பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

Luke  லூக்கா  Λουκᾶν

அதிகாரம் 1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

லூக்கா 22 | Luke 22

The Plot to Kill Jesus (Matthew 26:1–5; Mark 14:1–2; John 11:45–57)

1 δὲ ἡ ἑορτὴ τῶν ἀζύμων ἡ λεγομένη Πάσχα Ἤγγιζεν

1 பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை சமீபமாயிற்று.
1 Now the Feast of Unleavened Bread,a called the Passover, was approaching,
1 அப்போது பாஸ்கா என்னும் புளிப்பற்ற அப்ப விழா நெருங்கி வந்தது.1

2 καὶ οἱ ἀρχιερεῖς καὶ οἱ γραμματεῖς ἐζήτουν πῶς τὸ ἀνέλωσιν αὐτόν γὰρ ἐφοβοῦντο τὸν λαόν

2 அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து, ஜனங்களுக்குப் பயப்பட்டபடியினால், எவ்விதமாய் அப்படிச் செய்யலாமென்று வகைதேடினார்கள்.
2 and the chief priests and scribes were looking for a way to put Jesus to death; for they feared the people.
2 தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எவ்வாறு கொலை செய்யலாமென்று வழி தேடிக்கொண்டிருந்தனர்; ஏனெனில், மக்களுக்கு அஞ்சினர்.

Judas Agrees to Betray Jesus (Matthew 26:14–16; Mark 14:10–11)

3 δὲ Σατανᾶς Εἰσῆλθεν εἰς Ἰούδαν τὸν καλούμενον Ἰσκαριώτην ὄντα ἀριθμοῦ ἐκ τοῦ τῶν δώδεκα

3 அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்.
3 Then Satan entered Judas Iscariot, who was one of the Twelve.
3 அந்நேரத்தில் பன்னிருவருள் ஒருவனான யூதாசு எனப்படும் இஸ்காரியோத்துக்குள் சாத்தான் புகுந்தான்.

4 καὶ ἀπελθὼν συνελάλησεν τοῖς ἀρχιερεῦσιν καὶ στρατηγοῖς τὸ πῶς παραδῷ αὐτόν αὐτοῖς

4 அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் சேனைத் தலைவர்களிடத்திலும் போய், அவரைக் காட்டிக்கொடுக்கும் வகையைக் குறித்து அவர்களோடே ஆலோசனை பண்ணினான்.
4 And Judas went to discuss with the chief priests and temple officers how he might betray Jesus to them.
4 யூதாசு தலைமைக் குருக்களிடமும் காவல் தலைவர்களிடமும் சென்று அவர்களுக்கு இயேசுவைக் காட்டிக்கொடுப்பது பற்றிக் கலந்து பேசினான்.

5 καὶ ἐχάρησαν καὶ συνέθεντο δοῦναι αὐτῷ ἀργύριον

5 அவர்கள் சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுக்க உடன்பட்டார்கள்.
5 They were delighted and agreed to give him money.
5 அவர்கள் மகிழ்ச்சியுற்று அவனுக்குப் பணம் கொடுக்க உடன்பட்டார்கள்.

6 καὶ ἐξωμολόγησεν καὶ ἐζήτει εὐκαιρίαν τοῦ παραδοῦναι αὐτὸν αὐτοῖς ἄτερ ὄχλου

6 அதற்கு அவன் சம்மதித்து, ஜனக்கூட்டமில்லாத வேளையில் அவரை அவர்களுக்குக் காட்டிக்கொடுக்கும்படி சமயந்தேடினான்.
6 Judas consented, and began to look for an opportunity to betray Jesus to them in the absence of a crowd.
6 அவனும் அதற்கு ஒத்துக்கொண்டு மக்கள் கூட்டம் இல்லாதபோது, அவர்களிடம் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தான்.

Preparing the Passover (Matthew 26:17–19; Mark 14:12–16)

7 δὲ Ἦλθεν ἡ ἡμέρα τῶν ἀζύμων [ἐν] ᾗ τὸ πάσχα ἔδει θύεσθαι

7 பஸ்காவைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப் பண்டிகை நாள் வந்தது.
7 Then came the day of Unleavened Bread on which the Passover lamb was to be sacrificed.
7 புளிப்பற்ற அப்ப விழாக்கொண்டாடும் நாளும் வந்தது. அன்றுதான் பாஸ்கா ஆடு பலியிடப்பட வேண்டும்.

8 καὶ ἀπέστειλεν Πέτρον καὶ Ἰωάννην εἰπών Πορευθέντες ἑτοιμάσατε ἡμῖν ἵνα φάγωμεν τὸ πάσχα

8 அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம் பண்ணுங்கள் என்றார்.
8 Jesus sent Peter and John, saying, “Go and prepare for us to eat the Passover.”
8 இயேசு பேதுருவிடம் யோவானிடமும், "நாம் பாஸ்கா விருந்துண்ண நீங்கள் போய் ஏற்பாடு செய்யுங்கள்" என்று சொல்லி அனுப்பினார்.

9 Ποῦ θέλεις ἑτοιμάσωμεν δὲ Οἱ εἶπαν αὐτῷ

9 அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்பண்ணும்படி சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.
9 “Where do You want us to prepare it?” they asked.
9 அதற்கு அவர்கள், "நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டுமென நீர் விரும்புகிறீர்?" என்று கேட்டார்கள்.

10 δὲ Ὁ εἶπεν αὐτοῖς Ἰδοὺ ὑμῶν εἰσελθόντων εἰς τὴν πόλιν ἄνθρωπος βαστάζων κεράμιον ὕδατος συναντήσει ὑμῖν ἀκολουθήσατε αὐτῷ εἰς τὴν οἰκίαν εἰς ἣν εἰσπορεύεται

10 அதற்கு அவர்: நீங்கள் நகரத்தில் பிரவேசிக்கும்போது, தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான்; நீங்கள் அவனுக்குப் பின்சென்று, அவன் போகும் வீட்டிற்குள் நீங்களும் போய்,
10 He answered, “When you enter the city, a man carrying a jug of water will meet you. Follow him to the house he enters,
10 இயேசு அவர்களிடம், "நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் செல்லும் வீட்டிற்குள் நீங்களும் சென்று,

11 καὶ ἐρεῖτε τῷ οἰκοδεσπότῃ τῆς οἰκίας ὁ Διδάσκαλος Λέγει σοι Ποῦ ἐστιν τὸ κατάλυμα ὅπου φάγω τὸ πάσχα μετὰ μου τῶν μαθητῶν

11 அந்த வீட்டெஜமானை நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச் சொன்னார் என்று சொல்லுங்கள்.
11 and say to the owner of that house, ‘The Teacher asks: Where is the guest room, where I may eat the Passover with My disciples?’
11 அந்த வீட்டின் உரிமையாளரிடம், 'நான் என் சீடர்களோடு பாஸ்காவிருந்து உண்பதற்கான அறை எங்கே? என்று போதகர் உம்மிடம் கேட்கச் சொன்னார்' எனக் கூறுங்கள்.

12 κἀκεῖνος δείξει ὑμῖν μέγα ἀνάγαιον ἐστρωμένον ἑτοιμάσατε ἐκεῖ

12 அவன் கம்பளமுதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள ஒருபெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
12 And he will show you a large upper room, already furnished. Make preparations there.”
12 அவர் மேல்மாடியில் தேவையான வசதிகள் அமைந்த ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அங்கே ஏற்பாடு செய்யுங்கள்" என்றார்.

13 δὲ Ἀπελθόντες εὗρον καθὼς εἰρήκει αὐτοῖς καὶ ἡτοίμασαν τὸ πάσχα

13 அவர்கள் போய், தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.
13 So they went and found it just as Jesus had told them. And they prepared the Passover.
13 அவர்கள் சென்று தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு, பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

The Last Supper (Matthew 26:20–30; Mark 14:17–26; 1 Corinthians 11:17–34)

14 Καὶ ὅτε ἡ ὥρα ἐγένετο ἀνέπεσεν καὶ σὺν αὐτῷ οἱ ἀπόστολοι

14 வேளைவந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலரும் பந்தியிருந்தார்கள்.
14 When the hour had come, Jesus reclined at the table with His apostles.
14 நேரம் ஆனதும் இயேசு திருத்தூதரோடு பந்தியில் அமர்ந்தார்.

15 καὶ εἶπεν πρὸς αὐτούς Ἐπιθυμίᾳ ἐπεθύμησα φαγεῖν τοῦτο τὸ πάσχα μεθ’ ὑμῶν πρὸ τοῦ με παθεῖν

15 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்.
15 And He said to them, “I have eagerly desired to eat this Passover with you before My suffering.
15 அப்போது அவர் அவர்களை நோக்கி, "நான் துன்பங்கள் படுமுன் உங்களோடு இந்தப் பாஸ்கா விருந்தை உண்பதற்கு மிக மிக ஆவலாய் இருந்தேன்.

16 γὰρ λέγω ὑμῖν ὅτι 〈οὐκέτι〉 οὐ μὴ φάγω αὐτὸ ἕως ὅτου πληρωθῇ ἐν τῇ βασιλείᾳ τοῦ Θεοῦ

16 தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறுமளவும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
16 For I tell you that I will not eat it again until it is fulfilled in the kingdom of God.”
16 ஏனெனில், இறையாட்சியில் இது நிறைவேறும்வரை இதை நான் உண்ணமாட்டேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

17 Καὶ δεξάμενος ποτήριον εὐχαριστήσας εἶπεν Λάβετε τοῦτο καὶ διαμερίσατε εἰς ἑαυτούς

17 அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி: நீங்கள் இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக்கொள்ளுங்கள்;
17 After taking the cup, He gave thanks and said, “Take this and divide it among yourselves.
17 பின்பு, அவர் கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களிடம், "இதைப் பெற்று உங்களுக்குள்ளே பகிர்ந்துகொள்ளுங்கள்.

18 γὰρ λέγω ὑμῖν [ὅτι] οὐ μὴ πίω ἀπὸ τοῦ γενήματος τῆς ἀμπέλου ἀπὸ τοῦ νῦν ἕως οὗ ἡ βασιλεία τοῦ Θεοῦ ἔλθῃ

18 தேவனுடைய ராஜ்யம் வருமளவும் நான் திராட்சப்பழரசத்தைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
18 For I tell you that I will not drink of the fruit of the vine from now on until the kingdom of God comes.”
18 ஏனெனில், இது முதல் இறையாட்சி வரும்வரை, திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பதில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

19 Καὶ λαβὼν ἄρτον εὐχαριστήσας ἔκλασεν καὶ ἔδωκεν αὐτοῖς λέγων Τοῦτό ἐστιν μου τὸ σῶμά τὸ διδόμενον ὑπὲρ ὑμῶν ποιεῖτε τοῦτο εἰς τὴν ἀνάμνησιν ἐμὴν

19 பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
19 And He took the bread, gave thanks and broke it, and gave it to them, saying, “This is My body, given for you; do this in remembrance of Me.”
19 பின்பு அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, "இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்றார்.

20 καὶ ὡσαύτως μετὰ τὸ δειπνῆσαι τὸ ποτήριον λέγων Τοῦτο τὸ ποτήριον ἡ καινὴ διαθήκη ἐν μου τῷ αἵματί τὸ ἐκχυννόμενον ὑπὲρ ὑμῶν

20 போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.
20 In the same way, after supper He took the cup, saying, “This cup is the new covenant in My blood, which is poured out for you.b
20 அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, "இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை.2

21 Πλὴν ἰδοὺ ἡ χεὶρ τοῦ παραδιδόντος με μετ’ ἐμοῦ ἐπὶ τῆς τραπέζης

21 பின்பு: இதோ என்னைக் காட்டிக் கொடுக்கிறவனுடைய கை என்னுடனே கூடப் பந்தியிலிருக்கிறது.
21 Look! The hand of My betrayer is with Mine on the table.
21 என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ, என்னோடு பந்தியில் அமர்ந்திருக்கிறான்.3

22 ὅτι μὲν ὁ Υἱὸς τοῦ ἀνθρώπου πορεύεται κατὰ τὸ ὡρισμένον πλὴν οὐαὶ τῷ ἐκείνῳ ἀνθρώπῳ δι’ οὗ παραδίδοται

22 தீர்மானிக்கப்பட்டபடியே மனுஷகுமாரன் போகிறார், ஆனாலும் அவரைக் காட்டிக்கொடுக்கிற மனுஷனுக்கு ஐயோ என்றார்.
22 Indeed, the Son of Man will go as it has been determined, but woe to that man who betrays Him.”
22 மானிடமகன் தமக்கென்று குறிக்கப்பட்டபடியே போகிறார், ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு" என்றார்.

23 Καὶ αὐτοὶ ἤρξαντο συζητεῖν πρὸς ἑαυτοὺς τὸ τίς ἄρα ἐξ αὐτῶν εἴη ὁ μέλλων πράσσειν τοῦτο

23 அப்பொழுது அவர்கள் நம்மில் யார் அப்படிச் செய்வான் என்று தங்களுக்குள்ளே விசாரிக்கத் தொடங்கினார்கள்.
23 Then they began to question among themselves which of them was going to do this.
23 அப்பொழுது அவர்கள், "நம்மில் இச்செயலைச் செய்யப் போகிறவர் யார்" என்று தங்களுக்குள்ளே கேட்கத் தொடங்கினார்கள்.

Who Is the Greatest?

24 δὲ φιλονεικία καὶ Ἐγένετο ἐν αὐτοῖς τὸ τίς αὐτῶν δοκεῖ εἶναι μείζων

24 அன்றியும் தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று.
24 A dispute also arose among the disciples as to which of them would be considered the greatest.
24 மேலும், தங்களுக்குள்ளே பெரியவராக எண்ணப்பட வேண்டியவர் யார் என்ற விவாதம் அவர்களிடையே எழுந்தது.4

25 δὲ ὁ εἶπεν αὐτοῖς Οἱ βασιλεῖς τῶν ἐθνῶν κυριεύουσιν αὐτῶν καὶ οἱ ἐξουσιάζοντες αὐτῶν καλοῦνται εὐεργέται

25 அவர் அவர்களை நோக்கி: புறஜாதியாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் உபகாரிகள் என்னப்படுகிறார்கள்.
25 So Jesus declared, “The kings of the Gentiles lord it over them, and those in authority over them call themselves benefactors.
25 இயேசு அவர்களிடம், "பிற இனத்தவரின் அரசர்கள் மக்களை அடக்கி ஆளுகின்றார்கள்; அதிகாரம் காட்டுகின்றவர்கள் நன்மை செய்பவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள்.

26 δὲ ὑμεῖς οὐχ οὕτως ἀλλ’ ὁ μείζων ἐν ὑμῖν γινέσθω ὡς ὁ νεώτερος καὶ ὁ ἡγούμενος ὡς ὁ διακονῶν

26 உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கக்கடவன்.
26 But you shall not be like them. Instead, the greatest among you should be like the youngest, and the one who leads like the one who serves.
26 ஆனால், நீங்கள் அப்படிச் செய்யலாகாது. உங்களுள் பெரியவர் சிறியவராகவும் ஆட்சிபுரிபவர் தொண்டு புரிபவராகவும் மாற வேண்டும்.65

27 γὰρ τίς μείζων ὁ ἀνακείμενος ἢ ὁ διακονῶν οὐχὶ ὁ ἀνακείμενος δὲ ἐγὼ εἰμι ἐν ὑμῶν μέσῳ ὡς ὁ διακονῶν

27 பந்தியிருக்கிறவனோ, பணிவிடைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன்.
27 For who is greater, the one who reclines at the table or the one who serves? Is it not the one who reclines? But I am among you as one who serves.
27 யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன்.7

28 δέ Ὑμεῖς ἐστε οἱ διαμεμενηκότες μετ’ ἐμοῦ ἐν μου τοῖς πειρασμοῖς

28 மேலும் எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடே கூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே.
28 You are the ones who have stood by Me in My trials.
28 நான் சோதிக்கப்படும்போது என்னோடு இருந்தவர்கள் நீங்களே.

29 κἀγὼ διατίθεμαι ὑμῖν βασιλείαν καθὼς μου ὁ Πατήρ διέθετό μοι

29 ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன்.
29 And I bestow on you a kingdom, just as My Father has bestowed one on Me,
29 என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பது போல நானும் உங்களுக்குக் கொடுக்கிறேன்.

30 ἵνα ἔσθητε καὶ πίνητε ἐπὶ μου τῆς τραπέζης ἐν μου τῇ βασιλείᾳ καὶ καθήσεσθε ἐπὶ θρόνων κρίνοντες τὰς δώδεκα φυλὰς τοῦ Ἰσραήλ

30 நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள் என்றார்.
30 so that you may eat and drink at My table in My kingdom, and sit on thrones, judging the twelve tribes of Israel.
30 ஆகவே, என் ஆட்சி வரும்போது நீங்கள் என்னோடு பந்தியில் அமர்ந்து உண்டு குடிப்பீர்கள்; இஸ்ரயேலின் பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்பு வழங்க அரியணையில் அமர்வீர்கள்.8

Jesus Predicts Peter’s Denial (Matthew 26:31–35; Mark 14:27–31; John 13:36–38)

31 Σίμων Σίμων ἰδοὺ ὁ Σατανᾶς ἐξῃτήσατο τοῦ σινιάσαι ὑμᾶς ὡς τὸν σῖτον

31 பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.
31 Simon, Simon, Satan has asked to sift each of you like wheat.
31 "சீமோனே, சீமோனே, இதோ கோதுமையைப்போல் உங்களைப் புடைக்கச் சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான்.

32 δὲ ἐγὼ ἐδεήθην περὶ σοῦ ἵνα σου ἡ πίστις μὴ ἐκλίπῃ καὶ ποτε σύ ἐπιστρέψας στήρισον σου τοὺς ἀδελφούς

32 நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்: நீ குணப்பட்டபின்பு உன் சகோதரை ஸ்திரப்படுத்து என்றார்.
32 But I have prayed for you, Simon, that your faith will not fail. And when you have turned back, strengthen your brothers.”
32 ஆனால், நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து" என்றார்.

33 Κύριε δὲ Ὁ εἶπεν αὐτῷ εἰμι ἕτοιμός πορεύεσθαι μετὰ σοῦ καὶ εἰς φυλακὴν καὶ εἰς θάνατον

33 அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.
33 “Lord,” said Peter, “I am ready to go with You even to prison and to death.”
33 அதற்கு பேதுரு, "ஆண்டவரே, உம்மோடு சிறையிடப்படுவதற்கும் ஏன், சாவதற்கும் நான் ஆயத்தமாய் உள்ளேன்" என்றார்.

34 δὲ Ὁ εἶπεν Λέγω σοι Πέτρε ἀλέκτωρ οὐ φωνήσει σήμερον ἕως ἀπαρνήσῃ 〈μὴ〉 τρίς εἰδέναι με

34 அவர் அவனை நோக்கி: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
34 But Jesus replied, “I tell you, Peter, the rooster will not crow today until you have denied three times that you know Me.”
34 இயேசு அவரிடம், "பேதுருவே, இன்றிரவு, 'என்னைத் தெரியாது' என மும்முறை நீ மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உனக்குச் சொல்கிறேன்" என்றார்.

35 Καὶ εἶπεν αὐτοῖς Ὅτε ἀπέστειλα ὑμᾶς ἄτερ βαλλαντίου καὶ πήρας καὶ ὑποδημάτων μή ὑστερήσατε τινος Οὐθενός δὲ Οἱ εἶπαν

35 பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்கு குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள்.
35 Then Jesus asked them, “When I sent you out without purse or bag or sandals, did you lack anything?” “Nothing,” they answered.
35 இயேசு சீடர்களிடம், "நான் உங்களைப் பணப்பையோ வேறுபையோ மிதியடியோ எதுவுமில்லாமல் அனுப்பியபோது, உங்களுக்கு ஏதாவது குறை இருந்ததா?" என்று கேட்டார். அவர்கள், "ஒரு குறையும் இருந்ததில்லை" என்றார்கள்.9

36 νῦν Ἀλλὰ δὲ Εἶπεν αὐτοῖς ὁ ἔχων βαλλάντιον ἀράτω καὶ ὁμοίως πήραν καὶ ὁ ἔχων μὴ μάχαιραν πωλησάτω αὐτοῦ τὸ ἱμάτιον καὶ ἀγορασάτω

36 அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.
36 “Now, however,” He told them, “the one with a purse should take it, and likewise a bag; and the one without a sword should sell his cloak and buy one.
36 அவர் அவர்களிடம், "ஆனால், இப்பொழுது பணப்பை உடையவர் அதை எடுத்துக் கொள்ளட்டும்; வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவர் தம் மேலுடையை விற்று வாள் வாங்கிக் கொள்ளட்டும்.

37 γὰρ λέγω ὑμῖν ὅτι τοῦτο τὸ γεγραμμένον δεῖ τελεσθῆναι ἐν ἐμοί Τό Καὶ ἐλογίσθη μετὰ ἀνόμων καὶ γὰρ τὸ περὶ ἐμοῦ ἔχει τέλος

37 அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவுபெறுங்காலம் வந்திருக்கிறது என்றார்.
37 For I tell you that this Scripture must be fulfilled in Me: ‘And He was numbered with the transgressors.’c For what is written about Me is reaching its fulfillment.”
37 ஏனெனில், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: 'கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்' என்று மறைநூலில் எழுதப்பட்டுள்ளது என் வாழ்வில் நிறைவேற வேண்டும். என்னைப் பற்றியவை எல்லாம் நிறைவேறி வருகின்றன" என்றார்.10

38 δὲ Οἱ εἶπαν ἰδοὺ Κύριε ὧδε δύο μάχαιραι ἐστιν Ἱκανόν δὲ Ὁ εἶπεν αὐτοῖς

38 அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்.
38 So they said, “Look, Lord, here are two swords.” “That is enough,” He answered.
38 அவர்கள் "ஆண்டவரே, இதோ! இங்கே இரு வாள்கள் உள்ளன" என்றார்கள். இயேசு அவர்களிடம், "போதும்" என்றார்.

Jesus Prays on the Mount of Olives (Matthew 26:36–46; Mark 14:32–42)

39 Καὶ ἐξελθὼν ἐπορεύθη κατὰ τὸ ἔθος εἰς τὸ ὄρος τῶν Ἐλαιῶν δὲ οἱ μαθηταί καὶ ἠκολούθησαν αὐτῷ

39 பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீஷரும் அவரோடே கூடப்போனார்கள்.
39 Jesus went out as usual to the Mount of Olives, and the disciples followed Him.
39 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் வழக்கப்படி ஒலிவ மலைக்குச் சென்றார். சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.

40 δὲ γενόμενος ἐπὶ τοῦ τόπου εἶπεν αὐτοῖς Προσεύχεσθε μὴ εἰσελθεῖν εἰς πειρασμόν

40 அவ்விடத்தில் சேர்ந்தபொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்பண்ணுங்கள் என்று சொல்லி,
40 When He came to the place, He told them, “Pray that you will not enter into temptation.”
40 அந்த இடத்தை அடைந்ததும் அவர் அவர்களிடம், "சோதனைக்கு உட்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள்," என்றார்.

41 Καὶ αὐτὸς ἀπεσπάσθη ὡσεὶ λίθου βολήν ἀπ’ αὐτῶν καὶ θεὶς τὰ γόνατα προσηύχετο

41 அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு:
41 And He withdrew about a stone’s throw beyond them, where He knelt down and prayed,
41 பிறகு அவர் அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் விலகிச் சென்று, முழந்தாள்படியிட்டு, இறைவனிடம் வேண்டினார்:

42 λέγων Πάτερ εἰ βούλει παρένεγκε τοῦτο τὸ ποτήριον ἀπ’ ἐμοῦ πλὴν μὴ μου τὸ θέλημά ἀλλὰ τὸ σὸν γινέσθω

42 பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
42 “Father, if You are willing, take this cup from Me. Yet not My will, but Yours be done.”
42 "தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும், என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்" என்று கூறினார்.

43 δὲ ἄγγελος ἀπ’ οὐρανοῦ Ὤφθη αὐτῷ ἐνισχύων αὐτόν

43 அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.
43 Then an angel from heaven appeared to Him and strengthened Him.
43 [அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் அவருக்குத் தோன்றி அவரை வலுப்படுத்தினார்.

44 καὶ γενόμενος ἐν ἀγωνίᾳ προσηύχετο ἐκτενέστερον καὶ αὐτοῦ ὁ ἱδρὼς ἐγένετο ὡσεὶ θρόμβοι αἵματος καταβαίνοντες ἐπὶ τὴν γῆν

44 அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.
44 And in His anguish, He prayed more earnestly, and His sweat became like drops of blood falling to the ground.d
44 அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அவரது வியர்வை பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது.]11

11 அடைப்புக்குறிக்குள் உள்ள இவ்வசனங்கள் பல முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை.

45 Καὶ ἀναστὰς ἀπὸ τῆς προσευχῆς ἐλθὼν πρὸς τοὺς μαθητὰς εὗρεν αὐτοὺς κοιμωμένους ἀπὸ τῆς λύπης

45 அவர் ஜெபம்பண்ணி முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீஷரிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே நித்திரை பண்ணுகிறதைக் கண்டு:
45 When Jesus rose from prayer and returned to the disciples, He found them asleep, exhausted from sorrow.
45 அவர் இறைவேண்டலை முடித்துவிட்டு எழுந்து சீடர்களிடம் வந்தபோது அவர்கள் துயரத்தால் சோர்வுற்றுத் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்.

46 Τί καθεύδετε καὶ εἶπεν αὐτοῖς ἀναστάντες προσεύχεσθε ἵνα μὴ εἰσέλθητε εἰς πειρασμόν

46 நீங்கள் நித்திரைபண்ணிகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்றார்.
46 “Why are you sleeping?” He asked. “Get up and pray so that you will not enter into temptation.”
46 அவர்களிடம், "என்ன, உறங்கிக் கொண்டா இருக்கிறீர்கள்? சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்" என்றார்.

The Betrayal of Jesus (Matthew 26:47–56; Mark 14:43–52; John 18:1–14)

47 Ἔτι αὐτοῦ λαλοῦντος ὄχλος ἰδοὺ προήρχετο αὐτούς καὶ ὁ λεγόμενος Ἰούδας εἷς τῶν δώδεκα καὶ ἤγγισεν τῷ Ἰησοῦ φιλῆσαι αὐτόν

47 அவர் அப்படிப் பேசுகையில் ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான்.
47 While He was still speaking, a crowd arrived, led by the man called Judas, one of the Twelve. He approached Jesus to kiss Him.
47 இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, இதோ! மக்கள் கூட்டமாய் வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு என்பவன் அவர்களுக்குமுன் வந்து அவரை முத்தமிட நெருங்கினான்.

48 δὲ Ἰησοῦς εἶπεν αὐτῷ Ἰούδα παραδίδως τὸν Υἱὸν τοῦ ἀνθρώπου φιλήματι

48 இயேசு அவனை நோக்கி: யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார்.
48 But Jesus asked him, “Judas, are you betraying the Son of Man with a kiss?”
48 இயேசு அவனிடம், "யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்?" என்றார்.

49 δὲ οἱ περὶ αὐτὸν Ἰδόντες τὸ ἐσόμενον εἶπαν Κύριε εἰ πατάξομεν ἐν μαχαίρῃ

49 அவரைச் சூழநின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள்.
49 Those around Jesus saw what was about to happen and said, “Lord, should we strike with our swords?”
49 அவரைச் சூழ நின்றவர்கள் நிகழப்போவதை உணர்ந்து, "ஆண்டவரே, வாளால் வெட்டலாமா?" என்று கேட்டார்கள்.

50 καὶ τις εἷς ἐξ αὐτῶν ἐπάταξεν τὸν δοῦλον τοῦ ἀρχιερέως καὶ ἀφεῖλεν αὐτοῦ τὸ δεξιόν τὸ οὖς

50 அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்.
50 And one of them struck the servant of the high priest, cutting off his right ear.
50 அப்பொழுது அவர்களுள் ஒருவர் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய வலக் காதைத் துண்டித்தார்.

51 δὲ ὁ Ἰησοῦς Ἀποκριθεὶς εἶπεν Ἐᾶτε ἕως τούτου καὶ ἁψάμενος τοῦ ὠτίου ἰάσατο αὐτόν

51 அப்பொழுது இயேசு இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார்.
51 But Jesus answered, “No more of this!” And He touched the man’s ear and healed him.
51 இயேசு அவர்களைப் பார்த்து, "விடுங்கள், போதும்" என்று கூறி அவருடைய காதைத் தொட்டு நலமாக்கினார்.

52 δὲ Ἰησοῦς Εἶπεν πρὸς ἀρχιερεῖς καὶ στρατηγοὺς τοῦ ἱεροῦ καὶ πρεσβυτέρους τοὺς παραγενομένους ἐπ’ αὐτὸν ἐξήλθατε μετὰ μαχαιρῶν καὶ ξύλων Ὡς ἐπὶ λῃστὴν

52 பின்பு இயேசு தமக்கு விரோதமாய் வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்துச் சேனைத்தலைவர்களையும் மூப்பர்களையும் நோக்கி: ஒரு கள்ளனைப் பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டுவந்தீர்களே.
52 Then Jesus said to the chief priests, temple officers, and elders who had come for Him, “Have you come out with swords and clubs as you would against an outlaw?
52 அவர் தம்மிடம் வந்த தலைமைக் குருக்களையும் கோவில் காவல் தலைவர்களையும் மூப்பர்களையும் பார்த்து, "ஒரு கள்வனைப் பிடிக்க வருவதுபோல நீங்கள் வாள்களோடும், தடிகளோடும் வந்தது ஏன்?

53 καθ’ ἡμέραν μου ὄντος μεθ’ ὑμῶν ἐν τῷ ἱερῷ οὐκ ἐξετείνατε τὰς χεῖρας ἐπ’ ἐμέ ἀλλ’ αὕτη ἡ ὥρα ἐστὶν ὑμῶν καὶ ἡ ἐξουσία τοῦ σκότους

53 நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களுடனேகூட இருக்கையில் நீங்கள் என்னைப் பிடிக்கக் கை நீட்டவில்லை; இதுவோ உங்களுடைய வேளையும் அந்தகாரத்தின் அதிகாரமுமாயிருக்கிறது என்றார்.
53 Every day I was with you in the temple courts,e and you did not lay a hand on Me. But this hour belongs to you and to the power of darkness.”
53 நான் நாள்தோறும் கோவிலில் உங்களோடு இருந்தும் நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. ஆனால், இது உங்களுடைய நேரம்; இப்போது இருள் அதிகாரம் செலுத்துகிறது" என்றார்.

Peter Denies Jesus (Matthew 26:69–75; Mark 14:66–72; John 18:15–18)

54 δὲ Συλλαβόντες αὐτὸν ἤγαγον καὶ εἰσήγαγον εἰς τὴν οἰκίαν τοῦ ἀρχιερέως δὲ ὁ Πέτρος ἠκολούθει μακρόθεν

54 அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்சென்றான்.
54 Then they seized Jesus, led Him away, and took Him into the house of the high priest. And Peter followed at a distance.
54 பின்னர், அவர்கள் இயேசுவைக் கைதுசெய்து இழுத்துச் சென்று தலைமைக் குருவின் வீட்டுக்குக் கொண்டு போனார்கள். பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார்.

55 δὲ Περιαψάντων πῦρ ἐν μέσῳ τῆς αὐλῆς καὶ συνκαθισάντων ὁ Πέτρος ἐκάθητο μέσος αὐτῶν

55 அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான்.
55 When those present had kindled a fire in the middle of the courtyard and sat down together, Peter sat down among them.
55 வீட்டு உள்முற்றத்தின் நடுவில் நெருப்பு மூட்டி, அதைச் சுற்றி அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். பேதுருவும் அவர்களோடு இருந்தார்.

56 δὲ τις παιδίσκη ἰδοῦσα αὐτὸν καθήμενον πρὸς τὸ φῶς καὶ ἀτενίσασα αὐτῷ οὗτος Καὶ ἦν σὺν αὐτῷ εἶπεν

56 அப்பொழுது, ஒரு வேலைக்காரி அவனை நெருப்பண்டையிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடிருந்தான் என்றாள்.
56 A servant girl saw him seated in the firelight and looked intently at him. “This man also was with Him,” she said.
56 அப்போது பணிப்பெண் ஒருவர் நெருப்பின் அருகில் அவர் அமர்ந்திருப்பதைக் கண்டு, அவரை உற்றுப்பார்த்து, "இவனும் அவனோடு இருந்தவன்" என்றார்.

57 δὲ Ὁ ἠρνήσατο γύναι Οὐκ οἶδα αὐτόν λέγων

57 அதற்கு அவன்: ஸ்திரீயே, அவனை அறியேன் என்று மறுதலித்தான்.
57 But Peter denied it. “Woman, I do not know Him,” he said.
57 அவரோ, "அம்மா, அவரை எனக்குத் தெரியாது" என்று மறுதலித்தார்.

58 Καὶ βραχὺ μετὰ ἕτερος ἰδὼν αὐτὸν ἔφη σὺ Καὶ εἶ ἐξ αὐτῶν δὲ Ὁ Πέτρος ἔφη Ἄνθρωπε εἰμί οὐκ

58 சற்றுநேரத்துக்குப் பின்பு வேறொருவன் அவனைக் கண்டு: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனுஷனே, நான் அல்ல என்றான்.
58 A short time later, someone else saw him and said, “You also are one of them.” But Peter said, “Man, I am not.”
58 சிறிது நேரத்திற்குப்பின் அவரைக் கண்ட வேறு ஒருவர், "நீயும் அவர்களைச் சேர்ந்தவன்தான்" என்றார். பேதுரு, "இல்லையப்பா" என்றார்.

59 Καὶ ὡσεὶ μιᾶς ὥρας διαστάσης τις ἄλλος διϊσχυρίζετο λέγων Ἐπ’ ἀληθείας οὗτος ἦν καὶ μετ’ αὐτοῦ γὰρ ἐστιν καὶ Γαλιλαῖός

59 ஏறக்குறைய ஒருமணி நேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான், இவன் கலிலேயன்தான் என்று சாதித்தான்.
59 About an hour later, another man insisted, “Certainly this man was with Him, for he too is a Galilean.”
59 ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்குப்பின்பு மற்றொருவர், "உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான்; இவனும் கலிலேயன்தான்" என்று வலியுறுத்திக் கூறினார்.

60 Ἄνθρωπε οὐκ οἶδα ὃ λέγεις δὲ ὁ Πέτρος Εἶπεν καὶ παραχρῆμα ἔτι αὐτοῦ λαλοῦντος ἀλέκτωρ ἐφώνησεν

60 அதற்குப் பேதுரு: மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவிற்று.
60 “Man, I do not know what you are talking about,” Peter replied. While he was still speaking, the rooster crowed.
60 பேதுருவோ, "நீர் குறிப்பிடுபவரை எனக்குத் தெரியாது" என்றார். உடனேயே, அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோதே, சேவல் கூவிற்று.

61 καὶ ὁ Κύριος στραφεὶς ἐνέβλεψεν τῷ Πέτρῳ καὶ ὁ Πέτρος ὑπεμνήσθη τοῦ λόγου ὡς τοῦ Κυρίου εἶπεν αὐτῷ ὅτι Πρὶν ἀλέκτορα φωνῆσαι σήμερον ἀπαρνήσῃ με τρίς

61 அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து,
61 And the Lord turned and looked at Peter. Then Peter remembered the word that the Lord had spoken to him: “Before the rooster crows today, you will deny Me three times.”
61 ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்: "இன்று சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து,

62 καὶ ἐξελθὼν ἔξω ἔκλαυσεν πικρῶς

62 வெளியே போய், மனங்கசந்து அழுதான்.
62 And he went outside and wept bitterly.
62 வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.

The Soldiers Mock Jesus (Isaiah 50:4–11; Matthew 27:27–31; Mark 15:16–20; John 19:1–15)

63 Καὶ οἱ ἄνδρες οἱ συνέχοντες αὐτὸν ἐνέπαιζον αὐτῷ δέροντες

63 இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனுஷர் அவரைப் பரியாசம்பண்ணி, அடித்து,
63 The men who were holding Jesus began to mock Him and beat Him.
63 இயேசுவைப் பிடித்துவைத்திருந்தவர்கள் அவரை ஏளனம் செய்து நையப்புடைத்தார்கள்.

64 καὶ περικαλύψαντες αὐτὸν ἐπηρώτων λέγοντες Προφήτευσον τίς ἐστιν ὁ παίσας σε

64 அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை ஞானதிருஷ்டியினால் சொல் என்று அவரைக்கேட்டதுமன்றி,
64 They blindfolded Himf and kept demanding, “Prophesy! Who hit You?”
64 அவரது முகத்தை மூடி, "உன்னை அடித்தவர் யார்? இறைவாக்கினனே, சொல்" என்று கேட்டார்கள்.

65 καὶ ἔλεγον πολλὰ βλασφημοῦντες ἕτερα εἰς αὐτόν

65 மற்றும் அநேக தூஷணவார்த்தைகளையும் அவருக்கு விரோதமாகச் சொன்னார்கள்.
65 And they said many other blasphemous things against Him.
65 இன்னும் பலவாறு அவரைப் பழித்துரைத்தார்கள்.

Jesus before the Sanhedrin (Matthew 26:57–68; Mark 14:53–65; John 18:19–24)

66 Καὶ ὡς ἐγένετο ἡμέρα τὸ πρεσβυτέριον τοῦ λαοῦ τε ἀρχιερεῖς καὶ γραμματεῖς συνήχθη καὶ ἀπήγαγον αὐτὸν εἰς αὐτῶν τὸ συνέδριον λέγοντες

66 விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூடிவந்து, தங்கள் ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி:
66 At daybreak the council of the elders of the people, both the chief priests and scribes, met together. They led Jesus into their Sanhedring and said,
66 பொழுது விடிந்ததும் மக்களின் மூப்பர்களும் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞர்களும் கூடிவந்தார்கள்; இயேசுவை இழுத்துச் சென்று தங்கள் மூப்பர் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள்.

67 Εἰ σὺ εἶ ὁ Χριστός εἰπὸν ἡμῖν δὲ Εἶπεν αὐτοῖς Ἐὰν εἴπω ὑμῖν οὐ μὴ πιστεύσητε

67 நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச்சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள்.
67 “If You are the Christ, tell us.” Jesus answered, “If I tell you, you will not believe.
67 அவர்கள், "நீ மெசியாதானா? எங்களிடம் சொல்" என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், "நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்;

68 δὲ ἐὰν ἐρωτήσω οὐ μὴ ἀποκριθῆτε

68 நான் உங்களிடத்தில் வினாவினாலும் எனக்கு மாறுத்தரம் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலைபண்ணவுமாட்டீர்கள்.
68 And if I ask you a question, you will not answer.
68 நான் உங்களிடம் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டீர்கள்.

69 δὲ ἀπὸ τοῦ νῦν ὁ Υἱὸς τοῦ ἀνθρώπου ἔσται καθήμενος ἐκ δεξιῶν τῆς δυνάμεως τοῦ Θεοῦ

69 இதுமுதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார் என்றார்.
69 But from now on the Son of Man will be seated at the right hand of the power of God.”h
69 இதுமுதல் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பார்" என்றார்.

70 δὲ πάντες Εἶπαν εἶ Σὺ οὖν ὁ Υἱὸς τοῦ Θεοῦ δὲ Ὁ ἔφη πρὸς αὐτοὺς Ὑμεῖς λέγετε ὅτι ἐγώ εἰμι

70 அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள்; அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார்.
70 So they all asked, “Are You then the Son of God?” He replied, “You say that I am.”
70 அதற்கு அவர்கள் அனைவரும், "அப்படியானால் நீ இறைமகனா?" என்று கேட்டனர். அவரோ, "நான் இறைமகன் என நீங்களே சொல்லுகிறீர்கள்" என்று அவர்களுக்குச் சொன்னார்.

71 Τί ἔχομεν χρείαν ἔτι μαρτυρίας δὲ Οἱ εἶπαν ἠκούσαμεν γὰρ αὐτοὶ ἀπὸ αὐτοῦ τοῦ στόματος

71 அப்பொழுது அவர்கள்: இனி வேறுசாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள்.
71 “Why do we need any more testimony?” they declared. “We have heard it for ourselves from His own lips.”
71 அதற்கு அவர்கள், "இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இவன் வாயிலிருந்து நாமே கேட்டோமே" என்றார்கள்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Luke Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
1 a Literally the feast of the Unleavened ; see Exodus 12:14–20.
20 b Some manuscripts end verse 19 after This is My body  and do not include verse 20.
37 c Isaiah 53:12
44 d Some manuscripts do not include verses 43 and 44.
53 e Literally the temple 
64 f BYZ and TR include and were striking Him on the face .
66 g Or their Council 
69 h See Psalm 110:1.

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.