பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

Luke  லூக்கா  Λουκᾶν

அதிகாரம் 1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

லூக்கா 9 | Luke 9

The Ministry of the Twelve (Matthew 10:5–15; Mark 6:7–13)

1δὲ Συνκαλεσάμενος τοὺς δώδεκα ἔδωκεν αὐτοῖς δύναμιν καὶ ἐξουσίαν ἐπὶ πάντα τὰ δαιμόνια καὶ θεραπεύειν νόσους

1 அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து,
1 Then Jesus called the Twelvea together and gave them power and authority over all demons, and power to cure diseases.
1 இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் பிணிகளைப் போக்கவும் வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுத்தார்.

2καὶ ἀπέστειλεν αὐτοὺς κηρύσσειν τὴν βασιλείαν τοῦ Θεοῦ καὶ ἰᾶσθαι ‹τοὺς ἀσθενεῖς›

2 தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார்.
2 And He sent them out to proclaim the kingdom of God and to heal the sick.
2 இறையாட்சிபற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணிதீர்க்கவும் அவர்களை அனுப்பினார்.

3αἴρετε Μηδὲν εἰς τὴν ὁδόν καὶ εἶπεν πρὸς αὐτούς μήτε ῥάβδον μήτε πήραν μήτε ἄρτον μήτε ἀργύριον μήτε δύο χιτῶνας ἀνὰ ἔχειν

3 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: வழிக்குத் தடியையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டுபோகவும் வேண்டாம்.
3 “Take nothing for the journey,” He told them, “no staff, no bag, no bread, no money,b no second tunic.
3 அப்போது அவர்களை நோக்கி, "பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும்.

4καὶ ἣν ἂν οἰκίαν εἰσέλθητε εἰς μένετε ἐκεῖ καὶ ἐξέρχεσθε ἐκεῖθεν

4 எந்த வீட்டிலே பிரவேசிக்கிறீர்களோ, அங்கே தங்கி, அங்கிருந்து புறப்படுங்கள்.
4 Whatever house you enter, stay there until you leave that area.
4 நீங்கள் எந்த வீட்டிக்குள் சென்றாலும் அங்கேயே தங்கியிருங்கள்; அங்கிருந்தே புறப்படுங்கள்.

5καὶ ὅσοι ἂν μὴ δέχωνται ὑμᾶς ἀποτινάσσετε τὸν κονιορτὸν ἀπὸ ὑμῶν τῶν ποδῶν ἐξερχόμενοι ἀπὸ ἐκείνης τῆς πόλεως εἰς μαρτύριον ἐπ’ αὐτούς

5 உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவர்களோ அவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் என்றார்.
5 If anyone does not welcome you, shake the dust off your feet when you leave that town, as a testimony against them.”
5 உங்களை ஏற்றுக் கொள்ளாதவர்களுடைய நகரைவிட்டுப் புறப்படும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்" என்றார்.12

6δὲ Ἐξερχόμενοι διήρχοντο κατὰ τὰς κώμας εὐαγγελιζόμενοι καὶ θεραπεύοντες πανταχοῦ

6 அவர்கள் புறப்பட்டுப்போய், கிராமங்கள்தோறும் திரிந்து, எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கினார்கள்.
6 So they set out and went from village to village, preaching the gospel and healing people everywhere.
6 அவர்கள் ஊர் ஊராகச் சென்று எங்கும் நற்செய்தியை அறிவித்து நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.

Herod Tries to See Jesus (Matthew 14:1–12; Mark 6:14–29)

7δὲ Ἡρῴδης ὁ τετραάρχης Ἤκουσεν πάντα τὰ γινόμενα καὶ διηπόρει διὰ ὑπό τινων τὸ λέγεσθαι ὅτι Ἰωάννης ἠγέρθη ἐκ νεκρῶν

7 அப்பொழுது காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது அவரால் செய்யப்பட்ட யாவையும் கேள்விப்பட்டதுமன்றி; சிலர் யோவான் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றும்,
7 When Herod the tetrarch heard about all that was happening, he was perplexed. For some were saying that John had risen from the dead,
7 நிகழ்ந்தவற்றையெல்லாம் குறுநில மன்னன் ஏரோது கேள்வியுற்று மனம் குழம்பினான். ஏனெனில், சிலர், "இறந்த யோவான் உயிருடன் எழுப்பப்பட்டார்" என்றனர்.

8δὲ ὑπό τινων ὅτι Ἠλίας ἐφάνη δὲ ἄλλων ὅτι τις προφήτης τῶν ἀρχαίων ἀνέστη

8 சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து:
8 others that Elijah had appeared, and still others that a prophet of old had arisen.
8 வேறு சிலர், "எலியா தோன்றியிருக்கிறார்" என்றனர். மற்றும் சிலர், "முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார்" என்றனர்.3

9ἐγὼ ἀπεκεφάλισα Ἰωάννην δὲ ‹ὁ› Ἡρῴδης Εἶπεν δέ τίς ἐστιν οὗτος ἀκούω τοιαῦτα περὶ οὗ καὶ ἐζήτει ἰδεῖν αὐτόν

9 யோவானை நான் சிரச்சேதம்பண்ணினேன், இவன் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறான் என்று கேள்விப்படுகிறேனே! இவன் யார்? என்று ஏரோது சொல்லி, அவரைப் பார்க்க விரும்பினான்.
9 “I beheaded John,” Herod said, “but who is this man I hear such things about?” And he kept trying to see Jesus.
9 ஏரோது, "யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!" என்று சொல்லி இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

The Feeding of the Five Thousand (Matthew 14:13–21; Mark 6:30–44; John 6:1–15)

10Καὶ οἱ ἀπόστολοι ὑποστρέψαντες διηγήσαντο αὐτῷ ὅσα ἐποίησαν Καὶ παραλαβὼν αὐτοὺς κατ’ ἰδίαν ὑπεχώρησεν εἰς πόλιν καλουμένην Βηθσαϊδά

10 அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்த யாவையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார்.
10 Then the apostles returned and reported to Jesus all that they had done. Taking them away privately, He withdrew to a town called Bethsaida.
10 திருத்தூதர்கள் திரும்பி வந்து, தாங்கள் செய்த யாவற்றையும் இயேசுவிடம் எடுத்துக் கூறினார்கள். அவர்களை மட்டும் கூட்டிக்கொண்டு அவர் தனித்திருப்பதற்காகப் பெத்சாய்தா என்னும் நகருக்குச் சென்றார்.

11δὲ οἱ ὄχλοι γνόντες ἠκολούθησαν αὐτῷ καὶ ἀποδεξάμενος αὐτοὺς ἐλάλει αὐτοῖς περὶ τῆς βασιλείας τοῦ Θεοῦ καὶ ἰᾶτο τοὺς ἔχοντας χρείαν θεραπείας

11 ஜனங்கள் அதை அறிந்து, அவர் பின்னே போனார்கள், அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து அவர்களுடனே பேசி, சொஸ்தமடையவேண்டுமென்றிருந்தவர்களைச் சொஸ்தப்படுத்தினார்.
11 But the crowds found out and followed Him. He welcomed them and spoke to them about the kingdom of God, and He healed those who needed healing.
11 அதை அறிந்து திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களை அவர் வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார்.

12δὲ Ἡ ἡμέρα ἤρξατο κλίνειν δὲ οἱ δώδεκα προσελθόντες αὐτῷ εἶπαν Ἀπόλυσον τὸν ὄχλον ἵνα πορευθέντες εἰς τὰς κύκλῳ κώμας καὶ ἀγροὺς καταλύσωσιν καὶ εὕρωσιν ἐπισιτισμόν ὅτι ἐσμέν ἐν ἐρήμῳ τόπῳ ὧδε

12 சாயங்காலமாகிறபோது, பன்னிருவரும் சேர்ந்துவந்து, அவரை நோக்கி: நாம் இருக்கிற இடம் வனாந்தரமாயிருக்கிறது, சுற்றியிருக்கிற ஊர்களிலும் கிராமங்களிலும் ஜனங்கள் போய்த் தங்கி, போஜனபதார்த்தங்களைச் சம்பாதித்துக்கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
12 As the day neared its end, the Twelve came to Jesus and said, “Dismiss the crowd so they can go to the surrounding villages and countryside for lodging and provisions. For we are in a desolate place here.”
12 பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, "இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே; சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்" என்றனர்.

13δὲ Εἶπεν πρὸς αὐτούς ὑμεῖς Δότε αὐτοῖς φαγεῖν εἰσὶν ἡμῖν Οὐκ πλεῖον ἢ πέντε ἄρτοι καὶ δύο ἰχθύες δὲ Οἱ εἶπαν εἰ μήτι ἡμεῖς πορευθέντες ἀγοράσωμεν βρώματα εἰς πάντα τοῦτον τὸν λαὸν

13 அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமாத்திரமுண்டு, இந்த ஜனங்களெல்லாருக்கும் போஜனங்கொடுக்கவேண்டியதானால், நாங்கள் போய் வாங்கிக்கொண்டுவரவேண்டுமே என்றார்கள்.
13 But Jesus told them, “You give them something to eat.” “We have only five loaves of bread and two fish,” they answered, “unless we go and buy food for all these people.”
13 இயேசு அவர்களிடம், "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்றார். அவர்கள், "எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்" என்றார்கள்.

14γὰρ ἦσαν ὡσεὶ πεντακισχίλιοι ἄνδρες δὲ Εἶπεν πρὸς αὐτοῦ τοὺς μαθητὰς Κατακλίνατε αὐτοὺς ἀνὰ κλισίας ὡσεὶ πεντήκοντα

14 ஏறக்குறைய ஐயாயிரம் புருஷர் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது, ஐம்பதுபேராக, உட்காரும்படி சொல்லுங்கள் என்று தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார்.
14 (There were about five thousand men.) He told His disciples, “Have them sit down in groups of about fifty each.”
14 ஏனெனில், ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, "இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்" என்றார்.

15καὶ ἐποίησαν οὕτως καὶ ἅπαντας κατέκλιναν

15 அவர்கள் அந்தப்படியே எல்லாரையும் உட்காரும்படி செய்தார்கள்.
15 They did so, and everyone was seated.
15 அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள்.

16δὲ Λαβὼν τοὺς πέντε ἄρτους καὶ τοὺς δύο ἰχθύας ἀναβλέψας εἰς τὸν οὐρανὸν εὐλόγησεν καὶ κατέκλασεν αὐτοὺς καὶ ἐδίδου τοῖς μαθηταῖς παραθεῖναι τῷ ὄχλῳ

16 அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு ஜனங்கள்முன் வைக்கும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்.
16 Taking the five loaves and the two fish and looking up to heaven, Jesus spoke a blessing and broke them. Then He gave them to the disciples to set before the people.
16 அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின் மீது ஆசிகூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார்.

17Καὶ πάντες ἔφαγον καὶ ἐχορτάσθησαν καὶ τὸ αὐτοῖς ἤρθη δώδεκα κόφινοι κλασμάτων περισσεῦσαν

17 எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான துணிக்கைகள் பன்னிரண்டு கூடைநிறைய எடுக்கப்பட்டது.
17 They all ate and were satisfied, and the disciples picked up twelve basketfuls of broken pieces that were left over.
17 அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.

Peter’s Confession of Christ (Matthew 16:13–20; Mark 8:27–30; John 6:67–71)

18Καὶ ἐγένετο ἐν αὐτὸν τῷ εἶναι προσευχόμενον κατὰ μόνας οἱ μαθηταί συνῆσαν αὐτῷ καὶ ἐπηρώτησεν αὐτοὺς λέγων Τίνα «οἱ ὄχλοι» λέγουσιν με εἶναι

18 பின்பு அவர் தமது சீஷரோடே கூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
18 One day as Jesus was praying in private and the disciples were with Him, He questioned them: “Who do the crowds say I am?”
18 இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், "நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?" என்று அவர் கேட்டார்.

19δὲ Οἱ ἀποκριθέντες εἶπαν Ἰωάννην τὸν Βαπτιστήν δὲ ἄλλοι Ἠλίαν δὲ ἄλλοι ὅτι προφήτης τις τῶν ἀρχαίων ἀνέστη

19 அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
19 They replied, “Some say John the Baptist; others say Elijah; and still others, that a prophet of old has arisen.”
19 அவர்கள் மறுமொழியாக, "சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்" என்றார்கள்.4

20δὲ Ὑμεῖς δὲ Εἶπεν αὐτοῖς τίνα λέγετε με εἶναι δὲ Πέτρος ἀποκριθεὶς εἶπεν Τὸν Χριστὸν τοῦ Θεοῦ

20 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான்.
20 “But what about you?” Jesus asked. “Who do you say I am?” Peter answered, “The Christ of God.”
20 "ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்?" என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, "நீர் கடவுளின் மெசியா" என்று உரைத்தார்.5

Christ’s Passion Foretold (Matthew 16:21–23; Mark 8:31–33)

21δὲ Ὁ ἐπιτιμήσας παρήγγειλεν αὐτοῖς λέγειν τοῦτο μηδενὶ

21 அப்பொழுது அவர்கள் அதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்.
21 Jesus strictly warned them not to tell this to anyone.
21 இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

22τὸν Υἱὸν τοῦ ἀνθρώπου Δεῖ παθεῖν πολλὰ εἰπὼν ὅτι καὶ ἀποδοκιμασθῆναι ἀπὸ τῶν πρεσβυτέρων καὶ ἀρχιερέων καὶ γραμματέων καὶ ἀποκτανθῆναι καὶ τῇ τρίτῃ ἡμέρᾳ ἐγερθῆναι

22 மேலும் மனுஷகுமாரன் பல பாடுகள்படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்.
22 “The Son of Man must suffer many things,” He said. “He must be rejected by the elders, chief priests, and scribes, and He must be killed and on the third day be raised to life.”
22 மேலும் இயேசு, "மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்" என்று சொன்னார்.

Take Up Your Cross (Matthew 16:24–28; Mark 8:34–38)

23δὲ Ἔλεγεν πρὸς πάντας Εἴ τις θέλει ἔρχεσθαι ὀπίσω μου ἀρνησάσθω ἑαυτὸν καὶ ἀράτω αὐτοῦ τὸν σταυρὸν καθ’ ἡμέραν καὶ ἀκολουθείτω μοι

23 பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
23 Then Jesus said to all of them, “If anyone wants to come after Me, he must deny himself and take up his cross daily and follow Me.
23 பின்பு அவர் அனைவரையும் நோக்கி, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.6

24γὰρ ὃς ἂν* θέλῃ σῶσαι αὐτοῦ τὴν ψυχὴν ἀπολέσει αὐτήν δ’ ὃς ἂν ἀπολέσῃ αὐτοῦ τὴν ψυχὴν ἕνεκεν ἐμοῦ οὗτος σώσει αὐτήν

24 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.
24 For whoever wants to save his life will lose it, but whoever loses his life for My sake will save it.
24 ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.7

25γὰρ Τί ὠφελεῖται ἄνθρωπος κερδήσας τὸν ὅλον κόσμον δὲ ἀπολέσας ἢ ζημιωθείς ἑαυτὸν

25 மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
25 What does it profit a man to gain the whole world, yet lose or forfeit his very self?
25 ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?

26γὰρ ὃς ἂν ἐπαισχυνθῇ με καὶ ἐμοὺς τοὺς λόγους ὁ Υἱὸς τοῦ ἀνθρώπου ἐπαισχυνθήσεται τοῦτον ὅταν ἔλθῃ ἐν αὐτοῦ τῇ δόξῃ καὶ τοῦ Πατρὸς καὶ τῶν ἁγίων ἀγγέλων

26 என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரன் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்.
26 If anyone is ashamed of Me and My words, the Son of Man will be ashamed of him when He comes in His glory and in the glory of the Father and of the holy angels.
26 என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரைப் பற்றியும் மானிட மகன் தமக்கும் தந்தைக்கும் தூய வானதூதருக்கும் உரிய மாட்சியோடு வரும் போது வெட்கப்படுவார்.

27δὲ λέγω ὑμῖν ἀληθῶς τινες τῶν εἰσίν ἑστηκότων αὐτοῦ οἳ οὐ μὴ γεύσωνται θανάτου ἕως ἂν ἴδωσιν τὴν βασιλείαν τοῦ Θεοῦ

27 இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
27 But I tell you truthfully, some who are standing here will not taste death before they see the kingdom of God.”
27 இங்கு நிற்பவர்களுள் சிலர் இறையாட்சி வருவதைக் காண்பதற்குமுன் சாகமாட்டார்கள் என உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

The Transfiguration (Matthew 17:1–13; Mark 9:1–13; 2 Peter 1:16–21)

28δὲ Ἐγένετο ὡσεὶ ὀκτὼ ἡμέραι μετὰ τοὺς λόγους τούτους καὶ παραλαβὼν Πέτρον καὶ Ἰωάννην καὶ Ἰάκωβον ἀνέβη εἰς τὸ ὄρος προσεύξασθαι

28 இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டு நாளானபின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்.
28 About eight days after Jesus had said these things, He took with Him Peter, John, and James, and went up on a mountain to pray.
28 இவற்றையெல்லாம் சொல்லி ஏறக்குறைய எட்டுநாள்கள் ஆனபிறகு இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார்.

29καὶ ἐγένετο ἐν αὐτὸν τῷ προσεύχεσθαι τὸ εἶδος τοῦ αὐτοῦ προσώπου ἕτερον καὶ αὐτοῦ ὁ ἱματισμὸς ἐξαστράπτων λευκὸς

29 அவர் ஜெபம்பண்ணுகையில், அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது.
29 And as He was praying, the appearance of His face changed, and His clothes became radiantly white.
29 அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது.

30καὶ ἰδοὺ δύο ἄνδρες οἵτινες ἦσαν Μωϋσῆς καὶ Ἠλίας συνελάλουν αὐτῷ

30 அன்றியும் மோசே எலியா என்னும் இரண்டுபேரும் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணைபண்ணி,
30 Suddenly two men, Moses and Elijah, began talking with Jesus.
30 மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர்.

31οἳ ὀφθέντες ἐν δόξῃ ἔλεγον αὐτοῦ τὴν ἔξοδον ἣν ἤμελλεν πληροῦν ἐν Ἰερουσαλήμ

31 அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
31 They appeared in glory and spoke about His departure, which He was about to accomplish at Jerusalem.
31 மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

32δὲ Ὁ Πέτρος καὶ οἱ σὺν αὐτῷ ἦσαν βεβαρημένοι ὕπνῳ δὲ διαγρηγορήσαντες εἶδον* αὐτοῦ τὴν δόξαν καὶ τοὺς δύο ἄνδρας τοὺς συνεστῶτας αὐτῷ

32 பேதுருவும் அவனோடிருந்தவர்களும் நித்திரைமயக்கமாயிருந்தார்கள். ஆகிலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடே நின்ற அவ்விரண்டு பேரையும் கண்டார்கள்.
32 Meanwhile Peter and his companions were overcome by sleep, but when they awoke, they saw Jesus’ glory and the two men standing with Him.
32 பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள்.

33καὶ ἐγένετο ἐν αὐτοὺς τῷ διαχωρίζεσθαι ἀπ’ αὐτοῦ ὁ Πέτρος εἶπεν πρὸς τὸν Ἰησοῦν Ἐπιστάτα ἐστιν καλόν ἡμᾶς εἶναι ὧδε ποιήσωμεν καὶ τρεῖς σκηνὰς μίαν σοὶ καὶ μίαν Μωϋσεῖ καὶ μίαν Ἠλίᾳ μὴ εἰδὼς ὃ λέγει

33 அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்துபோகையில், பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது இன்னதென்று அறியாமல் சொன்னான்.
33 As Moses and Elijah were leaving, Peter said to Jesus, “Master, it is good for us to be here. Let us put up three sheltersc —one for You, one for Moses, and one for Elijah.” (He did not know what he was saying.)
33 அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார்.

34δὲ αὐτοῦ λέγοντος Ταῦτα νεφέλη ἐγένετο καὶ ἐπεσκίαζεν αὐτούς δὲ ἐφοβήθησαν ἐν τῷ αὐτοὺς εἰσελθεῖν εἰς τὴν νεφέλην

34 இப்படி அவன் பேசுகையில், ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது, அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவேசிக்கையில் சீஷர்கள் பயந்தார்கள்.
34 While Peter was speaking, a cloud appeared and enveloped them, and they were afraid as they entered the cloud.
34 இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.

35καὶ φωνὴ ἐγένετο ἐκ τῆς νεφέλης λέγουσα Οὗτός ἐστιν μου ὁ Υἱός ὁ ἐκλελεγμένος ἀκούετε αὐτοῦ

35 அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று.
35 And a voice came from the cloud, saying, “This is My Son, whom I have chosen.d Listen to Him!”
35 அந்த மேகத்தினின்று, "இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்" என்று ஒரு குரல் ஒலித்தது.98

36καὶ ἐν τὴν φωνὴν τῷ γενέσθαι μόνος Ἰησοῦς εὑρέθη καὶ αὐτοὶ ἐσίγησαν καὶ ἐν ἐκείναις ταῖς ἡμέραις ἀπήγγειλαν οὐδενὶ οὐδὲν ὧν ἑώρακαν

36 அந்தச் சத்தம் உண்டாகையில் இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லாமல் அடக்கிவைத்திருந்தார்கள்.
36 After the voice had spoken, only Jesus was present with them. The disciples kept this to themselves, and in those days they did not tell anyone what they had seen.
36 அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.

The Boy with an Evil Spirit (Matthew 17:14–18; Mark 9:14–29)

37δὲ Ἐγένετο τῇ ἑξῆς ἡμέρᾳ αὐτῶν κατελθόντων ἀπὸ τοῦ ὄρους αὐτῷ συνήντησεν πολύς ὄχλος

37 மறுநாளில் அவர்கள் மலையிலிருந்திறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்தார்கள்.
37 The next day, when they came down from the mountain, Jesus was met by a large crowd.
37 மறுநாள் அவர்கள் மலையிலிருந்து இறங்கியபொழுது, பெருந்திரளான மக்கள் அவரை எதிர்கொண்டு வந்தார்கள்.

38καὶ ἰδοὺ ἀνὴρ ἀπὸ τοῦ ὄχλου ἐβόησεν λέγων Διδάσκαλε δέομαί σου ἐπιβλέψαι ἐπὶ μου τὸν υἱόν ὅτι ἐστιν μοί μονογενής

38 அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனைக் கடாட்சித்தருள வேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாயிருக்கிறான்.
38 Suddenly a man in the crowd cried out, “Teacher, I beg You to look at my son, for he is my only child.
38 கூட்டத்திலிருந்து ஒருவர், "போதகரே, என் மகன்மீது அருள்கூர வேண்டும் என உம்மிடம் மன்றாடுகிறேன். அவன் எனக்கு ஒரே மகன்.

39καὶ ἰδοὺ πνεῦμα λαμβάνει αὐτόν καὶ κράζει ἐξαίφνης καὶ σπαράσσει αὐτὸν μετὰ ἀφροῦ καὶ συντρῖβον αὐτόν μόγις* ἀποχωρεῖ ἀπ’ αὐτοῦ

39 ஒரு ஆவி அவனைப் பிடிக்கிறது, அப்பொழுது அவன் அலறுகிறான். அது அவனை நுரைதள்ள அலைக்கழித்து அவனைக் கசக்கினபின்பும், அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது.
39 A spirit keeps seizing him, and he screams abruptly. It throws him into convulsions so that he foams at the mouth. It keeps mauling him and rarely departs from him.
39 ஓர் ஆவி அவனைப் பிடித்துக் கொள்கிறது; உடனே அவன் அலறுகிறான்; வலிப்பு உண்டாகி நுரை தள்ளுகிறான்; அது அவனை நொறுக்கிவிடுகிறது; அவனைவிட்டு எளிதாகப் போவதில்லை.

40καὶ ἐδεήθην σου τῶν μαθητῶν ἵνα ἐκβάλωσιν αὐτό καὶ οὐκ ἠδυνήθησαν

40 அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன், அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.
40 I begged Your disciples to drive it out, but they were unable.”
40 அதை ஓட்டிவிடும்படி உம் சீடரிடம் மன்றாடினேன். ஆனால், அவர்களால் முடியவில்லை" என்று உரக்கக் கூறினார்.

41Ὦ ἄπιστος καὶ διεστραμμένη γενεὰ δὲ ὁ Ἰησοῦς Ἀποκριθεὶς εἶπεν ἕως πότε ἔσομαι πρὸς ὑμᾶς καὶ ἀνέξομαι ὑμῶν προσάγαγε σου τὸν υἱόν ὧδε

41 இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.
41 “O unbelieving and perverse generation!” Jesus replied. “How long must I remain with you and put up with you? Bring your son here.”
41 அதற்கு இயேசு, "நம்பிக்கையற்ற சீரழிந்த தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்?" என்றார். "உம் மகனை இங்கே கொண்டுவாரும்" என்று அம்மனிதரிடம் கூறினார்.

42δὲ Ἔτι αὐτοῦ προσερχομένου τὸ δαιμόνιον ἔρρηξεν αὐτὸν καὶ συνεσπάραξεν δὲ ὁ Ἰησοῦς ἐπετίμησεν τῷ τῷ ἀκαθάρτῳ πνεύματι καὶ ἰάσατο τὸν παῖδα καὶ ἀπέδωκεν αὐτὸν τῷ αὐτοῦ πατρὶ

42 அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்த ஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்.
42 Even while the boy was approaching, the demon slammed him to the ground in a convulsion. But Jesus rebuked the unclean spirit, healed the boy, and gave him back to his father.
42 அவன் அவரிடம் வந்தபோது பேய் அவனைக் கீழே தள்ளி வலிப்புண்டாக்கியது. இயேசு அத்தீய ஆவியை அதட்டி, சிறுவனின் பிணி தீர்த்து, அவனுடைய தந்தையிடம் அவனை ஒப்படைத்தார்.

The Second Prediction of the Passion (Matthew 17:22–23; Mark 9:30–32)

43δὲ πάντες Ἐξεπλήσσοντο ἐπὶ τῇ μεγαλειότητι τοῦ Θεοῦ δὲ Πάντων θαυμαζόντων ἐπὶ πᾶσιν οἷς ἐποίει εἶπεν πρὸς αὐτοῦ τοὺς μαθητὰς

43 அப்பொழுது எல்லாரும் தேவனுடைய மகத்துவத்தைக் குறித்துப் பிரமித்தார்கள். இயேசு செய்த யாவையுங்குறித்து அனைவரும் ஆச்சரியப்படுகையில் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி:
43 And they were all astonished at the greatness of God. While everyone was marveling at all that Jesus was doing, He said to His disciples,
43 அப்பொழுது எல்லாரும் கடவுளின் மாண்பைக் கண்டு மலைத்து நின்றார்கள்.இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். அவர் தம் சீடர்களிடம்,

44ὑμεῖς τούτους τοὺς λόγους Θέσθε εἰς ὑμῶν τὰ ὦτα γὰρ ὁ Υἱὸς τοῦ ἀνθρώπου μέλλει παραδίδοσθαι εἰς χεῖρας ἀνθρώπων

44 நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாய்க் கேளுங்கள்; மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார்.
44 “Let these words sink into your ears: The Son of Man is about to be delivered into the hands of men.”
44 "நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்" என்றார்.

45δὲ οἱ ἠγνόουν τοῦτο τὸ ῥῆμα καὶ ἦν παρακεκαλυμμένον ἀπ’ αὐτῶν ἵνα μὴ αἴσθωνται αὐτό καὶ ἐφοβοῦντο ἐρωτῆσαι αὐτὸν περὶ τούτου τοῦ ῥήματος

45 அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை அறிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்குத் தோன்றாமல் மறைபொருளாயிருந்தது, அந்த வார்த்தையைக்குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் பயந்தார்கள்,
45 But they did not understand this statement. It was veiled from them so that they could not comprehend it, and they were afraid to ask Him about it.
45 அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.

The Greatest in the Kingdom (Matthew 18:1–5; Mark 9:33–41)

46δὲ διαλογισμὸς Εἰσῆλθεν ἐν αὐτοῖς τὸ τίς ἂν αὐτῶν εἴη μείζων

46 பின்பு தங்களில் எவன் பெரியவனாயிருப்பானென்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டாயிற்று.
46 Then an argument started among the disciples as to which of them would be the greatest.
46 தங்களுக்குள் பெரியவர் யார் என்ற விவாதம் அவர்களிடையே எழுந்தது.

47δὲ ὁ Ἰησοῦς εἰδὼς τὸν διαλογισμὸν τῆς αὐτῶν καρδίας ἐπιλαβόμενος ἔστησεν αὐτὸ παιδίον παρ’ ἑαυτῷ

47 இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தமதருகே நிறுத்தி,
47 But Jesus, knowing the thoughts of their hearts, had a little child stand beside Him.
47 இயேசு அவர்களின் எண்ணங்களை அறிந்து ஒரு சிறு பிள்ளையை எடுத்து, தம் அருகே நிறுத்தி,

48καὶ εἶπεν αὐτοῖς Ὃς ἐὰν δέξηται τοῦτο τὸ παιδίον ἐπὶ μου τῷ ὀνόματί δέχεται ἐμὲ καὶ ὃς ἂν δέξηται ἐμὲ δέχεται τὸν ἀποστείλαντά με γὰρ ὁ ὑπάρχων μικρότερος ἐν πᾶσιν ὑμῖν οὗτός ἐστιν μέγας

48 அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார்.
48 And He said to them, “Whoever welcomes this little child in My name welcomes Me, and whoever welcomes Me welcomes the One who sent Me. For whoever is the least among all of you, he is the greatest.”
48 அவர்களிடம், "இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார். உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்" என்றார்.10

49Ἐπιστάτα δὲ 〈ὁ〉 Ἀποκριθεὶς εἶπεν Ἰωάννης εἴδομέν τινα ἐκβάλλοντα δαιμόνια ἐν σου τῷ ὀνόματί καὶ ἐκωλύομεν αὐτὸν ὅτι οὐκ ἀκολουθεῖ μεθ’ ἡμῶν

49 அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான்.
49 “Master,” said John, “we saw someone driving out demons in Your name, and we tried to stop him, because he does not accompany us.”
49 யோவான் இயேசுவைப் பார்த்து, "ஆண்டவரே, ஒருவர் உமது பெயரால் பேய் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப்பார்த்தோம்; ஏனெனில், அவர் நம்மைச் சாராதவர்" என்றார்.

50Μὴ κωλύετε δὲ ‹ὁ› Ἰησοῦς Εἶπεν πρὸς αὐτὸν γὰρ ὃς ἔστιν οὐκ καθ’ ὑμῶν ἐστιν ὑπὲρ ὑμῶν

50 அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார்.
50 “Do not stop him,” Jesus replied, “for whoever is not against you is for you.”
50 இயேசு அவரை நோக்கி, "தடுக்க வேண்டாம்; ஏனெனில், நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்" என்றார்.

The Samaritans Reject Jesus

51δὲ Ἐγένετο ἐν τῷ τὰς ἡμέρας τῆς αὐτοῦ ἀναλήμψεως συμπληροῦσθαι καὶ αὐτὸς ἐστήρισεν τὸ πρόσωπον τοῦ πορεύεσθαι εἰς Ἰερουσαλήμ

51 பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத்திருப்பி,
51 As the day of His ascension approached, Jesus resolutely set out for Jerusalem.
51 இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து,

52καὶ ἀπέστειλεν ἀγγέλους πρὸ αὐτοῦ προσώπου καὶ πορευθέντες εἰσῆλθον εἰς κώμην Σαμαριτῶν ὡς* ἑτοιμάσαι αὐτῷ

52 தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள்.
52 He sent messengers on ahead, who went into a village of the Samaritans to make arrangements for Him.
52 தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

53καὶ οὐκ ἐδέξαντο αὐτόν ὅτι αὐτοῦ τὸ πρόσωπον ἦν πορευόμενον εἰς Ἰερουσαλήμ

53 அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
53 But the people there refused to welcome Him, because He was heading for Jerusalem.
53 அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

54δὲ οἱ μαθηταὶ Ἰάκωβος καὶ Ἰωάννης Ἰδόντες εἶπαν Κύριε θέλεις εἴπωμεν καταβῆναι πῦρ ἀπὸ τοῦ οὐρανοῦ καὶ ἀναλῶσαι αὐτούς

54 அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்.
54 When the disciples James and John saw this, they asked, “Lord, do You want us to call down fire from heavene to consume them?”
54 அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, "ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?" என்று கேட்டார்கள்.11

55δὲ Στραφεὶς ἐπετίμησεν αὐτοῖς

55 அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி,
55 But Jesus turned and rebuked them.f
55 அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார்.

56καὶ ἐπορεύθησαν εἰς ἑτέραν κώμην

56 மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள்.
56 And He and His disciples went on to another village.
56 பின்பு, அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.

The Cost of Discipleship (Matthew 8:18–22; Luke 14:25–33; John 6:59–66)

57Καὶ αὐτῶν πορευομένων ἐν τῇ ὁδῷ τις εἶπέν πρὸς αὐτόν Ἀκολουθήσω σοι ὅπου ἐὰν ἀπέρχῃ

57 அவர்கள் வழியிலே போகையில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றிவருவேன் என்றான்.
57 As they were walking along the road, someone said to Jesus, “I will follow You wherever You go.”
57 அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, "நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்" என்றார்.

58Καὶ ὁ Ἰησοῦς εἶπεν αὐτῷ Αἱ ἀλώπεκες ἔχουσιν φωλεοὺς καὶ τὰ πετεινὰ τοῦ οὐρανοῦ κατασκηνώσεις δὲ ὁ Υἱὸς τοῦ ἀνθρώπου ἔχει οὐκ ποῦ κλίνῃ τὴν κεφαλὴν

58 அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
58 Jesus replied, “Foxes have dens and birds of the air have nests, but the Son of Man has no place to lay His head.”
58 இயேசு அவரிடம், "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை" என்றார்.

59δὲ Εἶπεν πρὸς ἕτερον Ἀκολούθει μοι Δὲ ὁ εἶπεν ‹Κύριε› πρῶτον Ἐπίτρεψόν μοι ἀπελθόντι θάψαι μου τὸν πατέρα

59 வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
59 Then He said to another man, “Follow Me.” The man replied, “Lord, first let me go and bury my father.”
59 இயேசு மற்றொருவரை நோக்கி, "என்னைப் பின்பற்றிவாரும்" என்றார். அவர், "முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்" என்றார்.

60δὲ Εἶπεν αὐτῷ Ἄφες τοὺς νεκροὺς θάψαι ἑαυτῶν τοὺς νεκρούς σὺ δὲ ἀπελθὼν διάγγελλε τὴν βασιλείαν τοῦ Θεοῦ

60 அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார்.
60 But Jesus told him, “Let the dead bury their own dead. You, however, go and proclaim the kingdom of God.”
60 இயேசு அவரைப் பார்த்து, "இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்" என்றார்.

61δὲ ἕτερος καὶ Εἶπεν Ἀκολουθήσω σοι Κύριε δὲ πρῶτον ἐπίτρεψόν μοι ἀποτάξασθαι τοῖς εἰς μου τὸν οἶκόν

61 பின்பு வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
61 Still another said, “I will follow You, Lord; but first let me bid farewell to my family.”
61 வேறொருவரும், "ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்" என்றார்.12

62δὲ ὁ Ἰησοῦς Εἶπεν πρὸς αὐτὸν Οὐδεὶς ἐπιβαλὼν τὴν χεῖρα ἐπ’ ἄροτρον καὶ βλέπων εἰς τὰ ὀπίσω ἐστιν εὔθετός τῇ βασιλείᾳ τοῦ Θεοῦ

62 அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.
62 Then Jesus declared, “No one who puts his hand to the plow and then looks back is fit for the kingdom of God.”
62 இயேசு அவரை நோக்கி, "கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல" என்றார்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Luke Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
1 a TR His twelve disciples
3 b Or silver coins
33 c Or three tabernacles
35 d BYZ and TR This is My beloved Son ; see Matthew 17:5.
54 e BYZ and TR from heaven, just as Elijah did ; see 2 Kings 1:10–12.
55 f BYZ and TR include and He said, “You do not know what kind of spirit you are of. 56For the Son of Man did not come to destroy the lives of men, but to save them.”

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.