பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

Luke  லூக்கா  Λουκᾶν

அதிகாரம் 1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

லூக்கா 20 | Luke 20

Jesus’ Authority Challenged (Matthew 21:23–27; Mark 11:27–33)

1 Καὶ ἐγένετο ἐν μιᾷ τῶν ἡμερῶν αὐτοῦ διδάσκοντος τὸν λαὸν ἐν τῷ ἱερῷ καὶ εὐαγγελιζομένου οἱ ἀρχιερεῖς καὶ οἱ γραμματεῖς σὺν τοῖς πρεσβυτέροις ἐπέστησαν

1 அந்நாட்களில் ஒன்றில், அவர் தேவாலயத்திலே ஜனங்களுக்கு உபதேசித்து சுவிசேஷத்தைப் பிரசங்கித்தபோது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரிடத்தில் கூடிவந்து:
1 One day as Jesus was teaching the people in the temple courtsa and proclaiming the gospel, the chief priests and scribes, together with the elders, came up to Him.
1 ஒருநாள் இயேசு கோவிலில் மக்களுக்குக் கற்பித்துக்கொண்டிருந்தார். அவர் நற்செய்தியை அறிவித்துக்கொண்டு இருந்தபோது தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மூப்பர்களும் அங்கு வந்தார்கள்.

2 Εἰπὸν ἡμῖν καὶ εἶπαν λέγοντες πρὸς αὐτόν ἐν ποίᾳ ἐξουσίᾳ ποιεῖς ταῦτα ἢ τίς ἐστιν ὁ δούς σοι ταύτην τὴν ἐξουσίαν

2 நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.
2 “Tell us,” they said, “by what authority are You doing these things, and who gave You this authority?”
2 அவர்கள் அவரை நோக்கி, "எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? எங்களுக்குச் சொல்லும்" என்றார்கள்.

3 κἀγὼ Ἐρωτήσω ὑμᾶς λόγον δὲ Ἀποκριθεὶς εἶπεν πρὸς αὐτούς καὶ εἴπατέ μοι

3 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுங்கள்.
3 “I will also ask you a question,” Jesus replied. “Tell Me:
3 அவர் அவர்களுக்கு மறுமொழியாக, "நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள்.

4 Ἰωάννου Τὸ βάπτισμα ἦν ἐξ οὐρανοῦ ἢ ἐξ ἀνθρώπων

4 யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? என்று கேட்டார்.
4 John’s baptism—was it from heaven, or from men?”
4 திருமுழுக்குக் கொடுக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா, அல்லது மனிதரிடமிருந்து வந்ததா?" என்று கேட்டார்.

5 δὲ Οἱ συνελογίσαντο πρὸς ἑαυτοὺς λέγοντες ὅτι Ἐὰν εἴπωμεν Ἐξ οὐρανοῦ ἐρεῖ Διὰ τί οὐκ ἐπιστεύσατε αὐτῷ

5 அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணி: தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார்.
5 They deliberated among themselves and said, “If we say, ‘From heaven,’ He will ask, ‘Why did you not believe him?’
5 அவர்கள் 'விண்ணகத்திலிருந்து வந்தது' என்போமானால், 'ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை?' எனக் கேட்பார்;

6 δὲ ἐὰν εἴπωμεν Ἐξ ἀνθρώπων ἅπας ὁ λαὸς καταλιθάσει ἡμᾶς γάρ ἐστιν πεπεισμένος Ἰωάννην εἶναι προφήτην

6 மனுஷரால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், ஜனங்களெல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறபடியினால் நம்மேல் கல்லெறிவார்கள் என்று சொல்லி:
6 But if we say, ‘From men,’ all the people will stone us, for they are convinced that John was a prophet.”
6 'மனிதரிடமிருந்து வந்தது' என்போமானால் மக்கள் அனைவரும் நம்மீது கல் எறிவர்" என்று தங்களிடையே சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில், மக்கள் யோவானை இறைவாக்கினர் என்று உறுதியாய் நம்பியிருந்தனர்.

7 Καὶ ἀπεκρίθησαν μὴ εἰδέναι πόθεν

7 அது யாரால் உண்டாயிற்றோ, எங்களுக்குத் தெரியாது என்று பிரதியுத்தரம் சொன்னார்கள்.
7 So they answered that they did not know where it was from.
7 எனவே அவர்கள், "எங்கிருந்து வந்தது எனத் தெரியாது" என்று பதிலுரைத்தார்கள்.

8 Καὶ ὁ Ἰησοῦς εἶπεν αὐτοῖς Οὐδὲ ἐγὼ λέγω ὑμῖν ἐν ποίᾳ ἐξουσίᾳ ποιῶ ταῦτα

8 அப்பொழுது இயேசு: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்.
8 And Jesus replied, “Neither will I tell you by what authority I am doing these things.”
8 இயேசுவும் அவர்களிடம், "எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்" என்றார்.

The Parable of the Wicked Tenants (Matthew 21:33–46; Mark 12:1–12)

9 δὲ Ἤρξατο λέγειν πρὸς τὸν λαὸν ταύτην τὴν παραβολὴν [τις] Ἄνθρωπος ἐφύτευσεν ἀμπελῶνα καὶ ἐξέδετο αὐτὸν γεωργοῖς καὶ ἀπεδήμησεν ἱκανούς χρόνους

9 பின்பு அவர் ஜனங்களுக்குச் சொல்லத் தொடங்கின உவமையாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைத் தோட்டக்காரருக்குக் குத்தகையாக விட்டு, நெடுநாளாகப் புறத்தேசத்துக்குப் போயிருந்தான்.
9 Then He proceeded to tell the people this parable: “A man planted a vineyard, rented it out to some tenants, and went away for a long time.
9 பின்பு இயேசு மக்களை நோக்கி இந்த உவமையைச் சொல்லத் தொடங்கினார்: "ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டுத் தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டு விட்டு நீண்ட காலம் நெடும் பயணம் மேற்கொண்டார்.1

10 καὶ καιρῷ ἀπέστειλεν δοῦλον πρὸς τοὺς γεωργοὺς ἵνα δώσουσιν αὐτῷ ἀπὸ τοῦ καρποῦ τοῦ ἀμπελῶνος δὲ οἱ γεωργοὶ δείραντες ἐξαπέστειλαν αὐτὸν κενόν

10 அந்தத் தோட்டக்காரர் திராட்சத்தோட்டத்தின் கனிகளில் தன் பாகத்தைக் கொடுத்தனுப்பும்படி, பருவக்காலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அந்தத் தோட்டக்காரர் அவனை அடித்து, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.
10 At harvest time, he sent a servant to the tenants to collect his share of the fruit of the vineyard. But the tenants beat the servant and sent him away empty-handed.
10 பருவகாலம் வந்ததும் ஒரு பணியாளரை அவர் அனுப்பினார். ஆனால், தோட்டத் தொழிலாளர்கள் அவரை நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள்.

11 Καὶ προσέθετο πέμψαι ἕτερον δοῦλον δὲ οἱ δείραντες καὶ ἀτιμάσαντες κἀκεῖνον ἐξαπέστειλαν κενόν

11 பின்பு அவன் வேறோரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.
11 So he sent another servant, but they beat him and treated him shamefully, sending him away empty-handed.
11 மீண்டும் அவர் வேறு ஒரு பணியாளரை அனுப்பி வைத்தார். அவர்கள் அவரையும் நையப்புடைத்து அவமதித்து வெறுங்கையராய் அனுப்பினார்கள்.

12 Καὶ προσέθετο πέμψαι τρίτον δὲ καὶ οἱ τραυματίσαντες τοῦτον ἐξέβαλον

12 அவன் மூன்றாந்தரமும் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் காயப்படுத்தி, துரத்திவிட்டார்கள்.
12 Then he sent a third, but they wounded him and threw him out.
12 மூன்றாம் முறையாக அவர் ஒருவரை அனுப்பினார். அவரையும் அவர்கள் காயப்படுத்தி வெளியே தள்ளினர்.

13 Τί ποιήσω δὲ Εἶπεν ὁ κύριος τοῦ ἀμπελῶνος πέμψω μου τὸν ἀγαπητόν τὸν υἱόν ἴσως ἐντραπήσονται τοῦτον

13 அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எஜமான்: நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான குமாரனை அனுப்பினால், அவனையாகிலும் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி, அவனை அனுப்பினான்.
13 ‘What shall I do?’ asked the owner of the vineyard. ‘I will send my beloved son. Perhaps they will respect him.’
13 பின்பு திராட்சைத் தோட்ட உரிமையாளர், 'நான் என்ன செய்வேன்? என் அன்பு மகனை அனுப்புவேன். ஒருவேளை அவனை அவர்கள் மதிப்பார்கள்' என்று சொல்லிக்கொண்டார்.

14 δὲ οἱ γεωργοὶ Ἰδόντες αὐτὸν διελογίζοντο πρὸς ἀλλήλους λέγοντες Οὗτός ἐστιν ὁ κληρονόμος ἀποκτείνωμεν αὐτόν ἵνα ἡ κληρονομία γένηται ἡμῶν

14 தோட்டக்காரர் அவனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, சுதந்தரம் நம்முடையதாகும்படிக்கு இவனைக் கொல்லுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு,
14 But when the tenants saw the son, they discussed it among themselves and said, ‘This is the heir. Let us kill him, and the inheritance will be ours.’
14 தோட்டத் தொழிலாளர்கள் அவருடைய மகனைக் கண்டதும், 'இவன்தான் சொத்துக்கு உரியவன்; நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது சொத்து நம்முடையதாகும்' என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.

15 καὶ ἐκβαλόντες αὐτὸν ἔξω τοῦ ἀμπελῶνος ἀπέκτειναν Τί οὖν ὁ κύριος τοῦ ἀμπελῶνος ποιήσει αὐτοῖς

15 அவனைத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளி, கொன்றுபோட்டார்கள். இப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்ன செய்வான்?
15 So they threw him out of the vineyard and killed him. What then will the owner of the vineyard do to them?
15 எனவே, அவர்கள் அவரைத் திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்று போட்டார்கள். அப்படியானால் திராட்சைத் தோட்ட உரிமையாளர் அவர்களை என்ன செய்வார்?

16 ἐλεύσεται καὶ ἀπολέσει τούτους τοὺς γεωργοὺς καὶ δώσει τὸν ἀμπελῶνα ἄλλοις δὲ Ἀκούσαντες εἶπαν Μὴ γένοιτο

16 அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை வேறு தோட்டக்காரரிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார். அவர்கள் அதைக்கேட்டு, அப்படியாகாதிருப்பதாக என்றார்கள்.
16 He will come and kill those tenants, and will give the vineyard to others.” And when the people heard this, they said, “May such a thing never happen!”
16 அவர் வந்து அந்தத் தொழிலாளர்களை ஒழித்து விட்டு, திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் குத்தகைக்கு விடுவார்." அப்போது அதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள், "ஐயோ! அப்படி நடக்கக் கூடாது" என்றார்கள்.

17 δὲ Ὁ ἐμβλέψας αὐτοῖς εἶπεν οὖν Τί ἐστιν τοῦτο τὸ γεγραμμένον Λίθον ὃν οἱ οἰκοδομοῦντες ἀπεδοκίμασαν Οὗτος ἐγενήθη εἰς κεφαλὴν γωνίας

17 அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத்தென்ன?
17 But Jesus looked directly at them and said, “Then what is the meaning of that which is written: ‘The stone the builders rejected has become the cornerstone’?b
17 ஆனால், இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, "'கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று' என்று மறைநூலில் எழுதியிருப்பதன் பொருள் என்ன?2

18 Πᾶς ὁ πεσὼν ἐπ’ ἐκεῖνον τὸν λίθον συνθλασθήσεται δ’ ἐφ’ ὃν ἂν πέσῃ λικμήσει αὐτόν

18 அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்றார்.
18 Everyone who falls on this stone will be broken to pieces, but he on whom it falls will be crushed.”
18 அந்தக் கல்லின் மேல் விழுகிற எவரும் நொறுங்கிப் போவார்; அது யார்மேல் விழுமோ அவரும் நசுங்கிப்போவார்" என்றார்.

Paying Taxes to Caesar (Matthew 22:15–22; Mark 12:13–17)

19 Καὶ οἱ γραμματεῖς καὶ οἱ ἀρχιερεῖς γὰρ ἔγνωσαν ὅτι εἶπεν ταύτην τὴν παραβολὴν πρὸς αὐτοὺς ἐζήτησαν ἐπιβαλεῖν τὰς χεῖρας ἐπ’ αὐτὸν ἐν αὐτῇ τῇ ὥρᾳ καὶ ἐφοβήθησαν τὸν λαόν

19 பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களைக்குறித்து இந்த உவமையைச் சொன்னாரென்று அறிந்து, அந்நேரத்திலே அவரைப்பிடிக்க வகைதேடியும் ஜனங்களுக்குப் பயந்திருந்தார்கள்.
19 When the scribes and chief priests realized that Jesus had spoken this parable against them, they sought to arrest Him that very hour. But they were afraid of the people.
19 மறைநூல் அறிஞர்களும் தலைமைக் குருக்களும் தங்களைக் குறித்தே அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை உணர்ந்து கொண்டு, அந்நேரமே இயேசுவைப் பிடிக்க வழிதேடினார்கள்; ஆனால், மக்களுக்கு அஞ்சினார்கள்.

20 Καὶ παρατηρήσαντες ἀπέστειλαν ἐνκαθέτους ὑποκρινομένους ἑαυτοὺς εἶναι δικαίους ἵνα ἐπιλάβωνται αὐτοῦ λόγου ὥστε παραδοῦναι αὐτὸν τῇ ἀρχῇ καὶ τῇ ἐξουσίᾳ τοῦ ἡγεμόνος

20 அவர்கள் சமயம்பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றங்கண்டுபிடிக்கலாமென்று, தங்களை உண்மையுள்ளவர்களாய்க் காண்பிக்கிற வேவுகாரரை அவரிடத்தில் அனுப்பினார்கள்.
20 So they watched Him closely and sent spies who pretended to be sincere. They were hoping to catch Him in His words in order to hand Him over to the rule and authority of the governor.
20 ஆகவே, அவர்கள் இயேசுவைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தார்கள்; நேர்மையாளர் போன்று நடித்து, அவரது பேச்சில் குற்றம் காண ஒற்றர்களை அனுப்பி வைத்தார்கள்; அவரை ஆளுநரின் ஆட்சி அதிகாரத்திற்கு ஒப்புவிப்பதே அவர்கள் நோக்கமாய் இருந்தது.

21 Διδάσκαλε καὶ ἐπηρώτησαν αὐτὸν λέγοντες οἴδαμεν ὅτι λέγεις καὶ διδάσκεις ὀρθῶς καὶ οὐ λαμβάνεις πρόσωπον ἀλλ’ διδάσκεις τὴν ὁδὸν τοῦ Θεοῦ ἐπ’ ἀληθείας

21 அவர்கள் வந்து: போதகரே, நீர் நிதானமாய்ப் பேசி உபதேசிக்கிறீரென்றும், முகதாட்சணியமில்லாமல் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம்.
21 “Teacher,” they inquired, “we know that You speak and teach correctly. You show no partiality, but teach the way of God in accordance with the truth.
21 ஒற்றர்கள் அவரிடம், "போதகரே, நீர் சொல்வதும் கற்பிப்பதும் சரியே. நீர் ஆள் பார்த்துச் செயல்படாதவர்; கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும்.

22 ἔξεστιν ἡμᾶς δοῦναι φόρον Καίσαρι ἢ οὔ

22 இராயனுக்கு வரி கொடுக்கிறது நியாயமோ அல்லவோ, எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.
22 Is it lawful for us to pay taxes to Caesar or not?”
22 சீசருக்கு நாம் கப்பம் கட்டுவது முறையா இல்லையா?" என்று கேட்டார்கள்;

23 δὲ Κατανοήσας αὐτῶν τὴν πανουργίαν εἶπεν πρὸς αὐτούς

23 அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?
23 But Jesus saw through their duplicity and said to them,
23 அவர்களுடைய சூழ்ச்சியை அவர் தெளிவாகப் புரிந்துகொண்டு அவர்களிடம்,

24 Δείξατέ μοι δηνάριον τίνος εἰκόνα καὶ ἐπιγραφήν ἔχει Καίσαρος δὲ Οἱ εἶπαν

24 ஒரு பணத்தை எனக்குக் காண்பியுங்கள். இதிலிருக்கிற சொரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். அதற்கு அவர்கள்: இராயனுடையது என்றார்கள்
24 “Show Me a denarius.c Whose image and inscription are on it?” “Caesar’s,” they answered.
24 "ஒரு தெனாரியத்தை3 எனக்குக் காட்டுங்கள்; இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?" என்று கேட்டார். அவர்கள், "சீசருடையவை" என்றார்கள்.

3 'தெனாரியம்' என்பது ஒரு தொழிலாளரின் ஒரு நாள் கூலிக்கு இணையான உரோமை நாணயம்.

25 δὲ Ὁ Τοίνυν εἶπεν πρὸς αὐτούς ἀπόδοτε Καίσαρι τὰ Καίσαρος καὶ τῷ Θεῷ τὰ τοῦ Θεοῦ

25 அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
25 So Jesus told them, “Give to Caesar what is Caesar’s, and to God what is God’s.”
25 அவர் அவர்களை நோக்கி, "அப்படியானால், சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்" என்று சொன்னார்.

26 Καὶ οὐκ ἴσχυσαν ἐπιλαβέσθαι αὐτοῦ ῥήματος ἐναντίον τοῦ λαοῦ καὶ θαυμάσαντες ἐπὶ αὐτοῦ τῇ ἀποκρίσει ἐσίγησαν

26 அவர்கள் அவரை ஜனங்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக்கூடாமல், அவர் சொன்ன உத்தரவைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாயிருந்தார்கள்.
26 And they were unable to trap Him in His words before the people; and amazed at His answer, they fell silent.
26 மக்கள் முன்னிலையில் இயேசுவின் பேச்சில் அவர்களால் குற்றம் காண இயலவில்லை; அவருடைய மறுமொழியைக் கண்டு அவர்கள் வியப்புற்றுப் பேசாதிருந்தார்கள்.

The Sadducees and the Resurrection (Matthew 22:23–33; Mark 12:18–27)

27 δέ τινες τῶν Σαδδουκαίων οἱ ἀντιλέγοντες μὴ εἶναι ἀνάστασιν Προσελθόντες ἐπηρώτησαν αὐτὸν

27 உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயரில் சிலர் அவரிடத்தில் வந்து:
27 Then some of the Sadducees, who say there is no resurrection, came to question Him.
27 உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி,4

28 Διδάσκαλε λέγοντες Μωϋσῆς ἔγραψεν ἡμῖν ἐάν τινος ἀδελφὸς ἀποθάνῃ ἔχων γυναῖκα καὶ οὗτος ᾖ ἄτεκνος ἵνα αὐτοῦ ὁ ἀδελφὸς λάβῃ τὴν γυναῖκα καὶ ἐξαναστήσῃ σπέρμα τῷ αὐτοῦ ἀδελφῷ

28 போதகரே, ஒருவன் மனைவியையுடையவனாயிருந்து பிள்ளையில்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி தன் சகோதரனுக்குச் சந்தானமுண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே.
28 “Teacher,” they said, “Moses wrote for us that if a man’s brother dies and leaves a wife but no children, the man is to marry his brother’s widow and raise up offspring for him.d
28 "போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக் கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார்.5

29 οὖν ἦσαν ἑπτὰ ἀδελφοὶ καὶ ὁ πρῶτος λαβὼν γυναῖκα ἀπέθανεν ἄτεκνος

29 சகோதரர் ஏழுபேரிருந்தார்கள், அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, பிள்ளையில்லாமல் இறந்துபோனான்.
29 Now there were seven brothers. The first one married a wife, but died childless.
29 இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார்.

30 καὶ ὁ δεύτερος

30 பின்பு இரண்டாஞ்சகோதரன் அவளை விவாகம்பண்ணி அவனும் பிள்ளையில்லாமல் இறந்துபோனான்.
30 Then the seconde
30 இரண்டாம்,

31 καὶ ὁ τρίτος ἔλαβεν αὐτήν δὲ ὡσαύτως καὶ οἱ ἑπτὰ καὶ ἀπέθανον κατέλιπον οὐ τέκνα

31 மூன்றாஞ்சகோதானும் அவளை விவாகம்பண்ணினான். அப்படியே ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி பிள்ளையில்லாமல் இறந்துபோனார்கள்.
31 and the third married the widow, and in the same way all seven died, leaving no children.
31 மூன்றாம், சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்;

32 καὶ ὕστερον ἡ γυνὴ ἀπέθανεν

32 எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.
32 And last of all, the woman died.
32 கடைசியாக அப்பெண்ணும் இறந்தார்.

33 οὖν ἐν τῇ ἀναστάσει ἡ γυνὴ τίνος αὐτῶν γυνή γίνεται γὰρ οἱ ἑπτὰ ἔσχον γυναῖκα αὐτὴν

33 இவ்விதமாய் ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணியிருக்க, உயிர்த்தெழுதலில் அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள் என்று கேட்டார்கள்.
33 So then, in the resurrection, whose wife will she be? For all seven were married to her.”
33 அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில், எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?" என்று கேட்டனர்.

34 Καὶ ὁ Ἰησοῦς εἶπεν αὐτοῖς Οἱ υἱοὶ τούτου τοῦ αἰῶνος γαμοῦσιν καὶ γαμίσκονται

34 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் பெண்கொண்டும் பெண்கொடுத்தும் வருகிறார்கள்.
34 Jesus answered, “The sons of this age marry and are given in marriage.
34 அதற்கு இயேசு அவர்களிடம், "இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்துகொள்கின்றனர்.

35 δὲ οἱ καταξιωθέντες τυχεῖν ἐκείνου τοῦ αἰῶνος καὶ τῆς ἀναστάσεως τῆς ἐκ νεκρῶν οὔτε γαμοῦσιν οὔτε γαμίζονται

35 மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண் கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை.
35 But those who are considered worthy to share in the age to come and in the resurrection from the dead will neither marry nor be given in marriage.
35 ஆனால், வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை.

36 γὰρ δύνανται οὐδὲ ἔτι ἀποθανεῖν γάρ εἰσιν ἰσάγγελοι καὶ ὄντες υἱοὶ τῆς ἀναστάσεως εἰσιν υἱοί Θεοῦ

36 அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்.
36 In fact, they can no longer die, because they are like the angels. And since they are sons of the resurrection, they are sons of God.
36 இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.

37 δὲ καὶ Μωϋσῆς ἐμήνυσεν Ὅτι οἱ νεκροὶ ἐγείρονται ἐπὶ τῆς Βάτου ὡς λέγει Κύριον Τὸν Θεὸν Ἀβραὰμ καὶ Θεὸν Ἰσαὰκ καὶ Θεὸν Ἰακώβ

37 அன்றியும் மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப்பற்றிய வாசகத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியெனில். கர்த்தரை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார்.
37 Even Moses demonstrates that the dead are raised, in the passage about the burning bush. For he calls the Lord ‘the God of Abraham, the God of Isaac, and the God of Jacob.’f
37 இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, 'ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று கூறியிருக்கிறார்.6

38 δὲ ἔστιν οὐκ Θεὸς νεκρῶν ἀλλὰ ζώντων γὰρ αὐτῷ πάντες ζῶσιν

38 அவர் மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார், எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே என்றார்.
38 He is not the God of the dead, but of the living, for to Him all are alive.”
38 அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில், அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே" என்றார்.

39 δέ τινες τῶν γραμματέων Ἀποκριθέντες εἶπαν Διδάσκαλε εἶπας καλῶς

39 அப்பொழுது வேதபாரகரில் சிலர் அதைக் கேட்டு: போதகரே, நன்றாய்ச் சொன்னீர் என்றார்கள்.
39 Some of the scribes answered, “Teacher, You have spoken well!”
39 மறைநூல் அறிஞருள் சிலர் அவரைப் பார்த்து, "போதகரே, நன்றாகச் சொன்னீர்" என்றனர்.

40 γὰρ οὐκέτι ἐτόλμων ἐπερωτᾶν αὐτὸν οὐδέν

40 அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் வேறொன்றுங்கேட்கத் துணியவில்லை.
40 And they did not dare to question Him any further.
40 அதன்பின் அவர்கள் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

Whose Son Is the Christ? (Matthew 22:41–46; Mark 12:35–37)

41 δὲ Εἶπεν πρὸς αὐτούς Πῶς λέγουσιν τὸν Χριστὸν εἶναι υἱόν Δαυὶδ

41 அவர் அவர்களை நோக்கி: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்?
41 Then Jesus declared, “How can it be said that the Christ is the Son of David?
41 அப்போது இயேசு அவர்களை நோக்கி, "மெசியா தாவீதின் மகன் என்று கூறுவது எப்படி?

42 γὰρ Δαυὶδ αὐτὸς λέγει ἐν βίβλῳ ψαλμῶν Κύριος Εἶπεν μου τῷ Κυρίῳ Κάθου ἐκ μου δεξιῶν

42 நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று,
42 For David himself says in the book of Psalms: ‘The Lord said to my Lord, “Sit at My right hand
42 ❮42-43❯ஏனென்றால் திருப்பாடல்கள் நூலில், 'ஆண்டவர், என் தலைவரிடம், "நான் உம் பகைவரை உமக்குக்கால் மணையாக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்" என்றுரைத்தார்' எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா?

43 Ἕως ἂν θῶ σου τοὺς ἐχθρούς Ὑποπόδιον τῶν σου ποδῶν

43 கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புஸ்தகத்தில் சொல்லுகிறானே.
43 until I make Your enemies a footstool for Your feet.”’g

44 οὖν Δαυὶδ καλεῖ αὐτὸν Κύριον καὶ πῶς ἐστιν αὐτοῦ υἱός

44 தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.
44 Thus David calls Him ‘Lord.’ So how can He be David’s son?”
44 எனவே, தாவீது அவரைத் தலைவர் என அழைப்பதால் அவர் அவருக்கே மகனாய் இருப்பது எப்படி?" என்று கேட்டார்.

Beware of the Scribes (Mark 12:38–40)

45 Ἀκούοντος δὲ παντὸς τοῦ λαοῦ εἶπεν τοῖς [αὐτοῦ] μαθηταῖς

45 பின்பு ஜனங்களெல்லாரும் கேட்கையில் அவர் தம்முடைய சீஷரை நோக்கி:
45 In the hearing of all the people, Jesus said to His disciples,
45 மக்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தபோது இயேசு தம் சீடர்களிடம்,

46 Προσέχετε ἀπὸ τῶν γραμματέων τῶν θελόντων περιπατεῖν ἐν στολαῖς καὶ φιλούντων ἀσπασμοὺς ἐν ταῖς ἀγοραῖς καὶ πρωτοκαθεδρίας ἐν ταῖς συναγωγαῖς καὶ πρωτοκλισίας ἐν τοῖς δείπνοις

46 நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தை வெளிகளில் வந்தனங்களை அடையவும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,
46 “Beware of the scribes. They like to walk around in long robes, and they love the greetings in the marketplaces, the chief seats in the synagogues, and the places of honor at banquets.
46 "மறைநூல் அறிஞர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஏனென்றால், அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதை விரும்புகிறார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதை விரும்புகிறார்கள்; தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் விரும்புகிறார்கள்;8

47 οἳ κατεσθίουσιν τῶν χηρῶν τὰς οἰκίας καὶ προφάσει προσεύχονται μακρὰ οὗτοι λήμψονται περισσότερον κρίμα

47 விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார்.
47 They defraud widows of their houses,h and for a show make lengthy prayers. These men will receive greater condemnation.”
47 கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்; நீண்டநேரம் இறைவனிடம் வேண்டுவதுபோல நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் அவர்களே" என்றார்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Luke Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
1 a Literally the temple 
17 b Psalm 118:22
24 c A denarius was customarily a day’s wage for a laborer; see Matthew 20:2.
28 d Deuteronomy 25:5
30 e BYZ and TR include married the widow, and he also died, 
37 f Exodus 3:6
43 g Psalm 110:1
47 h Literally They devour widows’ houses 

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.