பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

1 Chronicles  1 நாளாகமம்  דִבְרֵי הַיָמִים א

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29

1 நாளாகமம் 7 | 1 Chronicles 7

The Descendants of Issachar

1וְלִבְנֵ֣י יִשָׂשכָ֗ר תּוֹלָ֧ע וּפוּאָ֛ה ישיב וְשִׁמְר֖וֹן אַרְבָּעָֽה׃

1 இசக்காருடைய குமாரர், தோலா, பூவா, யசுப், சிம்ரோன் என்னும் நாலுபேர்.
1 The sons of Issachar: Tola, Puah, Jashub, and Shimron—four in all.
1 இசக்காரின் புதல்வர்: தோலா, பூவா, யாசபு, சிம்ரோன் என்ற நால்வர்.

2וּבְנֵ֣י תוֹלָ֗ע עֻזִּ֡י וּרְפָיָ֡ה וִֽ֠ירִיאֵל וְיַחְמַ֨י וְיִבְשָׂ֜ם וּשְׁמוּאֵ֗ל רָאשִׁ֤ים לְבֵית־אֲבוֹתָם֙ לְתוֹלָ֔ע גִּבּ֥וֹרֵי חַ֖יִל לְתֹלְדוֹתָ֑ם מִסְפָּרָם֙ בִּימֵ֣י דָוִ֔יד עֶשְׂרִֽים־וּשְׁנַ֥יִם אֶ֖לֶף וְשֵׁ֥שׁ מֵאֽוֹת׃

2 தோலாவின் குமாரர், ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுவேல் என்பவர்கள்; தோலாவுக்குப் பிறந்த இவர்கள் தங்கள் பிதாக்கள் வம்சத்தலைவரும் தங்கள் சந்ததிகளிலே பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள்; தாவீதின் நாட்களில் அவர்கள் தொகை இருபதினாயிரத்து அறுநூறுபேராயிருந்தது.
2 The sons of Tola: Uzzi, Rephaiah, Jeriel, Jahmai, Ibsam, and Shemuel, the heads of their families. In the days of David, 22,600 descendants of Tola were numbered in their genealogies as mighty men of valor.
2 தோலாவின் புதல்வர்: உசீ, இரபாயா, எரியேல், யாகுமாய், இபிசாம், செமுவேல். தோலாவுக்குப் பிறந்த அவர்கள் தங்கள் மூதாதை வீட்டுத் தலைவர்களாகவும், தங்கள் தலைமுறைகளில் வலிமைமிகு வீரர்களாயும் திகழ்ந்தார்கள். தாவீதின் நாள்களில் அவர்களின் எண்ணிக்கை இருபத்தி இரண்டாயிரத்து ஐநூறாக இருந்தது.

3וּבְנֵ֥י עֻזִּ֖י יִֽזְרַֽחְיָ֑ה וּבְנֵ֣י יִֽזְרַֽחְיָ֗ה מִֽיכָאֵ֡ל וְ֠עֹבַדְיָה וְיוֹאֵ֧ל יִשִּׁיָּ֛ה חֲמִשָּׁ֖ה רָאשִׁ֥ים כֻּלָּֽם׃

3 ஊசியின் குமாரரில் ஒருவன் இஸ்ரகியா; இஸ்ரகியாவின் குமாரர், மிகாயேல், ஒபதியா, யோவேல், இஷியா என்பவர்கள்; இவர்கள் ஐந்துபேரும் தலைவராயிருந்தார்கள்.
3 The son of Uzzi: Izrahiah. The sons of Izrahiah: Michael, Obadiah, Joel, and Isshiah. All five of them were chiefs.
3 உசீயின் புதல்வர்: இஸ்ரகியா, அவர்தம் புதல்வர்களான மிகேல், ஒபதியா, யோவேல், இசியா என்னும் ஐவர். அவர்கள் யாவரும் தலைவர்களாய் இருந்தனர்.

4וַעֲלֵיהֶ֨ם לְתֹלְדוֹתָ֜ם לְבֵ֣ית אֲבוֹתָ֗ם גְּדוּדֵי֙ צְבָ֣א מִלְחָמָ֔ה שְׁלֹשִׁ֥ים וְשִׁשָּׁ֖ה אָ֑לֶף כִּֽי־הִרְבּ֥וּ נָשִׁ֖ים וּבָנִֽים׃

4 அவர்கள் பிதாக்கள் வம்சத்தாரானவர்கள் சந்ததிகளில் யுத்தமனுஷரான கூட்டங்கள் முப்பத்தாறாயிரம்பேர் அவர்களோடிருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் பெண்ஜாதிகளும் பிள்ளைகளும் இருந்தார்கள்.
4 In addition to them, according to their genealogy, they had 36,000 troops for battle, for they had many wives and children.
4 அவர்கள் மூதாதையர் குடும்பங்களின் தலைமுறை அட்டவணைப்படி போர் அணிகளில் முப்பத்தாறாயிரம் வீரர்கள் இருந்தனர். ஏனெனில், அவர்களுக்கு மனைவியரும் புதல்வரும் ஏராளமாய் இருந்தனர்.

5וַאֲחֵיהֶ֗ם לְכֹל֙ מִשְׁפְּח֣וֹת יִשָׂשכָ֔ר גִּבּוֹרֵ֖י חֲיָלִ֑ים שְׁמוֹנִ֤ים וְשִׁבְעָה֙ אֶ֔לֶף הִתְיַחְשָׂ֖ם לַכֹּֽל׃

5 இசக்காருடைய மற்ற எல்லா வம்சங்களிலும் அவர்களுக்குச் சகோதரரான பராக்கிரமசாலிகள் தங்கள் வம்ச அட்டவணைகளின்படியெல்லாம் எண்பத்தேழாயிரம்பேராயிருந்தார்கள்.
5 Their kinsmen belonging to all the families of Issachar who were mighty men of valor totaled 87,000, as listed in their genealogies.
5 இசக்காரின் அனைத்துக் குடும்பங்களின் உறவின்முறையில் வலிமைமிகு வீரர்கள் யாவரும் வழிமரபு அட்டவணையின்படி எண்பத்தேழாயிரம் பேர்.

The Descendants of Benjamin

6בִּנְיָמִ֗ן בֶּ֧לַע וָבֶ֛כֶר וִידִֽיעֲאֵ֖ל שְׁלֹשָֽׁה׃

6 பென்யமீன் குமாரர், பேலா, பெகேர், யெதியாயேல் என்னும் மூன்றுபேர்.
6 The three sons of Benjamin: Bela, Becher, and Jediael.
6 பென்யிமினின் புதல்வர்: பேலா, பெக்கேர், எதியேல் என்னும் மூவர்.

7וּבְנֵ֣י בֶ֗לַע אֶצְבּ֡וֹן וְעֻזִּ֡י וְ֠עֻזִּיאֵל וִירִימ֨וֹת וְעִירִ֜י חֲמִשָּׁ֗ה רָאשֵׁי֙ בֵּ֣ית אָב֔וֹת גִּבּוֹרֵ֖י חֲיָלִ֑ים וְהִתְיַחְשָׂ֗ם עֶשְׂרִ֤ים וּשְׁנַ֙יִם֙ אֶ֔לֶף וּשְׁלֹשִׁ֖ים וְאַרְבָּעָֽה׃

7 பேலாவின் குமாரர், எஸ்போன், ஊசி, ஊசியேல், யெரிமோத், இரி என்பவர்கள்; இவர்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தில் பராக்கிரமசாலிகளான ஐந்து தலைவராயிருந்தார்கள்; இவர்கள் வம்ச அட்டவணைக்குள்ளானவர்கள் இருபத்தீராயிரத்து முப்பத்துநாலுபேர்.
7 The sons of Bela: Ezbon, Uzzi, Uzziel, Jerimoth, and Iri, heads of their families—five in all. There were 22,034 mighty men of valor listed in their genealogies.
7 பேலாவின் புதல்வர்: எட்சவோன், உசீ, உசியேல், எரிமோத்து, ஈரி என்னும் ஐவர். அவர்கள் தங்கள் மூதாதையர் வீட்டுத் தலைவர்களாயும் வலிமை மிகு வீரர்களாயும் திகழ்தனர். அவர்களுள் வழிமரபு அட்டவணையில் குறிக்கப்படடோர் இருபத்து இரண்டாயிரத்து முப்பத்து நான்கு.

8וּבְנֵ֣י בֶ֗כֶר זְמִירָ֡ה וְיוֹעָ֡שׁ וֶ֠אֱלִיעֶזֶר וְאֶלְיוֹעֵינַ֤י וְעָמְרִי֙ וִירֵמ֣וֹת וַאֲבִיָּ֔ה וַעֲנָת֖וֹת וְעָלָ֑מֶת כָּל־אֵ֖לֶּה בְּנֵי־בָֽכֶר׃

8 பெகேரின் குமாரர், செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, யெரிமோத், அபியா, ஆனதோத், அலமேத் என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் பெகேரின் குமாரர்.
8 The sons of Becher: Zemirah, Joash, Eliezer, Elioenai, Omri, Jeremoth, Abijah, Anathoth, and Alemeth; all these were Becher’s sons.
8 பெக்கேரின் புதல்வர்: செமிரா, யோவாசு, எலியேசர், எல்யோவனாய், ஓம்ரி, எரேமோத்து, அபியா, அனத்தோத்து, அலமேத்து. இவர்கள் யாவரும் பெக்கேரின் புதல்வர்.

9וְהִתְיַחְשָׂ֣ם לְתֹלְדוֹתָ֗ם רָאשֵׁי֙ בֵּ֣ית אֲבוֹתָ֔ם גִּבּוֹרֵ֖י חָ֑יִל עֶשְׂרִ֥ים אֶ֖לֶף וּמָאתָֽיִם׃

9 தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவராகிய அவர்கள் சந்ததிகளின் அட்டவணைக்குள்ளான பராக்கிரமாலிகள் இருபதினாயிரத்து இருநூறுபேர்.
9 Their genealogies were recorded according to the heads of their families—20,200 mighty men of valor.
9 அவர்களின் தலைமுறை அட்டவணைப்படி தங்கள் மூதாதையர் வீட்டுத் தலைவர்களாகவும் வலிமைமிகு வீரர்களாகவும் திகழ்ந்தோரின் எண்ணிக்கை இருபத்து இரண்டாயிரத்து இருநூறு.

10וּבְנֵ֥י יְדִיעֲאֵ֖ל בִּלְהָ֑ן וּבְנֵ֣י בִלְהָ֗ן יעיש וּ֠בִנְיָמִן וְאֵה֤וּד וּֽכְנַעֲנָה֙ וְזֵיתָ֔ן וְתַרְשִׁ֖ישׁ וַאֲחִישָֽׁחַר׃

10 யெதியாயேலின் குமாரரில் ஒருவன் பில்கான்; பில்கானின் குமாரர், ஏயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் என்பவர்கள்.
10 The son of Jediael: Bilhan. The sons of Bilhan: Jeush, Benjamin, Ehud, Chenaanah, Zethan, Tarshish, and Ahishahar.
10 எதியேலின் புதல்வர்: பில்கான்; பில்கானின் புதல்வர்: எயூசு, பென்யமின், ஏகூது, கெனானா, சேத்தான், தர்சீசு, அகிசாகர்.

11כָּל־אֵ֜לֶּה בְּנֵ֤י יְדִֽיעֲאֵל֙ לְרָאשֵׁ֣י הָאָב֔וֹת גִּבּוֹרֵ֖י חֲיָלִ֑ים שִׁבְעָֽה־עָשָׂ֥ר אֶ֙לֶף֙ וּמָאתַ֔יִם יֹצְאֵ֥י צָבָ֖א לַמִּלְחָמָֽה׃

11 யெதியாயேலின் குமாரராகிய இவர்கள் எல்லாரும் தங்கள் பிதாக்கள் வம்சத்தாரில் தலைவராயிருந்தார்கள்; இவர்களில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரான பராக்கிரமசாலிகள் பதினேழாயிரத்து இருநூறுபேர்.
11 All these sons of Jediael were heads of their families, mighty men of valor; there were 17,200 fit for battle.
11 எதியேலின் புதல்வரான இவர்கள் யாவரும் தம் மூதாதையர் வீட்டுத் தலைவர்களாகவும், போருக்குச் செல்லத்தக்க வலிமைமிகு வீரர்களாகவும் திகழ்ந்தார்கள். அவர்களின் எண்ணிக்கை பதினேழாயிரத்து இருநூறு.

12וְשֻׁפִּ֤ם וְחֻפִּם֙ בְּנֵ֣י עִ֔יר חֻשִׁ֖ם בְּנֵ֥י אַחֵֽר׃

12 சுப்பீமும், உப்பீமும் ஈரின் குமாரர், ஊசிம் ஆகேரின் குமாரரில் ஒருவன்.
12 The Shuppites and Huppites were descendants of Ir, and the Hushites were descendants of Aher.
12 சுப்பிமும் குப்பிமும் ஈரின் புதல்வர்கள். ஊசிம் அகேரின் புதல்வர்.

The Descendants of Naphtali

13בְּנֵ֣י נַפְתָּלִ֗י יַחֲצִיאֵ֧ל וְגוּנִ֛י וְיֵ֥צֶר וְשַׁלּ֖וּם בְּנֵ֥י בִלְהָֽה׃

13 நப்தலியின் குமாரரான பில்காளின் பேரன்மார், யாத்சியேல், கூனி, எத்சேர், சல்லூம் என்பவர்கள்.
13 The sons of Naphtali: Jahziel, Guni, Jezer, and Shallum—the descendants of Bilhah.
13 நப்தலி புதல்வர்: யாட்சியேல், கூனி, எட்சேர், சல்லூம்; இவர்கள் பில்காவின் பேரப்பிள்ளைகள்.

The Descendants of Manasseh

14בְּנֵ֣י מְנַשֶּׁ֔ה אַשְׂרִיאֵ֖ל אֲשֶׁ֣ר יָלָ֑דָה פִּֽילַגְשׁוֹ֙ הָֽאֲרַמִּיָּ֔ה יָלְדָ֕ה אֶת־מָכִ֖יר אֲבִ֥י גִלְעָֽד׃

14 மனாசேயின் புத்திரரில் ஒருவன் குலஸ்திரீயினிடத்தில் பிறந்த அஸ்ரியேல்; அவன் மறுமனையாட்டியாகிய அராமிய ஸ்திரீயினிடத்தில் கீலேயாத்தின் தகப்பனாகிய மாகீர் பிறந்தான்.
14 The descendants of Manasseh: Through his Aramean concubine, Asriel, as well as Machir the father of Gilead.
14 மனாசேயின் புதல்வர்: அவரின் அரமேயமறுமனைவி பெற்றெடுத்த அஸ்ரியேல், கிலயாதின் மூதாமையான மாக்கீர்.

15וּמָכִ֞יר לָקַ֤ח אִשָּׁה֙ לְחֻפִּ֣ים וּלְשֻׁפִּ֔ים וְשֵׁ֤ם אֲחֹתוֹ֙ מַעֲכָ֔ה וְשֵׁ֥ם הַשֵּׁנִ֖י צְלָפְחָ֑ד וַתִּהְיֶ֥נָה לִצְלָפְחָ֖ד בָּנֽוֹת׃

15 மாகீர் மாக்காள் என்னும் பேருள்ள உப்பீம் சுப்பீம் என்பவர்களின் சகோதரியை விவாகம்பண்ணினான்; மனாசேயின் இரண்டாம் குமாரன் செலோப்பியாத்; செலோப்பியாத்திற்குக் குமாரத்திகளிருந்தார்கள்.
15 Machir took a wife from among the Huppites and Shuppites. The name of his sister was Maacah. Another descendant was named Zelophehad, who had only daughters.
15 குப்பிம், சுப்பிம் ஆகியோருக்கு மாக்கிர் பெண்களை மணமுடித்து வைத்தார். அவர் சகோதரியின் பெயர் மாக்கா. மனாசேயின் இரண்டாம் புதல்வர் பெயர் செலோபுகாது. சேலோபுகாதிற்குப் புதல்வியர் இருந்தனர்.

16וַתֵּ֨לֶד מַעֲכָ֤ה אֵֽשֶׁת־מָכִיר֙ בֵּ֔ן וַתִּקְרָ֤א שְׁמוֹ֙ פֶּ֔רֶשׁ וְשֵׁ֥ם אָחִ֖יו שָׁ֑רֶשׁ וּבָנָ֖יו אוּלָ֥ם וָרָֽקֶם׃

16 மாகீரின் பெண்ஜாதியாகிய மாக்காள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பேரேஸ் என்று பேரிட்டாள்; இவன் சகோதரன் பேர் சேரேஸ்; இவனுடைய குமாரர் ஊலாம், ரேகேம் என்பவர்கள்.
16 Machir’s wife Maacah gave birth to a son, and she named him Peresh. His brother was named Sheresh, and his sons were Ulam and Rekem.
16 மாக்கிரின் மனைவி மாக்கா ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்து அதற்குப் பெரேட்சு என்று பெயரிட்டார். அவர் சகோதரர் பெயர் செரேசு. பெரேட்சியின் புதல்வர்: ஊலாம், இரக்கேம்.

17וּבְנֵ֥י אוּלָ֖ם בְּדָ֑ן אֵ֚לֶּה בְּנֵ֣י גִלְעָ֔ד בֶּן־מָכִ֖יר בֶּן־מְנַשֶּֽׁה׃

17 ஊலாமின் குமாரரில் ஒருவன் பேதான்; இவர்கள் மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத் புத்திரர்.
17 The son of Ulam: Bedan. These were the sons of Gilead son of Machir, the son of Manasseh.
17 ஊலாமின் புதல்வர்: பெதான். இவர்கள் மனாசே மகன் மாக்கிருக்குப் பிறந்த கிலயாதின் புதல்வர்.

18וַאֲחֹת֖וֹ הַמֹּלֶ֑כֶת יָלְדָה֙ אֶת־אִישְׁה֔וֹד וְאֶת־אֲבִיעֶ֖זֶר וְאֶת־מַחְלָֽה׃

18 இவன் சகோதரியாகிய அம்மொளெகேத் இஸ்கோதையும் அபியேசரையும் மாகலாவையும் பெற்றாள்.
18 His sister Hammolecheth gave birth to Ishhod, Abiezer, and Mahlah.
18 கிலயாதின் சகோதரி அம்மோலக்கேத்து பெற்றெடுத்தவர்; இஸ்கோது, அபியேசர், மக்லா.

19וַיִּהְי֖וּ בְּנֵ֣י שְׁמִידָ֑ע אַחְיָ֣ן וָשֶׁ֔כֶם וְלִקְחִ֖י וַאֲנִיעָֽם׃

19 செமிதாவின் குமாரர், அகியான், சேகேம், லிக்கே, அனியாம் என்பவர்கள்.
19 And these were the sons of Shemida: Ahian, Shechem, Likhi, and Aniam.
19 செமிதாவின் புதல்வர்: அகியான், செக்கேம், இலிக்கி, அனியாம்.

The Descendants of Ephraim

20וּבְנֵ֥י אֶפְרַ֖יִם שׁוּתָ֑לַח וּבֶ֤רֶד בְּנוֹ֙ וְתַ֣חַת בְּנ֔וֹ וְאֶלְעָדָ֥ה בְנ֖וֹ וְתַ֥חַת בְּנֽוֹ׃

20 எப்பிராயீமின் குமாரரில் ஒருவன் சுத்தெலாக்; இவனுடைய குமாரன் பேரேத்; இவனுடைய குமாரன் தாகாத்; இவனுடைய குமாரன் எலாதா; இவனுடைய குமாரன் தாகாத்.
20 The descendants of Ephraim: Shuthelah, Bered his son, Tahath his son, Eleadah his son, Tahath his son,
20 எப்ராயிமின் புதல்வர்: சுத்தெலாகு; அவர் மகன் பெரேது; அவர் மகன் தகாத்து; அவர் மகன் எலயாதா; அவர் மகன் தகாத்து;

21וְזָבָ֥ד בְּנ֛וֹ וְשׁוּתֶ֥לַח בְּנ֖וֹ וְעֵ֣זֶר וְאֶלְעָ֑ד וַהֲרָג֗וּם אַנְשֵׁי־גַת֙ הַנּוֹלָדִ֣ים בָּאָ֔רֶץ כִּ֣י יָרְד֔וּ לָקַ֖חַת אֶת־מִקְנֵיהֶֽם׃

21 இவனுடைய குமாரன் சாபாத்; இவனுடைய குமாரர் கத்தெலாக், எத்சேர், எலியாத்; இவர்கள் தேசத்தில் பிறந்த காத்தூராருடைய ஆடுமாடுகளைப் பிடிக்கப்போனபடியால் அவர்கள் இவர்களைக் கொன்றுபோட்டார்கள்.
21 Zabad his son, and Shuthelah his son. Ezer and Elead were killed by the natives of Gath, because they went down to steal their livestock.
21 அவர் மகன் சாபாது; அவர் மகன் சுத்தெலாகு; மற்றும் எட்சேர், எலயாது. இவர்கள் கால்நடைகளைக் கவர்ந்து கொள்ளச் சென்றபொழுது அந்நாட்டில் பிறந்து வாழ்ந்த காத்தின் புதல்வரால் கொல்லப்பட்டார்கள்.

22וַיִּתְאַבֵּ֛ל אֶפְרַ֥יִם אֲבִיהֶ֖ם יָמִ֣ים רַבִּ֑ים וַיָּבֹ֥אוּ אֶחָ֖יו לְנַחֲמֽוֹ׃

22 அவர்கள் தகப்பனாகிய எப்பிராயீம் அநேகநாள் துக்கங்கொண்டாடுகையில், அவன் சகோதரர் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்தார்கள்.
22 Their father Ephraim mourned for many days, and his relatives came to comfort him.
22 அவர்களின் தந்தை எப்ராயிம் பல நாள்களாகப் புலம்பியழுதார். அவர்களின் சகோதரர் அவருக்கு ஆறுதல் கூற வந்தனர்.

23וַיָּבֹא֙ אֶל־אִשְׁתּ֔וֹ וַתַּ֖הַר וַתֵּ֣לֶד בֵּ֑ן וַיִּקְרָ֤א אֶת־שְׁמוֹ֙ בְּרִיעָ֔ה כִּ֥י בְרָעָ֖ה הָיְתָ֥ה בְּבֵיתֽוֹ׃

23 பின்பு அவன் தன் பெண்ஜாதியினிடத்தில் பிரவேசித்ததினால், அவள் கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெற்றாள்; அவன், தன் குடும்பத்துக்குத் தீங்கு உண்டானதினால், இவனுக்குப் பெரீயா என்று பேரிட்டான்.
23 And again he slept with his wife, and she conceived and gave birth to a son. So he named him Beriah, because tragedy had come upon his house.
23 எப்ராயிம் தம் மனைவியுடன் உறவு கொண்டார். அவர் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தார். அவர் அவருக்குப் பெரியா என்று பெயரிட்டார். ஏனெனில், தீங்கு அவர் வீட்டை வந்தடைந்தது.

24וּבִתּ֣וֹ שֶׁאֱרָ֔ה וַתִּ֧בֶן אֶת־בֵּית־חוֹר֛וֹן הַתַּחְתּ֖וֹן וְאֶת־הָעֶלְי֑וֹן וְאֵ֖ת אֻזֵּ֥ן שֶׁאֱרָֽה׃

24 இவனுடைய குமாரத்தியாகிய சேராள் கீழ்ப்புறமும் மேற்புறமுமான பெத்தோரோனையும், ஊசேன்சேராவையும் கட்டினவள்.
24 His daughter was Sheerah, who built Lower and Upper Beth-horon, as well as Uzzen-sheerah.
24 எப்ராயிமின் மகள் செயேரா, கீழ்-மேல் பெத்கோரோனையும் உசேன்செயேராவையும் கட்டியெழுப்பினார்.

25וְרֶ֣פַח בְּנ֗וֹ וְרֶ֧שֶׁף וְתֶ֛לַח בְּנ֖וֹ וְתַ֥חַן בְּנֽוֹ׃

25 அவனுடைய குமாரர், ரேப்பாக், ரேசேப் என்பவர்கள்; இவனுடைய குமாரன் தேலாக்; இவனுடைய குமாரன் தாகான்.
25 Additionally, Rephah was his son, Resheph his son, Telah his son, Tahan his son,
25 எப்ராயிமின் மற்றப் புதல்வர்: அவர் மகன் இரபாகு; மற்றும் இரசேபு; அவர் மகன் தெலாகு; அவர் மகன் தாகான்;

26לַעְדָּ֥ן בְּנ֛וֹ עַמִּיה֥וּד בְּנ֖וֹ אֱלִישָׁמָ֥ע בְּנֽוֹ׃

26 இவனுடைய குமாரன் லாதான், இவனுடைய குமாரன் அம்மியூத்; இவனுடைய குமாரன் எலிஷாமா.
26 Ladan his son, Ammihud his son, Elishama his son,
26 அவர் மகன் லாதான்; அவர் மகன் அம்மிகூது; அவர் மகன் எலிசாமா;

27נ֥וֹן בְּנ֖וֹ יְהוֹשֻׁ֥עַ בְּנֽוֹ׃

27 இவனுடைய குமாரன் நூன்: இவனுடைய குமாரன் யோசுவா.
27 Nun his son, and Joshua his son.
27 அவர் மகன் நூன்; அவர் மகன் யோசுவா.

28וַאֲחֻזָּתָם֙ וּמֹ֣שְׁבוֹתָ֔ם בֵּֽית־אֵ֖ל וּבְנֹתֶ֑יהָ וְלַמִּזְרָ֣ח נַעֲרָ֔ן וְלַֽמַּעֲרָ֗ב גֶּ֤זֶר וּבְנֹתֶ֙יהָ֙ וּשְׁכֶ֣ם וּבְנֹתֶ֔יהָ עַד־עַיָּ֖ה וּבְנֹתֶֽיהָ׃

28 அவர்களுடைய காணியாட்சியும், வாசஸ்தலங்களும், கிழக்கேயிருக்கிற நாரானும், மேற்கேயிருக்கிற கேசேரும் அதின் கிராமங்களும், பெத்தேலும் அதின் கிராமங்களும், சீகேமும் அதின் கிராமங்களும், காசாமட்டுக்குமுள்ள அதன் கிராமங்களும்,
28 Their holdings and settlements included Bethel and its villages, Naaran to the east, Gezer and its villages to the west, and Shechem and its villages as far as Ayyah and its villages.
28 அவர்கள் உடைமைப் பகுதிகளும் குடியிருப்புகளும் இவையே; பெத்தேல், அதன் சிற்றூர்கள்; கீழ்ப்புறத்தில் நாரான்; மேற்புறத்தில் கெசேர், அதன் சிற்றூர்கள்; செக்கேம், அதன் சிற்றூர்கள்; அய்யா, அதன் சிற்றூர்கள்.

29וְעַל־יְדֵ֣י בְנֵי־מְנַשֶּׁ֗ה בֵּית־שְׁאָ֤ן וּבְנֹתֶ֙יהָ֙ תַּעְנַ֣ךְ וּבְנֹתֶ֔יהָ מְגִדּ֥וֹ וּבְנוֹתֶ֖יהָ דּ֣וֹר וּבְנוֹתֶ֑יהָ בְּאֵ֙לֶּה֙ יָשְׁב֔וּ בְּנֵ֥י יוֹסֵ֖ף בֶּן־יִשְׂרָאֵֽל׃

29 மனாசே புத்திரரின் பக்கத்திலே பெத்செயானும் அதின் கிராமங்களும், தானாகும் அதின் கிராமங்களும், மெகிதோவும் அதின் கிராமங்களும், தோரும் அதின் கிராமங்களுமே; இவ்விடங்களில் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் புத்திரர் குடியிருந்தார்கள்.
29 And along the borders of Manasseh were Beth-shean, Taanach, Megiddo, and Dor, together with their villages. The descendants of Joseph son of Israel lived in these towns.
29 மனாசேயின் புதல்வரை அடுத்துள்ள பகுதிகளில் பெத்சான், அதன் சிற்றூர்கள்; தானாக்கு, அதன் சிற்றூர்கள்; மெகிதோ, அதன் சிற்றூர்கள்; தோர், அதன் சிற்றூர்கள். இவற்றில் இஸ்ரயேலின் மகன் யோசேப்பின் புதல்வர் வாழ்ந்து வந்தனர்.

The Descendants of Asher

30בְּנֵ֣י אָשֵׁ֗ר יִמְנָ֧ה וְיִשְׁוָ֛ה וְיִשְׁוִ֥י וּבְרִיעָ֖ה וְשֶׂ֥רַח אֲחוֹתָֽם׃

30 ஆசேரின் குமாரர், இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்கள் சகோதரி சேராள்.
30 The children of Asher: Imnah, Ishvah, Ishvi, Beriah, and their sister Serah.
30 ஆசேரின் புதல்வர்: இம்னா, இஸ்வா, இஸ்வீ, பெரியா; அவர்களின் சகோதரி செராகு.

31וּבְנֵ֣י בְרִיעָ֔ה חֶ֖בֶר וּמַלְכִּיאֵ֑ל ה֖וּא אֲבִ֥י ברזות

31 பெரீயாவின் குமாரர், ஏபேர், மல்கியேல் என்பவர்கள்; இவன் பிர்சாவீத்தின் தகப்பன்.
31 The sons of Beriah: Heber, as well as Malchiel, who was the father of Birzaith.
31 பெரியாவின் புதல்வர்: எபேர், மல்கியேல், அவர் பிர்சாவித்தின் மூதாதை.

32וְחֶ֙בֶר֙ הוֹלִ֣יד אֶת־יַפְלֵ֔ט וְאֶת־שׁוֹמֵ֖ר וְאֶת־חוֹתָ֑ם וְאֵ֖ת שׁוּעָ֥א אֲחוֹתָֽם׃

32 ஏபேர் யப்லேத்தையும், சோமேரையும், ஒத்தாமையும், இவர்கள் சகோதரியாகிய சூகாளையும் பெற்றான்.
32 Heber was the father of Japhlet, Shomer, and Hotham, and of their sister Shua.
32 ஏபேருக்குப் பிறந்தோர்; யாப்லேற்று, சோமேர், ஓதாம், அவர்களின் சகோதரி சூவா.

33וּבְנֵ֣י יַפְלֵ֔ט פָּסַ֥ךְ וּבִמְהָ֖ל וְעַשְׁוָ֑ת אֵ֖לֶּה בְּנֵ֥י יַפְלֵֽט׃

33 யப்லேத்தின் குமாரர் பாசாக், பிம்மால், அஸ்வாத் என்பவர்கள்; இவர்களே யப்லேத்தின் குமாரர்.
33 The sons of Japhlet: Pasach, Bimhal, and Ashvath. These were Japhlet’s sons.
33 யாப்லேற்றின் புதல்வர்: பாசாக்கு, பிம்கால், அஸ்வாத்து; இவர்கள் யாப்லேற்றின் புதல்வர்.

34וּבְנֵ֖י שָׁ֑מֶר אֲחִ֥י ורוהגה יחבה וַאֲרָֽם׃

34 சோமேரின் குமாரர் அகி, ரோகா, எகூபா, ஆராம் என்பவர்கள்.
34 The sons of Shemer: Ahi, Rohgah, Hubbah, and Aram.
34 செமேரின் புதல்வர்: அகீ, ரோககா, எகுபா, ஆராம்.

35וּבֶן־הֵ֖לֶם אָחִ֑יו צוֹפַ֥ח וְיִמְנָ֖ע וְשֵׁ֥לֶשׁ וְעָמָֽל׃

35 அவன் சகோதரனாகிய ஏலேமின் குமாரர், சோபாக், இம்னா, சேலேஸ், ஆமால் என்பவர்கள்.
35 The sons of his brother Helem: Zophah, Imna, Shelesh, and Amal.
35 அவர் சகோதரர் ஏலேமின் புதல்வர்: சோப்பாகு, இம்னா, சேலேசு, ஆமால்.

36בְּנֵ֖י צוֹפָ֑ח ס֧וּחַ וְחַרְנֶ֛פֶר וְשׁוּעָ֖ל וּבֵרִ֥י וְיִמְרָֽה׃

36 சோபாக்கின் குமாரர், சூவாக், அர்னெப்பர், சூகால், பேரி, இம்ரா,
36 The sons of Zophah: Suah, Harnepher, Shual, Beri, Imrah,
36 சோப்பாகின் புதல்வர்: சூவாகு, கர்னப்பேர், சூவால், பேரி, இம்ரா.

37בֶּ֣צֶר וָה֗וֹד וְשַׁמָּ֧א וְשִׁלְשָׁ֛ה וְיִתְרָ֖ן וּבְאֵרָֽא׃

37 பேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா என்பவர்கள்.
37 Bezer, Hod, Shamma, Shilshah, Ithran, and Beera.
37 பெட்சேர், ஓது, சம்மா, சில்சா, இத்ரான், பெயேரா.

38וּבְנֵ֖י יֶ֑תֶר יְפֻנֶּ֥ה וּפִסְפָּ֖ה וַאְרָֽא׃

38 யெத்தேரின் குமாரர், எப்புன்னே, பிஸ்பா, ஆரா என்பவர்கள்.
38 The sons of Jether: Jephunneh, Pispa, and Ara.
38 எத்தேரின் புதல்வர்: எபுன்னே, பிஸ்பா, அரா.

39וּבְנֵ֖י עֻלָּ֑א אָרַ֥ח וְחַנִּיאֵ֖ל וְרִצְיָֽא׃

39 உல்லாவின் குமாரர், ஆராக், அன்னியேல், ரித்சியா என்பவர்கள்.
39 The sons of Ulla: Arah, Hanniel, and Rizia.
39 உல்லாவின் புதல்வர்: ஆராகு, அன்னியேல், ரிட்சியா.

40כָּל־אֵ֣לֶּה בְנֵי־אָ֠שֵׁר רָאשֵׁ֨י בֵית־הָאָב֤וֹת בְּרוּרִים֙ גִּבּוֹרֵ֣י חֲיָלִ֔ים רָאשֵׁ֖י הַנְּשִׂיאִ֑ים וְהִתְיַחְשָׂ֤ם בַּצָּבָא֙ בַּמִּלְחָמָ֔ה מִסְפָּרָ֣ם אֲנָשִׁ֔ים עֶשְׂרִ֥ים וְשִׁשָּׁ֖ה אָֽלֶף׃

40 ஆசேரின் புத்திரராகிய இவர்கள் எல்லாரும் தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவரும் தெரிந்துகொள்ளப்பட்ட பராக்கிரமசாலிகளும், பிரபுக்களின் தலைவருமாயிருந்தார்கள்; அவர்கள் வம்ச அட்டவணைகளில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரின் இலக்கம் இருபத்தாறாயிரம்பேர்.
40 All these were the descendants of Asher—heads of their families, choice and mighty men of valor, and chiefs among the leaders. The number of men fit for battle, recorded in their genealogies, was 26,000.
40 ஆசேர் புதல்வருள் இவர்கள் யாவரும் தங்கள் மூதாதையர், வீட்டுத் தலைவர்களும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் வலிமைமிகு வீரர்களும் தலைவர்களுள் முதல்வருமாய் இருந்தார்கள். அவர்கள் தலைமுறை அட்டவணைகளில் போருக்குச் செல்லத்தக்க படை வீரரின் எண்ணிக்கை இருபத்தாறாயிரம்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

1 Chronicles Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29

Footnotes:
1 a Puah  is a variant of Puvah ; see Genesis 46:13 and Numbers 26:23.
3 b Hebrew sons ; also in verses 10 and 17
13 c Jahziel  is a variant of Jahzeel ; see Genesis 46:24.
13 d Most Hebrew manuscripts; some Hebrew and LXX manuscripts Shillem ; see Genesis 46:24 and Numbers 26:49.
23 e Beriah  sounds like the Hebrew for tragedy  or disaster .
25 f Some LXX manuscripts; Hebrew does not include his son .
27 g Or Non
28 h Ayyah  is another name for  Gaza ; see also LXX.
29 i Beth-shean  is a variant of Beth-shan ; see 1 Samuel 31:10 and 2 Samuel 21:12.
34 j Or The sons of his brother Shemer: Rohgah ; note that Shemer  is a variant of Shomer ; see verse 32.
35 k Helem  is possibly another name for Hotham ; see verse 32.
37 l Ithran  is possibly a variant of Jether ; see verse 38.

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.