பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

1 Chronicles  1 நாளாகமம்  דִבְרֵי הַיָמִים א

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29

1 நாளாகமம் 18 | 1 Chronicles 18

David’s Triumphs (2 Samuel 8:1–14; Psalm 60:1–12)

1וַיְהִי֙ אַחֲרֵי־כֵ֔ן וַיַּ֥ךְ דָּוִ֛יד אֶת־פְּלִשְׁתִּ֖ים וַיַּכְנִיעֵ֑ם וַיִּקַּ֛ח אֶת־גַּ֥ת וּבְנֹתֶ֖יהָ מִיַּ֥ד פְּלִשְׁתִּֽים׃

1 இதற்குப்பின்பு, தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தி, காத்பட்டணத்தையும் அதின் கிராமங்களையும் பெலிஸ்தரின் கையிலிருந்து பிடித்துக்கொண்டான்.
1 Some time later, David defeated the Philistines, subdued them, and took Gath and its villages from the hand of the Philistines.
1 அதன் பின்னர், தாவீது பெலிஸ்தியரைத் தோற்கடித்து அவர்களைப் பணியச் செய்தார்; காத்து நகரையும் அதன் சிற்றூர்களையும் பெலிஸ்தியரிடமிருந்து கைப்பற்றினார்.

2וַיַּ֖ךְ אֶת־מוֹאָ֑ב וַיִּהְי֤וּ מוֹאָב֙ עֲבָדִ֣ים לְדָוִ֔יד נֹשְׂאֵ֖י מִנְחָֽה׃

2 அவன் மோவாபியரையும் முறியடித்ததினால், மோவாபியர் தாவீதைச் சேவித்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.
2 David also defeated the Moabites, and they became subject to David and brought him tribute.
2 அவர் மோவாபைத் தோற்கடித்தார். மோவாபியர் தாவீதுக்கு அடிமைகளாகி வரி செலுத்தினர்.

3וַיַּ֥ךְ דָּוִ֛יד אֶת־הֲדַדְעֶ֥זֶר מֶֽלֶךְ־צוֹבָ֖ה חֲמָ֑תָה בְּלֶכְתּ֕וֹ לְהַצִּ֥יב יָד֖וֹ בִּֽנְהַר־פְּרָֽת׃

3 சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசர் ஐபிராத் நதியண்டையில் தன் இராணுவத்தை நிறுத்தப்போகிறபோது, தாவீது அவனையும் ஆமாத்தின் கிட்டே முறிய அடித்தான்.
3 As far as Hamath, David also defeated King Hadadezer of Zobah, who had marched out to establish his dominion along the Euphrates River.
3 சோபாவின் மன்னனான அதரேசர் தன் ஆட்சியைப் பலப்படுத்தும் நோக்குடன் யூப்பிரத்தீசு நதியோரம் செல்கையில் தாவீது அவனையும் காமாத்தின் அருகே புறமுதுகு காட்டச் செய்தார்.

4וַיִּלְכֹּד֩ דָּוִ֨יד מִמֶּ֜נּוּ אֶ֣לֶף רֶ֗כֶב וְשִׁבְעַ֤ת אֲלָפִים֙ פָּֽרָשִׁ֔ים וְעֶשְׂרִ֥ים אֶ֖לֶף אִ֣ישׁ רַגְלִ֑י וַיְעַקֵּ֤ר דָּוִיד֙ אֶת־כָּל־הָרֶ֔כֶב וַיּוֹתֵ֥ר מִמֶּ֖נּוּ מֵ֥אָה רָֽכֶב׃

4 அவனுக்கு இருந்த ஆயிரம் இரதங்களையும் ஆயிரம் குதிரைவீரரையும் பதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களையும் வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான்.
4 David captured from him a thousand chariots, seven thousand charioteers, and twenty thousand foot soldiers, and he hamstrung all the horses except a hundred he kept for the chariots.
4 அவனிடமிருந்து ஆயிரம் தேர்களையும், ஏழாயிரம் குதிரை வீரரையும், இருபதினாயிரம் காலாள் படையினரையும் அவர் கைப்பற்றினார். அவற்றுள் நூறு தேர்களுக்கான குதிரைகளை வைத்துக்கொண்டு ஏனைய தேர்க்குதிரைகளின் கால் நரம்பையும் வெட்டிப் போட்டார்.

5וַיָּבֹא֙ אֲרַ֣ם דַּרְמֶ֔שֶׂק לַעְז֕וֹר לַהֲדַדְעֶ֖זֶר מֶ֣לֶךְ צוֹבָ֑ה וַיַּ֤ךְ דָּוִיד֙ בַּאֲרָ֔ם עֶשְׂרִֽים־וּשְׁנַ֥יִם אֶ֖לֶף אִֽישׁ׃

5 சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசருக்கு உதவிசெய்ய தமஸ்குபட்டணத்தாராகிய சீரியர் வந்தார்கள்; தாவீது சீரியரில் இருபத்தீராயிரம்பேரை வெட்டிப்போட்டு,
5 When the Arameans of Damascus came to help King Hadadezer of Zobah, David struck down twenty-two thousand men.
5 சோபாவின் அரசனான அதரேசருக்கு உதவி செய்ய தமஸ்கு நகர் சிரியர் வந்தனர். தாவீது சிரியரில் இருபத்திரண்டாயிரம் பேரைக் கொன்று குவித்தார்.

6וַיָּ֤שֶׂם דָּוִיד֙ בַּאֲרַ֣ם דַּרְמֶ֔שֶׂק וַיְהִ֤י אֲרָם֙ לְדָוִ֔יד עֲבָדִ֖ים נֹשְׂאֵ֣י מִנְחָ֑ה וַיּ֤וֹשַׁע יְהוָה֙ לְדָוִ֔יד בְּכֹ֖ל אֲשֶׁ֥ר הָלָֽךְ׃

6 தமஸ்குவுக்கடுத்த சீரியாவிலே தாணையங்களை வைத்தான்; சீரியர் தாவீதைச் சேவித்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.
6 Then he placed garrisons in Aram of Damascus, and the Arameans became subject to David and brought him tribute. So the LORD made David victorious wherever he went.
6 மேலும், தாவீது தமஸ்கு நகரின் நடுவில் பாளையங்களை அமைத்தார். சிரியர் தாவீதுக்கு அடிமைகளாகி அவருக்கு வரி செலுத்தினர். தாவீது சென்றவிடமெல்லாம் ஆண்டவர் அவருக்கு வெற்றி அளித்தார்.

7וַיִּקַּ֣ח דָּוִ֗יד אֵ֚ת שִׁלְטֵ֣י הַזָּהָ֔ב אֲשֶׁ֣ר הָי֔וּ עַ֖ל עַבְדֵ֣י הֲדַדְעָ֑זֶר וַיְבִיאֵ֖ם יְרוּשָׁלָֽ͏ִם׃

7 ஆதாரேசரின் சேவகருக்கு இருந்த பொன் பரிசைகளைத் தாவீது எடுத்து, அவைகளை எருசலேமுக்குக் கொண்டுவந்தான்.
7 And David took the gold shields that belonged to the officers of Hadadezer and brought them to Jerusalem.
7 மேலும், தாவீது அதரேசரின் அலுவலர் வைத்திருந்த பொற்கேடயங்களைக் கைப்பற்றி எருசலேமுக்குக் கொண்டு வந்தார்.

8וּמִטִּבְחַ֤ת וּמִכּוּן֙ עָרֵ֣י הֲדַדְעֶ֔זֶר לָקַ֥ח דָּוִ֛יד נְחֹ֖שֶׁת רַבָּ֣ה מְאֹ֑ד בָּ֣הּ ׀ עָשָׂ֣ה שְׁלֹמֹ֗ה אֶת־יָ֤ם הַנְּחֹ֙שֶׁת֙ וְאֶת־הָֽעַמּוּדִ֔ים וְאֵ֖ת כְּלֵ֥י הַנְּחֹֽשֶׁת׃

8 ஆதாரேசரின் பட்டணங்களாகிய திப்காத்திலும் கூனிலுமிருந்து தாவீது வெகு திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டுவந்தான்; அதினாலே சாலொமோன் வெண்கலக் கடல்தொட்டியையும் தூண்களையும் வெண்கலத் தட்டுமுட்டுகளையும் உண்டாக்கினான்.
8 And from Tibhath and Cun, cities of Hadadezer, David took a large amount of bronze, with which Solomon made the bronze Sea, the pillars, and various bronze articles.
8 அதுரேசரின் நகர்களாகிய திப்காத்திலும், கூனிலுமிருந்தும் தாவீது வெகு திரளான வெண்கலத்தையும் எடுத்து வந்தார். அதைக் கொண்டு சாலமோன் வெண்கலக் கடலையும் தூண்களையும் தேவையான வெண்கலங்களையும் செய்தார்.1

9וַיִּשְׁמַ֕ע תֹּ֖עוּ מֶ֣לֶךְ חֲמָ֑ת כִּ֚י הִכָּ֣ה דָוִ֔יד אֶת־כָּל־חֵ֖יל הֲדַדְעֶ֥זֶר מֶֽלֶךְ־צוֹבָֽה׃

9 தாவீது சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசரின் இராணுவத்தையெல்லாம் முறிய அடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயூ கேட்டபோது,
9 When King Tou of Hamath heard that David had defeated the entire army of Hadadezer king of Zobah,
9 தாவீது சோபாவின் அரசனான அதரேசரின் படைகள் முழுவதையும் புறமுதுகு காட்டச் செய்தது பற்றிக் காமாத்தின் மன்னனான தோகு கேள்விப்பட்டான்.

10וַיִּשְׁלַ֣ח אֶת־הֲדֽוֹרָם־בְּנ֣וֹ אֶל־הַמֶּֽלֶךְ־דָּ֠וִיד לשאול־ל֨וֹ לְשָׁל֜וֹם וּֽלְבָרֲכ֗וֹ עַל֩ אֲשֶׁ֨ר נִלְחַ֤ם בַּהֲדַדְעֶ֙זֶר֙ וַיַּכֵּ֔הוּ כִּי־אִ֛ישׁ מִלְחֲמ֥וֹת תֹּ֖עוּ הָיָ֣ה הֲדַדְעָ֑זֶר וְכֹ֗ל כְּלֵ֛י זָהָ֥ב וָכֶ֖סֶף וּנְחֹֽשֶׁת׃

10 அவன் தாவீது ராஜாவின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாரேசரோடு யுத்தம்பண்ணி, அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வினவுதல் சொல்லவும், தன் குமாரனாகிய அதோராமையும், பொன்னும் வெள்ளியும் வெண்கலமுமான சகலவிதத் தட்டுமுட்டுகளையும், அவனிடத்துக்கு அனுப்பினான்; ஆதாரேசர் தோயூவின்மேல் யுத்தம்பண்ணுகிறவனாயிருந்தான்.
10 he sent his son Hadoram to greet King David and bless him for fighting and defeating Hadadezer, who had been at war with Tou. Hadoram brought all kinds of articles of gold and silver and bronze,
10 அவன் தாவீது அரசருக்கு வாழ்த்துக் கூறவும், அதரேசரோடு போரிட்டு அவன்மீது வெற்றி கொண்டதற்காக தாவீதுக்குப் பாராட்டுக் கூறவும், தன் மகன் அதோராமை அனுப்பினான். ஏனெனில், அதரேசர் அதுவரை தோகுவுடன் அடிக்கடி போரிட்டுக் கொண்டிருந்தான். மேலும், தோகு பொன், வெள்ளி, வெண்கலத்தாலான அனைத்துக் கலங்களையும் தன் மகன் மூலம் அனுப்பி வைத்தான்.

11גַּם־אֹתָ֗ם הִקְדִּ֞ישׁ הַמֶּ֤לֶךְ דָּוִיד֙ לַיהוָ֔ה עִם־הַכֶּ֙סֶף֙ וְהַזָּהָ֔ב אֲשֶׁ֥ר נָשָׂ֖א מִכָּל־הַגּוֹיִ֑ם מֵֽאֱד֤וֹם וּמִמּוֹאָב֙ וּמִבְּנֵ֣י עַמּ֔וֹן וּמִפְּלִשְׁתִּ֖ים וּמֵֽעֲמָלֵֽק׃

11 அந்தத் தட்டுமுட்டுகளையும், தான் ஏதோமியர், மோவாபியர், அம்மோன் புத்திரர், பெலிஸ்தர், அமலேக்கியர் என்னும் சகல ஜாதிகளின் கையிலும் வாங்கின வெள்ளியையும், பொன்னையும்கூடத் தாவீதுராஜா கர்த்தருக்குப் பரிசுத்தமென்று நேர்ந்துகொண்டான்.
11 and King David dedicated these to the LORD, along with the silver and gold he had carried off from all these nations—from Edom and Moab, and from the Ammonites, Philistines, and Amalekites.
11 தாவீது அரசர் இவற்றையும், தாம் ஏதோமியர், மோவாபியர், அம்மோனியர், பெலிஸ்தியர், அமலேக்கியர் ஆகியோரிடமிருந்து கைப்பற்றிய வெள்ளி, பொன் யாவற்றையும் ஆண்டவருக்கென்று அர்ப்பணம் செய்தார்.

12וְאַבְשַׁ֣י בֶּן־צְרוּיָ֗ה הִכָּ֤ה אֶת־אֱדוֹם֙ בְּגֵ֣יא הַמֶּ֔לַח שְׁמוֹנָ֥ה עָשָׂ֖ר אָֽלֶף׃

12 செருயாவின் குமாரன் அபிசாயி உப்புப் பள்ளத்தாக்கிலே பதினெண்ணாயிரம் ஏதோமியரை முறிய அடித்தான்.
12 Moreover, Abishai son of Zeruiah struck down eighteen thousand Edomites in the Valley of Salt.
12 செருயாவின் மகன் அபிசாய் உப்புப்பள்ளத்தாக்கில் பதினெட்டாயிரம் ஏதோமியரை வெட்டி வீழ்த்தினார்.2

2 திபா 60 தலைப்பு.

13וַיָּ֤שֶׂם בֶּֽאֱדוֹם֙ נְצִיבִ֔ים וַיִּהְי֥וּ כָל־אֱד֖וֹם עֲבָדִ֣ים לְדָוִ֑יד וַיּ֤וֹשַׁע יְהוָה֙ אֶת־דָּוִ֔יד בְּכֹ֖ל אֲשֶׁ֥ר הָלָֽךְ׃

13 ஆகையால் தாவீது ஏதோமிலே தாணையம் போட்டான்; ஏதோமியர் எல்லாரும் அவனைச் சேவிக்கிறவர்களானார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.
13 He placed garrisons in Edom, and all the Edomites were subject to David. So the LORD made David victorious wherever he went.
13 அவர் ஏதோமில் பாளையங்களை அமைத்தார். ஏதோமியர் யாவரும் தாவீதுக்கு அடிமைகளாயினர். தாவீது சென்ற இடமெல்லாம் ஆண்டவர் அவருக்கு வெற்றி அளித்தார்.

David’s Officers (2 Samuel 8:15–18)

14וַיִּמְלֹ֥ךְ דָּוִ֖יד עַל־כָּל־יִשְׂרָאֵ֑ל וַיְהִ֗י עֹשֶׂ֛ה מִשְׁפָּ֥ט וּצְדָקָ֖ה לְכָל־עַמּֽוֹ׃

14 தாவீது இஸ்ரவேலையெல்லாம் ஆண்டு, தன்னுடைய ஜனத்திற்கெல்லாம் நியாயமும் நீதியும் செய்தான்.
14 Thus David reigned over all Israel and administered justice and righteousness for all his people:
14 தாவீது இஸ்ரயேலர் எல்லாருக்கும் அரசராய் இருந்தார். அவர் தம் மக்கள் அனைவருக்கும் நீதியும் நியாயமும் கிடைக்கச் செய்தார்.

15וְיוֹאָ֥ב בֶּן־צְרוּיָ֖ה עַל־הַצָּבָ֑א וִיהוֹשָׁפָ֥ט בֶּן־אֲחִיל֖וּד מַזְכִּֽיר׃

15 செருயாவின் குமாரன் யோவாப் இராணுவத்தலைவனாயிருந்தான்; ஆகிலுூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியாயிருந்தான்.
15 Joab son of Zeruiah was over the army; Jehoshaphat son of Ahilud was the recorder;
15 செருயாவின் மகன் யோவாபு படைத்தலைவராய் இருந்தார். அகிலூதின் மகன் யோசபாத்து பதிவாளராய் இருந்தார்.

16וְצָד֧וֹק בֶּן־אֲחִיט֛וּב וַאֲבִימֶ֥לֶךְ בֶּן־אֶבְיָתָ֖ר כֹּהֲנִ֑ים וְשַׁוְשָׁ֖א סוֹפֵֽר׃

16 அகிதூபின் குமாரன் சாதோக்கும், அபியத்தாரின் குமாரன் அபிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; சவிஷா சம்பிரதியாயிருந்தான்.
16 Zadok son of Ahitub and Ahimelech son of Abiathar were priests; Shavsha was the scribe;
16 அகிதூபின் மகன் சாதோக்கும் அபியத்தாரின் மகன் அபிமெலக்கும் குருக்களாய் இருந்தனர். சவ்சா எழுத்தராய் இருந்தார்.

17וּבְנָיָ֙הוּ֙ בֶּן־יְה֣וֹיָדָ֔ע עַל־הַכְּרֵתִ֖י וְהַפְּלֵתִ֑י וּבְנֵי־דָוִ֥יד הָרִאשֹׁנִ֖ים לְיַ֥ד הַמֶּֽלֶךְ׃

17 யோய்தாவின் குமாரன் பெனாயா கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தான்; தாவீதின் புத்திரர் ராஜாவினிடத்தில் பிரதானிகளாயிருந்தார்கள்.
17 Benaiah son of Jehoiada was over the Cherethites and Pelethites; and David’s sons were chief officials at the king’s side.
17 யோயாதாவின் மகன் பெனாயா கெரேத்தியர் பெலேத்தியருக்குத் தலைவராய் இருந்தார். தாவீதின் புதல்வர் அவர்தம் அரசில் உயர் பதவிகள் வகித்தனர்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

1 Chronicles Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29

Footnotes:
3 a Hebrew his hand
6 b LXX and Vulgate (see also 2 Samuel 8:6 and Syriac); Hebrew does not include garrisons .
6 c Or the LORD saved David ; also in verse 13
8 d Tibhath  is a variant of Tebah ; see 2 Samuel 8:8 LXX.
9 e Tou  is a variant of Toi ; also in verse 10; see 2 Samuel 8:9.
10 f Hadoram  is a variant of Joram ; see 2 Samuel 8:10.
16 g Some Hebrew manuscripts, Vulgate, and Syriac (see also 2 Samuel 8:17); most Hebrew manuscripts Abimelech
16 Shavsha  is also called Seraiah , Sheva , and Shisha ; see 2 Samuel 8:17, 2 Samuel 20:25, and 1 Kings 4:3.

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.