பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
2 Kings 2 இராஜாக்கள் מְלָכִים ב
2 ராஜாக்கள் 12 | 2 Kings 12
Joash Repairs the Temple (2 Chronicles 24:1–14)
1 யெகூவின் ஏழாம் வருஷத்தில் யோவாஸ் ராஜாவாகி, எருசலேமிலே நாற்பது வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; பெயெர்செபா ஊராளாகிய அவனுடைய தாயின் பேர் சிபியாள்.
1 In the seventh year of Jehu, Joasha became king, and he reigned in Jerusalem forty years. His mother’s name was Zibiah; she was from Beersheba.
1 ஏகூ ஆட்சியேற்ற ஏழாம் ஆண்டில் யோவாசு அரசனாகி எருசலேமில் நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். பெயேர்செபாவைச் சார்ந்த சிபியா என்பவளே அவன் தாய்.
2 ஆசாரியனாகிய யோய்தா யோவாசைப் போதகம்பண்ணின நாளெல்லாம் அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
2 And Joash did what was right in the eyes of the LORD all the days he was instructed by Jehoiada the priest.
2 யோவாசு, குரு யோயாதா அவனுக்குக் கற்றுத் தந்தபடியே, ஆண்டவரின் திருமுன் தன் வாழ்நாள் முழுவதும் நேர்மையாய் நடந்து வந்தான்.
3 மேடைகளைமாத்திரம் அகற்றவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்.
3 Nevertheless, the high places were not removed; the people continued sacrificing and burning incense there.
3 ஆயினும், தொழுகை மேடுகள் அகற்றப்படவில்லை. அத்தொழுகை மேடுகளில் மக்கள் இன்னும் பலியிட்டுக் கொண்டும் தூபம் காட்டிக்கொண்டும் வந்தனர்.
4 யோவாஸ் ஆசாரியரை நோக்கி: பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்படுகிற எல்லாப் பணங்களையும், இலக்கத்திற்குட்படுகிறவர்களின் பணத்தையும், மீட்புக்காக மதிக்கப்படுகிற ஆட்களின் பணத்தையும், கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரும்படி, அவரவர் தம்தம் மனதிலே நியமித்திருக்கும் எல்லாப் பணத்தையும்,
4 Then Joash said to the priests, “Collect all the money brought as sacred gifts into the house of the LORD—the census money, the money from vows, and the money brought voluntarily into the house of the LORD.
4 யோவாசு குருக்களை நோக்கி, "ஆண்டவரின் இல்லத்திற்குக் காணிக்கையாகச் செலுத்தப்படும் பணத்தையெல்லாம் — கணக்கெடுப்பு வரிப்பணத்தையும் ஒவ்வொருவரும் நேர்ச்சையாக அளிக்கும் பணத்தையும் ஆண்டவரின் இல்லத்திற்கு ஒவ்வொருவரும் அளிக்கும் தன்னார்வக் காணிக்கையையும் சேகரியுங்கள்.1
1 விப 30:11-16.
5 ஆசாரியர்கள் அவரவர் தங்களுக்கு அறிமுகமானவர்கள் கையில் வாங்கி கொண்டு, ஆலயத்தில் எங்கெங்கே பழுது காண்கிறதோ, அங்கேயெல்லாம் ஆலயத்தைப் பழுதுபார்க்கவேண்டும் என்றான்.
5 Let every priest receive it from his constituency, and let it be used to repair any damage found in the temple.”
5 ஒவ்வொரு குருவும் பணத்தைத் தனக்கு அறிமுகமானவர்களிடமிருந்து பெற்று கோவிலில் சிதைந்த பகுதிகளைப் பழுதுபார்க்க வேண்டும்" என்றான்.
6 ஆனாலும் ராஜாவாகிய யோவாசின் இருபத்துமூன்றாம் வருஷமட்டும் ஆசாரியர்கள் ஆலயத்தைப் பழுதுபாராதே போனபடியினால்,
6 By the twenty-third year of the reign of Joash, however, the priests had not yet repaired the damage to the temple.
6 ஆயினும், யோவாசு அரியணை ஏறிய இருபத்து மூன்றாம் ஆண்டுவரை, குருக்கள் கோவிலைப் பழுதுபார்க்கவே இல்லை.
7 ராஜாவாகிய யோவாஸ் ஆசாரியனாகிய யோய்தாவையும் மற்ற ஆசாரியர்களையும் அழைப்பித்து: நீங்கள் ஆலயத்தைப் பழுதுபாராதேபோனதென்ன? இனி நீங்கள் உங்களுக்கு அறிமுகமானவர்கள் கையிலே பணத்தை வாங்காமல், அதை ஆலயத்தைப் பழுதுப்பார்க்கிறதற்காக விட்டுவிடுங்கள் என்றான்.
7 So King Joash called Jehoiada and the other priests and said, “Why have you not repaired the damage to the temple? Now, therefore, take no more money from your constituency, but hand it over for the repair of the temple.”
7 எனவே, அரசன் யோவாசு குரு யோயாதாவையும் ஏனைய குருக்களையும் வரவழைத்து, அவர்களை நோக்கி, "நீங்கள் ஏன் கோவிலைப் பழுது பார்க்கவில்லை? உங்களுக்கு அறிமுகமானவர்களிடமிருந்து பணத்தை வாங்கி வைத்துக்கொள்ளாதீர்கள். அதைக் கோவிலைப் பழுதுபார்க்கக் கொடுத்து விடுங்கள்" என்றான்.
8 அப்பொழுது ஆசாரியர்கள் ஜனத்தின் கையிலே பணத்தை வாங்கிக்கொள்ளாமலும், ஆலயத்தைப் பழுதுபாராமலும் இருக்கிறதற்குச் சம்மதித்தார்கள்.
8 So the priests agreed that they would not receive money from the people and that they would not repair the temple themselves.
8 அவ்வாறே, குருக்கள் மக்களிடமிருந்து பணத்தை இனி பெற்றுக் கொள்வதில்லை என்றும், கோவிலைப் பழுதுபார்க்கும் பொறுப்பேற்பதில்லை என்றும் ஏற்றுக் கொண்டனர்.
9 ஆசாரியனாகிய யோய்தா ஒரு பெட்டியை எடுத்து, அதின் மூடியிலே ஒரு துவாரமிட்டு, அதைப் பலிபீடத்தண்டையிலே கர்த்தருடைய ஆலயத்தில் ஜனங்கள் உட்பிரவேசிக்கும் வலதுபக்கத்தில் வைத்தான்; வாசற்படியைக் காக்கிற ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்ட பணத்தையெல்லாம் அதிலே போட்டார்கள்.
9 Then Jehoiada the priest took a chest, bored a hole in its lid, and set it beside the altar on the right side as one enters the house of the LORD. There the priests who guarded the threshold put all the money brought into the house of the LORD.
9 குரு யோயாதா ஒரு பணப் பெட்டியை எடுத்து, அதன் மூடியில் துளையிட்டு, கோவிலின் நுழைவாயிலின் வலப்பக்கமாக பீடத்தருகே வைத்தார். வாயிலைக் காவல் செய்த குருக்கள் ஆண்டவரின் இல்லத்திற்கு வந்த பணம் அனைத்தையும் அதில் போட்டு வந்தனர்.
10 பெட்டியிலே மிகுந்த பணம் உண்டென்று அவர்கள் காணும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனும் வந்து: கர்த்தருடைய ஆலயத்திலே சேகரிக்கப்பட்ட பணத்தை எண்ணி முடிப்புக்கட்டி,
10 Whenever they saw that there was a large amount of money in the chest, the royal scribe and the high priest would go up, count the money brought into the house of the LORD, and tie it up in bags.
10 அப்பணப் பெட்டியில் அதிகப் பணம் சேர்ந்தபோது, அரசனுடைய கணக்கனும், தலைமைக் குருவும் வந்து ஆண்டவரின் இல்லத்தில் சேர்ந்த பணத்தை எண்ணிப் பைகளில் கட்டி வைத்தனர்.
11 எண்ணின பணத்தைக் கர்த்தருடைய ஆலயத்திலே விசாரிப்புக்காரர் கையிலே கொடுப்பார்கள்; அதை அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கிற தச்சருக்கும், சிற்பாசாரிகளுக்கும்,
11 Then they would put the counted money into the hands of those who supervised the work on the house of the LORD, who in turn would pay those doing the work—the carpenters, builders,
11 இவ்வாறு கணக்கிடப்பட்ட பணத்தை, ஆண்டவரின் இல்லத்தில் பணியைக் கண்காணிக்குமாறு நியமிக்கப்பட்டவர்களிடம் கொடுத்தனர். அவர்களும் ஆண்டவரின் இல்லத்தில் பணியாற்றிய தச்சர்களுக்கும், கொத்தர்களுக்கும்,
12 கொற்றருக்கும், கல்தச்சருக்கும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கத் தேவையான மரங்களையும் வெட்டின கற்களையும் கொள்ளுகிறதற்கும், ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்குச் செல்லும் எல்லாச் செலவுக்கும் கொடுப்பார்கள்.
12 masons, and stonecutters. They also purchased timber and dressed stone to repair the damage to the house of the LORD, and they paid the other expenses of the temple repairs.
12 சிற்பிகளுக்கும், கல்வெட்டுவோர்க்கும் ஊதியம் அளித்தனர். மேலும், அதிலிருந்து ஆண்டவரின் இல்லத்தைப் பழுது பார்ப்பதற்குத் தேவையான மரங்கள், பொழிந்த கற்கள் ஆகியவற்றை வாங்குவதற்கும், அக்கோவிலைச் சீர்ப்படுத்துவதற்குத் தேவையான மற்றச் செலவுகளுக்கும் பயன்படுத்தினர்.
13 கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தினாலே வெள்ளிக்கிண்ணங்களும், கீதவாத்தியங்களும், கலங்களும், எக்காளங்களும், பொற்பாத்திரங்களும், வெள்ளிப் பாத்திரங்களும் பண்ணப்படாமல்,
13 However, the money brought into the house of the LORD was not used for making silver basins, wick trimmers, sprinkling bowls, trumpets, or any articles of gold or silver for the house of the LORD.
13 ஆயினும், ஆண்டவரின் இல்லத்திற்குத் தேவையான வெள்ளிக் கோப்பைகள், அணைப்பான்கள், கிண்ணங்கள் ஆகியவற்றைச் செய்வதற்கு ஆண்டவரின் இல்லத்தில் செலுத்தப்பட்ட வெள்ளிப் பணம் பயன்படுத்தப்படவில்லை.
14 கர்த்தருடைய ஆலயத்தைப் பழுது பார்க்கும்படிக்கு வேலைசெய்கிறவர்களுக்கே அதைக் கொடுத்தார்கள்.
14 Instead, it was paid to those doing the work, and with it they repaired the house of the LORD.
14 ஏனெனில், ஆண்டவரின் இல்லத்தைப் பழுது பார்த்த வேலையாள்களுக்காக மட்டுமே அது பயன்படுத்தப்பட்டது.
15 வேலை செய்கிறவர்களுக்குக் கொடுக்கும்படிக்கு, பணத்தை வரப்பற்றிக் கொண்ட மனுஷர் கையிலே கணக்குக் கேளாதிருந்தார்கள்; அவர்கள் உண்மையாய் அதை நடப்பித்தார்கள்.
15 No accounting was required from the men who received the money to pay the workmen, because they acted with integrity.
15 வேலையாள்களுக்குக் கூலி கொடுக்குமாறு அப்பணத்தைப் பெற்றுக் கொண்டவர்களிடம் ஒரு கணக்கும் கேட்கவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் நாணயமாக நடந்துகொண்டார்கள்.2
2 2 அர 22:7.
16 குற்றப்பிராயச்சித்தப் பணமும் பாவப்பிராயச்சித்தப் பணமும் கர்த்தருடைய ஆலயத்திற்காகக் கொண்டுவரப் படவில்லை; அது ஆசாரியரைச் சேர்ந்தது.
16 The money from the guilt offerings and sin offerings was not brought into the house of the LORD; it belonged to the priests.
16 குற்ற நீக்கப்பலிக்கான பணமும் பாவம் போக்கும் பலிக்கான பணமும் ஆண்டவரின் இல்லத்திற்குக் கொண்டுவரப்படவில்லை. ஏனெனில், அவை குருக்களுக்கு உரியவை.3
3 லேவி 7:7.
The Death of Joash (2 Chronicles 24:23–27)
17 அதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் வந்து, காத்தூரின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடித்தான்; அதின்பின்பு எருசலேமுக்கு விரோதமாய்ப் போக ஆசகேல் தன் முகத்தைத் திருப்பினான்.
17 At that time Hazael king of Aram marched up and fought against Gath and captured it. Then he decided to attack Jerusalem.
17 அப்பொழுது, சிரியா மன்னன் அசாவேல் காத்து நகரோடு போரிடச் சென்று அதைக் கைப்பற்றினான். பின்பு, அசாவேல் எருசலேமைத் தாக்கும் நோக்கில் புறப்பட்டு வந்தான்.
18 அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோவாஸ், தன் பிதாக்களாகிய யோசபாத் யோராம் அகசியா என்னும் யூதாவின் ராஜாக்கள் பரிசுத்தம்பண்ணி வைத்த எல்லாவற்றையும், தான் பரிசுத்தம் பண்ணிவைத்ததையும், கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களில் அகப்பட்ட பொன் யாவையும் எடுத்து சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு அனுப்பினான்; அப்பொழுது அவன் எருசலேமை விட்டுத் திரும்பிப் போனான்.
18 So King Joash of Judah took all the sacred objects dedicated by his fathers—Jehoshaphat, Jehoram, and Ahaziah, the kings of Judah—along with his own consecrated items and all the gold found in the treasuries of the house of the LORD and the royal palace, and he sent them to Hazael king of Aram. So Hazael withdrew from Jerusalem.
18 எனவே, யூதாவின் அரசன் யோவாசு தன் முன்னோர்களாகிய யூதா அரசர்கள் யோசபாத்து, யோராம், அகசியா ஆகியோர் நேர்ந்தளித்த காணிக்கைப் பொருள்கள் அனைத்தையும், தான் நேர்ந்தளித்திருந்த காணிக்கைகளையும் ஆண்டவர் இல்லம், அரச மாளிகை இவற்றின் கருவூலங்களில் காணப்பட்ட தங்கம் அனைத்தையும் எடுத்து சிரியா மன்னன் அசாவேலுக்கு அனுப்பினான். எனவே, அசாவேல் எருசலேமை விட்டுத் திரும்பிச் சென்றான்.
19 யோவாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
19 As for the rest of the acts of Joash, along with all his accomplishments, are they not written in the Book of the Chronicles of the Kings of Judah?
19 யோவாசின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும், 'யூதா அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?
20 யோவாசின் ஊழியக்காரர் எழும்பி கட்டுப்பாடு பண்ணிக்கொண்டு, சில்லாவுக்குப் போகிற வழியிலிருக்கிற மில்லோ வீட்டிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்.
20 And the servants of Joash rose up and formed a conspiracy and killed him at Beth-millo, on the road down to Silla.
20 யோவாசின் அலுவலர் அவனுக்கு எதிராகக் கிளம்பிச் சதித் திட்டம் செய்து சில்லாவுக்கு இறங்கிச் செல்லும் வழியில் மில்லோபேத்தில் அவனைக் கொன்றனர்.
21 சிமியாதின் குமாரன், யோசகார் சோமேரின் குமாரன் யோசபாத் என்னும் அவனுடைய ஊழியக்காரர் அவனைக் கொன்றார்கள்; இறந்துபோன அவனைத் தாவீதின் நகரத்தில் அவனுடைய பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய அமத்சியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
21 His servants Jozabadb son of Shimeath and Jehozabad son of Shomerc struck him down, and he died. And they buried him with his fathers in the City of David, and his son Amaziah reigned in his place.
21 அவனைக் கொன்ற அலுவலர் சிமயாத்தின் மகன் யோசக்காரும் சோமேரின் மகன் யோசபாத்தும் ஆவர். அவன் இறந்து தாவீதின் நகரில் தன் மூதாதையருடன் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் அமட்சியா அரசன் ஆனான்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a Hebrew Jehoash , a variant of Joash (son of Ahaziah); also in verses 2, 4, 6, 7, and 18; see 2 Kings 11:2.
21 b Hebrew; LXX and Syriac Jozacar
21 c Shomer is a variant of Shimrith ; see 2 Chronicles 24:26.
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.