பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
மத் மாற் லூக் யோ அப் ரோ 1கொரி 2கொரி கலா எபே பிலி கொ 1தெ 2தெ 1தீ 2தீ தீத்து பிலெ எபி யா 1பே 2பே 1யோ 2யோ 3யோ யூதா வெளி
Romans ரோமர் Ῥωμαίους
ரோமர் 14 | Romans 14
The Law of Liberty (Matthew 7:1–6; Luke 6:37–42)
1 விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்.
1 Accept him whose faith is weak, without passing judgment on his opinions.a
1 நம்பிக்கையில் வலுவற்றவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள்; ஆனால், கருத்து வேறுபாடுகளைப் பற்றி அவர்களோடு வாதாடாதீர்கள்.
2 ஒருவன் எந்தப் பதார்த்தத்தையும் புசிக்கலாமென்று நம்புகிறான்; பலவீனனோ மரக்கறிகளை மாத்திரம் புசிக்கிறான்.
2 For one person has faith to eat all things, while another, who is weak, eats only vegetables.
2 நம்பிக்கை கொண்டோர் எல்லா வகை உணவையும் உண்ணலாம் எனக் கருதுகின்றனர்; வலுவற்றவரோ மரக்கறியையே உண்கின்றனர்.
3 புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாயெண்ணாதிருப்பானாக; புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே.
3 The one who eats everything must not belittle the one who does not, and the one who does not eat everything must not judge the one who does, for God has accepted him.
3 எல்லாவகை உணவையும் உண்போர் அவ்வாறு உண்ணாதோரை இழிவாக எண்ணலாகாது; உண்ணாதோரும் உண்பவருக்கு எதிராகத் தீர்ப்பளித்தல் ஆகாது. ஏனெனில், கடவுள் அவர்களையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
4 மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே.
4 Who are you to judge someone else’s servant? To his own master he stands or falls. And he will stand, for the Lord is able to make him stand.
4 வேறொருவருடைய வீட்டு வேலையாளிடம் குற்றம்காண்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அவர் நன்கு செயலாற்றுகிறாரா இல்லையா எனத் தீர்மானிப்பது அவர் தலைவரின் பொறுப்பு. அவர் நன்குதான் செயல்படுவார். ஏனெனில், தலைவர் அவரை நன்கு செயல்பட வைக்கமுடியும்.
5 அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொரு நாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்.
5 One person regards a certain day above the others, while someone else considers every day alike. Each one should be fully convinced in his own mind.
5 ஒருநாள் மற்றொரு நாளைவிடச் சிறந்தது எனச் சிலர் கருதுகின்றனர்; வேறு சிலர் எல்லா நாளையும் ஒன்று போலவே கருதுகின்றனர். இத்தகையவற்றில், ஒவ்வொருவரும் தம் மனத்தில் செய்து கொண்ட முடிவின்படி நடக்கட்டும்.
6 நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக்கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறான்.
6 He who observes a special day does so to the Lord; he who eats does so to the Lord, for he gives thanks to God; and he who abstains does so to the Lordb and gives thanks to God.
6 மேற்சொன்னவாறு ஒரு குறிப்பிட்ட நாளைச் சிறப்பாகக் கடைப்பிடிப்பவர் ஆண்டவருக்காகவே அப்படிச் செய்கிறார். எல்லா வகை உணவையும் உண்போர் கடவுளுக்கு நன்றிகூறி உண்பதால், ஆண்டவருக்காகவே உண்கின்றனர். அவ்வாறு உண்ணாதிருப்போரும் ஆண்டவருக்காகவே உண்ணாதிருக்கின்றனர்; ஏனெனில், அவர்களும் கடவுளுக்கு நன்றி கூறுகின்றார்கள்.1
1 கொலோ 2:16.
7 நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை.
7 For none of us lives to himself alone, and none of us dies to himself alone.
7 நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை; தமக்கென்று இறப்பதுமில்லை.
8 நாம் பிழைத்தாலும், கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்.
8 If we live, we live to the Lord, and if we die, we die to the Lord. So whether we live or die, we belong to the Lord.
8 வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்; இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம். ஆகவே வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம்.
9 கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்.
9 For this reason Christ died and returned to life, that He might be the Lord of both the dead and the living.
9 ஏனெனில், இறந்தோர்மீதும் வாழ்வோர்மீதும் ஆட்சிசெலுத்தவே கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார்.
10 இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.
10 Why, then, do you judge your brother? Or why do you belittle your brother? For we will all stand before God’s judgment seat.
10 அப்படியிருக்க, நீங்கள் ஏன் உங்கள் சகோதரர் சகோதரிகளிடம் குற்றம் காண்கிறீர்கள்? ஏன் அவர்களை இழிவாகக் கருதுகிறீர்கள்? நாம் அனைவருமே கடவுளின் நடுவர் இருக்கை முன் நிறுத்தப்படுவோம் அல்லவா?2
2 2 கொரி 5:10.
11 அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.
11 It is written: “As surely as I live, says the Lord, every knee will bow before Me; every tongue will confess to God.”c
11 ஏனெனில், "ஆண்டவர் சொல்கிறார்; நான் என் மேல் ஆணையிட்டுள்ளேன்; முழங்கால் அனைத்தும் எனக்கு முன் மண்டியிடும். நாவு அனைத்தும் என்னைப் போற்றும்" என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!3
3 எசா 45:23.
12 ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.
12 So then, each of us will give an account of himself to God.
12 ஆகவே, நம்முள் ஒவ்வொருவரும் தம்மைக் குறித்தே கடவுளுக்குக் கணக்குக் கொடுப்பர்.
The Law of Love (Ezekiel 14:1–11; 1 Corinthians 8:1–13)
13 இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
13 Therefore let us stop judging one another. Instead, make up your mind not to put any stumbling block or obstacle in your brother’s way.
13 ஆகையால், இனி ஒருவர் மற்றவரிடம் குற்றம் காணாதிருப்போம். மேலும், சகோதரர் சகோதரிகளுக்குத் தடைக்கல்லாகவோ இடையூறாகவோ இருப்பதில்லை எனத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
14 ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒருபொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும்.
14 I am convinced and fully persuaded in the Lord Jesus that nothing is unclean in itself. But if anyone regards something as unclean, then for him it is unclean.
14 தன்னிலேயே எப்பொருளும் தீட்டானது அல்ல என, ஆண்டவர் இயேசுவுடன் இணைந்து வாழும் எனக்குத் தெரியும். இது என் உறுதியான நம்பிக்கை. எனினும், ஒரு பொருள் தீட்டானது எனக் கருதுவோருக்கு அது தீட்டானதாகவே இருக்கும்.
15 போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால், நீ அன்பாய் நடக்கிறவனல்ல; அவனை உன் போஜனத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே.
15 If your brother is distressed by what you eat, you are no longer acting in love. Do not by your eating destroy your brother, for whom Christ died.
15 நீங்கள் உண்ணும் உணவு உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மனவருத்தம் உண்டாக்கினால் நீங்கள் அன்பு நெறியில் நடப்பவர்கள் அல்ல. உணவை முன்னிட்டு நீங்கள் அவர்களை அழிவுறச் செய்யாதீர்கள்; அவர்களுக்காகக் கிறிஸ்து உயிர்துறக்கவில்லையா?
16 உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள்.
16 Do not allow what you consider good, then, to be spoken of as evil.
16 ஆகவே, உங்களுக்கு நன்மையாய் இருப்பது பிறருடைய பழிச்சொல்லுக்கு இடந்தராதிருப்பதாக!
17 தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.
17 For the kingdom of God is not a matter of eating and drinking, but of righteousness, peace, and joy in the Holy Spirit.
17 இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது.
18 இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப் பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான்.
18 For whoever serves Christ in this way is pleasing to God and approved by men.
18 இத்தகைய இறையாட்சி மனப்பான்மையோடு கிறிஸ்துவுக்குப் பணிபுரிவோர் கடவுளுக்கு உகந்தோராயும் மக்களின் மதிப்புக்கு உரியோராயும் இருப்பர்.
19 ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம்.
19 So then, let us pursue what leads to peace and to mutual edification.
19 ஆகையால், அமைதிக்கு வழிவகுப்பவற்றை நாடுவோமாக! ஒருவர் மற்றவருக்கு வளர்ச்சி தருபவற்றைச் செய்ய முயலுவோமாக!
20 போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே. எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்; ஆனாலும் இடறலுண்டாகப் புசிக்கிறவனுக்கு அது தீமையாயிருக்கும்.
20 Do not destroy the work of God for the sake of food. All food is clean, but it is wrong for a man to let his eating be a stumbling block.
20 உணவின் பொருட்டுக் கடவுளின் படைப்பை அழிக்காதீர். எல்லா உணவும் தூயதுதான்; ஆனால் அடுத்தவருக்குத் தடையாக அமையும் எந்த உணவும் அதை உண்போருக்குத் தீயதுதான்.
21 மாம்சம் புசிக்கிறதும், மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்.
21 It is better not to eat meat or drink wine or to do anything to cause your brother to stumble.d
21 உங்கள் சகோதரர் சகோதரிகளுக்குத் தடையாக இருக்குமாயின், இறைச்சி உண்பதையோ, திராட்சை மது குடிப்பதையோ, அதுபோன்ற வேறெதையும் செய்வதையோ தவிர்ப்பதே நல்லது.4
4 1 கொரி 8:13.
22 உனக்கு விசுவாசமிருந்தால் அது தேவனுக்குமுன்பாக உன்மட்டும் இருக்கட்டும். நல்லதென நிச்சயித்த காரியத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் பாக்கியவான்.
22 Keep your belief about such matters between yourself and God.e Blessed is the one who does not condemn himself by what he approves.
22 இவற்றைப்பற்றிய உறுதியான மனநிலை உங்களுக்கிருந்தால், அதை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்; அது கடவுளுக்கு மட்டும் தெரிந்திருக்கட்டும். தேர்ந்து தெளிந்து எடுத்த முடிவைச் செயல்படுத்தும்போது மனச்சான்றின் உறுத்தலுக்கு ஆளாகாதோர் பேறுபெற்றோர்.
23 ஒருவன் சமுசயப்படுகிறவனாய்ப் புசித்தால், அவன் விசுவாசமில்லாமல் புசிக்கிறபடியினால், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.
23 But the one who has doubts is condemned if he eats, because his eating is not from faith; and everything that is not from faith is sin.f
23 நல்லதோ கெட்டதோ என்னும் ஐயத்தோடு உண்போர் தண்டனைத் தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில், அவர்கள் உறுதியான மனநிலையோடு செயல்படவில்லை. உறுதியான மனநிலையோடு செய்யப்படாததெல்லாம் பாவமே.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a Or without quarreling over disputable matters
6 b BYZ and TR include he who does not regard the day, to the Lord he does not regard it;
11 c Or will give praise to God or will acknowledge God ; Isaiah 45:23 (see also LXX)
21 d SBL, BYZ, and TR include or to be hindered or weakened .
22 e Literally Keep the faith that you have to yourself before God
23 f Some manuscripts place the text of Romans 16:25–27 here.
Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.