பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
2 Chronicles 2 நாளாகமம் דִבְרֵי הַיָמִים ב
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36
2 நாளாகமம் 2 | 2 Chronicles 2
Preparations for the Temple (1 Kings 5:1–6)
1 சாலொமோன் கர்த்தருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தையும், தன் ராஜரிகத்திற்கு ஒரு அரமனையையும் கட்ட நிர்ணயம்பண்ணி,
1 Now Solomon purposed to build a house for the Name of the LORD and a royal palace for himself.
1 சாலமோன் ஆண்டவரின் திருப்பெயருக்கென ஒரு கோவிலையும் தமக்கென ஓர் அரச மாளிகையையும் கட்டியெழுப்ப முடிவு செய்தார்.
2 சுமைசுமக்கிறதற்கு எழுபதினாயிரம்பேரையும், மலையில் மரம் வெட்டுகிறதற்கு எண்பதினாயிரம்பேரையும், இவர்கள்மேல் தலைவராக மூவாயிரத்து அறுநூறுபேரையும் எண்ணி ஏற்படுத்தினான்.
2 So he conscripted 70,000 porters, 80,000 stonecutters in the mountains, and 3,600 supervisors.
2 சுமைசுமப்பதற்கு எழுபதினாயிரம் பேரையும், மலைகளில் கருங்கற்களை வெட்டுவதற்கு எண்பதினாயிரம் பேரையும், அவர்களைக் கண்காணிக்க மூவாயிரத்து அறுநூறு பேரையும் நியமித்தார்.
3 தீருவின் ராஜாவாகிய ஈராமிடத்தில் ஆள் அனுப்பி: என் தகப்பனாகிய தாவீது தாம் வாசமாயிருக்கும் அரமனையைத் தமக்குக் கட்டும்படிக்கு, நீர் அவருக்குத் தயவுசெய்து, அவருக்குக் கேதுருமரங்களை அனுப்பினதுபோல எனக்கும் தயவுசெய்யும்.
3 Then Solomon sent word to Hirama king of Tyre: “Do for me as you did for my father David when you sent him cedars to build himself a house to live in.
3 தீரின் மன்னன் ஈராமிடம் சாலமோன் தூதனுப்பிக் கூறியது: "என் தந்தை தாவீது வாழும்படி ஒரு மாளிகை கட்ட நீர் அவருக்கு கேதுரு மரங்களை அனுப்பி வைத்தீரே! அவருக்குச் செய்ததுபோலவே எனக்கும் செய்தருளும்.
4 இதோ, என் தேவனாகிய கர்த்தருக்குமுன்பாகச் சுகந்தவர்க்கங்களின் தூபம்காட்டுகிறதற்கும், சமுகத்தப்பங்களை எப்போதும் வைக்கிறதற்கும், காலையிலும் மாலையிலும், ஓய்வுநாட்களிலும், மாதப்பிறப்புகளிலும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் பண்டிகைகளிலும், இஸ்ரவேல் நித்தியகாலமாகச் செலுத்தவேண்டியபடி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துகிறதற்கும், அவருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்டி அதை அவருக்குப் பிரதிஷ்டைபண்ணும்படி நான் எத்தனித்திருக்கிறேன்.
4 Behold, I am about to build a house for the Name of the LORD my God to dedicate to Him for burning fragrant incense before Him, for displaying the showbread continuously, and for making burnt offerings every morning and evening as well as on the Sabbaths, New Moons, and appointed feasts of the LORD our God. This is ordained for Israel forever.
4 நான் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கென ஒரு கோவில் கட்டி, அவருக்கு அர்ப்பணிக்கவிருக்கிறேன். இஸ்ரயேலரின் என்றுமுள நியமத்திற்கேற்ப ஆண்டவரது திருமுன் நறுமணத் தூபம் காட்டுவதற்காகவும், திருமுன்னிலை அப்பங்களை எந்நாளும் வைப்பதற்காகவும், காலை மாலையிலும், ஓய்வு, அமாவாசை நாள்களிலும், எம் கடவுளாகிய ஆண்டவரின் திருவிழாக்களிலும் எரிபலி செலுத்துவதற்காகவும் அதை அவரது பெயருக்கு அர்ப்பணிக்கவிருக்கிறேன்.
5 எங்கள் தேவன் எல்லா தேவர்களைப்பார்க்கிலும் பெரியவர்; ஆகையால் நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதாயிருக்கும்.
5 The house that I am building will be great, for our God is greater than all gods.
5 எம் கடவுள் எல்லாத் தெய்வங்களையும் விட மிகப் பெரியவர்! எனவே, நான் கட்டப்போகிற கோவிலும் மிகப் பெரியதாயிருக்கும்.
6 வானங்களும் வானாதிவானங்களும் அவரைக் கொள்ளக் கூடாதிருக்க, அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வல்லவன் யார்? அவர் சந்நிதியில் தூபங்காட்டுகிறதற்கேஒழிய வேறே முகாந்தரமாய் அவருக்கு ஆலயம்கட்டுகிறதற்கு நான் எம்மாத்திரம்?
6 But who is able to build a house for Him, since the heavens, even the highest heavens, cannot contain Him? Who then am I, that I should build a house for Him, except as a place to burn sacrifices before Him?
6 விண்ணும் விண்ணுலகும் அவரைக் கொள்ள இயலாதிருக்க, அவருக்கேற்ற ஒரு கோவில் கட்ட யாரால் முடியும்? அவரது திருமுன் தூபம் காட்டுவதற்கேயன்றி அவருக்கென ஒரு கோவில் எழுப்ப நான் யார்?1
1 1 அர 8:27; 2 குறி 6:18.
7 இப்போதும் என் தகப்பனாகிய தாவீது குறித்தவர்களும், என்னிடத்தில் யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிறவர்களுமாகிய நிபுணரோடு, பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் இரும்பிலும் ரத்தாம்பரநூலிலும் சிவப்புநூலிலும் இளநீலநூலிலும் வேலைசெய்ய நிபுணனும், கொத்துவேலைசெய்ய அறிந்தவனுமாகிய ஒரு மனுஷனை என்னிடத்தில் அனுப்பும்.
7 Send me, therefore, a craftsman skilled in engraving to work with gold and silver, with bronze and iron, and with purple, crimson, and blue yarn. He will work with my craftsmen in Judah and Jerusalem, whom my father David provided.
7 ஆகவே, ஒரு திறமைமிக்க கலைஞனை என்னிடம் அனுப்பும். அவன் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றிலும் ஊதா, கருஞ்சிவப்பு, நீலநூல் வேலைப்பாட்டிலும், சிற்பம் செதுக்குவதிலும் தேர்ந்தவனாக இருக்க வேண்டும். என் தந்தை தாவீதால் தேர்ந்தெடுக்க்பட்டவர்களும், என்னோடு யூதா, எருசலேமில் இருக்கிறவர்களுமான கலைஞரோடு சேர்ந்து அவன் வேலை செய்ய வேண்டும்.
8 லீபனோனிலிருந்து கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், வாசனைமரங்களையும் எனக்கு அனுப்பும்; லீபனோனின் மரங்களை வெட்ட உம்முடைய வேலைக்காரர் பழகினவர்களென்று அறிவேன்; எனக்கு மரங்களைத் திரளாக ஆயத்தப்படுத்த என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடுங்கூட இருப்பார்கள்.
8 Send me also cedar, cypress,b and algumc logs from Lebanon, for I know that your servants have skill to cut timber there. And indeed, my servants will work with yours
8 மேலும், லெபனோலிருந்து கேதுரு மரங்கள், தேவதாரு மரங்கள், வாசனை மரங்கள் ஆகியவற்றை நீர் எனக்கு அனுப்பிவையும். ஏனெனில், உம் பணியாளர் லெபனோனின் மரங்களை வெட்டுவதிலும் திறமைமிக்கவர் என நான் அறிவேன். என் பணியாளரும் அவர்களோடு சேர்ந்து உழைப்பர்.
9 நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதும் ஆச்சரியப்படத்தக்கதுமாயிருக்கும்.
9 to prepare for me timber in abundance, because the temple I am building will be great and wonderful.
9 அவர்கள் எனக்கு ஏராளமான மரங்களைத் தயார் செய்ய வேண்டும். ஏனெனில், மிகவும் பெரிய, சிறந்த கோவில் ஒன்றை நான் கட்டவிருக்கிறேன்.
10 அந்த மரங்களை வெட்டுகிற உம்முடைய வேலைக்காரருக்கு இருபதினாயிரம் மரக்கால் கோதுமை அரிசியையும், இருபதினாயிரம் மரக்கால் வாற்கோதுமையையும், இருபதினாயிரம் குடம் திராட்சரசத்தையும், இருபதினாயிரம் குடம் எண்ணெயையும் கொடுப்பேன் என்று சொல்லி அனுப்பினான்.
10 I will pay your servants, the woodcutters, 20,000 cors of ground wheat,d 20,000 cors of barley,e 20,000 baths of wine,f and 20,000 baths of olive oil.g”
10 மரங்களை வெட்டும் உம் பணியாளருக்கு நான் இருபதினாயிரம் மரக்கால் பதப்படுத்தப்பட்ட கோதுமையும், இருபதினாயிரம் மரக்கால் வாற்கோதுமையும், இருபதினாயிரம் குடம் திராட்சை இரசமும், இருபதினாயிரம் குடம் எண்ணெயும் கொடுப்பேன்."
Hiram’s Reply to Solomon (1 Kings 5:7–12)
11 அப்பொழுது தீருவின் ராஜாவாகிய ஈராம் சாலொமோனுக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தர் தம்முடைய ஜனத்தைச் சிநேகித்ததினால், உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார்.
11 Then Hiram king of Tyre wrote a letter in reply to Solomon: “Because the LORD loves His people, He has set you over them as king.”
11 அதற்கு தீரின் மன்னன் ஈராம்* சாலமோனுக்கு எழுதி அனுப்பிய மடல்: "ஆண்டவர் தம் மக்களுக்கு அன்பு காட்டுகிறார். அதனால் உம்மை அவர்களின் அரசராக நியமித்திருக்கிறார்.2
2 'ஊராம்' என்பது எபிரேய பாடம்.
12 கர்த்தருக்கு ஒரு ஆலயத்தையும், தமது ராஜரிகத்திற்கு ஒரு அரமனையையும் கட்டத்தக்க யுக்தியும் புத்தியுமுடைய ஞானமுள்ள குமாரனை, தாவீதுராஜாவுக்குக் கட்டளையிட்டவராகிய வானத்தையும் பூமியையும் உண்டாக்கின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
12 And Hiram added: “Blessed be the LORD, the God of Israel, who made the heavens and the earth! He has given King David a wise son with insight and understanding, who will build a temple for the LORD and a royal palace for himself.
12 விண்ணகம், மண்ணகம் அனைத்தையும் படைத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக! அவரே ஆண்டவராகிய தமக்கு ஒர் இல்லத்தையும் அரசராகிய உமக்கு ஓர் அரண்மனையையும் கட்டுவதற்கு விவேகமும் அறிவாற்றலுமுடைய ஞானியாம் உம்மைத் தாவீது அரசருக்கு மகனாகத் தந்தருளினார்!
13 இப்போதும் ஈராம் அபியென்னும் புத்திமானாகிய நிபுணனை அனுப்புகிறேன்.
13 So now I am sending you Huram-abi, a skillful man endowed with creativity.h
13 எனவே, அறிவும் திறமையும் படைத்த ஈராம் அபி என்பவனை நான் உம்மிடம் அனுப்புகிறேன்.
14 அவன் தாணின் குமாரத்திகளில் ஒரு ஸ்திரீயின் குமாரன்; அவன் தகப்பன் தீரு தேசத்தான்; அவன் பொன்னிலும, வெள்ளியிலும், வெண்கலத்திலும், இரும்பிலும், கற்களிலும், மரங்களிலும், இரத்தாம்பரநூலிலும் இளநீலநூலிலும் மெல்லியநூலிலும் சிவப்புநூலிலும் வேலைசெய்யவும், சகலவிதக் கொத்துவேலை செய்யவும், என்னென்ன செய்யவேண்டுமென்று அவனுக்குச் சொல்லப்படுமோ, அவைகளையெல்லாம் உம்மிடத்திலுள்ள நிபுணரோடும், உம்முடைய தகப்பனாகிய தாவீது என்னும் என் ஆண்டவனின் நிபுணரோடுங்கூட யூகித்துச் செய்யவும் அறிந்தவன்.
14 He is the son of a woman from the daughters of Dan, and his father is a man of Tyre. He is skilled in work with gold and silver, bronze and iron, stone and wood, purple, blue, and crimson yarn, and fine linen. He is experienced in every kind of engraving and can execute any design that is given him. He will work with your craftsmen and with those of my lord, your father David.
14 அவன் தாண் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மகன்; அவன் தந்தை தீர் நாட்டைச் சேர்ந்தவன். அவன் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, கருங்கல், மரம் ஆகியவற்றிலும், ஊதா நீலம் கருஞ்சிவப்பு நூல், மெல்லிய சணல் வகைகளிலும் வேலை செய்யும் திறன்மிக்கவன். எல்லாவித சித்திர சிற்ப வேலைகளையும் அறிந்தவன்; அவனது வேலைக்குத் தேவையானவற்றை எல்லாம் அவனே உய்த்துணரும் ஆற்றல் படைத்தவன்; உம் கலைஞரோடும், உம் தந்தையும் என் தலைவருமான தாவீதின் கலைஞரோடும் இணைந்து வேலை செய்யக்கூடியவன்.
15 என் ஆண்டவன் தாம் சொன்னபடி கோதுமையையும், வாற்கோதுமையையும், எண்ணெயையும், திராட்சரசத்தையும் தம்முடைய ஊழியக்காரருக்கு அனுப்புவாராக.
15 Now let my lord send to his servants the wheat, barley, olive oil, and wine he promised.
15 எனவே, என் தலைவரே, நீர் வாக்களித்தபடி கோதுமை, வாற்கோதுமை, எண்ணெய், திராட்சை இரசம் ஆகியவற்றை உம் பணியாளர்களுக்கு அனுப்பும்.
16 நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லீபனோனிலே வெட்டி, அவைகளைத் தெப்பங்களாய்க் கட்டி கடல்வழியாய் யோப்பாமட்டும் கொண்டுவருவோம்; பிற்பாடு நீர் அவைகளை எருசலேமுக்குக் கொண்டுபோகலாம் என்று எழுதி அனுப்பினான்.
16 We will cut logs from Lebanon, as many as you need, and we will float them to you as rafts by sea down to Joppa. Then you can take them up to Jerusalem.”
16 நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லெபனோனில் வெட்டி, அவற்றைத் தெப்பங்களாகக் கட்டி, கடல் வழியாக யோப்பா வரை கொண்டு வருவோம். அங்கிருந்து அவற்றை எருசலேமுக்கு நீர் கொண்டு செல்லலாம்."
17 தன் தகப்பனாகிய தாவீது இஸ்ரவேல் தேசத்திலுண்டான மறுஜாதியாரையெல்லாம் எண்ணித் தொகையிட்டதுபோல, சாலொமோனும் அவர்களை எண்ணினான்; அவர்கள் லட்சத்து ஐம்பத்துமூவாயிரத்து அறுநூறுபேராயிருந்தார்கள்.
17 Solomon numbered all the foreign men in the land of Israel following the census his father David had conducted, and there were found to be 153,600 in all.
17 பிறகு, சாலமோன் தம் தந்தை தாவீதைப்போன்று இஸ்ரயேல் நாட்டில் வாழ்ந்து வந்த அந்நியரைக் கணக்கிட்டார். அவர்கள் எண்ணிக்கை ஓர் இலட்சத்து ஐம்பத்து மூவாயிரத்து அறுநூறு.
18 இவர்களில் அவன் எழுபதினாயிரம்பேரைச் சுமைசுமக்கவும், எண்பதினாயிரம்பேரை மலையில் மரம்வெட்டவும், மூவாயிரத்து அறுநூறுபேரை ஜனத்தின்வேலையை விசாரிக்கும் தலைவராயிருக்கவும் வைத்தான்.
18 Solomon made 70,000 of them porters, 80,000 stonecutters in the mountains, and 3,600 supervisors.
18 அவர்களுள் எழுபதினாயிரம் பேரைச் சுமை சுமக்கவும், எண்பதினாயிரம் பேரை மலையில் கல் வெட்டவும், மூவாயிரத்து அறுநூறு பேரை மக்களின் வேலையை மேற்பார்வையிடவும் அவர் அமர்த்தினார்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
3 a Hebrew Huram , a variant of Hiram ; also in verses 11 and 12
8 b Or pine or juniper or fir
8 c Algum is probably a variant of almug ; see 1 Kings 10:11.
10 d 20,000 cors is approximately 124,800 bushels or 4.4 million liters (probably about 3,800 tons or 3,400 metric tons of wheat).
10 e 20,000 cors is approximately 124,800 bushels or 4.4 million liters (probably about 2,910 tons or 2,700 metric tons of barley).
10 f 20,000 baths is approximately 116,000 gallons or 440,000 liters of wine.
10 g Or 20,000 baths of oil ; that is, approximately 116,000 gallons or 440,000 liters
13 h Or understanding
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.