பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
2 Kings 2 இராஜாக்கள் מְלָכִים ב
2 ராஜாக்கள் 25 | 2 Kings 25
Nebuchadnezzar Besieges Jerusalem (2 Chronicles 36:15–21; Jeremiah 39:1–10)
1 அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிரே பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.
1 So in the ninth year of Zedekiah’s reign, on the tenth day of the tenth month, Nebuchadnezzar king of Babylon marched against Jerusalem with his entire army. They encamped outside the city and built a siege wall all around it.
1 செதேக்கியாவினது ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டு பத்தாம் மாதம் பத்தாம் நாளில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் தன் எல்லாப் படைகளோடு எருசலேமுக்கு எதிராக வந்து, பாளையம் இறங்கி அதைச் சுற்றிலும் முற்றுகைத் தளம் எழுப்பினான்.1
2 அப்படியே சிதேக்கியா ராஜாவின் பதினோராம் வருஷமட்டும் நகரம் முற்றிக்கை போடப்பட்டிருந்தது.
2 And the city was kept under siege until King Zedekiah’s eleventh year.
2 இவ்வாறு, அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற பதினோராம் ஆண்டுவரை, நகர் முற்றுகைக்கு உள்ளாகியிருந்தது.
3 நாலாம் மாதம் ஒன்பதாந்தேதியிலே பஞ்சம் நகரத்திலே அதிகரித்து, தேசத்தின் ஜனத்திற்கு ஆகாரம் இல்லாமற்போயிற்று; நகரத்தின் மதிலில் திறப்பு கண்டது.
3 By the ninth day of the fourth month,b the famine in the city was so severe that the people of the land had no food.
3 அவ்வாண்டு நான்காம் மாதம் ஒன்பதாம் நாள் நகரில் பஞ்சம் கடுமை ஆயிற்று. நாட்டு மக்களுக்கு உணவே கிடைக்கவில்லை.
4 அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கையில், யுத்தமனுஷர் எல்லாரும் இராத்திரிகாலத்தில் ராஜாவுடைய தோட்டத்தின் வழியாய் இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் தப்பி, அவர்களும் ராஜாவுமாய் சமனான பூமியை நோக்கி ஓடிப்போனார்கள்.
4 Then the city was breached; and though the Chaldeansc had surrounded the city, all the men of war fled by night by way of the gate between the two walls near the king’s garden. They headed toward the Arabah,d
4 அப்பொழுது, நகர் மதிலில் ஒரு திறப்பு உண்டாக்கப்பட்டது. போர்வீரர் அனைவரும் அரசர் பூங்காவின் இரு மதில்களுக்கு இடையே அமைந்த வாயில் வழியாக அராபாவை நோக்கி இரவில் ஓடினர். கல்தேயரோ நகரைச் சுற்றி முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர்.2
2 எசே 33:21.
5 கல்தேயரின் இராணுவத்தார் ராஜாவைப் பின் தொடர்ந்து எரிகோவின் சமனான பூமியில் அவனைப் பிடித்தார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவமெல்லாம் அவனை விட்டுச் சிதறிப்போயிற்று.
5 but the army of the Chaldeans pursued the king and overtook him in the plains of Jericho, and all his army was separated from him.
5 கல்தேயப் படையினர் அரசனைப் பின் தொடர்ந்து சென்று, எரிகோ சமவெளியில் அவனைப் பிடித்தனர்; அவனது படை முழுவதும் அவனை விட்டுச் சிதறி ஓடிற்று.
6 அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ரிப்லாவிலிருக்கிற பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோய், அவனை நியாயந்தீர்த்து,
6 The Chaldeans seized the king and brought him up to the king of Babylon at Riblah, where they pronounced judgment on him.
6 அவர்கள் அரசனைப் பிடித்து, இரிபலாவில் இருந்து பாபிலோனிய மன்னனிடம் கொண்டு சென்றார்கள். மன்னன் அவனுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினான்.
7 சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டி, சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப் போட்டு, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
7 And they slaughtered the sons of Zedekiah before his eyes. Then they put out his eyes, bound him with bronze shackles, and took him to Babylon.
7 பாபிலோனிய மன்னன் செதேக்கியாவின் புதல்வர்களை அவனது கண்முன்னே கொன்றான். மேலும், அவனுடைய கண்களைப் பிடுங்கியபின், விலங்கிட்டு அவனைப் பாபிலோனுக்கு இழுத்துச் சென்றான்.3
3 எசே 12:13.
The Temple Destroyed (Jeremiah 52:12–23)
8 ஐந்தாம் மாதம் ஏழாந்தேதியிலே நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் பத்தொன்பதாம் வருஷத்திலே, பாபிலோன் ராஜாவின் ஊழியக்காரனாகிய நெபுசராதான் என்னும் காவல் சேனாபதி எருசலேமுக்கு வந்து,
8 On the seventh day of the fifth month, in the nineteenth year of Nebuchadnezzar’s reign over Babylon, Nebuzaradan captain of the guard, a servant of the king of Babylon, entered Jerusalem.
8 பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் ஆட்சியேற்ற பத்தொன்பதாம் ஆண்டு ஐந்தாம் மாதம் ஏழாம் நாளன்று, அவன் பணியாளனும், மெய்க்காப்பாளர் தலைவனுமாகிய நெபுசரதான் எருசலேமிற்குள் நுழைந்தான்.
9 கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமின் சகல கட்டடங்களையும், பெரிய வீடுகள் எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்து விட்டான்.
9 He burned down the house of the LORD, the royal palace, and all the houses of Jerusalem—every significant building.
9 அவன் ஆண்டவரின் இல்லத்தையும், அரசனது அரண்மனையையும், எருசலேமில் இருந்த எல்லா வீடுகளையும் தீக்கிரையாக்கினான்; பெரிய வீடுகளை எல்லாம் தீயிட்டுப் பொசுக்கினான்.
10 காவல் சேனாபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள்.
10 And the whole army of the Chaldeans under the captain of the guard broke down the walls around Jerusalem.
10 மெய்க்காப்பாளர் தலைவனுடன் இருந்த கல்தேயரின் படையினர் எருசலேமைச் சுற்றிலும் இருந்த மதில்களைத் தகர்த்தெறிந்தனர்.
11 நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடி வந்துவிட்டவர்களையும், மற்ற ஜனக்கூட்டத்தையும், காவல் சேனாபதியாகிய நெபுசராதான் சிறைகளாகக் கொண்டு போனான்.
11 Then Nebuzaradan captain of the guard carried into exile the people who remained in the city, along with the deserters who had defected to the king of Babylon and the rest of the population.
11 மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் நகரில் எஞ்சியிருந்த மக்களையும், பாபிலோனிய மன்னனிடம் சரணடைந்திருந்தவர்களையும், விடப்பட்டிருந்த கைவினைஞரோடு சேர்ந்து நாடுகடத்தினான்.
12 தேசத்தில் ஏழையான சிலரைத் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டிருந்தான்.
12 But the captain of the guard left behind some of the poorest of the land to tend the vineyards and fields.
12 மெய்க்காப்பாளர் தலைவன் திராட்சைத் தோட்டங்களையும், வயல்களையும் கவனிக்கும் பொருட்டு நாட்டின் ஏழைகள் சிலரை அங்கேயே விட்டுவைத்தான்.
13 கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், அதிலிருந்த ஆதாரங்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலக் கடல்தொட்டியையும், கல்தேயர் உடைத்துப் போட்டு, அவைகளின் வெண்கலத்தைப் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோனார்கள்.
13 Moreover, the Chaldeans broke up the bronze pillars and stands and the bronze Sea in the house of the LORD, and they carried the bronze to Babylon.
13 ஆண்டவரின் இல்லத்தில் இருந்த வெண்கலத்தூண்களையும், தள்ளுவண்டிகளையும் வெண்கலக் கடலையும் கல்தேயர் தூள்தூளாக்கி, வெண்கலத்தைப் பாபிலோனுக்குக் கொண்டு சென்றனர்.4
14 செப்புச்சட்டிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், கத்திகளையும், தூபகலசங்களையும், ஆராதனைக்கடுத்த சகல வெண்கலப் பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டார்கள்.
14 They also took away the pots, shovels, wick trimmers, dishes, and all the articles of bronze used in the temple service.
14 சாம்பல் சட்டிகள், அள்ளு கருவிகள், அணைப்பான்கள், தூபக் கலசங்கள், திருப்பணிக்குப் பயன்பட்ட வெண்கலப் பாத்திரங்கள் ஆகிய எல்லாவற்றையும் அவர்கள் கொண்டு போனார்கள்.5
5 1 அர 7:45; 2 குறி 4:16.
15 சுத்தப் பொன்னும் சுத்த வெள்ளியுமான தூபகலசங்களையும் கலங்களையும் காவல் சேனாபதி எடுத்துக்கொண்டான்.
15 The captain of the guard also took away the censers and sprinkling bowls—anything made of pure gold or fine silver.
15 மேலும், வெள்ளியாலான நெருப்புச் சட்டிகளையும் பலிக்கிண்ணங்களையும் மெய்க்காப்பாளர் தலைவன் எடுத்துச்சென்றான்.
16 சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்துக்காகப் பண்ணுவித்த இரண்டு தூண்களும், ஒரு கடல்தொட்டியும் ஆதரங்களுமாகிய அந்தச் சகல பணிமுட்டுகளுடைய வெண்கலத்திற்கும் நிறையில்லை.
16 As for the two pillars, the Sea, and the movable stands that Solomon had made for the house of the LORD, the weight of the bronze from all these articles was beyond measure.
16 சாலமோன் ஆண்டவரின் இல்லத்திற்கென்று செய்திருந்த இரு தூண்கள், வெண்கலக்கடல், தள்ளு வண்டிகள் ஆகிய இவற்றின் வெண்கலம் நிறுத்துமாளாது.
17 ஒரு தூணின் உயரம் பதினெட்டு முழமாயிருந்தது; அதின்மேல் அதற்கு மூன்றுமுழ உயரமான வெண்கலத் தலைப்பும் உண்டாயிருந்தது; குமிழிலே சுற்றிலும் செய்யப்பட்டிருந்த பின்னலும் மாதளம்பழங்களும் எல்லாம் வெண்கலமாயிருந்தது; மற்றத் தூணும் அதின் பின்னலும் அதைப்போல் இருந்தது.
17 Each pillar was eighteen cubits tall.e The bronze capital atop one pillar was three cubits high,f with a network of bronze pomegranates all around. The second pillar, with its network, was similar.
17 முதல் தூண் உயரம் பதினெட்டு முழம். அதன் உச்சியில் மூன்று முழ உயரமுள்ள வெண்கலப் போதிகை ஒன்று இருந்தது. போதிகையைச் சுற்றிலும் வலைப் பின்னலும் மாதுளம் பழவடிவங்களும் வெண்கலத்தில் செய்யப்பட்டிருந்தன. இரண்டாம் தூணும் அவ்வாறே வலைப் பின்னல் வேலைப்பாடு கொண்டிருந்தது.
Captives Carried to Babylon (Jeremiah 52:24–30)
18 காவல் சேனாபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசல்காக்கும் மூன்று காவற்காரரையும் பிடித்தான்.
18 The captain of the guard also took away Seraiah the chief priest, Zephaniah the priest of second rank, and the three doorkeepers.
18 தலைமைக் குரு செராயாவையும், துணைக் குரு செப்பனியாவையும், காவலர் மூவரையும் மெய்க்காப்பாளர் தலைவன் சிறைப்பிடித்தான்;
19 நகரத்திலே அவன் யுத்த மனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளிலே நகரத்தில் அகப்பட்ட ஐந்துபேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைவனான இராணுவச்சம்பிரதியையும், தேசஜனத்திலே நகரத்தில் அகப்பட்ட அறுபதுபேரையும் பிடித்தான்.
19 Of those still in the city, he took a court official who had been appointed over the men of war, as well as five royal advisors. He also took the scribe of the captain of the army, who had enlisted the people of the land, and sixty men who were found in the city.
19 போர்வீரர்களின் தலைமை அதிகாரியையும், நகரில் இருந்த அரசவையோருள் ஐவரையும் படைத்தேர்வு மற்றும் பயிற்சி அலுவலரின் செயலரையும், நகருள் கண்ட பொதுமக்களுள் அறுபது பேரையும் அவன் நகரினின்று கடத்தினான்.
20 அவர்களைக் காவல் சேனாபதியாகிய நெபுசராதான் பிடித்து, ரிப்லாவில் இருக்கிற பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோனான்.
20 Nebuzaradan captain of the guard took them and brought them to the king of Babylon at Riblah.
20 மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் அவர்களைப் பிடித்து இரிபலாவில் இருந்த பாபிலோனிய மன்னனிடம் கொண்டு சென்றான்.
21 அவர்களைப் பாபிலோன் ராஜா ஆமாத் தேசத்தின் பட்டணமான ரிப்லாவிலே வெட்டிக் கொன்றுபோட்டான்; இப்படியே யூதா ஜனங்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறையிருப்புக்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.
21 There at Riblah in the land of Hamath, the king of Babylon struck them down and put them to death. So Judah was taken into exile, away from its own land.
21 பாபிலோனிய மன்னன் ஆமாத்து நாட்டின் இரிபலாவில் இவர்களை வதைத்துக் கொன்றான். இவ்வாறு, யூதா மக்கள் தங்கள் சொந்த நாட்டினின்று கடத்தப்பட்டார்கள்.
Gedaliah Governs in Judah (Jeremiah 40:1–16)
22 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யூதேயாதேசத்தில் மீதியாக வைத்த ஜனத்தின்மேல், சாப்பானின் குமாரனாகிய அகீக்காமின் மகன் கெதலியாவை அதிகாரியாக வைத்தான்.
22 Nebuchadnezzar king of Babylon appointed Gedaliah son of Ahikam, the son of Shaphan, over the people he had left behind in the land of Judah.
22 மேலும், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் சிறைப்பிடிக்காது யூதா நாட்டில் விட்டு வைத்திருந்த மக்களுக்குக் கெதலியாவை ஆளுநனாக நியமித்தான். இவன் சாப்பாவின் மகன் அகீக்காமின் புதல்வன்.
23 பாபிலோன் ராஜா கெதலியாவை அதிகாரியாக வைத்ததை, சகல இராணுவச் சேர்வைக்காரரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது, அவர்கள் மிஸ்பாவில் இருக்கிற கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; அவர்கள் யாரெனில், நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேலும், கரேயாவின் குமாரன் யோகனானும், நெத்தோப்பாத்தியனாகிய தன்கூமேத்தின் குமாரன் செராயாவும், மாகாத்தியனான ஒருவனுடைய குமாரன் யசனியாவும் அவர்கள் மனுஷருமே.
23 When all the commanders of the armies and their men heard that the king of Babylon had appointed Gedaliah as governor, they came to Gedaliah at Mizpah—Ishmael son of Nethaniah, Johanan son of Kareah, Seraiah son of Tanhumeth the Netophathite, and Jaazaniahg son of the Maacathite, as well as their men.
23 பாபிலோனிய மன்னன் கெதலியாவை ஆளுநனாக நியமித்த செய்தியைப் படைத்தலைவர்களும் அவர்களோடு இருந்த வீரர்களும் கேள்விப்பட்டனர். எனவே, நெத்தனியா மகன் இஸ்மயேல், காரயாகு மகன் யோகனான், நெற்றோபாவைச் சார்ந்த தன்குமத்து மகன் செராயா, மாக்காவைச் சார்ந்த யாசனியா ஆகியோர் தம் ஆள்களுடன் மிஸ்பாவிலிருந்து கெதலியாவிடம் வந்தனர்.
24 அப்பொழுது கெதலியா அவர்களுக்கும்; அவர்கள் மனுஷருக்கும் ஆணையிட்டு: நீங்கள் கல்தேயரைச் சேவிக்கப் பயப்படவேண்டாம்; தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மை உண்டாகும் என்றான்.
24 And Gedaliah took an oath before them and their men, assuring them, “Do not be afraid of the servants of the Chaldeans. Live in the land and serve the king of Babylon, and it will be well with you.”
24 கெதலியா அவர்களையும் அவர்களின் ஆள்களையும் நோக்கி, "கல்தேய அலுவலர்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம். உங்கள் நாட்டில் இருந்துகொண்டே பாபிலோனிய மன்னனுக்குப் பணிவிடை செய்யுங்கள். அது உங்களுக்கு நல்லது" என்று ஆணையிட்டுக் கூறினான்.
The Murder of Gedaliah (Jeremiah 41:1–10)
25 ஏழாம் மாதத்திலே, ராஜவம்சத்திலே பிறந்த எலிசாமாவின் குமாரனாகிய நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேல் பத்து மனுஷரோடேகூட வந்து, கெதலியாவையும், அவனோடே மிஸ்பாவிலிருந்த யூதரையும், கல்தேயரையும் வெட்டிக் கொன்றுபோட்டான்.
25 In the seventh month, however, Ishmael son of Nethaniah, the son of Elishama, who was a member of the royal family, came with ten men and struck down and killed Gedaliah, along with the Judeans and Chaldeans who were with him at Mizpah.
25 ஏழாம் மாதத்தில் அரச குலத்தைச் சார்ந்த எலிசாமாவின் புதல்வனான நெத்தனியா மகன் இஸ்மயேல், பத்து ஆள்களுடன் வந்து கெதலியாவையும், அவனுடன் மிஸ்பாவிலிருந்த யூதரையும், கல்தேயரையும் தாக்கிக் கொன்றான்.
26 அப்பொழுது சிறியோரும் பெரியோருமாகிய ஜனங்கள் யாவரும் சேனாபதிகளும் கல்தேருக்குப் பயந்ததினாலே எழுந்து; புறப்பட்டு எகிப்திற்குப் போனார்கள்.
26 Then all the people small and great, together with the commanders of the army, arose and fled to Egypt for fear of the Chaldeans.
26 அப்பொழுது மக்கள் யாவரும், சிறியோர் முதல் பெரியோர் வரை, கல்தேயர்களுக்கு அஞ்சித் தங்கள் படைத்தலைவர்களோடு எகிப்துக்கு ஓடிப்போனார்கள்.6
6 எரே 43:5-7.
Jehoiachin Released from Prison (Jeremiah 52:31–34)
27 யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாந்தேதியிலே, ஏவில்மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து புறப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி,
27 On the twenty-seventh day of the twelfth month of the thirty-seventh year of the exile of Judah’s King Jehoiachin, in the year Evil-merodach became king of Babylon, he releasedh King Jehoiachin of Judah from prison.
27 யூதா அரசன் யோயாக்கினுடைய அடிமைத்தனத்தின் முப்பத்தேழாம் ஆண்டு, பன்னிரண்டாம் மாதம், இருபத்தேழாம் நாளன்று, அதாவது பாபிலோனிய மன்னன் எபில்மெரொதாக்கு ஆட்சியேற்ற ஆண்டில், யூதா அரசன் யோயாக்கினைத் தலைநிமிரச் செய்து சிறையினின்று விடுவித்தான்.
28 அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய சிங்காசனத்தைத் தன்னோடே பாபிலோனிலிருந்து ராஜாக்களின் சிங்காசனங்களுக்கு உயரமாக வைத்து,
28 And he spoke kindly to Jehoiachin and set his throne above the thrones of the other kings who were with him in Babylon.
28 அவன் யோயாக்கினுடன் கனிவாய்ப் பேசிப் பாபிலோனில் தன்னோடிருந்த அரசர்களுக்கு இல்லாத சிறப்பை அவனுக்கு அளித்தான். எனவே, யோயாக்கின் தன் சிறை உடைகளைக் களைந்தெறிந்தான்.
29 அவனுடைய சிறைச்சாலை வஸ்திரங்களை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த சகல நாளும் நித்தம் தனக்கு முன்பாகப் போஜனம்பண்ணும்படி செய்தான்.
29 So Jehoiachin changed out of his prison clothes, and he dined regularly at the king’s table for the rest of his life.
29 அவன் தன் வாழ்நாள் எல்லாம் அரசனுடன் தவறாது விருந்துண்டு வந்தான்.
30 அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுடைய செலவுக்காக, ராஜாவினால் கட்டளையான அநுதினத் திட்டத்தின்படி, அநுதினமும் கொடுக்கப்பட்டுவந்தது.
30 And the king provided Jehoiachin a daily portion for the rest of his life.
30 அவனுடைய அன்றாடத் தேவைகளுக்காக அவன் வாழ்நாள் முழுவதும் மன்னனால் அவனுக்கு ஒவ்வொரு நாளும் செலவுப்படி வழங்கப்பட்டு வந்தது.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a Literally He encamped outside it and they built
3 b Probable reading (see Jeremiah 52:6); MT does not include fourth .
4 c That is, the Babylonians; also in verses 5, 6, 10, 13, 24, 25, and 26
4 d Or the Jordan Valley
17 e 18 cubits is approximately 27 feet or 8.2 meters.
17 f 3 cubits is approximately 4.5 feet or 1.4 meters.
23 g Jaazaniah is a variant of Jezaniah ; see Jeremiah 40:8.
27 h Literally lifted up the head of
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.