பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

1 Chronicles  1 நாளாகமம்  דִבְרֵי הַיָמִים א

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29

1 நாளாகமம் 19 | 1 Chronicles 19

David’s Messengers Disgraced (2 Samuel 10:1–8)

1וַיְהִי֙ אַחֲרֵי־כֵ֔ן וַיָּ֕מָת נָחָ֖שׁ מֶ֣לֶךְ בְּנֵי־עַמּ֑וֹן וַיִּמְלֹ֥ךְ בְּנ֖וֹ תַּחְתָּֽיו׃

1 அதன்பின்பு, அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் மரித்து, அவன் குமாரன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
1 Some time later, Nahash king of the Ammonites died and was succeeded by his son.
1 இவற்றின்பின், அம்மோனியரின் மன்னன் நாகாசு இறந்தான். அவனுக்குப் பின் அவன் மகன் அரசனானான்.

2וַיֹּ֨אמֶר דָּוִ֜יד אֶֽעֱשֶׂה־חֶ֣סֶד ׀ עִם־חָנ֣וּן בֶּן־נָחָ֗שׁ כִּֽי־עָשָׂ֨ה אָבִ֤יו עִמִּי֙ חֶ֔סֶד וַיִּשְׁלַ֥ח דָּוִ֛יד מַלְאָכִ֖ים לְנַחֲמ֣וֹ עַל־אָבִ֑יו וַיָּבֹאוּ֩ עַבְדֵ֨י דָוִ֜יד אֶל־אֶ֧רֶץ בְּנֵי־עַמּ֛וֹן אֶל־חָנ֖וּן לְנַחֲמֽוֹ׃

2 அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயவுசெய்ததுபோல, நானும் அவன் குமாரனாகிய இவனுக்குத் தயவுசெய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல்சொல்ல ஸ்தானாபதிகளை அனுப்பினான்; தாவீதின் ஊழியக்காரர் ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல அம்மோன் புத்திரரின் தேசத்திலே வந்தபோது,
2 And David said, “I will show kindness to Hanun son of Nahash, because his father showed kindness to me.” So David sent messengers to console Hanun concerning his father. But when David’s servants arrived in the land of the Ammonites to console him,
2 அப்பொழுது தாவீது, "ஆனூனின் தந்தையாகிய நாகாசு எனக்கு அன்பு காட்டியதுபோல், நானும் அவன் மகனாகிய இவனுக்கு அன்பு காட்டுவேன்" என்று கூறி, அவர் தமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கும்படி தூதர்களை அனுப்பினார். அவர்கள் ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல அம்மோனியரின் நாட்டை அடைந்தனர்.

3וַיֹּאמְרוּ֩ שָׂרֵ֨י בְנֵי־עַמּ֜וֹן לְחָנ֗וּן הַֽמְכַבֵּ֨ד דָּוִ֤יד אֶת־אָבִ֙יךָ֙ בְּעֵינֶ֔יךָ כִּֽי־שָׁלַ֥ח לְךָ֖ מְנַחֲמִ֑ים הֲלֹ֡א בַּ֠עֲבוּר לַחְקֹ֨ר וְלַהֲפֹ֤ךְ וּלְרַגֵּל֙ הָאָ֔רֶץ בָּ֥אוּ עֲבָדָ֖יו אֵלֶֽיךָ׃

3 அம்மோன் புத்திரரின் பிரபுக்கள் ஆனூனைப் பார்த்து: தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது, உம்முடைய தகப்பனைக் கனம்பண்ணுகிறதாய் உமக்குத் தோன்றுகிறதோ? தேசத்தை ஆராயவும், அதைக் கவிழ்த்துப்போடவும், உளவுபார்க்கவும் அல்லவோ, அவன் ஊழியக்காரர் உம்மிடத்தில் வந்தார்கள் என்று சொன்னார்கள்.
3 the princes of the Ammonites said to Hanun, “Just because David has sent you comforters, do you really believe he is showing respect for your father? Have not his servants come to you to explore the land, spy it out, and overthrow it?”
3 அப்போது அம்மோனியரின் தலைவர்கள் ஆனூனை நோக்கி, "தாவீது ஆறுதல் கூறுபவர்களை உம்மிடம் அனுப்பியுள்ளது உம் தந்தையைச் சிறப்பிப்பதற்கென்று நினைக்கிறீரா? உமது நாட்டைத் துருவி ஆராயவும், அதை நிலை குலையச் செய்யவும் உளவு பார்க்கவுமே அவன் அலுவலர் வந்துள்ளனர் அன்றோ?" என்று கூறினர்.

4וַיִּקַּ֨ח חָנ֜וּן אֶת־עַבְדֵ֤י דָוִיד֙ וַֽיְגַלְּחֵ֔ם וַיִּכְרֹ֧ת אֶת־מַדְוֵיהֶ֛ם בַּחֵ֖צִי עַד־הַמִּפְשָׂעָ֑ה וַֽיְשַׁלְּחֵֽם׃

4 அப்பொழுது ஆனூன்: தாவீதின் ஊழியக்காரரைப் பிடித்து, அவர்கள் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய வஸ்திரங்களை இருப்பிடமட்டும் வைத்துவிட்டு, மற்றப் பாதியைக் கத்தரித்துப்போட்டு, அவர்களை அனுப்பிவிட்டான்.
4 So Hanun took David’s servants, shaved their beards, cut off their garments at the hips, and sent them away.
4 எனவே, ஆனூன் தாவீதின் அலுவலரைக் கைது செய்து, அவர்கள் தாடியைச் சிரைத்து அவர்களுடைய ஆடைகளை இடுப்பிலிருந்து கத்தரித்து அவர்களை அனுப்பி வைத்தான்.

5וַיֵּלְכוּ֩ וַיַּגִּ֨ידוּ לְדָוִ֤יד עַל־הָֽאֲנָשִׁים֙ וַיִּשְׁלַ֣ח לִקְרָאתָ֔ם כִּי־הָי֥וּ הָאֲנָשִׁ֖ים נִכְלָמִ֣ים מְאֹ֑ד וַיֹּ֤אמֶר הַמֶּ֙לֶךְ֙ שְׁב֣וּ בִֽירֵח֔וֹ עַ֛ד אֲשֶׁר־יְצַמַּ֥ח זְקַנְכֶ֖ם וְשַׁבְתֶּֽם׃

5 அந்த மனுஷர் வருகையில், அவர்கள் செய்தி தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது அந்த மனுஷர் மிகவும் வெட்கப்பட்டபடியினால், அவர்களுக்கு எதிராக ராஜா ஆட்களை அனுப்பி: உங்கள் தாடி வளருமட்டும் நீங்கள் எரிகோவிலிருந்து பிற்பாடு வாருங்கள் என்று சொல்லச்சொன்னான்.
5 When someone came and told David about his men, he sent messengers to meet them, since the men had been thoroughly humiliated. The king told them, “Stay in Jericho until your beards have grown back, and then return.”
5 அவர்களுக்குச் செய்யப்பட்டதைச் சிலர் வந்து தாவீதுக்குத் தெரிவித்தனர். அவர்கள் மிகவும் கேவலப்பட்டிருந்ததால், தாவீது அவர்களுக்கு ஆளனுப்பி, "எரிகோவில் தங்கியிருந்து உங்கள் தாடி வளர்ந்தபின் திரும்பி வாருங்கள்" என்று கூறினார்.

6וַיִּרְאוּ֙ בְּנֵ֣י עַמּ֔וֹן כִּ֥י הִֽתְבָּאֲשׁ֖וּ עִם־דָּוִ֑יד וַיִּשְׁלַ֣ח חָ֠נוּן וּבְנֵ֨י עַמּ֜וֹן אֶ֣לֶף כִּכַּר־כֶּ֗סֶף לִשְׂכֹּ֣ר לָ֠הֶם מִן־אֲרַ֨ם נַהֲרַ֜יִם וּמִן־אֲרַ֤ם מַעֲכָה֙ וּמִצּוֹבָ֔ה רֶ֖כֶב וּפָרָשִֽׁים׃

6 அம்மோன் புத்திரர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, ஆனூனும் அம்மோன் புத்திரரும் மெசொப்பொத்தாமியாவிலும் மாக்கா சோபா என்னும் சீரியரின் தேசத்திலுமிருந்து தங்களுக்கு இரதங்களும் குதிரைவீரரும் கூலிக்கு வரும்படி ஆயிரம்தாலந்து வெள்ளி அனுப்பி,
6 When the Ammonites realized that they had become a stench to David, Hanun and the Ammonites sent a thousand talents of silver to hire for themselves chariots and horsemen from Aram-naharaim, Aram-maacah, and Zobah.
6 அம்மோனியர் தாங்கள் தாவீதின் பகைமையைத் தேடிக் கொண்டதை உணர்ந்தனர். உடனே ஆனூனும், அம்மோனியரும் மெசப்பொத்தாமியா, மாக்கா, சோபா என்ற சிரிய நாட்டுப் பகுதிகளினின்று தங்களுக்குத் தேர்ப்படையையும் குதிரைப்படையையும் கூலிக்கு அமர்த்துமாறு, ஆயிரம் தாலந்து வெள்ளியை அனுப்பிவைத்தனர்.

7וַיִּשְׂכְּר֣וּ לָהֶ֡ם שְׁנַיִם֩ וּשְׁלֹשִׁ֨ים אֶ֜לֶף רֶ֗כֶב וְאֶת־מֶ֤לֶךְ מַעֲכָה֙ וְאֶת־עַמּ֔וֹ וַיָּבֹ֕אוּ וַֽיַּחֲנ֖וּ לִפְנֵ֣י מֵידְבָ֑א וּבְנֵ֣י עַמּ֗וֹן נֶאֶסְפוּ֙ מֵעָ֣רֵיהֶ֔ם וַיָּבֹ֖אוּ לַמִּלְחָמָֽה׃

7 முப்பத்தீராயிரம் இரதங்களையும், மாக்காவின் ராஜாவையும், அவன் ஜனத்தையும் கூலிப்படையாக அழைப்பித்தான்; இவர்கள் வந்து, மேதேபாவுக்கு முன்புறத்திலே பாளயமிறங்கினார்கள்; அம்மோன் புத்திரரும் தங்கள் பட்டணங்களிலிருந்து கூடிக்கொண்டு யுத்தம்பண்ண வந்தார்கள்.
7 So they hired for themselves thirty-two thousand chariots, as well as the king of Maacah with his troops, who came and camped near Medeba while the Ammonites came from their cities and marched out for battle.
7 அவ்வாறே, கூலிக்கு அமர்த்தப்பட்ட முப்பத்து இரண்டாயிரம் தேர்களும் மாக்கா மன்னனின் படைகளும் வந்து மேதபாவுக்கு முன்பாக பாளையம் இறங்கினர். அம்மோனியரும் அவர்களுடைய எல்லா நகர்களிலிருந்தும் திரண்டு வந்து போருக்குத் தயாராயினர்.

8וַיִּשְׁמַ֖ע דָּוִ֑יד וַיִּשְׁלַח֙ אֶת־יוֹאָ֔ב וְאֵ֥ת כָּל־צָבָ֖א הַגִּבּוֹרִֽים׃

8 அதைத் தாவீது கேட்டபோது, யோவாபையும் பலசாலிகளின் இராணுவம் முழுவதையும் அனுப்பினான்.
8 On hearing this, David sent Joab and the entire army of mighty men.
8 தாவீது அதைக் கேள்வியுற்றபோது, யோவாபையும் ஆற்றல் மிக்க தம் படை முழுவதையும் அனுப்பினார்.

9וַיֵּצְאוּ֙ בְּנֵ֣י עַמּ֔וֹן וַיַּֽעַרְכ֥וּ מִלְחָמָ֖ה פֶּ֣תַח הָעִ֑יר וְהַמְּלָכִ֣ים אֲשֶׁר־בָּ֔אוּ לְבַדָּ֖ם בַּשָּׂדֶֽה׃

9 அம்மோன் புத்திரர் புறப்பட்டுவந்து, பட்டணத்து வாசலண்டையில் அணிவகுத்தார்கள்; வந்த ராஜாக்கள் தனித்து வெளியிலே போருக்கு ஆயத்தமாய் நின்றார்கள்.
9 The Ammonites marched out and arrayed themselves for battle at the entrance to the city, while the kings who had come stayed by themselves in the open country.
9 அம்மோனியர் புறப்பட்டு வந்து நகர வாயிலில் அணிவகுத்து நின்றனர். அவர்களுக்கு உதவியாக வந்த மன்னர்கள் திறந்த வெளியில் அணிவகுத்து நின்றனர்.

David Defeats Ammon and Aram (2 Samuel 10:9–19)

10וַיַּ֣רְא יוֹאָ֗ב כִּֽי־הָיְתָ֧ה פְנֵי־הַמִּלְחָמָ֛ה אֵלָ֖יו פָּנִ֣ים וְאָח֑וֹר וַיִּבְחַ֗ר מִכָּל־בָּחוּר֙ בְּיִשְׂרָאֵ֔ל וַֽיַּעֲרֹ֖ךְ לִקְרַ֥את אֲרָֽם׃

10 யுத்த இராணுவங்களின் முகப்புத் தனக்கு முன்னும் பின்னும் இருக்கிறதை யோவாப் கண்டு, அவன் இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட அனைவரிலும் ஒரு பங்கைப் பிரித்தெடுத்து, அதைச் சீரியருக்கு எதிராக நிறுத்தி,
10 When Joab saw the battle lines before him and behind him, he selected some of the best men of Israel and arrayed them against the Arameans.
10 யோவாபு தமக்கு முன்னும் பின்னும் பகைவர் படை தாக்கவிருப்பதைக் கண்டபோது, இஸ்ரயேல் அனைத்திலும் ஆற்றல்மிகு வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைச் சிரியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினார்.

11וְאֵת֙ יֶ֣תֶר הָעָ֔ם נָתַ֕ן בְּיַ֖ד אַבְשַׁ֣י אָחִ֑יו וַיַּ֣עַרְכ֔וּ לִקְרַ֖את בְּנֵ֥י עַמּֽוֹן׃

11 மற்ற ஜனத்தை அம்மோன் புத்திரருக்கு எதிராகப் போருக்கு ஆயத்தப்படுத்தி, தன் சகோதரனாகிய அபிசாயிக்கு ஒப்புவித்து, அவனை நோக்கி:
11 And he placed the rest of the forces under the command of his brother Abishai, who arrayed them against the Ammonites.
11 மற்றப் படைவீரரைத் தம் சகோதரன் அபிசாயின் தலைமையில் அம்மோனியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினார்.

12וַיֹּ֗אמֶר אִם־תֶּחֱזַ֤ק מִמֶּ֙נִּי֙ אֲרָ֔ם וְהָיִ֥יתָ לִּ֖י לִתְשׁוּעָ֑ה וְאִם־בְּנֵ֥י עַמּ֛וֹן יֶֽחֶזְק֥וּ מִמְּךָ֖ וְהוֹשַׁעְתִּֽיךָ׃

12 என்னைப்பார்க்கிலும் சீரியர் பலங்கொண்டால் நீ எனக்குத் துணைநில்; உன்னைப்பார்க்கிலும் அம்மோன் புத்திரர் பலங்கொண்டால் நான் உனக்குத் துணைநிற்பேன்.
12 “If the Arameans are too strong for me,” said Joab, “then you will come to my rescue. And if the Ammonites are too strong for you, then I will come to your rescue.
12 யோவாகு அவனை நோக்கி, "சிரியர் என்னை விட ஆற்றல்மிக்கவராய் இருந்தால், நீ எனக்கு உதவியாக வரவேண்டும்; அம்மோனியர் உன்னைவிட ஆற்றல்மிக்கவராய் இருந்தால், நான் உனக்கு உதவியாக வருவேன்.

13חֲזַ֤ק וְנִֽתְחַזְּקָה֙ בְּעַד־עַמֵּ֔נוּ וּבְעַ֖ד עָרֵ֣י אֱלֹהֵ֑ינוּ וַֽיהוָ֔ה הַטּ֥וֹב בְּעֵינָ֖יו יַעֲשֶֽׂה׃

13 தைரியமாயிரு; நாம் நம்முடைய ஜனத்திற்காகவும், நமது தேவனுடைய பட்டணங்களுக்காகவும் திடன்கொண்டிருக்கக்கடவோம்; கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.
13 Be strong and let us fight bravely for our people and for the cities of our God. May the LORD do what is good in His sight.”
13 மனஉறுதியுடன் இரு! நம் மக்களுக்காகவும் கடவுளின் நகர்களுக்காகவும் வலிமையுடன் போராடுவோம். ஆண்டவர் தமக்கு நலமாய்த் தோன்றுவதைச் செய்வாராக!" என்றார்.

14וַיִּגַּ֨שׁ יוֹאָ֜ב וְהָעָ֧ם אֲשֶׁר־עִמּ֛וֹ לִפְנֵ֥י אֲרָ֖ם לַמִּלְחָמָ֑ה וַיָּנ֖וּסוּ מִפָּנָֽיו׃

14 பின்பு யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியரோடு யுத்தம்பண்ணச் சேர்ந்தார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.
14 So Joab and his troops advanced to fight the Arameans, who fled before him.
14 பின்பு, யோவாபும் அவரோடிருந்த மக்களும் சிரியரோடு போரிட நெருங்கினார்கள். அவர்களோ அவருக்கு முன்பாகப் புறமுதுகிட்டு ஓடினர்.

15וּבְנֵ֨י עַמּ֤וֹן רָאוּ֙ כִּי־נָ֣ס אֲרָ֔ם וַיָּנ֣וּסוּ גַם־הֵ֗ם מִפְּנֵי֙ אַבְשַׁ֣י אָחִ֔יו וַיָּבֹ֖אוּ הָעִ֑ירָה וַיָּבֹ֥א יוֹאָ֖ב יְרוּשָׁלָֽ͏ִם׃

15 சீரியர் முறிந்தோடுகிறதை அம்மோன் புத்திரர் கண்டபோது, அவர்களும் அவன் சகோதரனாகிய அபிசாயிக்கு முன்பாக முறிந்தோடிப் பட்டணத்திற்கு உட்பட்டார்கள்; யோவாப் திரும்ப எருசலேமுக்கு வந்தான்.
15 When the Ammonites saw that the Arameans had fled, they too fled before Joab’s brother Abishai, and they entered the city. So Joab went back to Jerusalem.
15 சிரியர் புறமுதுகிட்டு ஓடுவதை அம்மோனியர் கண்டபோது, அவர்களும் யோவாபின் சகோதரன் அபிசாயிக்கு முன்பாகச் சிதறியோடி நகருக்குள் புகுந்தனர். யோவாபும் எருசலேமுக்குத் திரும்பி வந்தார்.

16וַיַּ֣רְא אֲרָ֗ם כִּ֣י נִגְּפוּ֮ לִפְנֵ֣י יִשְׂרָאֵל֒ וַֽיִּשְׁלְחוּ֙ מַלְאָכִ֔ים וַיּוֹצִ֣יאוּ אֶת־אֲרָ֔ם אֲשֶׁ֖ר מֵעֵ֣בֶר הַנָּהָ֑ר וְשׁוֹפַ֛ךְ שַׂר־צְבָ֥א הֲדַדְעֶ֖זֶר לִפְנֵיהֶֽם׃

16 தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதைக் கண்டபோது, அவர்கள் நதிக்கு அப்புறத்திலிருக்கிற சீரியரை வரவழைத்தார்கள்; ஆதாரேசரின் படைத்தலைவனாகிய சோப்பாக் அவர்களுக்கு முன்னாலே நடந்துபோனான்.
16 When the Arameans saw that they had been defeated by Israel, they sent messengers to bring more Arameans from beyond the Euphrates, with Shophach the commander of Hadadezer’s army leading them.
16 தாங்கள் இஸ்ரயேலருக்கு முன்பாக முறியடிக்கப்பட்டதைக் கண்ட சிரியர், தூதர்களை அனுப்பி நதிக்கு அப்பாலிருந்த சிரியரையும் வரவழைத்தனர். அதரேசரின் படைத்தலைவன் சோபாகு அவர்களை முன்னின்று நடத்தினான்.

17וַיֻּגַּ֣ד לְדָוִ֗יד וַיֶּאֱסֹ֤ף אֶת־כָּל־יִשְׂרָאֵל֙ וַיַּעֲבֹ֣ר הַיַּרְדֵּ֔ן וַיָּבֹ֣א אֲלֵהֶ֔ם וַֽיַּעֲרֹ֖ךְ אֲלֵהֶ֑ם וַיַּעֲרֹ֨ךְ דָּוִ֜יד לִקְרַ֤את אֲרָם֙ מִלְחָמָ֔ה וַיִּֽלָּחֲמ֖וּ עִמּֽוֹ׃

17 அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் இஸ்ரவேலையெல்லாம் கூட்டிக்கொண்டு, யோர்தானைக் கடந்து, அவர்களுக்குச் சமீபமாய் வந்தபோது, அவர்களுக்கு எதிராக இராணுவங்களை நிறுத்தினார்கள்; தாவீது சீரியருக்கு எதிராக இராணுவங்களைப் போருக்கு ஆயத்தப்படுத்தினபின் அவனோடு யுத்தம்பண்ணினார்கள்
17 When this was reported to David, he gathered all Israel, crossed the Jordan, advanced toward the Arameans, and arrayed for battle against them. When David lined up to engage them in battle, they fought against him.
17 அதைக் கேள்வியுற்ற தாவீது இஸ்ரயேலர் அனைவரையும் ஒன்றுதிரட்டி, யோர்தானைக் கடந்து சென்று, சிரியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினார். அவ்வாறு, தாவீது போருக்கு அணிவகுத்து நிற்கையில் சிரியப் படைகள் அவரோடு மோதின.

18וַיָּ֣נָס אֲרָם֮ מִלִּפְנֵ֣י יִשְׂרָאֵל֒ וַיַּהֲרֹ֨ג דָּוִ֜יד מֵאֲרָ֗ם שִׁבְעַ֤ת אֲלָפִים֙ רֶ֔כֶב וְאַרְבָּעִ֥ים אֶ֖לֶף אִ֣ישׁ רַגְלִ֑י וְאֵ֛ת שׁוֹפַ֥ךְ שַֽׂר־הַצָּבָ֖א הֵמִֽית׃

18 சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தாவீது சீரியரில் ஏழாயிரம் இரதங்களின் மனுஷரையும், நாற்பதினாயிரம் காலாட்களையும் கொன்று, படைத்தலைவனாகிய சோப்பாக்கையும் கொன்றான்.
18 But the Arameans fled before Israel, and David killed seven thousand of their charioteers and forty thousand foot soldiers. He also killed Shophach the commander of their army.
18 சிரியர் இஸ்ரயேலருக்கு முன்பாகப் புறமுதுகிட்டு ஓடினர். தாவீது சிரியர் படையின் ஏழாயிரம் தேர்ப்படை வீரரையும், நாற்பதாயிரம் காலாள்படையினரையும், வெட்டி வீழ்த்தினார்; படைத் தலைவன் சோபாகையும் கொன்றார்.

19וַיִּרְא֞וּ עַבְדֵ֣י הֲדַדְעֶ֗זֶר כִּ֤י נִגְּפוּ֙ לִפְנֵ֣י יִשְׂרָאֵ֔ל וַיַּשְׁלִ֥ימוּ עִם־דָּוִ֖יד וַיַּֽעַבְדֻ֑הוּ וְלֹא־אָבָ֣ה אֲרָ֔ם לְהוֹשִׁ֥יעַ אֶת־בְּנֵי־עַמּ֖וֹן עֽוֹד׃

19 தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாகமுறிய அடிக்கப்பட்டதை ஆதாரேசரின் சேவகர் கண்டபோது அவர்கள் தாவீதோடே சமாதானம்பண்ணி, அவனைச் சேவித்தார்கள்; அப்புறம் அம்மோன் புத்திரருக்கு உதவிசெய்ய சீரியர் மனதில்லாதிருந்தார்கள்.
19 When Hadadezer’s subjects saw that they had been defeated by Israel, they made peace with David and became subject to him. So the Arameans were unwilling to help the Ammonites anymore.
19 அதரேசரின் அலுவலர், தாங்கள் இஸ்ரயேலரால் முறியடிக்கப்பட்டதைக் கண்டு, தாவீதோடு சமாதானம் செய்து அவருக்கு அடிபணிந்தனர். அதன்பின் அம்மோனியருக்கு உதவி செய்ய சிரியர் என்றுமே விரும்பவில்லை.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

1 Chronicles Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29

Footnotes:
1,000 talents  is approximately 37.7 tons or 34.2 metric tons of silver.
b That is, Mesopotamia; Aram-naharaim  means Aram of the two rivers , likely the region between the Euphrates and Balih Rivers in northwestern Mesopotamia.
16 c Hebrew the River
16 d Shophach  is a variant of Shobach ; also in verse 18; see 2 Samuel 10:16.

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.