பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

Luke  லூக்கா  Λουκᾶν

அதிகாரம் 1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

லூக்கா 19 | Luke 19

Jesus and Zacchaeus (Numbers 5:5–10)

1 Καὶ εἰσελθὼν τὴν Ἰεριχώ διήρχετο

1 அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்,
1 Then Jesus entered Jericho and was passing through.
1 இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார்.

2 Καὶ ἰδοὺ ἀνὴρ ὀνόματι καλούμενος Ζακχαῖος καὶ αὐτὸς ἦν ἀρχιτελώνης καὶ αὐτὸς πλούσιος

2 ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்,
2 And there was a man named Zacchaeus, a chief tax collector, who was very wealthy.
2 அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர்.

3 καὶ ἐζήτει ἰδεῖν τίς τὸν Ἰησοῦν ἐστιν καὶ οὐκ ἠδύνατο ἀπὸ τοῦ ὄχλου ὅτι ἦν μικρὸς τῇ ἡλικίᾳ

3 இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,
3 He was trying to see who Jesus was, but could not see over the crowd because he was small in stature.
3 இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்தால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார்.

4 καὶ προδραμὼν εἰς τὸ ἔμπροσθεν ἀνέβη ἐπὶ συκομορέαν ἵνα ἴδῃ αὐτόν ὅτι ἤμελλεν διέρχεσθαι ἐκείνης

4 அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
4 So he ran on ahead and climbed a sycamore tree to see Him, since Jesus was about to pass that way.
4 அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார்.

5 Καὶ ὡς ἦλθεν ἐπὶ τὸν τόπον ὁ Ἰησοῦς ἀναβλέψας εἶπεν πρὸς αὐτόν Ζακχαῖε σπεύσας κατάβηθι γὰρ με δεῖ μεῖναι ἐν σου τῷ οἴκῳ σήμερον

5 இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.
5 When Jesus came to that place, He looked up and said, “Zacchaeus, hurry down, for I must stay at your house today.”
5 இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், "சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்" என்றார்.

6 Καὶ σπεύσας κατέβη καὶ ὑπεδέξατο αὐτὸν χαίρων

6 அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான்.
6 So Zacchaeus hurried down and welcomed Him joyfully.
6 அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார்.

7 καὶ πάντες ἰδόντες διεγόγγυζον λέγοντες ὅτι εἰσῆλθεν καταλῦσαι Παρὰ ἁμαρτωλῷ ἀνδρὶ

7 அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படிபோனார் என்று முறுமுறுத்தார்கள்.
7 And all who saw this began to grumble, saying, “He has gone to be the guest of a sinful man!”
7 இதைக் கண்ட யாவரும், "பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர்" என்று முணுமுணுத்தனர்.

8 δὲ Ζακχαῖος Σταθεὶς εἶπεν πρὸς τὸν Κύριον Ἰδοὺ Κύριε τὰ ἡμίσιά* τῶν μου ὑπαρχόντων δίδωμι τοῖς πτωχοῖς καὶ εἴ ἐσυκοφάντησα τι τινός ἀποδίδωμι τετραπλοῦν

8 சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.
8 But Zacchaeus stood up and said to the Lord, “Look, Lord, half of my possessions I give to the poor, and if I have cheated anyone, I will repay it fourfold.”
8 சக்கேயு எழுந்து நின்று, "ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்" என்று அவரிடம் கூறினார்.

9 δὲ ὁ Ἰησοῦς Εἶπεν πρὸς αὐτὸν ὅτι Σήμερον σωτηρία ἐγένετο τούτῳ τῷ οἴκῳ καθότι αὐτὸς καὶ ἐστιν υἱὸς Ἀβραάμ

9 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.
9 Jesus said to him, “Today salvation has come to this house, because this man too is a son of Abraham.
9 இயேசு அவரை நோக்கி, "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில், இவரும் ஆபிரகாமின் மகனே!

10 γὰρ ὁ Υἱὸς τοῦ ἀνθρώπου ἦλθεν ζητῆσαι καὶ σῶσαι τὸ ἀπολωλός

10 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
10 For the Son of Man came to seek and to save the lost.”
10 இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்" என்று சொன்னார்.

The Parable of the Ten Minas (Matthew 25:14–30)

11 δὲ αὐτῶν Ἀκουόντων ταῦτα προσθεὶς εἶπεν παραβολὴν διὰ αὐτὸν τὸ εἶναι ἐγγὺς Ἰερουσαλὴμ καὶ αὐτοὺς δοκεῖν ὅτι ἡ βασιλεία τοῦ Θεοῦ μέλλει ἀναφαίνεσθαι παραχρῆμα

11 அவர்கள் இவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் எருசலேமுக்குச் சமீபித்திருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்:
11 While the people were listening to this, Jesus proceeded to tell them a parable, because He was near Jerusalem and they thought the kingdom of God would appear imminently.
11 இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இறையாட்சி உடனடியாகத் தோன்றப்போகிறது என்று நினைத்தார்கள். அப்போது இயேசு மேலும் ஓர் உவமையைச் சொன்னார்:

12 οὖν εἶπεν τις Ἄνθρωπός εὐγενὴς ἐπορεύθη εἰς μακρὰν χώραν λαβεῖν ἑαυτῷ βασιλείαν καὶ ὑποστρέψαι

12 பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பி வரும்படி தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்.
12 So He said, “A man of noble birth went to a distant country to lay claim to his kingship and then return.
12 "உயர் குடிமகன் ஒருவர் ஆட்சியுரிமை பெற்றுவரத் தொலை நாட்டிற்குப் போகப் புறப்பட்டார்.

13 δὲ καλέσας δέκα ἑαυτοῦ δούλους ἔδωκεν αὐτοῖς δέκα μνᾶς Πραγματεύσασθε ἐν ᾧ ἔρχομαι καὶ εἶπεν πρὸς αὐτούς

13 புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்.
13 Beforehand, he called ten of his servants and gave them ten minas.a ‘Conduct business with this until I return,’ he said.
13 அப்போது அவர் தம் பணியாளர்கள் பத்துப் பேரை அழைத்து, பத்து மினாக்களை1 அவர்களிடம் கொடுத்து அவர்களை நோக்கி, 'நான் வரும்வரை இவற்றை வைத்து வாணிகம் செய்யுங்கள்' என்று சொன்னார்.

1 "மினா" என்பது நூறு திராக்மா மதிப்புள்ள நாணயம். ஒரு "திராக்மா" ஒரு தொழிலாளியின் ஒரு நாள் கூலிக்கு இணையான கிரேக்க வெள்ளி நாணயம்.

14 δὲ αὐτοῦ Οἱ πολῖται ἐμίσουν αὐτόν καὶ ἀπέστειλαν πρεσβείαν ὀπίσω αὐτοῦ λέγοντες Οὐ θέλομεν τοῦτον βασιλεῦσαι ἐφ’ ἡμᾶς

14 அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள் மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்.
14 But his subjects hated him and sent a delegation after him to say, ‘We do not want this man to rule over us.’
14 அவருடைய குடிமக்களோ, அவரை வெறுத்தனர். எனவே, 'இவர் அரசராக இருப்பது எங்களுக்கு விருப்பமில்லை' என்று சொல்லித் தூது அனுப்பினர்.

15 Καὶ ἐγένετο ἐν αὐτὸν τῷ ἐπανελθεῖν λαβόντα τὴν βασιλείαν καὶ εἶπεν φωνηθῆναι αὐτῷ τούτους τοὺς δούλους οἷς δεδώκει τὸ ἀργύριον ἵνα γνοῖ τί 〈τίς〉 διεπραγματεύσαντο

15 அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.
15 When he returned from procuring his kingship, he summoned the servants to whom he had given the money, to find out what each one had earned.
15 இருப்பினும் அவர் ஆட்சியுரிமை பெற்றுத் திரும்பி வந்தார். பின்னர் தம்மிடம் பணம் வாங்கியிருந்த பணியாளர் ஒவ்வொருவரும் ஈட்டியது எவ்வளவு என்று அறிய அவர் அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினார்.

16 δὲ ὁ πρῶτος Παρεγένετο λέγων Κύριε σου ἡ μνᾶ προσηργάσατο δέκα μνᾶς

16 அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் பத்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.
16 The first servant came forward and said, ‘Master, your mina has produced ten more minas.’
16 முதலாம் பணியாளர் வந்து, 'ஐயா, உமது மினாவைக் கொண்டு பத்து மினாக்களைச் சேர்த்துள்ளேன்' என்றார்.

17 Καὶ εἶπεν αὐτῷ Εὖγε ἀγαθὲ δοῦλε ὅτι ἐγένου πιστὸς ἐν ἐλαχίστῳ ἴσθι ἔχων ἐξουσίαν ἐπάνω δέκα πόλεων

17 எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.
17 His master replied, ‘Well done, good servant! Because you have been faithful in a very small matter, you shall have authority over ten cities.’
17 அதற்கு அவர் அவரிடம், 'நன்று, நல்ல பணியாளரே, மிகச் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பத்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்' என்றார்.

18 Καὶ ὁ δεύτερος ἦλθεν λέγων κύριε σου Ἡ μνᾶ ἐποίησεν πέντε μνᾶς

18 அப்படியே இரண்டாம் ஊழியக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் ஐந்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.
18 The second servant came and said, ‘Master, your mina has made five minas.’
18 இரண்டாம் பணியாளர் வந்து, 'ஐயா உமது மினாவைக் கொண்டு ஐந்து மினாக்களை ஈட்டியுள்ளேன்' என்றார்.

19 δὲ καὶ τούτῳ Εἶπεν Καὶ σὺ γίνου ἐπάνω πέντε πόλεων

19 அவனையும் அவன் நோக்கி: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.
19 And to this one he said, ‘You shall have authority over five cities.’
19 அவர், 'எனவே நீர் ஐந்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்' என்று அவரிடமும் சொன்னார்.

20 Καὶ ὁ ἕτερος ἦλθεν λέγων Κύριε ἰδοὺ σου ἡ μνᾶ ἣν εἶχον ἀποκειμένην ἐν σουδαρίῳ

20 பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய ராத்தல், இதை ஒரு சீலையிலே வைத்திருந்தேன்.
20 Then another servant came and said, ‘Master, here is your mina, which I have laid away in a piece of cloth.b
20 வேறொருவர் வந்து, 'ஐயா, இதோ உமது மினா. ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருக்கிறேன்.

21 γάρ ἐφοβούμην σε ὅτι εἶ αὐστηρὸς ἄνθρωπος αἴρεις ὃ οὐκ ἔθηκας καὶ θερίζεις ὃ οὐκ ἔσπειρας

21 நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான்.
21 For I was afraid of you, because you are a harsh man. You withdraw what you did not deposit and reap what you did not sow.’
21 ஏனெனில், நீர் கண்டிப்புள்ளவர் என்று உமக்கு அஞ்சி இப்படிச் செய்தேன். நீர் வைக்காததை எடுக்கிறவர்; நீர் விதைக்காததை அறுக்கிறவர்' என்றார்.

22 Λέγει αὐτῷ πονηρὲ δοῦλε κρίνω σε Ἐκ σου τοῦ στόματός ᾔδεις ὅτι ἐγὼ εἰμι αὐστηρός ἄνθρωπος αἴρων ὃ οὐκ ἔθηκα καὶ θερίζων ὃ οὐκ ἔσπειρα

22 அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்தாயே,
22 His master replied, ‘You wicked servant, I will judge you by your own words. So you knew that I am a harsh man, withdrawing what I did not deposit and reaping what I did not sow?
22 அதற்கு அவர் அவரிடம், 'பொல்லாத பணியாளே, உன் வாய்ச் சொல்லைக் கொண்டே உனக்குத் தீர்ப்பிடுகிறேன். நான் கண்டிப்பானவன்; வைக்காததை எடுக்கிறவன்; விதைக்காததை அறுக்கிறவன் என உனக்குத் தெரியுமல்லவா?

23 διὰ τί καὶ οὐκ ἔδωκάς μου τὸ ἀργύριον ἐπὶ τράπεζαν κἀγὼ ἐλθὼν ἂν ἔπραξα αὐτὸ σὺν τόκῳ

23 பின்னே ஏன் நீ என் திரவியத்தைக் காசுக்கடையிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடே வரப்பற்றிக்கொள்வேனே என்று சொல்லி;
23 Why then did you not deposit my money in the bank, and upon my return I could have collected it with interest?’
23 அப்படியானால் ஏன் என் பணத்தை வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை? நான் வந்து அதை வட்டியோடு சேர்த்துப் பெற்றிருப்பேனே' என்றார்.

24 Καὶ εἶπεν τοῖς παρεστῶσιν Ἄρατε τὴν μνᾶν ἀπ’ αὐτοῦ καὶ δότε τῷ ἔχοντι τὰς δέκα μνᾶς

24 சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி: அந்த ராத்தலை அவன் கையிலிருந்தெடுத்து, பத்துராத்தல் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்.
24 Then he told those standing by, ‘Take the mina from him and give it to the one who has ten minas.’
24 பின்பு, அருகில் நின்றவர்களிடம், 'அந்த மினாவை அவனிடமிருந்து எடுத்து, பத்து மினாக்கள் உள்ளவருக்குக் கொடுங்கள்' என்றார்.

25 Κύριε Καὶ εἶπαν αὐτῷ ἔχει δέκα μνᾶς

25 அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துராத்தல் இருக்கிறதே என்றார்கள்.
25 ‘Master,’ they said, ‘he already has ten!’
25 அதற்கு அவர்கள், 'ஐயா, அவரிடம் பத்து மினாக்கள் இருக்கின்றனவே' என்றார்கள்.

26 Λέγω ὑμῖν ὅτι παντὶ τῷ ἔχοντι δοθήσεται δὲ τοῦ μὴ ἔχοντος καὶ ὃ ἔχει ἀρθήσεται ἀπὸ

26 அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்குங் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
26 He replied, ‘I tell you that everyone who has will be given more; but the one who does not have, even what he has will be taken away from him.
26 அவரோ, 'உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்' என உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்.2

27 πλὴν τούτους τοὺς ἐχθρούς μου τοὺς μὴ θελήσαντάς με βασιλεῦσαι ἐπ’ αὐτοὺς ἀγάγετε ὧδε καὶ κατασφάξατε αὐτοὺς ἔμπροσθέν μου

27 அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்
27 And these enemies of mine who were unwilling for me to rule over them, bring them here and slay them in front of me.’”
27 மேலும் அவர், 'நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை இங்குக்கொண்டு வந்து என்முன் படுகொலை செய்யுங்கள்' என்று சொன்னார்."

The Triumphal Entry (Zechariah 9:9–13; Matthew 21:1–11; Mark 11:1–11; John 12:12–19)

28 Καὶ εἰπὼν ταῦτα ἐπορεύετο ἔμπροσθεν ἀναβαίνων εἰς Ἱεροσόλυμα

28 இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்திநடந்துபோனார்.
28 After Jesus had said this, He went on ahead, going up to Jerusalem.
28 இவற்றைச் சொன்னபின்பு இயேசு அவர்களுக்கு முன்பாக எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

29 Καὶ ἐγένετο ὡς ἤγγισεν εἰς Βηθφαγὴ καὶ Βηθανίαν πρὸς τὸ ὄρος τὸ καλούμενον Ἐλαιῶν ἀπέστειλεν δύο τῶν μαθητῶν

29 அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சமீபித்தபோது, தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி:
29 As He approached Bethphage and Bethany at the Mount of Olives, He sent out two of His disciples,
29 ஒலிவம் என வழங்கப்படும் மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்ற ஊர்களை அவர் நெருங்கி வந்தபோது இரு சீடர்களை அனுப்பினார்.

30 λέγων Ὑπάγετε εἰς τὴν κώμην κατέναντι ἐν ᾗ εἰσπορευόμενοι εὑρήσετε πῶλον δεδεμένον ἐφ’ ὃν οὐδεὶς ἀνθρώπων πώποτε ἐκάθισεν καὶ λύσαντες αὐτὸν ἀγάγετε

30 உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள், அதிலே பிரவேசிக்கும்போது மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.
30 saying, “Go into the village ahead of you, and as you enter it, you will find a colt tied there, on which no one has ever sat. Untie it and bring it here.
30 அப்போது அவர் அவர்களிடம், "எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்ததும் இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக் குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்.

31 καὶ ἐάν τις ἐρωτᾷ ὑμᾶς Διὰ τί λύετε οὕτως ἐρεῖτε Ὅτι Ὁ Κύριος ἔχει χρείαν αὐτοῦ

31 அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.
31 If anyone asks, ‘Why are you untying it?’ tell him, ‘The Lord needs it.’”
31 யாராவது உங்களிடம், 'ஏன் அவிழ்க்கிறீர்கள்?' என்று கேட்டால், 'இது ஆண்டவருக்குத் தேவை' எனச் சொல்லுங்கள்" என்றார்.

32 δὲ οἱ ἀπεσταλμένοι Ἀπελθόντες εὗρον καθὼς εἶπεν αὐτοῖς

32 அனுப்பப்பட்டவர்கள் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டார்கள்.
32 So those who were sent went out and found it just as Jesus had told them.
32 அனுப்பப்பட்டவர்கள் சென்று அவர் தங்களுக்குச் சொன்னவாறே இருக்கக் கண்டார்கள்.

33 δὲ αὐτῶν λυόντων τὸν πῶλον αὐτοῦ οἱ κύριοι εἶπαν πρὸς αὐτούς Τί λύετε τὸν πῶλον

33 கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதற்கு உடையவர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
33 As they were untying the colt, its owners asked, “Why are you untying the colt?”
33 அவர்கள் அதை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது கழுதையின் உரிமையாளர்கள், "கழுதையை ஏன் அவிழ்க்கிறீர்கள்?" என்று அவர்களிடம் கேட்டார்கள்.

34 ὅτι Ὁ Κύριος ἔχει χρείαν αὐτοῦ δὲ Οἱ εἶπαν

34 அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி,
34 “The Lord needs it,” they answered.
34 அதற்கு அவர்கள், "இது ஆண்டவருக்குத் தேவை" என்றார்கள்;

35 Καὶ ἤγαγον αὐτὸν πρὸς τὸν Ἰησοῦν καὶ ἐπιρίψαντες αὐτῶν τὰ ἱμάτια ἐπὶ τὸν πῶλον ἐπεβίβασαν τὸν Ἰησοῦν

35 அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் வஸ்திரங்களை அதின்மேல்போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.
35 Then they led the colt to Jesus, threw their cloaks over it, and put Jesus on it.
35 பின்பு அதை இயேசுவிடம் ஓட்டி வந்தார்கள்; அக்கழுதையின்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அதன்மேல் ஏற்றி வைத்தார்கள்.

36 δὲ αὐτοῦ Πορευομένου ὑπεστρώννυον ἑαυτῶν τὰ ἱμάτια ἐν τῇ ὁδῷ

36 அவர் போகையில், அவர்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்.
36 As He rode along, the people spread their cloaks on the road.
36 அவர் போய்க் கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் மேலுடைகளை வழியில் விரித்துக் கொண்டே சென்றார்கள்.

37 δὲ αὐτοῦ ἐγγίζοντος ἤδη πρὸς τῇ καταβάσει τοῦ ὄρους τῶν Ἐλαιῶν τὸ ἅπαν πλῆθος τῶν μαθητῶν ἤρξαντο αἰνεῖν τὸν Θεὸν χαίροντες μεγάλῃ φωνῇ περὶ πασῶν δυνάμεων ὧν εἶδον

37 அவர் ஒலிவமலையின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில் திரளானகூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித்துச் சந்தோஷப்பட்டு,
37 And as He approached the descent from the Mount of Olives, the whole multitude of disciples began to praise God joyfully in a loud voice for all the miracles they had seen:
37 இயேசு ஒலிவ மலைச்சரிவை நெருங்கினார். அப்போது திரண்டிருந்த சீடர் அனைவரும் தாங்கள் கண்ட எல்லா வல்ல செயல்களுக்காகவும் உரத்தக் குரலில் மகிழ்ச்சியோடு கடவுளைப் புகழத் தொடங்கினர்;

38 λέγοντες Εὐλογημένος ὁ Βασιλεὺς ὁ ἐρχόμενος ἐν ὀνόματι Κυρίου εἰρήνη Ἐν οὐρανῷ καὶ δόξα ἐν ὑψίστοις

38 கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்.
38 “Blessed is the King who comes in the name of the Lord!”c “Peace in heaven and glory in the highest!”d
38 "ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப் பெறுக! விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக!" என்றனர்.3

39 Καί τινες τῶν Φαρισαίων ἀπὸ τοῦ ὄχλου εἶπαν πρὸς αὐτόν Διδάσκαλε ἐπιτίμησον τοῖς σου μαθηταῖς

39 அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயரில் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்முடைய சீஷரை அதட்டும் என்றார்கள்.
39 But some of the Pharisees in the crowd said to Him, “Teacher, rebuke Your disciples!”
39 அப்போது கூட்டத்தில் இருந்த பரிசேயர்களுள் சிலர் அவரை நோக்கி, "போதகரே, உம் சீடர்களைக் கடிந்து கொள்ளும்" என்றனர்.

40 Λέγω ὑμῖν Καὶ ἀποκριθεὶς εἶπεν ‹ὅτι› ἐὰν οὗτοι σιωπήσουσιν οἱ λίθοι κράξουσιν

40 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
40 “I tell you,” He answered, “if they remain silent, the very stones will cry out.”
40 அதற்கு அவர் மறுமொழியாக, "இவர்கள் பேசாதிருந்தால் கற்களே கத்தும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.4

Jesus Weeps over Jerusalem (Isaiah 29:1–16)

41 Καὶ ὡς ἤγγισεν ἰδὼν τὴν πόλιν ἔκλαυσεν ἐπ’ αὐτήν

41 அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,
41 As Jesus approached Jerusalem and saw the city, He wept over it
41 இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார்.

42 λέγων ὅτι Εἰ ἔγνως ἐν ταύτῃ τῇ ἡμέρᾳ καὶ τὰ πρὸς σὺ εἰρήνην δὲ νῦν ἐκρύβη ἀπὸ σου ὀφθαλμῶν

42 உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது.
42 and said, “If only you had known on this day what would bring you peace! But now it is hidden from your eyes.
42 "இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக்கூடாதா? ஆனால், இப்போது அது உன் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது.

43 ὅτι ἡμέραι ἥξουσιν ἐπὶ σὲ καὶ σου οἱ ἐχθροί παρεμβαλοῦσιν χάρακά σοι καὶ περικυκλώσουσίν σε καὶ συνέξουσίν σε πάντοθεν

43 உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,
43 For the days will come upon you when your enemies will barricade you and surround you and hem you in on every side.
43 ❮43-44❯ஒரு காலம் வரும். அப்போது உன் பகைவர்கள் உன்னைச் சுற்றி அரண் எழுப்பி, உன்னை முற்றுகையிடுவார்கள்; உன்னையும் உன்னிடத்திலுள்ள உன் மக்களையும் எப்பக்கத்திலுமிருந்து நெருக்கி அழித்து உன்னைத் தரை மட்டமாக்குவார்கள்; மேலும், உன்னிடம் கற்கள் ஒன்றின்மீது ஒன்று இராதபடி செய்வார்கள். ஏனெனில், கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை" என்றார்.5

44 καὶ ἐδαφιοῦσίν σε καὶ σου τὰ τέκνα ἐν σοί καὶ οὐκ ἀφήσουσιν λίθον ἐπὶ λίθον ἐν σοί ἀνθ’ ὧν οὐκ ἔγνως τὸν καιρὸν σου τῆς ἐπισκοπῆς

44 உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் வரும் என்றார்.
44 They will level you to the ground—you and the children within your walls. They will not leave one stone on another, because you did not recognize the time of your visitation from God.”e

Jesus Cleanses the Temple (Matthew 21:12–17; Mark 11:15–19; John 2:12–25)

45 Καὶ εἰσελθὼν εἰς τὸ ἱερὸν ἤρξατο ἐκβάλλειν τοὺς πωλοῦντας

45 பின்பு அவர் தேவாலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் புறம்பே துரத்தத்தொடங்கி:
45 Then Jesus entered the temple courtsf and began to drive out those who were selling there.
45 இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார்.

46 λέγων αὐτοῖς Γέγραπται Καὶ μου ὁ οἶκός ἔσται οἶκος προσευχῆς δὲ ὑμεῖς ἐποιήσατε αὐτὸν Σπήλαιον λῃστῶν

46 என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைக் கள்ளர்குகையாக்கினீர்கள் என்றார்.
46 He declared to them, “It is written: ‘My house will be a house of prayer.’g But you have made it ‘a den of robbers.’”h
46 அவர்களிடம், " 'என் இல்லம் இறைவேண்டலின் வீடு' என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால், நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்" என்று கூறினார்.6

47 Καὶ ἦν διδάσκων ἐν τῷ ἱερῷ καθ’ τὸ ἡμέραν δὲ οἱ ἀρχιερεῖς καὶ οἱ γραμματεῖς καὶ οἱ πρῶτοι τοῦ λαοῦ ἐζήτουν ἀπολέσαι αὐτὸν

47 அவர் நாடோறும் தேவாலயத்தில் உபதேசம் பண்ணிக்கொண்டிருந்தார். பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும் அவரைக் கொலைசெய்ய வகைதேடியும்,
47 Jesus was teaching at the temple every day, but the chief priests, scribes, and leaders of the people were intent on killing Him.
47 இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார். தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மக்களின் தலைவர்களும் அவரை ஒழித்துவிட வழி தேடினார்கள்.7

48 καὶ οὐχ εὕρισκον τί τὸ ποιήσωσιν γὰρ ἅπας ὁ λαὸς ἐξεκρέματο* αὐτοῦ ἀκούων

48 ஜனங்களெல்லாரும் அவருக்குச் செவிகொடுத்து அவரை அண்டிக் கொண்டிருந்தபடியால், அதை இன்னபடி செய்யலாமென்று வகைகாணாதிருந்தார்கள்.
48 Yet they could not find a way to do so, because all the people hung on His words.
48 ஆனால், என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால், மக்கள் அனைவரும் அவர் போதனையைக் கேட்டு அவரையே பற்றிக்கொண்டிருந்தனர்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Luke Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
13 a That is, he gave each servant one mina. A mina was most likely a silver coin worth a hundred drachmas, that is, about a hundred days’ wages.
20 b Greek soudariō 
38 c Psalm 118:26
38 d See Psalm 148:1.
44 e Literally your visitation 
45 f Literally the temple 
46 g Isaiah 56:7
46 h Jeremiah 7:11

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.