பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
1 Chronicles 1 நாளாகமம் דִבְרֵי הַיָמִים א
1 நாளாகமம் 8 | 1 Chronicles 8
Genealogy from Benjamin to Saul
1 பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பால் என்னும் இரண்டாம் குமாரனையும், அகராக் என்னும் மூன்றாம் குமாரனையும்,
1 Benjamin was the father of Bela, his firstborn; Ashbel was the second born, Aharah the third,
1 பென்யமினுக்குப் பிறந்தோர்; தலைமகன் பேலா, இரண்டாமவர் அஸ்பேல், மூன்றாமவர் அகிராகு,
2 நோகா என்னும் நாலாம் குமாரனையும், ரப்பா என்னும் ஐந்தாம் குமாரனையும் பெற்றான்.
2 Nohah the fourth, and Rapha the fifth.
2 நான்காமவர் நோகா, ஐந்தாமவர் இராப்பா.
3 பேலாவுக்கு இருந்த குமாரர் ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.
3 The sons of Bela: Addar, Gera, Abihud,
3 பேலாவுக்கு இருந்த புதல்வர்: அதார், கேரா, அபிகூது,
4 அபிசுவா, நாமான், அகோவா,
4 Abishua, Naaman, Ahoah,
4 அபிசூவா, நாகமான், அகோகு,
5 கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் குமாரர்.
5 Gera, Shephuphan, and Huram.
5 கேரா, செபுவான், ஊராம்.
6 கேபாவின் குடிகளுக்கு மூப்பான தலைவராயிருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.
6 These were the descendants of Ehud who were the heads of the families living in Geba and were exiled to Manahath:
6 ஏகூதின் புதல்வர்: அவர்கள் மானகாத்திற்கு நாடு கடத்தப்பட்ட கெபாலின் குடிகளின் மூதாதை வீட்டுக்குத் தலைவர்கள்;
7 கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டுபோனபின்பு, ஊசாவையும், அகியூதையும் பெற்றான்.
7 Naaman, Ahijah, and Gera, who carried them into exile and who was the father of Uzza and Ahihud.
7 நாகமான், அகியா, கேரா என்ற எக்லாம். அவர் உசாவையும் அகிகூதையும் பெற்றார்.
8 அவர்களை அனுப்பிவிட்டபின், சகராயீம் மோவாப் தேசத்திலே ஊகிம் பாராள் என்னும் தன் பெண்ஜாதிகளிடத்திலே பெற்ற பிள்ளைகளைத்தவிர,
8 Shaharaim had sons in the country of Moab after he had divorced his wives Hushim and Baara.
8 சகரயிம், தம் மனைவியர் கூசீம், பாரா என்பவர்களைத் தள்ளிவைத்தபின், மோவாபு நாட்டில் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தனர்.
9 தன் பெண்ஜாதியாகிய ஓதேசாலே யோவாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும்,
9 His sons by his wife Hodesh: Jobab, Zibia, Mesha, Malcam,
9 ஓதேசு என்னும் மனைவிமூலம் அவர் பெற்ற புதல்வர்கள்; யோபாப், சிபியா, மேசா, மல்காம்.
10 எயூசையும், சாகியாவையும், மிர்மாமவையும் பெற்றான். பிதாக்களின் தலைவரான இவர்கள் அவனுடைய குமாரர்.
10 Jeuz, Sachia, and Mirmah. These were his sons, heads of families.
10 எயூசு, சாக்கியா, மிர்மா. மூதாதையரின் வீட்டுத் தலைவர்களான இவர்கள் அவரின் புதல்வர்.
11 ஊசிம் வழியாய் அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.
11 He also had sons by Hushim: Abitub and Elpaal.
11 ஊசிம் மூலம் அவர் அபிதூபையும் எல்பாகாலையும் பெற்றார்.
12 எல்பாலின் குமாரர், ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
12 The sons of Elpaal: Eber, Misham, Shemed (who built Ono and Lod with its villages),
12 எல்பாகாலின் புதல்வர்: ஏபேர், மிஸ்யாம், சாமேது. அவர் ஓனோ, லோது மற்றும் அதன் சிற்றூர்களையும் கட்டி எழுப்பினார்.
13 பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவராயிருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளை ஓட்டிவிட்டார்கள்
13 and Beriah and Shema (who were the heads of families of the inhabitants of Aijalon and who drove out the inhabitants of Gath).
13 பெரியாவும் செமாவும் அய்யலோன் குடிகளின் மூதாதையர் வீட்டுத் தலைவராய் இருந்தனர். அவர்கள் காத்தின் குடிகளைத் துரத்தியடித்தனர்.
14 அகியோ, சாஷாக், எரேமோத்,
14 Ahio, Shashak, Jeremoth,
14 அகியோ, சாசாக்கு, எரேமோத்து,
15 செபதியா, ஆராத், ஆதேர்,
15 Zebadiah, Arad, Eder,
15 செபதியா, அராது, ஏதேர்,
16 காயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் குமாரர்.
16 Michael, Ishpah, and Joha were the sons of Beriah.
16 மிக்கேல், இஸ்பா, யோகா என்போர் பெரியாவின் புதல்வர்.
17 செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர்,
17 Zebadiah, Meshullam, Hizki, Heber,
17 செபதியா, மெசுல்லாம், இசுக்கி, எபேர்,
18 இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் என்பவர்கள் எல்பாலின் குமாரர்.
18 Ishmerai, Izliah, and Jobab were the sons of Elpaal.
18 இஸ்மராய், இஸ்லியா, யோபாபு என்போர் எல்பாகாலின் புதல்வர்.
19 யாக்கிம், சிக்ரி, சப்தி,
19 Jakim, Zichri, Zabdi,
19 யாக்கிம், சிக்ரி, சப்தி,
20 எலியேனாய், சில்தாய், எலியேல்,
20 Elienai, Zillethai, Eliel,
20 எலியேனாய், சில்தாய், எலியேல்,
21 அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் குமாரர்.
21 Adaiah, Beraiah, and Shimrath were the sons of Shimei.
21 அதாயா, பெராயா, சிம்ராது என்போர் சிமயியின் புதல்வர்.
22 இஸ்பான், ஏபேர், ஏலியேல்,
22 Ishpan, Eber, Eliel,
22 இஸ்பான், ஏபேர், எலியேல்,
23 அப்தோன், சிக்ரி, ஆனான்,
23 Abdon, Zichri, Hanan,
23 அப்தோன், சிக்ரி, ஆனான்,
24 அனனியா, ஏலாம், அந்தோதியா,
24 Hananiah, Elam, Anthothijah,
24 அனனியா, ஏலாம், அன்தோதியா,
25 இபிதியா, பெனூயேல் என்பவர்கள் ஆஷாக்கின் குமாரர்.
25 Iphdeiah, and Penuel were the sons of Shashak.
25 இப்தியா, பெனுவேல் என்போர் சாசாக்கின் புதல்வர்.
26 சம்சேராய், செகரியா, அத்தாலியா,
26 Shamsherai, Shehariah, Athaliah,
26 சம்சராய், செகரியா, அத்தலியா,
27 யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எராகாமின் குமாரர்.
27 Jaareshiah, Elijah, and Zichri were the sons of Jeroham.
27 யகரேசியா, எலியா, சிக்ரி என்போர் எரொகாமின் புதல்வர்.
28 இவர்கள் தங்கள் சந்ததிகளின் பிதாக்களிலே தலைவராயிருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள்.
28 All these were heads of families, the chiefs according to their genealogies, and they lived in Jerusalem.
28 இவர்கள் தங்கள் தலைமுறைகளில் மூதாதையர் வீட்டுத் தலைவர்களுள் முதல்வராய் இருந்தனர். இவர்கள் எருசலேமில் வாழ்ந்தார்கள்.
29 கிபியோனிலே குடியிருந்தவன், கிபியோனின் மூப்பன்; அவன் பெண்ஜாதியின்பேர் மாக்காள்.
29 Jeiel the father of Gibeon lived in Gibeon. His wife’s name was Maacah,
29 கிபயோனில் வாழ்ந்த கிபயோனியரின் மூதாதை எயியேல். அவரின் மனைவி பெயர் மாக்கா.
30 அவன் மூத்த குமாரன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள் சூர், கீஸ், பாகால், நாதாப்,
30 and Abdon was his firstborn son, then Zur, Kish, Baal, Nadab,
30 அவரின் தலைமகன் அப்தோன்; மற்றவர்கள்; சூர், கீசு, பாகால், நாதாபு,
31 கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள்.
31 Gedor, Ahio, Zecher,
31 கெதோர், அகியோ, செகேர்,
32 மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்கள் சகோதரரோடுங்கூட எருசலேமிலே தங்கள் சகோதரருக்குச் சமீபத்தில் குடியிருந்தார்கள்.
32 and Mikloth, who was the father of Shimeah. These also lived alongside their relatives in Jerusalem.
32 மிக்லோத்து; இவருக்குச் சிமயா பிறந்தார். அவர்களின் வழிமரபினர் தங்கள் உறவின் முறையாருடன் எருசலேமில் வாழ்ந்தார்கள்.
The Family of Saul
33 நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.
33 Ner was the father of Kish, Kish was the father of Saul, and Saul was the father of Jonathan, Malchishua, Abinadab, and Esh-baal.
33 நேருக்குக் கீசு பிறந்தார். கீசுக்குச் சவுல் பிறந்தார் சவுலுக்கு யோனத்தான், மல்கிசூவா, அபினதாபு, எஸ்பாகால் ஆகியோர் பிறந்தனர்.
34 யோனத்தானின் குமாரன் மேரிபால்; மேரிபால் மீகாவைப் பெற்றான்.
34 The son of Jonathan: Merib-baal, and Merib-baal was the father of Micah.
34 யோனத்தானின் மகன் மெரிபுபாகால், மெரிபுபாகாலுக்கு மீக்கா பிறந்தார்.
35 மீகாவின் குமாரர், பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.
35 The sons of Micah: Pithon, Melech, Tarea, and Ahaz.
35 மீக்காவின் புதல்வர்: பித்தோன், மெலேக்கு, தாரேயா, ஆகாசு.
36 ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.
36 Ahaz was the father of Jehoaddah, Jehoaddah was the father of Alemeth, Azmaveth, and Zimri, and Zimri was the father of Moza.
36 ஆகாசுக்கு யோயாதா பிறந்தார்; யோயாதாவுக்குப் பிறந்தோர்; ஆலமேத்து, அஸ்மாவேத்து, சிம்ரி. சிம்ரிக்கு மோட்சா பிறந்தார்.
37 மோசா பினியாவைப் பெற்றான், இவன் குமாரன் ரப்பா; இவன் குமாரன் எலியாசா; இவன் குமாரன் ஆத்சேல்.
37 Moza was the father of Binea. Raphah was his son, Eleasah his son, and Azel his son.
37 மோட்சாவுக்குப் பினியா பிறந்தார். அவர் மகன் இராப்பா; அவர் மகன் எலயாசர்; அவர் மகன் ஆட்சேல்.
38 ஆத்சேலுக்கு ஆறுகுமாரர் இருந்தார்கள்; அவர்கள் நாமங்களாவன, அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லாரும் ஆத்சேலின் குமாரர்.
38 Azel had six sons, and these were their names: Azrikam, Bocheru, Ishmael, Sheariah, Obadiah, and Hanan. All these were the sons of Azel.
38 ஆட்சேலுக்கு ஆறு புதல்வர் இருந்தனர். அவர்களின் பெயர்களாவன; அஸ்ரிக்காம், பொக்கரு, இஸ்மயேல், செயரியா, ஒபதியா, ஆனான். இவர்கள் அனைவரும் ஆட்சேலின் புதல்வர்கள்.
39 அவன் சகோதரனாகிய எசேக்கின் குமாரர், ஊலாம் என்னும் மூத்தகுமாரனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் குமாரனும், எலிபேலேத் என்னும் மூன்றாம் குமாரனுமே
39 The sons of his brother Eshek: Ulam was his firstborn, Jeush second, and Eliphelet third.
39 அவர் சகோதரரான ஏசேக்கின் புதல்வர்: தலைமகன் ஊலாம், இரண்டாமவர் எயூசு, மூன்றாமவன் எலிப்பலேற்று.
40 ஊலாமின் குமாரர் பராக்கிரமசாலிகளான வில்வீரராய் இருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் புத்திரர் பெளத்திரர் இருந்தார்கள்; அவர்கள் தொகை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லாரும் பென்யமீன் புத்திரர்.
40 The sons of Ulam were mighty men of valor, archers, and they had many sons and grandsons—150 in all. All these were the descendants of Benjamin.
40 ஊலாமின் புதல்வர்கள் ஆற்றல்மிகு வீரர்களாயும், வில்வல்லோர்களாயும் இருந்தனர். அவர்களுக்குப் பல பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளுமாய் மொத்தம் நூற்று ஐம்பது பேர் இருந்தனர். இவர்கள் யாவரும் பென்யமின் புதல்வர்கள்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
3 a Possibly Gera the father of Ehud ; see verse 7.
7 b Or and Gera, that is Heglam, who was the father of Uzza and Ahihud.
29 c Some LXX manuscripts (see also 1 Chronicles 9:35); Hebrew The father of Gibeon lived
30 d Some LXX manuscripts include Ner ; see 1 Chronicles 9:36.
31 e Zecher is likely a variant of Zechariah ; see 1 Chronicles 9:37.
32 f Shimeah is a variant of Shimeam ; see 1 Chronicles 9:38.
33 g Esh-baal is also called Ish-bosheth ; see 2 Samuel 2:8.
34 h Merib-baal is also called Mephibosheth ; see 2 Samuel 4:4.
34 i Micah is a variant of Mica ; see 2 Samuel 9:12.
35 j Tarea is a variant of Tahrea ; see 1 Chronicles 9:41.
36 k Jehoaddah is a variant of Jarah or Jadah ; see 1 Chronicles 9:42.
37 l Raphah is a variant of Rephaiah ; see 1 Chronicles 9:43.
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.