பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

1 Chronicles  1 நாளாகமம்  דִבְרֵי הַיָמִים א

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29

1 நாளாகமம் 24 | 1 Chronicles 24

Twenty-Four Divisions of Priests

1וְלִבְנֵ֥י אַהֲרֹ֖ן מַחְלְקוֹתָ֑ם בְּנֵ֣י אַהֲרֹ֔ן נָדָב֙ וַאֲבִיה֔וּא אֶלְעָזָ֖ר וְאִיתָמָֽר׃

1 ஆரோன் புத்திரரின் வகுப்புகளாவன: ஆரோனின் குமாரர், நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.
1 These were the divisions of the descendants of Aaron. The sons of Aaron were Nadab, Abihu, Eleazar, and Ithamar.
1 ஆரோனின் புதல்வர்தம் பிரிவுகளாவன:ஆரோனின் புதல்வர் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர்.

2וַיָּ֨מָת נָדָ֤ב וַאֲבִיהוּא֙ לִפְנֵ֣י אֲבִיהֶ֔ם וּבָנִ֖ים לֹא־הָי֣וּ לָהֶ֑ם וַֽיְכַהֲנ֔וּ אֶלְעָזָ֖ר וְאִיתָמָֽר׃

2 நாதாபும் அபியூவும் குமாரர் இல்லாமல் தங்கள் தகப்பனுக்கு முன்னே மரித்தபடியினால், எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.
2 But Nadab and Abihu died before their father did, and they had no sons; so Eleazar and Ithamar served as priests.
2 நாதாபும், அபிகூவும் புதல்வரின்றி அவர்கள் தந்தைக்கு முன்னரே இறந்து போயினர். எலயாசரும், இத்தாமரும் குருக்களாகப் பணி செய்தனர்.

3וַיֶּֽחָלְקֵ֣ם דָּוִ֔יד וְצָדוֹק֙ מִן־בְּנֵ֣י אֶלְעָזָ֔ר וַאֲחִימֶ֖לֶךְ מִן־בְּנֵ֣י אִיתָמָ֑ר לִפְקֻדָּתָ֖ם בַּעֲבֹדָתָֽם׃

3 தாவீது சாதோக்கைக்கொண்டு எலெயாசாரின் புத்திரரையும், அகிமெலேக்கைக்கொண்டு இத்தாமாரின் புத்திரரையும் அவர்கள் செய்யவேண்டிய ஊழியத்துக்கு முறைப்படி அவர்களை வகுத்தான்.
3 With the help of Eleazar’s descendant Zadok and Ithamar’s descendant Ahimelech, David divided them according to the offices of their service.
3 தாவீது எலயாசரின் குடும்பத்தைச் சார்ந்த சாதோக்கு, இத்தாமர் குடும்பத்தைச் சார்ந்த அகிமெலக்கு ஆகியோரின் துணைகொண்டு பதவிவாரியாகவும் பணிவாரியாகவும் அவர்களில் பிரிவுகளை ஏற்படுத்தினார்.

4וַיִּמָּצְא֣וּ בְֽנֵי־אֶלְעָזָ֡ר רַבִּ֞ים לְרָאשֵׁ֧י הַגְּבָרִ֛ים מִן־בְּנֵ֥י אִיתָמָ֖ר וַֽיַּחְלְק֑וּם לִבְנֵ֨י אֶלְעָזָ֜ר רָאשִׁ֤ים לְבֵית־אָבוֹת֙ שִׁשָּׁ֣ה עָשָׂ֔ר וְלִבְנֵ֧י אִיתָמָ֛ר לְבֵ֥ית אֲבוֹתָ֖ם שְׁמוֹנָֽה׃

4 அவர்களை வகுக்கிறபோது, இத்தாமாரின் புத்திரரைப்பார்க்கிலும் எலெயாசாரின் புத்திரருக்குள்ளே தலைமையானவர்கள் அதிகமானபேர் காணப்பட்டபடியினால், எலெயாசாரின் புத்திரரில் பதினாறுபேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும், இத்தாமாரின் புத்திரரில் எட்டுப்பேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும் தலைமையாக வைக்கப்பட்டார்கள்.
4 Since more leaders were found among Eleazar’s descendants than those of Ithamar, they were divided accordingly. There were sixteen heads of families from the descendants of Eleazar and eight from the descendants of Ithamar.
4 இத்தாமரின் குடும்பத்தை விட எலயாசரின் குடும்பம் மிகுதியான தலைவர்களைக் கொண்டிருந்தது. எனவே, எலயாசரின் புதல்வரில் பதினாறு பேர் அவர்கள் மூதாதையரின் குடும்பத்துக்கும், இத்தாமரின் புதல்வரில் எட்டுப்பேர் அவர்கள் மூதாதையரின் குடும்பத்துக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

5וַיַּחְלְק֥וּם בְּגוֹרָל֖וֹת אֵ֣לֶּה עִם־אֵ֑לֶּה כִּי־הָי֤וּ שָֽׂרֵי־קֹ֙דֶשׁ֙ וְשָׂרֵ֣י הָאֱלֹהִ֔ים מִבְּנֵ֥י אֶלְעָזָ֖ר וּבִבְנֵ֥י אִיתָמָֽר׃

5 எலெயாசாரின் புத்திரரிலும் இத்தாமாரின் புத்திரரிலும், பரிசுத்த ஸ்தலத்துக்கும், தேவனுக்கு அடுத்த காரியங்களில் பிரபுக்களாயிருக்கும்படிக்கும், இவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம்பண்ணாமல் சீட்டுப்போட்டு அவர்களை வகுத்தார்கள்.
5 Thus they were divided by lot, for there were officers of the sanctuary and officers of God among both Eleazar’s and Ithamar’s descendants.
5 எலயாசர், இத்தாமர் ஆகிய இரு குடும்பங்களின் புதல்வரிலும் திருத்தலத் தலைவர்களும் இறைப்பணித் தலைவர்களும் இருந்தமையால், சீட்டுக் குலுக்கல் முறையில் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன.

6וֽ͏ַיִּכְתְּבֵ֡ם שְֽׁמַֽעְיָה֩ בֶן־נְתַנְאֵ֨ל הַסּוֹפֵ֜ר מִן־הַלֵּוִ֗י לִפְנֵ֨י הַמֶּ֤לֶךְ וְהַשָּׂרִים֙ וְצָד֣וֹק הַכֹּהֵ֗ן וַאֲחִימֶ֙לֶךְ֙ בֶּן־אֶבְיָתָ֔ר וְרָאשֵׁי֙ הָֽאָב֔וֹת לַכֹּהֲנִ֖ים וְלַלְוִיִּ֑ם בֵּֽית־אָ֣ב אֶחָ֗ד אָחֻז֙ לְאֶלְעָזָ֔ר וְאָחֻ֥ז ׀ אָחֻ֖ז לְאִיתָמָֽר׃

6 லேவியரில் சம்பிரதியாகிய செமாயா என்னும் நெதனெயேலின் குமாரன், ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் ஆசாரியனாகிய சாதோக்குக்கும் அபியத்தாரின் குமாரனாகிய அகிமெலேக்குக்கும் ஆசாரியரும் லேவியருமான பிதாக்களின் தலைவருக்கும் முன்பாக அவர்கள் நாமங்களை எழுதினான்; ஒரு பிதாவின் வீட்டுச் சீட்டு எலெயாசாருக்கு விழுந்தது; பின்பு அந்தப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது.
6 The scribe, Shemaiah son of Nethanel, a Levite, recorded their names in the presence of the king and of the officers: Zadok the priest, Ahimelech son of Abiathar, and the heads of families of the priests and the Levites—one family being taken from Eleazar, and then one from Ithamar.
6 நெத்தனியேலின் மகனும் லேவியனும் எழுத்தனுமான செமாயா, அரசர் அலுவலர்கள், குருக்களாகிய சாதோக்கு, அபியத்தாரின் மகன் அகிமெலக்கு, குருத்துவக் குடும்பங்களின் தலைவர்கள், லேவியர் குடும்பங்களின் தலைவர்கள் முன்னிலையில் பதிவுசெய்தான். எலயாசரின் குடும்பத்திற்கும், இத்தாமரின் குடும்பத்திற்கும் சீட்டுப் போடப்பட்டது.

7וַיֵּצֵ֞א הַגּוֹרָ֤ל הָרִאשׁוֹן֙ לִיה֣וֹיָרִ֔יב לִֽידַעְיָ֖ה הַשֵּׁנִֽי׃

7 முதலாவது சீட்டு யோயாரிபின் பேர்வழிக்கும், இரண்டாவது யெதாயாவின் பேர்வழிக்கும்,
7 The first lot fell to Jehoiarib, the second to Jedaiah,
7 சீட்டு விழுந்த முறை; முதல் சீட்டு யோயாரிபுக்கு; இரண்டாம் சீட்டு எதாயாவுக்கு;

8לְחָרִם֙ הַשְּׁלִישִׁ֔י לִשְׂעֹרִ֖ים הָרְבִעִֽי׃

8 மூன்றாவது ஆரிமின் பேர்வழிக்கும், நான்காவது செயோரீமின் பேர்வழிக்கும்,
8 the third to Harim, the fourth to Seorim,
8 மூன்றாவது ஆரிமுக்கு; நான்காவது செயோரிமுக்கு;

9לְמַלְכִּיָּה֙ הַחֲמִישִׁ֔י לְמִיָּמִ֖ן הַשִּׁשִּֽׁי׃

9 ஐந்தாவது மல்கியாவின் பேர்வழிக்கும், ஆறாவது மியாமீனின் பேர்வழிக்கும்,
9 the fifth to Malchijah, the sixth to Mijamin,
9 ஐந்தாவது மல்கியாவுக்கு; ஆறாவது மியாமினுக்கு;

10לְהַקּוֹץ֙ הַשְּׁבִעִ֔י לַאֲבִיָּ֖ה הַשְּׁמִינִֽי׃

10 ஏழாவது அக்கோத்சின் பேர்வழிக்கும், எட்டாவது அபியாவின் பேர்வழிக்கும்,
10 the seventh to Hakkoz, the eighth to Abijah,
10 ஏழாவது அக்கோட்சுக்கு; எட்டாவது அபியாவுக்கு;

11לְיֵשׁ֙וּעַ֙ הַתְּשִׁעִ֔י לִשְׁכַנְיָ֖הוּ הָעֲשִׂרִֽי׃

11 ஒன்பதாவது யெசுவாவின் பேர்வழிக்கும், பத்தாவது செக்கனியாவின் பேர்வழிக்கும்,
11 the ninth to Jeshua, the tenth to Shecaniah,
11 ஒன்பதாவது ஏசுவாவுக்கு; பத்தாவது செக்கனியாவுக்கு;

12לְאֶלְיָשִׁיב֙ עַשְׁתֵּ֣י עָשָׂ֔ר לְיָקִ֖ים שְׁנֵ֥ים עָשָֽׂר׃

12 பதினோராவது எலியாசீபின் பேர்வழிக்கும், பன்னிரண்டாவது யாக்கீமின்பேர்வழிக்கும்,
12 the eleventh to Eliashib, the twelfth to Jakim,
12 பதினொன்றாவது எலியாசிபுக்கு; பன்னிரண்டாவது யாக்கிமுக்கு;

13לְחֻפָּה֙ שְׁלֹשָׁ֣ה עָשָׂ֔ר לְיֶֽשֶׁבְאָ֖ב אַרְבָּעָ֥ה עָשָֽׂר׃

13 பதின்மூன்றாவது உப்பாவின் பேர்வழிக்கும், பதினான்காவது எசெபெயாபின் பேர்வழிக்கும்,
13 the thirteenth to Huppah, the fourteenth to Jeshebeab,
13 பதின்மூன்றாவது உப்பாவுக்கு; பதினான்காவது எசேபயாவுக்கு;

14לְבִלְגָּה֙ חֲמִשָּׁ֣ה עָשָׂ֔ר לְאִמֵּ֖ר שִׁשָּׁ֥ה עָשָֽׂר׃

14 பதினைந்தாவது பில்காவின் பேர்வழிக்கும், பதினாறாவது இம்மேரின் பேர்வழிக்கும்,
14 the fifteenth to Bilgah, the sixteenth to Immer,
14 பதினைந்தாவது பில்காவுக்கு; பதினாறாவது இம்மேருக்கு;

15לְחֵזִיר֙ שִׁבְעָ֣ה עָשָׂ֔ר לְהַפִּצֵּ֖ץ שְׁמוֹנָ֥ה עָשָֽׂר׃

15 பதினேழாவது ஏசீரின் பேர்வழிக்கும், பதினெட்டாவது அப்சேசின் பேர்வழிக்கும்,
15 the seventeenth to Hezir, the eighteenth to Happizzez,
15 பதினேழாவது ஏசீருக்கு; பதினெட்டாவது அப்பிசேசுக்கு;

16לִֽפְתַחְיָה֙ תִּשְׁעָ֣ה עָשָׂ֔ר לִֽיחֶזְקֵ֖אל הָעֶשְׂרִֽים׃

16 பத்தொன்பதாவது பெத்தகியாவின் பேர்வழிக்கும், இருபதாவது எகெசெக்கியேலின் பேர்வழிக்கும்,
16 the nineteenth to Pethahiah, the twentieth to Jehezkel,
16 பத்தொன்பதாவது பெத்தகியாவுக்கு; இருபதாவது எசக்கேலுக்கு;

17לְיָכִין֙ אֶחָ֣ד וְעֶשְׂרִ֔ים לְגָמ֖וּל שְׁנַ֥יִם וְעֶשְׂרִֽים׃

17 இருபத்தோராவது யாகினின் பேர்வழிக்கும், இருபத்திரண்டாவது காமுவேலின் பேர்வழிக்கும்,
17 the twenty-first to Jachin, the twenty-second to Gamul,
17 இருபத்தொன்றாவது யாக்கினுக்கு; இருபத்திரண்டாவது காமுலுக்கு;

18לִדְלָיָ֙הוּ֙ שְׁלֹשָׁ֣ה וְעֶשְׂרִ֔ים לְמַֽעַזְיָ֖הוּ אַרְבָּעָ֥ה וְעֶשְׂרִֽים׃

18 இருபத்துமூன்றாவது தெலாயாவின் பேர்வழிக்கும், இருபத்துநான்காவது மாசியாவின் பேர்வழிக்கும் விழுந்தது.
18 the twenty-third to Delaiah, and the twenty-fourth to Maaziah.
18 இருபத்து மூன்றாவது தெலாயாவுக்கு; இருபத்து நான்காவது மாசியாவுக்கு.

19אֵ֣לֶּה פְקֻדָּתָ֞ם לַעֲבֹדָתָ֗ם לָב֤וֹא לְבֵית־יְהוָה֙ כְּמִשְׁפָּטָ֔ם בְּיַ֖ד אַהֲרֹ֣ן אֲבִיהֶ֑ם כַּאֲשֶׁ֣ר צִוָּ֔הוּ יְהוָ֖ה אֱלֹהֵ֥י יִשְׂרָאֵֽל׃

19 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்கள் தகப்பனாகிய ஆரோனுக்குக் கற்பித்தபடியே, அவர்கள் அவனுடைய கட்டளையின்பிரகாரம், தங்கள் முறைவரிசைகளில் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் அவர்களுடைய ஊழியத்திற்காகப் பண்ணப்பட்ட வகுப்புகள் இவைகளே.
19 This was their appointed order for service when they entered the house of the LORD, according to the regulations prescribed for them by their forefather Aaron, as the LORD, the God of Israel, had commanded him.
19 இவர்களே தங்கள் மூதாதையாகிய ஆரோன் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து தந்த விதிமுறைகளை, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புக்கேற்ற வரிசை முறைப்படி ஆண்டவரின் இல்லம் சென்று, அங்கு நிறைவேற்றுவதற்காகப் பதிவு செய்யப்பட்டவர்கள்.

The Rest of the Levites

20וְלִבְנֵ֥י לֵוִ֖י הַנּוֹתָרִ֑ים לִבְנֵ֤י עַמְרָם֙ שֽׁוּבָאֵ֔ל לִבְנֵ֥י שׁוּבָאֵ֖ל יֶחְדְּיָֽהוּ׃

20 லேவியின் மற்றப் புத்திரருக்குள்ளே இருக்கிற அம்ராமின் புத்திரரில் சூபவேலும், சூபவேலின் குமாரரில் எகேதியாவும்,
20 Now these were the remaining descendants of Levi: From the sons of Amram: Shubael; from the sons of Shubael: Jehdeiah.
20 எஞ்சிய லேவியின் மக்களுள், அம்ராமின் புதல்வருள் சூபாவேல்; சூபாவேலின் புதல்வருள் எகதியா;

21לִרְחַבְיָ֑הוּ לִבְנֵ֣י רְחַבְיָ֔הוּ הָרֹ֖אשׁ יִשִּׁיָּֽה׃

21 ரெகபியாவின் குமாரரில் மூத்தவனாகிய இஷியாவும்,
21 As for Rehabiah, from his sons: The first was Isshiah.
21 இரகபியாவின் புதல்வர்களுள் இசியா தலைவராய் இருந்தார்.

22לַיִּצְהָרִ֣י שְׁלֹמ֔וֹת לִבְנֵ֥י שְׁלֹמ֖וֹת יָֽחַת׃

22 இத்சாரியரில் செலெமோத்தும், செலெமோத்தின் குமாரரில் யாகாத்தும்,
22 From the Izharites: Shelomoth; from the sons of Shelomoth: Jahath.
22 இசுராகியரில் செலமோத்தும், செலமோத்தின் புதல்வருள் யாகாத்தும்;

23וּבְנָ֖י יְרִיָּ֑הוּ אֲמַרְיָ֙הוּ֙ הַשֵּׁנִ֔י יַחֲזִיאֵל֙ הַשְּׁלִישִׁ֔י יְקַמְעָ֖ם הָרְבִיעִֽי׃

23 எப்ரோனின் குமாரரில் மூத்தவனாகிய எரியாவும், இரண்டாம் குமாரனாகிய அம்ரியாவும், மூன்றாம் குமாரனாகிய யாகாசியேலும், நான்காம் குமாரனாகிய எக்காமியாமும்,
23 From the sons of Hebron: Jeriah was the first, Amariah the second, Jahaziel the third, and Jekameam the fourth.
23 இவருடைய புதல்வருள் முதல் மகன் எரிய்யா, இரண்டாம் மகன் அமரியா, மூன்றாம் மகன் யாகசியேல், நான்காவது மகன் எகமயாம்.

24בְּנֵ֤י עֻזִּיאֵל֙ מִיכָ֔ה לִבְנֵ֥י מִיכָ֖ה שמור

24 ஊசியேலின் குமாரரில் மீகாவும், மீகாவின் குமாரரில் சாமீரும்,
24 From the sons of Uzziel: Micah; from the sons of Micah: Shamir.
24 உசியேலின் புதல்வர், மீக்கா; மீக்காவின் புதல்வர் சாமீர்;

25אֲחִ֤י מִיכָה֙ יִשִּׁיָּ֔ה לִבְנֵ֥י יִשִּׁיָּ֖ה זְכַרְיָֽהוּ׃

25 மீகாவின் சகோதரனாகிய இஷியாவும், இஷியாவின குமாரரில் சகரியாவும்,
25 The brother of Micah: Isshiah; from the sons of Isshiah: Zechariah.
25 மீக்காவின் சகோதரர் இசியா; இசியாவின் புதல்வருள் செக்கரியா;

26בְּנֵ֤י מְרָרִי֙ מַחְלִ֣י וּמוּשִׁ֔י בְּנֵ֖י יַעֲזִיָּ֥הֽוּ בְנֽוֹ׃

26 மெராரியின் குமாரராகிய மகேலிமூசி என்பவர்களும், யாசியாவின் குமாரனாகிய பேனோவும்,
26 The sons of Merari: Mahli and Mushi. The son of Jaaziah: Beno.
26 மெராரியின் புதல்வர் மக்லி, மூசி; மற்றும் அவர் மகன் யகசியா;

27בְּנֵ֖י מְרָרִ֑י לְיַֽעֲזִיָּ֣הֽוּ בְנ֔וֹ וְשֹׁ֥הַם וְזַכּ֖וּר וְעִבְרִֽי׃

27 மெராரியின் குமாரனாகிய யாசியாவின் குமாரரான பேனோ, ரோகாம், சக்கூர், இப்ரி என்பவர்களும்,
27 The descendants of Merari from Jaaziah: Beno, Shoham, Zaccur, and Ibri.
27 மெராரியின் மகனான யகசியாவின் புதல்வர்கள்; சோகாம், சக்கூர், இப்ரி.

28לְמַחְלִי֙ אֶלְעָזָ֔ר וְלֹא־הָ֥יָה ל֖וֹ בָּנִֽים׃

28 மகேலியின் குமாரரில் புத்திரனில்லாத எலெயாசாரும்,
28 From Mahli: Eleazar, who had no sons.
28 மக்லியின் புதல்வர்: புதல்வர்கள் இல்லாத எலயாசர்;

29לְקִ֖ישׁ בְּנֵי־קִ֥ישׁ יְרַחְמְאֵֽל׃

29 கீசின் புத்திரரில் யெராமியேலும்,
29 From Kish: Jerahmeel the son of Kish.
29 மற்றும் கீசு, கீசின் புதல்வர் எரகுமவேல்.

30וּבְנֵ֣י מוּשִׁ֔י מַחְלִ֥י וְעֵ֖דֶר וִירִימ֑וֹת אֵ֛לֶּה בְּנֵ֥י הַלְוִיִּ֖ם לְבֵ֥ית אֲבֹתֵיהֶֽם׃

30 மூசியின் குமாரரான மகேலி, ஏதேர் எரிமோத் என்பவர்களுமாகிய இவர்கள் தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே லேவியரின் புத்திரரானவர்கள்.
30 And the sons of Mushi: Mahli, Eder, and Jerimoth. These were the sons of the Levites, according to their families.
30 மூசியின் புதல்வர் மக்லி, ஏதேர், எரிமோத்து. தங்கள் மூதாதையர் வீட்டு லேவியரின் புதல்வர் இவர்களே.

31וַיַּפִּילוּ֩ גַם־הֵ֨ם גּוֹרָל֜וֹת לְעֻמַּ֣ת ׀ אֲחֵיהֶ֣ם בְּנֵֽי־אַהֲרֹ֗ן לִפְנֵ֨י דָוִ֤יד הַמֶּ֙לֶךְ֙ וְצָד֣וֹק וַאֲחִימֶ֔לֶךְ וְרָאשֵׁי֙ הָֽאָב֔וֹת לַכֹּהֲנִ֖ים וְלַלְוִיִּ֑ם אָב֣וֹת הָרֹ֔אשׁ לְעֻמַּ֖ת אָחִ֥יו הַקָּטָֽן׃

31 இவர்களும் ராஜாவாகிய தாவீதுக்கும் சாதோக்குக்கும் அகிமெலேக்குக்கும் ஆசாரியரிலும் லேவியரிலும் பிதாக்களாயிருக்கிற தலைவருக்கும் முன்பாக, தங்கள் சகோதரராகிய ஆரோனின் புத்திரர் செய்ததுபோல, தங்களிலிருக்கிற பிதாக்களான தலைவருக்கும், அவர்களுடைய சிறிய சகோதரருக்கும், சரிசமானமாய்ச் சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.
31 As their brothers the descendants of Aaron did, they also cast lots in the presence of King David and of Zadok, Ahimelech, and the heads of the families of the priests and Levites—the family heads and their younger brothers alike.
31 இவர்களும், தங்கள் சகோதரர்களாகிய ஆரோனின் புதல்வர் செய்ததுபோல, தாவீது அரசர், சாதோக்கு, அகிமலேக்கு, குருத்துவக் குடும்பங்களின் தலைவர், லேவியர் குடும்பங்களின் தலைவர் ஆகியோர் முன்னிலையில் ஒவ்வொரு குடும்பத்தின் தலைவரும் அவர் இளைய சகோதரருள் ஒருவருமாகச் சீட்டுப் போட்டு, தங்கள் பணிகளைப் பங்கிட்டுக் கொண்டனர்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

1 Chronicles Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29

Footnotes:
20 a Shubael  (twice in this verse) is a variant of Shebuel ; see 1 Chronicles 23:16 and 1 Chronicles 26:24.
21 Isshiah  is a variant of Jeshaiah ; see 1 Chronicles 26:25.
22 c Shelomoth  (twice in this verse) is a variant of Shelomith ; see 1 Chronicles 23:18.
23 d Hebrew From the sons: Jeriah ; see 1 Chronicles 23:19.
30 e Jerimoth  is a variant of Jeremoth ; see 1 Chronicles 23:23.

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.