These are the sons of Ham according to their clans, languages, lands, and nations.
20 இவை காம் புதல்வரின் குடும்ப, மொழி, நாடு, இனவாரியான பிரிவுகள்.
The Semites
21 சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியார் எல்லாருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாய் இருந்தான்.
21 And sons were also born to Shem, the older brother of Japheth;h Shem was the forefather of all the sons of Eber.
21 எப்பேத்தின் மூத்த சகோதரன் சேமுக்குப் புதல்வர் பிறந்தனர். சேம் ஏபேரியரின் முதுபெருந்தந்தை.
22 சேமுடைய குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள்.
22 The sons of Shem: Elam, Asshur, Arphaxad, Lud, and Aram.
22 சேமின் ஏனைய புதல்வர்: ஏலாம், அசீரியா, அர்பகசாது, லூது, ஆராம்.
23 ஆராமுடைய குமாரர், ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ் என்பவர்கள்.
23 The sons of Aram: Uz, Hul, Gether, and Mash.i
23 ஆராமின் புதல்வர்: ஊசு, ஊல், கெத்தெர், மாசு.
24 அர்பக்சாத் சாலாவைப்பெற்றான்; சாலா எபேரைப்பெற்றான்.
24 Arphaxad was the father of Shelah,j and Shelah was the father of Eber.
24 அர்பகசாதுக்குச் செலாகு பிறந்தான். செலாகிற்கு ஏபேர் பிறந்தான்.
25 ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவனுக்குப் பேலேகு என்று பேர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பேர் யொக்தான்.
25 Two sons were born to Eber: One was named Peleg,k because in his days the earth was divided, and his brother was named Joktan.
25 ஏபேருக்கு புதல்வர் இருவர் பிறந்தனர்; ஒருவனின் பெயர் பெலேக்கு. ஏனெனில், அவன் காலத்தில்தான் உலக மக்கள் பிரிந்தனர். அவன் சகோதரனின் பெயர் யோக்தான்.
26 யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும்,
26 And Joktan was the father of Almodad, Sheleph, Hazarmaveth, Jerah,
26 யோக்தானின் புதல்வர்; அல்மோதாது, செலேபு, அட்சர்மாவேத்து, எராகு,
27 அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,
27 Hadoram, Uzal, Diklah,
27 அதோராம், ஊசால், திக்லா,
28 ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
28 Obal, Abimael, Sheba,
28 ஓபால், அபிமாவேல், சேபா,
29 ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்; இவர்கள் அனைவரும் யொக்தானுடைய குமாரர்.
29 Ophir, Havilah, and Jobab. All these were sons of Joktan.
29 ஓபீர், அவிலா, யோபாபு.
30 இவர்களுடைய குடியிருப்பு மேசா துவக்கி, கிழக்கேயுள்ள மலையாகிய செப்பாருக்குப் போகிற வழிமட்டும் இருந்தது.
30 Their territory extended from Mesha to Sephar, in the eastern hill country.
30 அவர்கள் வாழ்ந்த நாடு மேசாவிலிருந்து கிழக்கே செப்பார் செல்லும் திசையில் இருந்த மலைநாடுவரை பரவியிருந்தது.
31 இவர்களே தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும் சேமுடைய சந்ததியார்.
31 These are the sons of Shem, according to their clans, languages, lands, and nations.
31 இவை சேம் புதல்வரின் குடும்ப, மொழி, நாட்டு, இனவாரியான பிரிவுகள்.
32 தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப் பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன.
32 All these are the clans of Noah’s sons, according to their generations and nations. From these the nations of the earth spread out after the flood.
32 இவை நோவா புதல்வரின் வழிவந்த குடும்பங்களின் இனவாரியான தலைமுறைகள்.இவர்கள் வழிவந்த மக்களினங்களே வெள்ளப் பெருக்கிற்குப் பின் உலகின் எல்லா நாடுகளிலும் பரவின.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
4 a SP and some MT manuscripts (see also LXX and 1 Chronicles 1:7); most MT manuscripts Dodanites
7 b Sabtah is a variant of Sabta ; see 1 Chronicles 1:9.
8 c Or who established himself as a mighty warrior or who became the first fearless leader
9 d Or in defiance of ; twice in this verse
10 e That is, Babylonia
14 f Some translators adjust the Hebrew word order to the Casluhites, and the Caphtorites (from whom the Philistines came) ; see also Jeremiah 47:4 and Amos 9:7.
15 g Or of the Sidonians, the foremost
21 h Or Shem, whose older brother was Japheth
23 i Hebrew; LXX and 1 Chronicles 1:17 Meshech
24 j Hebrew; LXX (see also Luke 3:35–36) And Arphaxad was the father of Cainan, and Cainan was the father of Shelah,
25 k Peleg means division .
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.