பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

John  யோவான்  Ἰωάννην

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

யோவான் 6 | John 6

The Feeding of the Five Thousand (Matthew 14:13–21; Mark 6:30–44; Luke 9:10–17)

1 Μετὰ ταῦτα ὁ Ἰησοῦς ἀπῆλθεν πέραν τῆς θαλάσσης τῆς Γαλιλαίας τῆς Τιβεριάδος

1 இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார்.
1 After this, Jesus crossed to the other side of the Sea of Galilee (that is, the Sea of Tiberias).
1 இயேசு கலிலேயக் கடலை கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு.

2 δὲ πολύς ὄχλος ἠκολούθει αὐτῷ ὅτι ἐθεώρουν* τὰ σημεῖα ἃ ἐποίει ἐπὶ τῶν ἀσθενούντων

2 அவர் வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களைத் திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப் பின்சென்றார்கள்.
2 A large crowd followed Him because they saw the signs He was performing on the sick.
2 உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின் தொடர்ந்தனர்.

3 δὲ Ἰησοῦς ἀνῆλθεν εἰς τὸ ὄρος καὶ ἐκάθητο ἐκεῖ μετὰ αὐτοῦ τῶν μαθητῶν

3 இயேசு மலையின்மேல் ஏறி, அங்கே தம்முடைய சீஷருடனேகூட உட்கார்ந்தார்.
3 Then Jesus went up on the mountain and sat down with His disciples.
3 இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார்.

4 δὲ ἡ τῶν Ἰουδαίων ἑορτὴ τὸ πάσχα Ἦν ἐγγὺς

4 அப்பொழுது யூதருடைய பண்டிகையாகிய பஸ்கா சமீபமாயிருந்தது.
4 Now the Jewish Feast of the Passover was near.
4 யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது.

5 οὖν ὁ Ἰησοῦς ἐπάρας τοὺς ὀφθαλμοὺς καὶ θεασάμενος ὅτι πολὺς ὄχλος ἔρχεται πρὸς αὐτὸν λέγει πρὸς Φίλιππον Πόθεν ἀγοράσωμεν ἄρτους ἵνα οὗτοι φάγωσιν

5 இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, திரளான ஜனங்கள் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டு, பிலிப்புவை நோக்கி: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார்.
5 When Jesus looked up and saw a large crowd coming toward Him, He said to Philip, “Where can we buy bread for these people to eat?”
5 இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, "இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?" என்று பிலிப்பிடம் கேட்டார்.

6 δὲ ἔλεγεν τοῦτο πειράζων αὐτόν γὰρ αὐτὸς ᾔδει τί ἔμελλεν ποιεῖν

6 தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார்.
6 But He was asking this to test him, for He knew what He was about to do.
6 தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார்.

7 Φίλιππος Ἀπεκρίθη αὐτῷ ὁ Διακοσίων δηναρίων οὐκ ἀρκοῦσιν ἄρτοι αὐτοῖς ἵνα ἕκαστος λάβῃ τι βραχύ

7 பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக, இவர்களில் ஒவ்வொருவன் கொஞ்சங்கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே என்றான்.
7 Philip answered, “Two hundred denariia would not buy enough bread for each of them to have a small piece.”
7 பிலிப்பு மறுமொழியாக, "இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே" என்றார்.

8 εἷς ἐκ αὐτοῦ τῶν μαθητῶν Ἀνδρέας Σίμωνος Πέτρου ὁ ἀδελφὸς Λέγει αὐτῷ

8 அப்பொழுது அவருடைய சீஷரிலொருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரை நோக்கி:
8 One of His disciples, Andrew, Simon Peter’s brother, said to Him,
8 அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா,

9 ὧδε Ἔστιν παιδάριον ὃς ἔχει πέντε κριθίνους ἄρτους καὶ δύο ὀψάρια ἀλλὰ τί ἐστιν ταῦτα εἰς τοσούτους

9 இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான்.
9 “Here is a boy with five barley loaves and two small fish. But what difference will these make among so many?”
9 "இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால், இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?" என்றார்.

10 Ποιήσατε τοὺς ἀνθρώπους ἀναπεσεῖν ὁ Ἰησοῦς Εἶπεν δὲ ἦν πολὺς χόρτος ἐν τῷ τόπῳ οὖν οἱ ἄνδρες ἀνέπεσαν ὡς πεντακισχίλιοι τὸν ἀριθμὸν

10 இயேசு: ஜனங்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாயிருந்தது. பந்தியிருந்த புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம் பேராயிருந்தார்கள்.
10 “Have the people sit down,” Jesus said. Now there was plenty of grass in that place, so the men sat down, about five thousand of them.
10 இயேசு, "மக்களை அமரச் செய்யுங்கள்" என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம்.

11 οὖν ὁ Ἰησοῦς Ἔλαβεν τοὺς ἄρτους ὁμοίως καὶ ἐκ τῶν ὀψαρίων καὶ εὐχαριστήσας διέδωκεν τοῖς ἀνακειμένοις ὅσον ἤθελον

11 இயேசு அந்த அப்பங்களை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் பந்தியிருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்கு வேண்டிய மட்டும் கொடுத்தார்.
11 Then Jesus took the loaves and the fish, gave thanks, and distributed to those who were seated as much as they wanted.
11 இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது.

12 δὲ Ὡς ἐνεπλήσθησαν λέγει τοῖς αὐτοῦ μαθηταῖς Συναγάγετε τὰ κλάσματα περισσεύσαντα ἵνα μή τι ἀπόληται

12 அவர்கள் திருப்திடைந்தபின்பு, அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள் என்றார்.
12 And when everyone was full, He said to His disciples, “Gather the pieces that are left over, so that nothing will be wasted.”
12 அவர்கள் வயிறார உண்டபின், "ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்" என்று தம் சீடரிடம் கூறினார்.

13 οὖν συνήγαγον καὶ ἐγέμισαν δώδεκα κοφίνους κλασμάτων ἐκ τῶν πέντε τῶν κριθίνων ἄρτων ἃ ἐπερίσσευσαν τοῖς βεβρωκόσιν

13 அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஐந்தில் அவர்கள் சாப்பிட்டு மீதியான துணிக்கைகளினாலே பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள்.
13 So they collected them and filled twelve baskets with the pieces of the five barley loaves left over by those who had eaten.
13 மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்.

14 οὖν Οἱ ἄνθρωποι ἰδόντες σημεῖον ὃ ἐποίησεν ἔλεγον ὅτι ἀληθῶς Οὗτός ἐστιν ὁ προφήτης ὁ ἐρχόμενος εἰς τὸν κόσμον

14 இயேசு செய்த அற்புதத்தை அந்த மனுஷர் கண்டு: மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள்.
14 When the people saw the sign that Jesus had performed,b they began to say, “Truly this is the Prophet who is to come into the world.”
14 இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், "உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே" என்றார்கள்.

15 οὖν Ἰησοῦς γνοὺς ὅτι μέλλουσιν ἔρχεσθαι καὶ ἵνα ποιήσωσιν αὐτὸν βασιλέα ἁρπάζειν ἀνεχώρησεν πάλιν εἰς τὸ ὄρος αὐτὸς μόνος

15 ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.
15 Then Jesus, realizing that they were about to come and make Him king by force, withdrew again to a mountain by Himself.
15 அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப்போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

Jesus Walks on Water (Matthew 14:22–33; Mark 6:45–52)

16 δὲ Ὡς ὀψία ἐγένετο αὐτοῦ οἱ μαθηταὶ κατέβησαν ἐπὶ τὴν θάλασσαν

16 சாயங்காலமானபோது அவருடைய சீஷர்கள் கடற்கரைக்குப் போய்,
16 When evening came, His disciples went down to the sea,
16 மாலை வேளையானதும் இயேசுவின் சீடர்கள் கடற்கரைக்கு வந்து,

17 καὶ ἐμβάντες εἰς πλοῖον ἤρχοντο πέραν τῆς θαλάσσης εἰς Καφαρναούμ καὶ ἐγεγόνει ἤδη σκοτία καὶ ὁ Ἰησοῦς οὔπω ἐληλύθει πρὸς αὐτοὺς

17 படவில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராய்ப்போனார்கள்; அப்பொழுது இருட்டாயிருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார்.
17 got into a boat, and started across the sea to Capernaum. It was already dark, and Jesus had not yet gone out to them.
17 படகேறி மறுகரையிலுள்ள கப்பர் நாகுமுக்குப் புறப்பட்டார்கள், ஏற்கெனவே இருட்டிவிட்டது. இயேசுவும் அவர்களிடம் அதுவரை வந்து சேரவில்லை.

18 μεγάλου ἀνέμου πνέοντος τε ἥ θάλασσα διεγείρετο

18 பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளிந்தது.
18 A strong wind was blowing, and the sea grew agitated.
18 அப்போது பெருங்காற்று வீசிற்று; கடல் பொங்கி எழுந்தது.

19 οὖν Ἐληλακότες ὡς εἴκοσι πέντε ἢ τριάκοντα σταδίους θεωροῦσιν τὸν Ἰησοῦν γινόμενον ἐγγὺς τοῦ πλοίου καὶ περιπατοῦντα ἐπὶ τῆς θαλάσσης καὶ ἐφοβήθησαν

19 அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக்கண்டு பயந்தார்கள்.
19 When they had rowed about three or four miles,c they saw Jesus approaching the boat, walking on the sea—and they were terrified.
19 அவர்கள் ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர்1 தொலை படகு ஓட்டியபின் இயேசு கடல்மீது நடந்து படகருகில் வருவதைக் கண்டு அஞ்சினார்கள்.

1 இருபத்தைந்து அல்லது முப்பது ஸ்தாதியம் என்பது கிரேக்க பாடம்.

20 δὲ ὁ λέγει αὐτοῖς εἰμι Ἐγώ μὴ φοβεῖσθε

20 அவர்களை அவர் நோக்கி: நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.
20 But Jesus spoke up: “It is I; do not be afraid.”
20 இயேசு அவர்களிடம், "நான்தான், அஞ்சாதீர்கள்" என்றார்.

21 οὖν ἤθελον λαβεῖν αὐτὸν εἰς τὸ πλοῖον καὶ εὐθέως τὸ πλοῖον ἐγένετο ἐπὶ τῆς γῆς εἰς ἣν ὑπῆγον

21 அப்பொழுது அவரைப் படவில் ஏற்றிக்கொள்ள மனதாயிருந்தார்கள்; உடனே படவு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.
21 Then they were willing to take Him into the boat, and at once the boat reached the shore where they were heading.
21 அவர்கள் அவரைப் படகில் ஏற்றிக் கொள்ள விரும்பினார்கள். ஆனால், படகு உடனே அவர்கள் சேரவேண்டிய இடம்போய்ச் சேர்ந்துவிட்டது.2

Jesus the Bread of Life

22 Τῇ ἐπαύριον ὁ ὄχλος ὁ ἑστηκὼς πέραν τῆς θαλάσσης εἶδον ὅτι εἰ μὴ ἕν οὐκ ἄλλο πλοιάριον ἦν ἐκεῖ καὶ ὅτι ὁ Ἰησοῦς οὐ συνεισῆλθεν εἰς τὸ πλοῖον αὐτοῦ τοῖς μαθηταῖς ἀλλὰ αὐτοῦ οἱ μαθηταὶ ἀπῆλθον μόνοι

22 மறுநாளில் கடலின் அக்கரையிலே நின்ற ஜனங்கள் அவருடைய சீஷர் ஏறின அந்த ஒரே படவுதவிர அங்கே வேறொரு படவும் இருந்ததில்லையென்றும், இயேசு தம்முடைய சீஷருடனேகூடப் படவில் ஏறாமல் அவருடைய சீஷர் மாத்திரம் போனார்களென்றும் அறிந்தார்கள்.
22 The next day, the crowd that had remained on the other side of the sea realized that only one boat had been there, and that Jesus had not boarded it with His disciples, but they had gone away alone.
22 சீடர்கள் புறப்பட்ட கரையிலேயே மறு நாளும் மக்கள் கூட்டமாய் நின்று கொண்டிருந்தார்கள். முந்தின நாள் ஒரு படகைத்தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை என்பதையும் அதில் இயேசுவின் சீடர்கள் மட்டும் போனார்களே அன்றி இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதையும் அவர்கள் கண்கூடாகப் பார்த்திருந்தார்கள்.

23 ἀλλὰ πλοιάρια ἐκ Τιβεριάδος ἦλθεν ἐγγὺς τοῦ τόπου ὅπου ἔφαγον τὸν ἄρτον τοῦ Κυρίου εὐχαριστήσαντος

23 கர்த்தர் ஸ்தோத்திரஞ்செய்தபின்பு அவர்கள் அப்பம் சாப்பிட்ட இடத்துக்குச் சமீபமாய்த் திபேரியாவிலிருந்து வேறே படவுகள் வந்தது.
23 However, some boats from Tiberias landed near the place where the people had eaten the bread after the Lord had given thanks.
23 அப்போது, ஆண்டவர் கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொடுத்த உணவை மக்கள் உண்ட இடத்திற்கு அருகில் திபேரியாவிலிருந்து படகுகள் வந்து சேர்ந்தன.

24 οὖν ὅτε ὁ ὄχλος εἶδεν ὅτι οὐκ Ἰησοῦς οὐδὲ αὐτοῦ οἱ μαθηταὶ ἔστιν ἐκεῖ αὐτοὶ ἐνέβησαν εἰς τὰ πλοιάρια καὶ ἦλθον εἰς Καφαρναοὺμ ζητοῦντες τὸν Ἰησοῦν

24 அப்பொழுது இயேசுவும் அவருடைய சீஷரும் அங்கே இல்லாததை ஜனங்கள் கண்டு, உடனே அந்தப் படவுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக்கொண்டு, கப்பர்நகூமுக்கு வந்தார்கள்.
24 So when the crowd saw that neither Jesus nor His disciples were there, they got into the boats and went to Capernaum to look for Him.
24 இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர்.

25 καὶ εὑρόντες αὐτὸν πέραν τῆς θαλάσσης εἶπον αὐτῷ Ῥαββί πότε γέγονας ὧδε

25 கடலின் அக்கரையிலே அவர்கள் அவரைக் கண்டபோது: ரபீ, நீர் எப்பொழுது இவ்விடம் வந்தீர் என்று கேட்டார்கள்.
25 When they found Him on the other side of the sea, they asked Him, “Rabbi, when did You get here?”
25 அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, "ரபி, எப்போது இங்கு வந்தீர்?" என்று கேட்டார்கள்.

26 ὁ Ἰησοῦς Ἀπεκρίθη αὐτοῖς καὶ εἶπεν Ἀμὴν ἀμὴν λέγω ὑμῖν οὐχ ὅτι εἴδετε σημεῖα ζητεῖτέ με ἀλλ’ ὅτι ἐφάγετε ἐκ τῶν ἄρτων καὶ ἐχορτάσθητε

26 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்களென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
26 Jesus replied, “Truly, truly, I tell you, it is not because you saw these signs that you are looking for Me, but because you ate the loaves and had your fill.
26 இயேசு மறுமொழியாக, "நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

27 μὴ ἐργάζεσθε τὴν βρῶσιν τὴν ἀπολλυμένην ἀλλὰ τὴν βρῶσιν τὴν μένουσαν εἰς αἰώνιον ζωὴν ἣν ὁ Υἱὸς τοῦ ἀνθρώπου δώσει ὑμῖν γὰρ τοῦτον ὁ Θεός ὁ Πατὴρ ἐσφράγισεν

27 அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.
27 Do not work for food that perishes, but for food that endures to eternal life, which the Son of Man will give you. For on Him God the Father has placed His seal of approval.”
27 அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில், தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்" என்றார்.

28 οὖν Εἶπον πρὸς αὐτόν Τί ποιῶμεν ἵνα ἐργαζώμεθα τὰ ἔργα τοῦ Θεοῦ

28 அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.
28 Then they inquired, “What must we do to perform the works of God?”
28 அவர்கள் அவரை நோக்கி, "எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள்.

29 ‹ὁ› Ἰησοῦς Ἀπεκρίθη καὶ εἶπεν αὐτοῖς τὸ ἔργον τοῦ Θεοῦ ἐστιν Τοῦτό ἵνα πιστεύητε εἰς ὃν ἐκεῖνος ἀπέστειλεν

29 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.
29 Jesus replied, “The work of God is this: to believe in the One He has sent.”
29 இயேசு அவர்களைப் பார்த்து, "கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல்" என்றார்.

30 οὖν Εἶπον αὐτῷ Τί σημεῖον οὖν σὺ ποιεῖς ἵνα ἴδωμεν καὶ πιστεύσωμέν σοι τί ἐργάζῃ

30 அதற்கு அவர்கள்: அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படிக்கு நாங்கள் காணத்தக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக்கிறீர்? என்னத்தை நடப்பிக்கிறீர்?
30 So they asked Him, “What sign then will You perform, so that we may see it and believe You? What will You do?
30 அவர்கள், "நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்?

31 ἡμῶν οἱ πατέρες ἔφαγον τὸ μάννα ἐν τῇ ἐρήμῳ καθώς ἐστιν γεγραμμένον ἔδωκεν αὐτοῖς Ἄρτον ἐκ τοῦ οὐρανοῦ φαγεῖν

31 வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தைப் புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்களே என்றார்கள்.
31 Our fathers ate the manna in the wilderness, as it is written: ‘He gave them bread from heaven to eat.’”d
31 எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! 'அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார்' என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!" என்றனர்.

32 οὖν ὁ Ἰησοῦς Εἶπεν αὐτοῖς Ἀμὴν ἀμὴν λέγω ὑμῖν οὐ Μωϋσῆς δέδωκεν ὑμῖν τὸν ἄρτον ἐκ τοῦ οὐρανοῦ ἀλλ’ μου ὁ Πατήρ δίδωσιν ὑμῖν τὸν τὸν ἀληθινόν ἄρτον ἐκ τοῦ οὐρανοῦ

32 இயேசு அவர்களை நோக்கி: வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்
32 Jesus said to them, “Truly, truly, I tell you, it was not Moses who gave you the bread from heaven, but it is My Father who gives you the true bread from heaven.
32 இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.

33 γὰρ ὁ ἄρτος τοῦ Θεοῦ ἐστιν ὁ καταβαίνων ἐκ τοῦ οὐρανοῦ καὶ διδοὺς ζωὴν τῷ κόσμῳ

33 வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார்.
33 For the bread of God is He who comes down from heaven and gives life to the world.”
33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது" என்றார்.

34 Κύριε οὖν Εἶπον πρὸς αὐτόν δὸς ἡμῖν τοῦτον τὸν ἄρτον πάντοτε

34 அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தரவேண்டும் என்றார்கள்.
34 “Sir,” they said, “give us this bread at all times.”
34 அவர்கள், "ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்" என்று கேட்டுக்கொண்டார்கள்.

35 ὁ Ἰησοῦς Εἶπεν αὐτοῖς Ἐγώ εἰμι ὁ ἄρτος τῆς ζωῆς ὁ ἐρχόμενος πρὸς ἐμὲ οὐ μὴ πεινάσῃ καὶ ὁ πιστεύων εἰς ἐμὲ οὐ μὴ πώποτε διψήσει

35 இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.
35 Jesus answered, “I am the bread of life. Whoever comes to Me will never hunger, and whoever believes in Me will never thirst.
35 இயேசு அவர்களிடம், "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.3

36 ἀλλ’ εἶπον ὑμῖν ὅτι καὶ ἑωράκατέ με καὶ οὐ πιστεύετε

36 நீங்கள் என்னைக் கண்டிருந்தும் விசுவாசியாமலிருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்.
36 But as I stated, you have seen Me and still you do not believe.
36 ஆனால், நான் உங்களுக்குச் சொன்னவாறே நீங்கள் என்னைக் கண்டிருந்தும் நம்பவில்லை.

37 Πᾶν ὃ ὁ Πατὴρ δίδωσίν μοι ἥξει πρὸς ἐμὲ καὶ τὸν ἐρχόμενον πρός με οὐ μὴ ἐκβάλω ἔξω

37 பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.
37 Everyone the Father gives Me will come to Me, and the one who comes to Me I will never drive away.
37 தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்.

38 ὅτι καταβέβηκα ἀπὸ τοῦ οὐρανοῦ οὐχ ἵνα ποιῶ τὸ ἐμὸν τὸ θέλημα ἀλλὰ τὸ θέλημα τοῦ πέμψαντός με

38 என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கிவந்தேன்.
38 For I have come down from heaven, not to do My own will, but to do the will of Him who sent Me.
38 ஏனெனில், என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்.4

39 δέ Τοῦτο ἐστιν τὸ θέλημα τοῦ πέμψαντός με ἵνα ἀπολέσω μὴ ἐξ αὐτοῦ πᾶν ὃ δέδωκέν μοι ἀλλὰ ἀναστήσω αὐτὸ ἐν τῇ ἐσχάτῃ ἡμέρᾳ

39 அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.
39 And this is the will of Him who sent Me, that I shall lose none of those He has given Me, but raise them up at the last day.
39 "அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம்.

40 γάρ τοῦτο ἐστιν τοῦ μου Πατρός τὸ θέλημα ἵνα πᾶς ὁ θεωρῶν τὸν Υἱὸν καὶ πιστεύων εἰς αὐτὸν ἔχῃ αἰώνιον ζωὴν καὶ ἐγὼ ἀναστήσω αὐτὸν ἐν τῇ ἐσχάτῃ ἡμέρᾳ

40 குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன், நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.
40 For it is My Father’s will that everyone who looks to the Son and believes in Him shall have eternal life, and I will raise him up at the last day.”
40 மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்" என்று கூறினார்.5

41 οὖν οἱ Ἰουδαῖοι Ἐγόγγυζον περὶ αὐτοῦ ὅτι εἶπεν Ἐγώ εἰμι ὁ ἄρτος ὁ καταβὰς ἐκ τοῦ οὐρανοῦ

41 நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்து:
41 At this, the Jews began to grumble about Jesus because He had said, “I am the bread that came down from heaven.”
41 'விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே' என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள்.

42 καὶ ἔλεγον ἐστιν οὗτός Οὐχ Ἰησοῦς ὁ υἱὸς Ἰωσήφ οὗ τὸν πατέρα καὶ τὴν μητέρα ἡμεῖς οἴδαμεν πῶς νῦν λέγει ὅτι καταβέβηκα Ἐκ τοῦ οὐρανοῦ

42 இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும் தாயையும் அறிந்திருக்கிறோமே; அப்படியிருக்க, நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள்.
42 They were asking, “Is this not Jesus, the son of Joseph, whose father and mother we know? How then can He say, ‘I have come down from heaven?’”
42 "இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, 'நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்' என இவர் எப்படி சொல்லலாம்?" என்று பேசிக்கொண்டார்கள்.

43 Μὴ γογγύζετε μετ’ ἀλλήλων Ἰησοῦς Ἀπεκρίθη καὶ εἶπεν αὐτοῖς

43 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்களுக்குள்ளே முறுமுறுக்கவேண்டாம்.
43 “Stop grumbling among yourselves,” Jesus replied.
43 இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: "உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம்.

44 οὐδεὶς δύναται ἐλθεῖν πρός με ἐὰν μὴ ὁ Πατὴρ ὁ πέμψας με ἑλκύσῃ αὐτόν κἀγὼ ἀναστήσω αὐτὸν ἐν τῇ ἐσχάτῃ ἡμέρᾳ

44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
44 “No one can come to Me unless the Father who sent Me draws him, and I will raise him up at the last day.
44 என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.6

45 ἔστιν γεγραμμένον ἐν τοῖς προφήταις Καὶ ἔσονται πάντες διδακτοὶ Θεοῦ πᾶς ὁ ἀκούσας τοῦ Πατρὸς καὶ μαθὼν παρὰ ἔρχεται πρὸς ἐμέ

45 எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.
45 It is written in the Prophets: ‘And they will all be taught by God.’e Everyone who has heard the Father and learned from Him comes to Me—
45 'கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார்' என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்ந்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர்.7

46 οὐχ ὅτι τις ἑώρακέν τὸν Πατέρα εἰ μὴ ὁ ὢν παρὰ τοῦ Θεοῦ οὗτος ἑώρακεν τὸν Πατέρα

46 தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.
46 not that anyone has seen the Father except the One who is from God; only He has seen the Father.
46 கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார்.8

47 Ἀμὴν ἀμὴν λέγω ὑμῖν ὁ πιστεύων ἔχει αἰώνιον ζωὴν

47 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
47 Truly, truly, I tell you, he who believes has eternal life.
47 உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.

48 ἐγώ εἰμι ὁ ἄρτος τῆς ζωῆς

48 ஜீவ அப்பம் நானே.
48 I am the bread of life.
48 வாழ்வுதரும் உணவு நானே.

49 ὑμῶν οἱ πατέρες ἔφαγον τὸ μάννα ἐν τῇ ἐρήμῳ καὶ ἀπέθανον

49 உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்
49 Your fathers ate the manna in the wilderness, yet they died.
49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.

50 οὗτός ἐστιν ὁ ἄρτος ὁ καταβαίνων ἐκ τοῦ οὐρανοῦ ἵνα τις φάγῃ ἐξ αὐτοῦ καὶ μὴ ἀποθάνῃ

50 இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.
50 This is the bread that comes down from heaven, so that anyone may eat of it and not die.
50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.

51 ἐγώ εἰμι ὁ ὁ ζῶν ἄρτος ὁ καταβάς ἐκ τοῦ οὐρανοῦ ἐάν τις φάγῃ ἐκ τούτου τοῦ ἄρτου ζήσει εἰς τὸν αἰῶνα καὶ ὁ ἄρτος ὃν ἐγὼ δὲ δώσω ὑπὲρ τῆς ζωῆς τοῦ κόσμου ἐστιν μού ἡ σάρξ

51 நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.
51 I am the living bread that came down from heaven. If anyone eats of this bread, he will live forever. And this bread, which I will give for the life of the world, is My flesh.”
51 "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்."

52 οὖν οἱ Ἰουδαῖοι Ἐμάχοντο πρὸς ἀλλήλους λέγοντες Πῶς δύναται οὗτος δοῦναι ἡμῖν ‹αὐτοῦ› τὴν σάρκα φαγεῖν

52 அப்பொழுது யூதர்கள்; இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள்.
52 At this, the Jews began to argue among themselves, “How can this man give us His flesh to eat?”
52 "நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?" என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.

53 οὖν ὁ Ἰησοῦς Εἶπεν αὐτοῖς Ἀμὴν ἀμὴν λέγω ὑμῖν ἐὰν μὴ φάγητε τὴν σάρκα καὶ πίητε αὐτοῦ τὸ αἷμα τοῦ Υἱοῦ τοῦ ἀνθρώπου ἔχετε οὐκ ζωὴν ἐν ἑαυτοῖς

53 அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
53 So Jesus said to them, “Truly, truly, I tell you, unless you eat the flesh and drink the blood of the Son of Man, you have no life in you.
53 இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்.

54 ὁ τρώγων μου τὴν σάρκα καὶ πίνων μου τὸ αἷμα ἔχει αἰώνιον ζωὴν κἀγὼ ἀναστήσω αὐτὸν τῇ ἐσχάτῃ ἡμέρᾳ

54 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
54 Whoever eats My flesh and drinks My blood has eternal life, and I will raise him up at the last day.
54 எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.

55 γὰρ μου ἡ σάρξ ἐστιν ἀληθής βρῶσις καὶ μου τὸ αἷμά ἐστιν ἀληθής πόσις

55 என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.
55 For My flesh is real food, and My blood is real drink.
55 எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.

56 Ὁ τρώγων μου τὴν σάρκα καὶ πίνων μου τὸ αἷμα μένει ἐν ἐμοὶ κἀγὼ ἐν αὐτῷ

56 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.
56 Whoever eats My flesh and drinks My blood remains in Me, and I in him.
56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.9

57 καθὼς ὁ ζῶν Πατὴρ ἀπέστειλέν με κἀγὼ ζῶ διὰ τὸν Πατέρα καὶ κἀκεῖνος ὁ τρώγων με ζήσει δι’ ἐμέ

57 ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.
57 Just as the living Father sent Me and I live because of the Father, so also the one who feeds on Me will live because of Me.
57 வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.

58 οὗτός ἐστιν ὁ ἄρτος ὁ καταβάς ἐξ οὐρανοῦ οὐ καθὼς οἱ πατέρες ἔφαγον καὶ ἀπέθανον ὁ τρώγων τοῦτον τὸν ἄρτον ζήσει εἰς τὸν αἰῶνα

58 வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்தமன்னாவைப் போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.
58 This is the bread that came down from heaven. Unlike your fathers, who ate the manna and died, the one who eats this bread will live forever.”
58 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்."

Many Disciples Turn Back (Matthew 8:18–22; Luke 9:57–62; Luke 14:25–33)

59 εἶπεν Ταῦτα διδάσκων ἐν συναγωγῇ ἐν Καφαρναούμ

59 கப்பர்நகூமிலுள்ள ஜெபஆலயத்திலே அவர் உபதேசிக்கையில் இவைகளைச் சொன்னார்.
59 Jesus said this while teaching in the synagogue in Capernaum.
59 இயேசு கப்பர்நாகுமிலுள்ள தொழுகைக்கூடத்தில் இவ்வாறு கற்பித்தார்.

60 ἀκούσαντες οὖν Πολλοὶ ἐκ αὐτοῦ τῶν μαθητῶν εἶπαν οὗτος ἐστιν Σκληρός ὁ λόγος τίς δύναται ἀκούειν αὐτοῦ

60 அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள்.
60 On hearing it, many of His disciples said, “This is a difficult teaching. Who can accept it?”
60 அவருடைய சீடர் பலர் இதைக் கேட்டு, "இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?" என்று பேசிக் கொண்டனர்.

61 δὲ Εἰδὼς ἐν ἑαυτῷ ὅτι αὐτοῦ οἱ μαθηταὶ γογγύζουσιν περὶ τούτου ὁ Ἰησοῦς εἶπεν αὐτοῖς Τοῦτο σκανδαλίζει ὑμᾶς

61 சீஷர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்களென்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களை நோக்கி: இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ?
61 Aware that His disciples were grumbling about this teaching, Jesus asked them, “Does this offend you?
61 இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம், "நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா?

62 οὖν ἐὰν θεωρῆτε τὸν Υἱὸν τοῦ ἀνθρώπου ἀναβαίνοντα ὅπου ἦν τὸ πρότερον

62 மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்?
62 Then what will happen if you see the Son of Man ascend to where He was before?
62 அப்படியானால் மானிடமகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்?

63 Τὸ πνεῦμά τὸ ἐστιν ζωοποιοῦν ἡ σὰρξ ὠφελεῖ οὐκ οὐδέν τὰ ῥήματα ἃ ἐγὼ λελάληκα ὑμῖν ἐστιν πνεῦμά καὶ ἐστιν ζωή

63 ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.
63 The Spirit gives life; the flesh profits nothing. The words I have spoken to you are spirit and they are life.
63 வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன.

64 ἀλλ’ εἰσὶν τινες ἐξ ὑμῶν οἳ οὐ πιστεύουσιν γὰρ ὁ Ἰησοῦς ᾔδει ἐξ ἀρχῆς τίνες εἰσὶν οἱ μὴ πιστεύοντες καὶ τίς ἐστιν ὁ παραδώσων αὐτόν

64 ஆகிலும் உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு என்றார்; விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும் ஆதிமுதலாக இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்:
64 However, there are some of you who do not believe.” (For Jesus had known from the beginning which of them did not believe and who would betray Him.)
64 அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை" என்றார். நம்பாதோர் யார், யார் என்பதும் தம்மைக் காட்டிக்கொடுக்கவிருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது.

65 Καὶ ἔλεγεν τοῦτο Διὰ εἴρηκα ὑμῖν ὅτι οὐδεὶς δύναται ἐλθεῖν πρός με ἐὰν μὴ ἐκ τοῦ Πατρός ᾖ δεδομένον αὐτῷ

65 ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார்.
65 Then Jesus said, “This is why I told you that no one can come to Me unless the Father has granted it to him.”
65 மேலும் அவர், "இதன் காரணமாகத்தான் 'என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது' என்று உங்களுக்குக் கூறினேன்" என்றார்.

66 Ἐκ τούτου πολλοὶ ‹ἐκ› αὐτοῦ τῶν μαθητῶν ἀπῆλθον εἰς τὰ ὀπίσω καὶ οὐκέτι περιεπάτουν μετ’ αὐτοῦ

66 அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள்.
66 From that time on many of His disciples turned back and no longer walked with Him.
66 அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை.

Peter’s Confession of Faith (Matthew 16:13–20; Mark 8:27–30; Luke 9:18–20)

67 οὖν ὁ Ἰησοῦς εἶπεν τοῖς δώδεκα Μὴ ὑμεῖς θέλετε ὑπάγειν καὶ

67 அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார்.
67 So Jesus asked the Twelve, “Do you want to leave too?”
67 இயேசு பன்னிரு சீடரிடம், "நீங்களும் போய் விட நினைக்கிறீர்களா?" என்று கேட்டார்.

68 Σίμων Πέτρος Ἀπεκρίθη αὐτῷ Κύριε πρὸς τίνα ἀπελευσόμεθα ἔχεις ῥήματα αἰωνίου ζωῆς

68 சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.
68 Simon Peter replied, “Lord, to whom would we go? You have the words of eternal life.
68 சீமோன் பேதுரு மறுமொழியாக, "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.

69 καὶ ἡμεῖς πεπιστεύκαμεν καὶ ἐγνώκαμεν ὅτι σὺ εἶ ὁ Ἅγιος τοῦ Θεοῦ

69 நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்.
69 We believe and know that You are the Holy One of God.”f
69 நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம்" என்றார்.10

70 ὁ Ἰησοῦς Ἀπεκρίθη αὐτοῖς ἐγὼ Οὐκ ἐξελεξάμην ὑμᾶς τοὺς δώδεκα καὶ εἷς ἐξ ὑμῶν ἐστιν διάβολός

70 இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார்.
70 Jesus answered them, “Have I not chosen you, the Twelve? Yet one of you is a devil!”
70 இயேசு அவர்களைப் பார்த்து, "பன்னிருவராகிய உங்களை நான் தேர்ந்துகொண்டேன் அல்லவா? ஆயினும் உங்களுள் ஒருவன் அலகையாய் இருக்கிறான்" என்றார்.11

71 δὲ ἔλεγεν τὸν Ἰούδαν Σίμωνος Ἰσκαριώτου γὰρ οὗτος εἷς ἐκ τῶν δώδεκα ἔμελλεν παραδιδόναι αὐτόν

71 சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து பன்னிருவரிலொருவனாயிருந்தும், தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனாயிருந்தபடியினால் அவனைக் குறித்து இப்படிச் சொன்னார்.
71 He was speaking about Judas, the son of Simon Iscariot. For although Judas was one of the Twelve, he was later to betray Jesus.
71 அவர் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசைப் பற்றியே இப்படிச் சொன்னார். ஏனெனில், பன்னிருவருள் ஒருவனாகிய அவன் அவரைக் காட்டிக் கொடுக்கவிருந்தான்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

John Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
7 a A denarius was customarily a day’s wage for a laborer; see Matthew 20:2.
14 b SBL, NA, NE, and WH He had performed 
19 c Greek about twenty-five or thirty stadia ; that is, approximately 2.87 to 3.45 miles (4.62 to 5.55 kilometers)
31 d Psalm 78:24; see also Exodus 16:4.
45 e Isaiah 54:13
69 f BYZ and TR You are the Christ, the Son of the living God 

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.