பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
1 Samuel 1 சாமுவேல் שְׁמוּאֵל א
1 சாமுவேல் 25 | 1 Samuel 25
The Death of Samuel
1 சாமுவேல் மரணமடைந்தான். இஸ்ரவேலர் எல்லாரும் கூடிவந்து, அவனுக்காகத் துக்கங்கொண்டாடி, ராமாவிலிருக்கிற அவனுடைய வளவிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்; தாவீது எழுந்து, பாரான் வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப் போனான்.
1 When Samuel died, all Israel gathered to mourn for him; and they buried him at his home in Ramah. Then David set out and went down to the Wilderness of Paran.a
1 சாமுவேல் இறந்தார்; இஸ்ரயேலர் எல்லாரும் ஒன்றுகூடி அவருக்காத் துக்கம் கொண்டாடினர். பின்பு, அவர்கள் அவரை இராமாவிலுள்ள அவரது இல்லத்தில் அடக்கம் செய்தனர். தாவீது புறப்பட்டுப் பாரான் பாலைநிலத்திற்குச் சென்றார்.
David, Nabal, and Abigail
2 மாகோனிலே ஒரு மனுஷன் இருந்தான்; அவனுடைய தொழில்துறை கர்மேலில் இருந்தது; அந்த மனுஷன் மகா பாரிக் குடித்தனக்காரனாயிருந்தான்; அவனுக்கு மூவாயிரம் ஆடும், ஆயிரம் வெள்ளாடும் இருந்தது; அவன் அப்பொழுது கர்மேலில் தன் ஆடுகளை மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தான்.
2 Now there was a man in Maon whose business was in Carmel. He was a very wealthy man with a thousand goats and three thousand sheep, which he was shearing in Carmel.
2 கர்மேலில் சொத்துக்களை உடைய ஒருவன் மாவோனில் இருந்தான். அம்மனிதன் செல்வம் மிக்கவன்; அவனுக்கு மூவாயிரம் ஆடுகளும் ஆயிரம் வெள்ளாடுகளும் இருந்தன. அவன் கர்மேலில் தன் ஆடுகளுக்கு உரோமம் கத்தரித்துக் கொண்டிருந்தான்.
3 அந்த மனுஷனுக்கு நாபால் என்றும், அவன் மனைவிக்கு அபிகாயில் என்றும் பெயர்; அந்த ஸ்திரீ மகா புத்திசாலியும் ரூபவதியுமாயிருந்தாள்; அந்தப் புருஷனோ முரடனும் துராகிருதனுமாயிருந்தான்; அவன் காலேபுடைய சந்ததியான்.
3 His name was Nabal, and his wife’s name was Abigail. She was an intelligent and beautiful woman, but her husband, a Calebite, was harsh and evil in his dealings.
3 அம் மனிதனின் பெயர் நாபால், அவன் மனைவியின் பெயர் அபிகாயில். அப்பெண் மிகுந்த அறிவும் அழகும் வாய்ந்தவள்; அவள் கணவனோ முரடனும் இழிந்தவனுமாய் இருந்தான். அவன் ஒரு காலேபியன்.
4 நாபால் தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கிற செய்தியை வனாந்தரத்தில் இருக்கிற தாவீது கேட்டபோது,
4 While David was in the wilderness, he heard that Nabal was shearing sheep.
4 நாபால் தன் ஆடுகளுக்கு உரோமம் கத்தரிப்பதாகத் தாவீது பாலைநிலத்தில் கேள்வியுற்றார்.
5 தாவீது பத்து வாலிபரை அழைத்து: நீங்கள் கர்மேலுக்குப் போய், நாபாலிடத்தில் சென்று, என் பேரைச்சொல்லி, அவன் சுகசெய்தியை விசாரித்து,
5 So David sent ten young men and instructed them, “Go up to Nabal at Carmel. Greet him in my name
5 தாவீது அங்கே பத்து இளைஞர்களை அனுப்ப எண்ணி, அப் பத்துப் பேரை அழைத்து, "நீங்கள் கர்மேலுக்குச் சென்று அங்கே நாபாலைக் கண்டு என் பெயரால் அவனுக்கு சமாதான வாழ்த்துக் கூறுங்கள்.
6 அவனை நோக்கி: நீர் வாழ்க, உமக்குச் சமாதானமும், உம்முடைய வீட்டுக்குச் சமாதானமும், உமக்கு உண்டான எல்லாவற்றிற்கும் சமாதானமும் உண்டாவதாக என்று அவனை வாழ்த்தி,
6 and say to him, ‘Long life to you, and peace to you and your house and to all that belongs to you.
6 அவனை நோக்கி, 'உமக்கும், உம் குடும்பத்துக்கும், உமக்கு உள்ள அனைத்துக்கும் நலம் உண்டவதாக!
7 இப்பொழுது ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்கள் உம்மிடத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்; உம்முடைய மேய்ப்பர் எங்களோடேகூட இருந்தார்கள்; அவர்கள் கர்மேலில் இருந்த நாளெல்லாம் நாங்கள் அவர்களை வருத்தப்படுத்தவில்லை; அவர்களுடைய பொருள் ஒன்றும் காணாமற்போனதும் இல்லை.
7 Now I hear that it is time for shearing. When your shepherds were with us, we did not harass them, and nothing of theirs was missing the whole time they were in Carmel.
7 ஆடுகள் உரோமம் கத்தரிப்பவர்கள் உம்மிடம் இருக்கிறார்கள் எனக் கேள்வியுற்றேன்! உம் இடையர்கள் எம்மோடு இருந்தார்கள்; நாங்கள் அவர்களை துன்புறுத்தியதில்லை; கர்மேலில் அவர்கள் இருந்த காலமெல்லாம் எதையும் இழக்கவுமில்லை.
8 உம்முடைய வேலைக்காரரைக் கேளும்; அவர்கள் உமக்குச் சொல்லுவார்கள்; ஆதலால் இந்த வாலிபருக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கவேண்டும்; நல்ல நாளில் வந்தோம்; உம்முடைய கைக்கு உதவுவதை உம்முடைய ஊழியக்காரருக்கும், உம்முடைய குமாரனாகிய தாவீதுக்கும் கொடுக்கும்படி வேண்டுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான்.
8 Ask your young men, and they will tell you. So let my young men find favor with you, for we have come on the day of a feast. Please give whatever you can afford to your servants and to your son David.’”
8 உம் பணியாளர்களைக் கேளும்; அவர்கள் உமக்குச் சொல்வார்கள். ஆதலால், இந்த இளைஞர்களுக்கு உம் கண்களில் தயவு கிடைக்கட்டும். ஏனெனில், நாங்கள் ஒரு திருவிழா நாளில் வந்துள்ளோம். உம்மால் கொடுக்க முடிந்ததை உம் அடியார்களுக்கும் உம் புதல்வன் தாவீதுக்கும் தந்தருள்க!' எனக் கூறுங்கள்" என்று சொல்லியனுப்பினார்.
9 தாவீதின் வாலிபர் போய், இந்த வார்த்தைகளையெல்லாம் தாவீதின் நாமத்தினாலே நாபாலிடத்தில் சொல்லி, பின்னொன்றும் பேசாதிருந்தார்கள்.
9 When David’s young men arrived, they relayed all these words to Nabal on behalf of David. Then they waited.
9 தாவீதின் இளைஞர்கள் சென்று நாபாலிடம் தாவீதின் பெயரால் அவை யாவற்றையும் கூறிக் காத்திருந்தனர்.
10 நாபால் தாவீதின் ஊழியக்காரருக்குப் பிரதியுத்தரமாக: தாவீது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்? தங்கள் எஜமான்களை விட்டு ஓடிப்போகிற வேலைக்காரர் இந்நாளில் அநேகர் உண்டு.
10 But Nabal asked them, “Who is David? Who is this son of Jesse? Many servants these days are breaking away from their masters.
10 நாபால் தாவீதின் இளைஞர்களிடம், "தாவீது என்பவன் யார்? ஈசாயின் மகன் யார்? தங்கள் தலைவர்களைவிட்டுப் பிரிந்து செல்லும் பணியாளர் இந்நாளில் பலர் உள்ளனர்.
11 நான் என் அப்பத்தையும், என் தண்ணீரையும், என் ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்துச் சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்குக் கொடுப்பேனோ என்றான்.
11 Why should I take my bread and water and the meat I have slaughtered for my shearers, and give them to these men whose origin I do not know?”
11 என் அப்பங்களையும் தண்ணீரையும் உரோமம் கத்திரிப்பவர்களுக்காக நான் அடித்துச் சமையல் செய்த இறைச்சியையும் எடுத்து எங்கிருந்தோ வந்த மனிதர்களுக்கு நான் கொடுப்பதா?" என்று பதிலளித்தான்.
12 தாவீதின் வாலிபர் தங்கள் வழியே திரும்பி, மறுபடியும் தாவீதினிடத்தில் வந்து, இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்தார்கள்.
12 So David’s men turned around and went back, and they relayed to him all these words.
12 ஆதலால், தாவீதின் இளைஞர்கள் திரும்பிவந்து அவரிடம் எல்லாவற்றையும் அப்படியே கூறினர்.
13 அப்பொழுது தாவீது தன் மனுஷரைப் பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றான்; அவரவர் தங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொண்டார்கள்; தாவீதும் தன் பட்டயத்தைக் கட்டிக்கொண்டான்; ஏறக்குறைய நானூறுபேர் தாவீதுக்குப் பின் சென்று புறப்பட்டுப்போனார்கள்; இருநூறுபேர் ரஸ்துக்கள் அண்டையில் இருந்துவிட்டார்கள்.
13 And David said to his men, “Strap on your swords!” So David and all his men put on their swords, and about four hundred men followed David, while two hundred stayed with the supplies.
13 தாவீது தம் ஆள்களை நோக்கி, "நீங்கள் அவரவர் வாளை எடுத்துக் கட்டிக்கொள்ளுங்கள்" என்றார். அதன்படி அவர்கள் ஒவ்வொருவனும் தன் வாளைக் கட்டிக்கொண்டான்; தாவீதும் தம் வாளைக் கட்டிகொண்டார். அவருடன் நானூறு பேர் செல்ல, இருநூறு பேர் பயணமூட்டைகளின் அருகில் இருந்துகொண்டனர்.
14 அப்பொழுது வேலைக்காரரில் ஒருவன் நாபாலுடைய மனைவியாகிய அபிகாயிலை நோக்கி: இதோ, நம்முடைய எஜமானுடைய சுகசெய்தி விசாரிக்க தாவீது வனாந்தரத்திலிருந்து ஆட்களை அனுப்பினான்; அவர்கள் பேரில் அவர் சீறினார்.
14 Meanwhile, one of Nabal’s young men informed Nabal’s wife Abigail, “Look, David sent messengers from the wilderness to greet our master, but he scolded them.
14 நாபாலுடைய பணியாள்களில் ஒருவன் அவன் மனைவி அபிகாயிலிடம், "இதோ நம் தலைவருக்கு வாழ்த்துச் சொல்ல பாலைநிலத்திலிருந்து தாவீது தூதர்களை அனுப்பினார். அவர்களை இவர் அவமானப்படுத்திவிட்டார்.
15 அந்த மனுஷரோ எங்களுக்கு மிகவும் உபகாரிகளாயிருந்தார்கள்; நாங்கள் வெளிகளில் இருக்கும்போது, அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை; நமது பொருளில் ஒன்றும் காணாமற்போனதுமில்லை.
15 Yet these men were very good to us. When we were in the field, we were not harassed, and nothing of ours went missing the whole time we lived among them.
15 இருப்பினும், இந்த ஆள்கள் எங்களுக்கு நன்மையே செய்தனர்; எங்களைத் துன்புறுத்தியதில்லை, நாங்கள் வயல் வெளிகளில் அவர்களோடு நடமாடிய காலமெல்லாம் எதையும் இழக்கவில்லை.
16 நாங்கள் ஆடுகளை மேய்த்து, அவர்களிடத்தில் இருந்த நாளெல்லாம் அவர்கள் இரவும்பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாயிருந்தார்கள்.
16 They were a wall around us, both day and night, the whole time we were herding our sheep near them.
16 நாங்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டு அவர்களோடு வாழ்ந்த நாள் முழுவதும் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றி சுவராக இருந்தனர்.
17 இப்போதும் நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப்பாரும்; நம்முடைய எஜமான்மேலும், அவருடைய வீட்டார் யாவர்மேலும், நிச்சயமாய் ஒரு பொல்லாப்பு வருகிறதாயிருக்கிறது; இவரோ, ஒருவரும் தம்மோடே பேசக் கூடாதபடிக்கு, பேலியாளின் மகனாயிருக்கிறார் என்றான்.
17 Now consider carefully what you must do, because disaster looms over our master and all his household. For he is such a scoundrel that nobody can speak to him!”
17 எனவே, இதையறிந்து நீ யோசித்து என்ன செய்ய முடியுமென்று பாரும்; ஏனெனில், நம் தலைவர் மேலும் அவர் வீட்டார் மேலும் கண்டிப்பாக தீமை வரவிருக்கிறது. இவரோ யாருமே அவரோடு பேசத்துணியாத அளவுக்குத் தீய குணமுடையவராய் இருக்கிறார்" என்றனர்.
Abigail Intercedes for Nabal
18 அப்பொழுது அபிகாயில் தீவிரமாய் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல் பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்து படி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து, கழுதைகள்மேல் ஏற்றி,
18 Then Abigail hurried and took two hundred loaves of bread, two skins of wine, five butchered sheep, five seahs of roasted grain,b a hundred clusters of raisins, and two hundred cakes of figs. She loaded them on donkeys
18 இதைக் கேட்ட அபிகாயில் இருநூறு அப்பங்கள், இரண்டு துருத்தி திராட்சைப்பழ இரசம், தோலுரித்த ஐந்து ஆடுகள், ஐந்து படி வறுத்த பயறு, திராட்சைப் பழ அடைகள் நூறு, அத்திப்பழ அடைகள் இருநூறு ஆகியவற்றை விரைந்தே எடுத்து ஒரு கழுதை மேல் ஏற்றினார்.
19 தன் வேலைக்காரரைப் பார்த்து: நீங்கள் எனக்கு முன்னே போங்கள்; இதோ, நான் உங்கள் பின்னே வருகிறேன் என்று சொல்லி அனுப்பினாள்; தன் புருஷனாகிய நாபாலுக்கு அதை அறிவிக்கவில்லை.
19 and said to her young men, “Go ahead of me. I will be right behind you.” But she did not tell her husband Nabal.
19 அவர் தம் பணியாளர்களை நோக்கி, "நீங்கள் எனக்கு முன்னே செல்லுங்கள், நான் உங்களுக்குப் பின் வருகிறேன்," என்றார். ஆனால், இதைப்பற்றி தம் கணவர் நாபாலிடம் தெரிவிக்கவில்லை.
20 அவள் ஒரு கழுதையின்மேல் ஏறி, மலையின் மறைவில் இறங்கிவருகையில், இதோ, தாவீதும் அவன் மனுஷரும் அவளுக்கு எதிராக இறங்கிவந்தார்கள்; அவர்களைச் சந்தித்தாள்.
20 As Abigail came riding her donkey into a mountain ravine, she saw David and his men coming down toward her, and she met them.
20 அவர் கழுதை மேல் ஏறிப் பயணமாகி, மலைச் சரிவுப் பாதையில் இறங்கி வருகையில் தாவீதும் அவருடைய ஆள்களும் அவரை நோக்கி இறங்கி வந்தனர். அவர் அவர்களைச் சந்தித்தார்.
21 தாவீது தன் ஜனங்களை நோக்கி: அவனுக்கு வனாந்தரத்தில் இருக்கிறதையெல்லாம் வீணாகவே காப்பாற்றினேன்; அவனுக்கு உண்டானதிலெல்லாம் ஒன்றும் காணாமற்போனதில்லை; என்றாலும் நன்மைக்குப் பதிலாக அவன் எனக்குத் தீமைசெய்தான்.
21 Now David had just finished saying, “In vain I have protected all that belonged to this man in the wilderness. Nothing that belongs to him has gone missing, yet he has paid me back evil for good.
21 அப்பொழுது தாவீது, "இந்த மனிதனுக்குப் பாலைநிலத்தில் இருந்ததையெல்லாம் நான் காப்பாற்றியது வீண்தான்! அவனுடைய பொருள் எதையும் அவன் இழக்கவில்லை. இருப்பினும் நன்மைக்குப் பதிலாக அவன் எனக்குத் தீமையே செய்தான்.
22 அவனுக்கு உண்டான எல்லாவற்றிலும் சுவரில் நீர்விடும் ஒரு நாயைமுதலாய் பொழுதுவிடியுமட்டும் நான் உயிரோடே வைத்தால், தேவன் தாவீதின் சத்துருக்களுக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்று சொல்லியிருந்தான்.
22 May God punish David,c and ever so severely, if I let one of Nabal’s men survive until morning.”
22 அவனுக்குச் சொந்தமானவர்களில் ஒர் ஆண்மகன் கூடப் பொழுது விடியுமட்டும் உயிரோடு விட்டு வைத்தால், கடவுள் அதற்கும் அதற்கு மேலும் அவரைத் தண்டிப்பாராக" என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
23 அபிகாயில் தாவீதைக் காண்கையில், தீவிரமாய்க் கழுதையை விட்டு இறங்கி, தாவீதுக்கு நேராகத் தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்து,
23 When Abigail saw David, she quickly got off the donkey, fell facedown, and bowed before him.
23 அபிகாயில் தாவீதைப் பார்த்தபோது கழுதையினின்று வேகமாக இறங்கி அவர் முன் தரையில் முகம் குப்புற விழுந்து வணங்கினார்.
24 அவன் பாதத்திலே விழுந்து: என் ஆண்டவனே, இந்தப் பாதகம் என்மேல் சுமரட்டும்; உம்முடைய அடியாளுடைய வார்த்தைகளை நீர் கேட்கும்பொருட்டாக உம்முடைய அடியாள் உமது செவிகேட்கப் பேசவேண்டும்.
24 She fell at his feet and said, “My lord, may the blame be on me alone, but please let your servant speak to you; hear the words of your servant.
24 அவர் தாவீதின் காலில் விழுந்து, "என் தலைவரே, பழி என் மேல் மட்டும் இருக்கட்டும்! உம் அடியவள் சொல்லப் போவதை நீர் செவி கொடுத்துக் கேட்க வேண்டுகிறேன்.
25 என் ஆண்டவனாகிய நீர் நாபால் என்னும் இந்தப் பேலியாளின் மனுஷனை ஒரு பொருட்டாக எண்ணவேண்டாம்; அவன் பெயர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான்; அவன் பெயர் நாபால், அவனுக்குப் பயித்தியமும் இருக்கிறது; உம்முடைய அடியாளாகிய நானோ, என் ஆண்டவன் அனுப்பின வாலிபரைக் காணவில்லை.
25 My lord should pay no attention to this scoundrel Nabal,d for he lives up to his name: His name means Fool, and folly accompanies him. I, your servant, did not see my lord’s young men whom you sent.
25 என் தலைவரே, அந்தத் தீய குணமுடைய மனிதராகிய நாபாலைப் பொருட்படுத்த வேண்டாம் ஏனெனில், அவர் தம் பெயருக்கேற்ப ஒரு மூடர். நாபால் என்பது அவருடைய பெயர்; அதன் படி மூடத்தனமும் அவருக்குண்டு. என் தலைவராகிய நீர் அனுப்பிய இளைஞர்களை உம் அடியவள் பார்க்கவில்லை.
26 இப்போதும் என் ஆண்டவனே, நீர் இரத்தம் சிந்த வரவும், உம்முடைய கை நீதியைச் சரிக்கட்டவும், கர்த்தர் உமக்கு இடங்கொடுக்கவில்லை என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டும், உம்முடைய ஜீவனைக்கொண்டும் சொல்லுகிறேன்; இப்போதும் உம்முடைய சத்துருக்களும், என் ஆண்டவனுக்கு விரோதமாகப் பொல்லாப்புத் தேடுகிறவர்களும், நாபாலைப்போல ஆகக்கடவர்கள்.
26 Now, my lord, as surely as the LORD lives and you yourself live, the LORD has held you back from coming to bloodshed and avenging yourself with your own hand. May your enemies and those who seek harm for my lord be like Nabal.
26 இப்பொழுது, என் தலைவரே, நீர் இரத்தத்தைச் சிந்தாதவாறும், நீர் உம் கைகளினால் பழிக்குப் பழி வாங்காதவாறும் உம்மைத் தடுத்தவர் ஆண்டவரே! வாழும் ஆண்டவர் மேலும் உம் இருக்கையின் மேலும் ஆணை! உம் பகைவர்களும் என் தலைவராகிய உமக்குத் தீங்கு செய்ய முயல்பவர்களும் நாபாலைப்போல் ஆவார்களாக!
27 இப்போதும் உமது அடியாள் என் ஆண்டவனுக்குக் கொண்டுவந்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு, என் ஆண்டவனைப் பின்பற்றுகிற வாலிபருக்குக் கொடுப்பீராக.
27 Now let this gift your servant has brought to my lord be given to the young men who follow you.
27 இப்பொழுது உம் அடியவள் என் தலைவருக்கு கொண்டு வந்துள்ள காணிக்கைகளை ஏற்றுக் கொண்டு என் தலைவரின் அடிச்சுவட்டைப் பின் தொடரும் இவ்விளைஞர்களிடம் அளிப்பாராக!
28 உமது அடியாளின் பாதகத்தை மன்னியும், கர்த்தர் என் ஆண்டவனுக்கு நிலையான வீட்டை நிச்சயமாய்க் கட்டுவார்; என் ஆண்டவன் கர்த்தருடைய யுத்தங்களை நடத்துகிறவராமே; நீர் உயிரோடே இருக்கும் நாளில் ஒரு பொல்லாப்பும் உம்மிலே காணப்படாதிருப்பதாக.
28 Please forgive your servant’s offense, for the LORD will surely make a lasting dynasty for my lord, because he fights the LORD’s battles. May no evil be found in you as long as you live.
28 உம் அடியவளின் குற்றத்தை மன்னிக்க வேண்டுகிறேன்; என் தலைவரே, நீர் ஆண்டவரின் போர்களை நடத்துவதால், என் தலைவராகிய உமக்கு ஆண்டவர் ஒரு நிலையான வீட்டை உறுதியாக கட்டியெழுப்புவார். உம் வாழ்நாள் முழுவதும் எத்தீங்கும் உம்மை அணுகாது!
29 உம்மைத் துன்பப்படுத்தவும், உம்முடைய பிராணனை வாங்க வகைதேடவும், ஒரு மனுஷன் எழும்பினாலும் என் ஆண்டவனுடைய ஆத்துமா உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஆதரவில் இருக்கிற ஜீவனுள்ளோருடைய கட்டிலே கட்டப்பட்டிருக்கும்; உம்முடைய சத்துருக்களின் ஆத்துமாக்களோ கவணில் வைத்து எறிந்தாற்போல எறியப்பட்டுப்போம்.
29 And should someone pursue you and seek your life, then the life of my lord will be bound securely by the LORD your God in the bundle of the living. But He shall fling away the lives of your enemies like stones from a sling.e
29 உம்மைத் தாக்கவும் உம்மைக் கொல்லவும் யாராவது எப்பொழுதாவது எழுந்தால், என் தலைவரின் உயிர், உம் கடவுளாகிய ஆண்டவரின் பாதுகாப்பில் வாழ்வோரின் கட்டுகளில் இருக்கட்டும். உம் எதிரிகளின் உயிர்களோ கவணில் வைத்து எறிந்தாற்போல் எறியப்படும்.
30 கர்த்தர் உம்மைக் குறித்துச் சொன்ன நன்மையின்படி எல்லாம் இனி என் ஆண்டவனுக்குச் செய்து, இஸ்ரவேலுக்கு அதிபதியாக உம்மை நேமிக்கும் போது,
30 When the LORD has done for my lord all the good He promised, and when He has appointed you ruler over Israel,
30 ஆண்டவர் தலைவராகிய உம்மைக் குறித்துத் தாம் வாக்களித்த நன்மைகளை எல்லாம் செய்து இஸ்ரயேலின் அரசராக ஏற்படுத்துவார்.
31 நீர் விருதாவாய் இரத்தம் சிந்தாமலும், என் ஆண்டவனாகிய நீர் பழிவாங்காமலும் இருந்ததுண்டானால், அப்பொழுது என் ஆண்டவனாகிய உமக்குத் துக்கமும் இராது, மன இடறலும் இராது; கர்த்தர் என் ஆண்டவனுக்கு நன்மை செய்யும்போது, உம்முடைய அடியாளை நினைப்பீராக என்றாள்.
31 then my lord will have no remorse or guilt of conscience over needless bloodshed and revenge. And when the LORD has dealt well with my lord, may you remember your maidservant.”
31 அப்பொழுது காரணமின்றி இரத்தம் சிந்தினது குறித்தோ, என் தலைவர் பழிக்குப் பழி வாங்கியது குறித்தோ, என் தலைவருக்கு துயரோ மனவருத்தமோ உண்டாகாது. எம் தலைவராகிய ஆண்டவர் உமக்கு வெற்றியளிக்கின்றபோது உம் அடியவளை நினைவு கூர்ந்தருளும்!" என்றார்.
32 அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி: உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
32 Then David said to Abigail, “Blessed be the LORD, the God of Israel, who sent you to meet me this day!
32 தாவீது அபிகாயிலை நோக்கி, "இன்று உன்னை என்னிடம் அனுப்பிய இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக!
33 நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும், என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றையதினம் எனக்குத் தடைபண்ணினபடியினால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக.
33 Blessed is your discernment, and blessed are you, because today you kept me from bloodshed and from avenging myself by my own hand.
33 இரத்தப் பழிக்குற்றத்திலிருந்தும் பழித்தீர்ப்பதிலிருந்தும் என்னை இன்று தடை செய்த நீ ஆசி பெறுவாய்! உன் நுண்ணறிவும் ஆசி பெறுவதாக!
34 நீ தீவிரமாய் என்னைச் சந்திக்க வராமல் இருந்தாயானால், பொழுது விடியுமட்டும் நாபாலுக்கு ஒரு நாயும் உயிரோடே வைக்கப்படுவதில்லை என்று, உனக்குப் பொல்லாப்புச் செய்ய எனக்கு இடங்கொடாதிருக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு மெய்யாய்ச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
34 Otherwise, as surely as the LORD, the God of Israel, lives, who has restrained me from harming you, if you had not come quickly to meet me, then surely no male belonging to Nabal would have been left alive by morning light.”
34 நீ என்னை விரைவாக சந்திக்க வராதிருந்தால் பொழுது விடிவதற்குள் நாபாலுக்குச் சொந்தமான வயல்களில் ஓர் ஆண்மகனைக் கூட உயிரோடு விட்டு வைத்திருக்க மாட்டேன். இதை உனக்குத் தீங்கு செய்வதிலிருந்து என்னைத் தடுத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் பெயரால் உறுதியாகச் சொல்கிறேன்!" என்றார்.
35 அவள் தனக்குக் கொண்டுவந்ததைத் தாவீது அவள் கையிலே வாங்கி கொண்டு, அவளைப் பார்த்து: நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப் போ; இதோ, நான் உன் சொல்லைக்கேட்டு, உன் முகத்தைப் பார்த்து, இப்படிச் செய்தேன் என்றான்.
35 Then David accepted from her hand what she had brought him, and he said to her, “Go home in peace. See, I have heeded your voice and granted your request.”
35 பின்பு, அபிகாயில் தமக்குக் கொண்டு வந்ததை தாவீது அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டு, அவரை நோக்கி, "சமாதானத்துடன் நீ உன் வீட்டுக்குப் போ! உனக்குச் செவி கொடுத்து உன் வேண்டுதலை நிறைவேற்றியுள்ளேன்" என்றார்.
36 அபிகாயில் நாபாலிடத்தில் வந்தபோது, இதோ, ராஜவிருந்துக்கு ஒப்பான விருந்து அவன் வீட்டிலே நடந்தது; அவன் இருதயம் களித்திருந்தது; அவன் மிகவும் வெறித்துமிருந்தான்; ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறியகாரியமானாலும் பெரிய காரியமானாலும், ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை.
36 When Abigail returned to Nabal, there he was in the house, holding a feast fit for a king, in high spirits and very drunk. So she told him nothing until morning light.
36 அபிகாயில் நாபாலிடம் வந்த பொழுது அவன் அரசவிருந்துக்கு ஒப்பான விருந்தொன்றைத் தன் வீட்டில் அனுபவித்துக் கொண்டிருந்தான்; அவன் உள்ளம் களிப்புற்றிருந்தது. அவன் மிகுந்த குடிபோதையில் இருந்ததால் பொழுது விடியும் வரை அவர் எதுவும் பேசாதிருந்தார்.
37 பொழுது விடிந்து, நாபாலின் வெறிதெளிந்தபின்பு, அவன் மனைவி இந்த வர்த்தமானங்களை அவனுக்கு அறிவித்தாள்; அப்பொழுது அவன் இருதயம் அவனுக்குள்ளே செத்து, அவன் கல்லைப்போலானான்.
37 In the morning when Nabal was sober, his wife told him about these events, and his heart failed within him and he became like a stone.
37 காலையில் நாபால் திராட்சை மதுவின் போதை தெளிந்தபின் அவன் மனைவி இவையனைத்தையும் அவனிடம் கூறினார். அப்பொழுது அவன் பெரிய அதிர்ச்சிக்குள்ளாகிக் கல்லைப்போல் செயலற்றவன் ஆனான்.
38 கர்த்தர் நாபாலை வாதித்ததினால், ஏறக்குறையப் பத்துநாளுக்குப்பின்பு, அவன் செத்தான்.
38 About ten days later, the LORD struck Nabal dead.
38 ஆண்டவர் நாபாலை வதைத்ததால் சுமார் பத்துநாள்களுக்குப்பின் அவன் இறந்தான்.
David Marries Abigail
39 நாபால் செத்துப்போனான் என்று தாவீது கேள்விப்பட்டபோது: என் நிந்தையின் வழக்கை நாபாலின் கையில் விசாரித்து, தம்முடைய அடியானைப் பொல்லாப்புச் செய்யாதபடிக்குத் தடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; கர்த்தர் தாமே நாபாலின் பொல்லாப்பை அவன் தலையின்மேல் திரும்பப்பண்ணினார் என்று சொல்லி, அபிகாயிலை விவாகம்பண்ணுகிறதற்காக அவளோடே பேச, தாவீது ஆட்களை அனுப்பினான்.
39 On hearing that Nabal was dead, David said, “Blessed be the LORD, who has upheld my cause against the reproach of Nabal and has restrained His servant from evil. For the LORD has brought the wickedness of Nabal down upon his own head.” Then David sent word to Abigail, asking for her in marriage.
39 நாபால் இறந்து விட்டதைத் தாவீது கேள்வியுற்றபோது, "நாபால் கையினால் எனக்கு வந்த இழிவுக்கு நிகராக நீதி வழங்கி தம் அடியானைத் தீமை செய்யாதவாறு காப்பாற்றிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக! நாபாலின் தீமைகள் அவன் தலைமேல் விழுமாறு ஆண்டவர் அவற்றைத் திருப்பிவிட்டார்" என்றார். பின்பு, அபிகாயிலை மணந்துக்கொள்வதற்காகத் தாவீது அவரிடம் தூதனுப்பினார்.
40 தாவீதின் ஊழியக்காரர் கர்மேலில் இருக்கிற அபிகாயிலண்டைக்கு வந்து, தாவீது உன்னை விவாகம்பண்ண மனதாய், எங்களை உன்னிடத்தில் அனுப்பினார் என்று அவளோடே சொல்லுகிறபோது,
40 When his servants came to Abigail at Carmel, they said, “David has sent us to take you as his wife.”
40 தாவீது பணியாளர்கள் கர்மேலில் இருக்கிற அபிகாயிலிடம் வந்து அவரை நோக்கி, தாவீது உம்மை மணந்து கொள்ள விரும்புகிறார். அதற்காக எங்களை உங்களிடம் அனுப்பினார்" என்றனர்.
41 அவள் எழுந்திருந்து, தரைமட்டும் முகங்குனிந்து, இதோ, நான் என் ஆண்டவனுடைய ஊழியக்காரரின் கால்களைக் கழுவத்தக்க பணிவிடைக்காரியாகிய அவருடைய அடியாள் என்றாள்.
41 She arose, then bowed facedown and said, “Here is your maidservant, ready to serve and to wash the feet of my lord’s servants.”
41 அவர் எழுந்து தரையில் முகம் குப்புற வீழ்ந்து வணங்கி, "இதோ! உம் அடிமையாகிய நான் என் தலைவரின் பணியாளர்களுடைய கால்களைக் கழுவும் பணிப்பெண்ணாக இருப்பேனாக!" என்றாள்.
42 பின்பு அபிகாயில் தீவிரித்து எழுந்து, ஒரு கழுதையின்மேல் ஏறி, ஐந்து தாதிப்பெண்களைக் கூட்டிக் கொண்டு, தாவீதின் ஸ்தானாபதிகளுக்குப் பின்சென்று போய், அவனுக்கு மனைவியானாள்.
42 So Abigail hurried and got on a donkey, and attended by five of her maidens, she followed David’s messengers and became his wife.
42 உடனே அபிகாயில் ஒரு கழுதை மேல் ஏறி விரைந்து சென்றார். பணிப்பெண்கள் ஐவர் அவருடன் சென்றார்கள்; அவர் தாவீதின் தூதர்களைப் பின் தொடர்ந்து சென்று அவருக்கு மனைவியானார்.
43 யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமையும் தாவீது விவாகம்பண்ணினான்; அவர்கள் இருவரும் அவனுக்கு மனைவியானார்கள்.
43 David had also married Ahinoam of Jezreel. So she and Abigail were both his wives.
43 இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமையும் தாவீது மணந்து கொண்டார்; அவர்கள் இருவரும் அவருக்கு மனைவியானார்கள்.
44 சவுல்: தாவீதின் மனைவியாகிய மீகாள் என்னும் தன் குமாரத்தியைக் காலீம் ஊரானாகிய லாயீசின் குமாரனான பல்த்திக்குக் கொடுத்திருந்தான்.
44 But Saul had given his daughter Michal, David’s wife, to Paltif son of Laish, who was from Gallim.
44 சவுல் தம் புதல்வியும் தாவீதின் மனைவியான மீக்காலைக் கல்லிம் ஊரானாகிய இலாயிசின் மகன் பல்திக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தார்.*
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a Hebrew and some LXX manuscripts; other LXX manuscripts Maon
18 b 5 seahs is approximately 33 dry quarts or 36.5 liters of roasted grain.
22 c Some LXX manuscripts; MT David’s enemies
25 d Nabal means fool .
29 e Literally fling away the souls of your enemies as from the pocket of a sling
44 f Palti is a variant of Paltiel ; see 2 Samuel 3:15.
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.