பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
மத் மாற் லூக் யோ அப் ரோ 1கொரி 2கொரி கலா எபே பிலி கொ 1தெ 2தெ 1தீ 2தீ தீத்து பிலெ எபி யா 1பே 2பே 1யோ 2யோ 3யோ யூதா வெளி
Romans ரோமர் Ῥωμαίους
ரோமர் 3 | Romans 3
God Remains Faithful
1 இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன?
1 What, then, is the advantage of being a Jew? Or what is the value of circumcision?
1 அப்படியானால், மற்றவர்களை விட யூதர்கள் பெற்றுள்ள சிறப்பு என்ன? விருத்தசேதனத்தால் அவர்களுக்குப் பயன் என்ன?
2 அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே.
2 Much in every way. First of all, they have been entrusted with the very wordsa of God.
2 எல்லா வகையிலும் அவர்கள் பெரும்பயன் பெற்றுள்ளார்கள். முதலாவது, கடவுளின் வாக்குகள் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன.
3 சிலர் விசுவாசியாமற்போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ?
3 What if some did not have faith? Will their lack of faith nullify God’s faithfulness?
3 ஆனால், அவர்களுள் சிலர் அவ்வாக்குகளை நம்பவில்லையே! அதனாலென்ன? அவர்கள் நம்பாதலால், கடவுள் நம்பத்தகாதவர் ஆகிவிடுவாரா?
4 அப்படியாக்கமாட்டாது; நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.
4 Certainly not! Let God be true and every man a liar. As it is written: “So that You may be proved right when You speak and victorious when You judge.”b
4 ஒருபோதுமில்லை. மனிதர் எல்லாரும் பொய்யர்; கடவுளோ உண்மை உள்ளவர் என்பது தெளிவாகும். ஏனெனில், "உமது சொற்களில் நீதி வெளிப்படுகிறது; உம் தண்டனைத் தீர்ப்புகளில் வெற்றி விளங்குகிறது" என மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!1
1 திபா 51:4.
5 நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா?
5 But if our unrighteousness highlights the righteousness of God, what shall we say? That God is unjust to inflict His wrath on us? I am speaking in human terms.
5 நீதியற்ற நம் நடத்தையின் மூலம் கடவுளின் நீதி வெளிப்படுமாயின் நாம் என்ன சொல்வோம்? கடவுள் சினந்தெழுந்து தண்டித்தால், அவர் நீதியற்றவர் என்போமா? — இதை நான் மனிதர் பேசும் முறையில் சொல்லுகிறேன் —
6 அப்படிச் சொல்லக்கூடாது; சொல்லக்கூடுமானால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி?
6 Certainly not! In that case, how could God judge the world?
6 ஒருபோதும் இல்லை. கடவுள் நீதியற்றவர் என்றால் எப்படி அவர் உலகிற்குத் தீர்ப்பளிக்க முடியும்?
7 அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்?
7 However, if my falsehood accentuates God’s truthfulness, to the increase of His glory, why am I still condemned as a sinner?
7 என் பொய்ம்மையின் மூலம் கடவுளின் வாய்மை வெளிப்படுவதோடு அவரது மாட்சியும் பெருகுமானால், இன்னும் நான் பாவி எனத் தீர்ப்பளிக்கப்படுவது ஏன்?
8 நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.
8 Why not say, as some slanderously claim that we say, “Let us do evil that good may result”? Their condemnation is deserved!
8 அப்படியானால், "நன்மை விளையும்படி தீமையைச் செய்வோம்" என்று சொல்லலாமே! நாங்கள் இவ்வாறு கூறுவதாகச் சிலர் எங்கள் மீது வீண்பழி சுமத்துகின்றனர். இவர்கள் தகுந்த தண்டனை பெறுவார்கள்.
There Is No One Righteous (Psalm 14:1–7; Psalm 53:1–6; Isaiah 59:1–17)
9 ஆனாலும் என்ன? அவர்களைப்பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல. யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே.
9 What then? Are we any better? Not at all. For we have already made the charge that Jews and Greeks alike are all under sin.
9 அப்படியானால், மற்றவர்களைவிட யூதர்களாகிய நாம் மேலானவர்களா? இல்லவே இல்லை. ஏனெனில், யூதர், கிரேக்கர் யாவரும் பாவத்துக்கு உட்பட்டிருப்பதாக ஏற்கெனவே எடுத்துரைத்தாயிற்று.
10 அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;
10 As it is written: “There is no one righteous, not even one.
10 அவ்வாறே மறைநூலிலும் எழுதியுள்ளது: "நேர்மையாளரே இல்லை, ஒருவர் கூட இல்லை;23456
11 உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;
11 There is no one who understands, no one who seeks God.
11 மதிநுட்பம் உள்ளவர் ஒருவருமில்லை; கடவுளைத் தேடுபவர் § எவராவது உண்டோ?
12 எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
12 All have turned away, they have together become worthless; there is no one who does good, not even one.”c
12 எல்லாரும் நெறிபிறழ்ந்தனர்; ஒருமிக்கக் கெட்டுப்போயினர். நல்லது செய்பவர் யாருமில்லை; ஒருவர்கூட இல்லை."
13 அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது;
13 “Their throats are open graves; their tongues practice deceit.”d “The venom of vipers is on their lips.”e
13 "அவர்களது தொண்டை திறந்த பிணக்குழி; அவர்களது நாக்கு வஞ்சகமே பேசும். அவர்கள் உதட்டில் உள்ளது § விரியன் பாம்பின் நஞ்சு."
14 அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது;
14 “Their mouths are full of cursing and bitterness.”f
14 "அவர்கள் வாயில் சாபமும் கொடுமையும் நிறைந்துள்ளது."
15 அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது;
15 “Their feet are swift to shed blood;
15 "இரத்தம் சிந்துவதற்கு அவர்கள் கால்கள் விரைகின்றன;
16 நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது;
16 ruin and misery lie in their wake,
16 பாழாக்குதலும் அழிவுமே அவர்கள் வழித்தடங்களில் உள்ளன;
17 சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்;
17 and the way of peace they have not known.”g
17 அமைதி வழியை அவர்கள் அறியார்."
18 அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே.
18 “There is no fear of God before their eyes.”h
18 "அவர்களது மனக்கண்களில் இறையச்சம் இல்லை."
19 மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.
19 Now we know that whatever the law says, it says to those who are under the law, so that every mouth may be silenced and the whole world held accountable to God.
19 திருச்சட்டம் சொல்வதெல்லாம் அந்தச் சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்குப் பொருந்தும் என நமக்குத் தெரியும். ஆகவே இவர்களும் உலக மக்கள் அனைவரும் சாக்குப்போக்குச் சொல்ல வழியின்றி இருக்கிறார்கள்.
20 இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியையினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.
20 Therefore no one will be justified in His sight by works of the law. For the law merely brings awareness of sin.
20 ஏனெனில், திருச்சட்டம் சார்ந்த செயல்களால் எவரும் கடவுள் முன்னிலையில் ஏற்புடையவர் ஆவதில்லை. மனிதர்கள் பாவிகள் என்பதையே சட்டம் அவர்களுக்கு உணர்த்துகிறது.7
7 திபா 143:2; கலா 2:16.
Righteousness through Faith in Christ (Philippians 3:1–11)
21 இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.
21 But now, apart from the law, the righteousness of God has been revealed, as attested by the Law and the Prophets.
21 இப்பொழுதோ கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் செயலுக்கும் திருச்சட்டத்துக்கும் தொடர்பில்லை என்பது வெளியாக்கப்பட்டுள்ளது; திருச்சட்டமும் இறைவாக்குகளும் இதற்குச் சான்று பகர்கின்றன.
22 அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.
22 And this righteousness from God comes through faith in Jesus Christ to all who believe. There is no distinction,
22 இயேசு கிறிஸ்துவின்மீது கொள்ளும் நம்பிக்கையின் வழியாகக் கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்; நம்பிக்கை கொள்வோர் அனைவரையுமே அவர் ஏற்புடையவராக்குகிறார். அவர் வேறுபாடு காட்டுவது இல்லை.8
8 கலா 2:16.
23 எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,
23 for all have sinned and fall short of the glory of God,
23 ஏனெனில், எல்லாருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர்.
24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;
24 and are justified freely by His grace through the redemption that is in Christ Jesus.
24 ஆயினும், அனைவரும் கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய மீட்புச் செயலின் மூலம் கடவுளுடைய அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகின்றனர்.
25 தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும்,
25 God presented Him as the atoning sacrificei through faith in His blood, in order to demonstrate His righteousness, because in His forbearance He had passed over the sins committed beforehand.
25 இரத்தம் சிந்தி மனிதருடைய பாவத்துக்குக் கழுவாய் ஆகுமாறு இயேசுவைக் கடவுள் நியமித்தார். அவரிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவே அவ்வாறு செய்தார். கடவுள் கடந்த காலத்தில் மனிதர் செய்த பாவங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். இவ்வாறு, மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் முறையை அவர் காட்டினார்.
26 கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்.
26 He did this to demonstrate His righteousness at the present time, so as to be just and to justify the one who has faith in Jesus.
26 இக்காலத்தில் தமது நீதியைக் கடவுள் பொறுமையோடு காட்டி வருகிறார். ஆம், அவர் நீதியுள்ளவர். இயேசுவின்மீது நம்பிக்கை கொள்வோரைத் தமக்கு ஏற்புடையவராக்கி வருகிறார்.
27 இப்படியிருக்க, மேன்மைபாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப் பிரமாணத்தினாலேயா? அல்ல விசுவாசப்பிரமாணத்தினாலேயே.
27 Where, then, is boasting? It is excluded. On what principle? On that of works? No, but on that of faith.
27 அப்படியிருக்க, பெருமை பாராட்ட இடமேது? இடமில்லை. எந்த அடிப்படையில் பெருமைபாராட்ட இடமில்லை? செயல்களின் அடிப்படையிலா? இல்லை; நம்பிக்கையின் அடிப்படையில்தான்.
28 ஆதலால் மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்.
28 For we maintain that a man is justified by faith apart from works of the law.
28 ஏனெனில், திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசுவின்மீது வைக்கும் நம்பிக்கையின் வாயிலாகவே எவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும் எனக் கருதுகிறோம்.
29 தேவன் யூதருக்குமாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான்.
29 Is God the God of Jews only? Is He not the God of Gentiles too? Yes, of Gentiles too,
29 கடவுள் யூதருக்கு மட்டுமா கடவுள்? பிற இனத்தாருக்கும் அவர் கடவுள் அல்லவா? ஆம், பிற இனத்தாருக்கும் அவரே கடவுள்.
30 விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே.
30 since there is only one God, who will justify the circumcised by faith and the uncircumcised through that same faith.
30 ஏனெனில், கடவுள் ஒருவரே. விருத்தசேதனம் பெற்றவர்களாயினும் விருத்தசேதனம் பெறாதவர்களாயினும், இயேசுவின்மீது கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையில் யாவரையும் கடவுள் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்.
31 அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.
31 Do we, then, nullify the law by this faith? Certainly not! Instead, we uphold the law.
31 அப்படியானால், நம்பிக்கை தேவை என வலியுறுத்துவதன்மூலம் திருச்சட்டத்தைச் செல்லாததாக்குகிறோமா? ஒரு போதும் இல்லை. மாறாக, அவ்வாறு செய்வதன் மூலம் திருச்சட்டத்தை நிலைநாட்டுகிறோம்.9
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
2 a Or the oracles
4 b Or when You are judged ; Psalm 51:4 (see also LXX)
12 c Psalm 14:1–3 and Psalm 53:1–3 (see also LXX)
13 d Psalm 5:9
13 e Psalm 140:3
14 f Psalm 10:7 (see also LXX)
17 g Isaiah 59:7–8 (see also LXX)
18 h Psalm 36:1
25 i Or as a propitiation
Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.