பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

John  யோவான்  Ἰωάννην

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

யோவான் 2 | John 2

The Wedding at Cana

1Καὶ τῇ τῇ τρίτῃ ἡμέρᾳ γάμος ἐγένετο ἐν Κανὰ τῆς Γαλιλαίας καὶ τοῦ Ἰησοῦ ἡ μήτηρ ἦν ἐκεῖ

1 மூன்றாம்நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள்.
1 On the third day a wedding took place at Cana in Galilee. Jesus’ mother was there,
1 மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்.

2δὲ ὁ Ἰησοῦς καὶ αὐτοῦ οἱ μαθηταὶ ἐκλήθη καὶ εἰς τὸν γάμον

2 இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
2 and Jesus and His disciples had also been invited to the wedding.
2 இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர்.

3καὶ οἴνου ὑστερήσαντος ἡ τοῦ Ἰησοῦ μήτηρ λέγει πρὸς αὐτόν ἔχουσιν οὐκ Οἶνον

3 திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்.
3 When the wine ran out, Jesus’ mother said to Him, “They have no more wine.”
3 திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்றார்.

4γύναι Τί ἐμοὶ καὶ σοί Καὶ ὁ Ἰησοῦς λέγει αὐτῇ μου ἡ ὥρα οὔπω ἥκει

4 அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.
4 “Woman, why does this concern us?” Jesus replied. “My hour has not yet come.”
4 இயேசு அவரிடம், "அம்மா,1 அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்றார்.

1 "அம்மா" என்னும் சொல் தாய் என்னும் பொருளில் அல்ல, பெண்களை மதிப்புடன் குறிப்பிடும் பொருளில் இங்குக் கையாளப்படுகிறது.

5αὐτοῦ ἡ μήτηρ Λέγει τοῖς διακόνοις ποιήσατε Ὅ τι ἂν λέγῃ ὑμῖν

5 அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள்.
5 His mother said to the servants, “Do whatever He tells you.”
5 இயேசுவின் தாய் பணியாளரிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றார்.2

6δὲ ἓξ λίθιναι ὑδρίαι Ἦσαν κείμεναι ἐκεῖ κατὰ τῶν Ἰουδαίων τὸν καθαρισμὸν χωροῦσαι ἀνὰ δύο ἢ τρεῖς μετρητὰς

6 யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது.
6 Now six stone water jars had been set there for the Jewish rites of purification. Each could hold from twenty to thirty gallons.a
6 யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும்.

7Ἰησοῦς λέγει αὐτοῖς ὁ Γεμίσατε τὰς ὑδρίας ὕδατος Καὶ ἐγέμισαν αὐτὰς ἕως ἄνω

7 இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள்.
7 Jesus told the servants, “Fill the jars with water.” So they filled them to the brim.
7 இயேசு அவர்களிடம், "இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள்.

8νῦν Ἀντλήσατε Καὶ λέγει αὐτοῖς καὶ φέρετε τῷ ἀρχιτρικλίνῳ Οἱ δὲ ἤνεγκαν

8 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரரிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள்.
8 “Now draw some out,” He said, “and take it to the master of the banquet.” They did so,
8 பின்பு அவர், "இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டுபோங்கள்" என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.

9δὲ ὡς ὁ ἀρχιτρίκλινος ἐγεύσατο τὸ ὕδωρ γεγενημένον οἶνον καὶ οὐκ ᾔδει πόθεν ἐστίν δὲ οἱ διάκονοι οἱ ἠντληκότες τὸ ὕδωρ ᾔδεισαν ὁ ἀρχιτρίκλινος φωνεῖ τὸν νυμφίον

9 அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:
9 and the master of the banquet tasted the water that had been turned into wine. He did not know where it was from, but the servants who had drawn the water knew. Then he called the bridegroom aside
9 பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு,

10καὶ λέγει αὐτῷ Πᾶς ἄνθρωπος τίθησιν τὸν καλὸν οἶνον πρῶτον καὶ τὸν ἐλάσσω ὅταν μεθυσθῶσιν σὺ τετήρηκας τὸν καλὸν οἶνον ἕως ἄρτι

10 எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இது வரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.
10 and said, “Everyone serves the fine wine first, and then the cheap wine after the guests are drunk. But you have saved the fine wine until now!”
10 "எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?" என்று கேட்டார்.

11Ἰησοῦς ἐποίησεν Ταύτην ἀρχὴν τῶν σημείων ὁ ἐν Κανὰ τῆς Γαλιλαίας καὶ ἐφανέρωσεν τὴν αὐτοῦ δόξαν καὶ αὐτοῦ οἱ μαθηταὶ ἐπίστευσαν εἰς αὐτὸν

11 இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார், அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
11 Jesus performed this, the first of His signs, at Cana in Galilee. He thus revealed His glory, and His disciples believed in Him.
11 இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

Jesus Cleanses the Temple (Matthew 21:12–17; Mark 11:15–19; Luke 19:45–48)

12Μετὰ τοῦτο κατέβη εἰς Καφαρναοὺμ αὐτὸς καὶ ἡ αὐτοῦ μήτηρ καὶ οἱ [αὐτοῦ] ἀδελφοὶ καὶ οἱ αὐτοῦ μαθηταὶ καὶ ἔμειναν ἐκεῖ οὐ πολλὰς ἡμέρας

12 அதன்பின்பு அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரரும் அவருடைய சீஷரும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சிலநாள் தங்கினார்கள்.
12 After this, He went down to Capernaum with His mother and brothers and His disciples, and they stayed there a few days.
12 இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர்.3

13Καὶ τὸ τῶν Ἰουδαίων πάσχα ἦν ἐγγὺς καὶ ὁ Ἰησοῦς ἀνέβη εἰς Ἱεροσόλυμα

13 பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போய்,
13 When the Jewish Passover was near, Jesus went up to Jerusalem.
13 யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்;

14καὶ ἐν τῷ ἱερῷ εὗρεν τοὺς πωλοῦντας βόας καὶ πρόβατα καὶ περιστερὰς καὶ τοὺς κερματιστὰς καθημένους

14 தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு,
14 In the temple courtsb He found men selling cattle, sheep, and doves, and money changers seated at their tables.
14 கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்;

15καὶ ποιήσας φραγέλλιον ἐκ σχοινίων ἐξέβαλεν πάντας ἐκ τοῦ ἱεροῦ τε τά πρόβατα καὶ τοὺς βόας καὶ ἐξέχεεν τὰ κέρματα τῶν κολλυβιστῶν καὶ ἀνέτρεψεν τὰς τραπέζας

15 கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு,
15 So He made a whip out of cords and drove all from the temple courts, both sheep and cattle. He poured out the coins of the money changers and overturned their tables.
15 அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடுமாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார்.

16καὶ τοῖς πωλοῦσιν τὰς περιστερὰς εἶπεν Ἄρατε ταῦτα ἐντεῦθεν μὴ ποιεῖτε μου τοῦ Πατρός τὸν οἶκον οἶκον ἐμπορίου

16 புறாவிற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார்.
16 To those selling doves He said, “Get these out of here! How dare you turn My Father’s house into a marketplace!”
16 அவர் புறா விற்பவர்களிடம், "இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்" என்று கூறினார்.

17αὐτοῦ οἱ μαθηταὶ Ἐμνήσθησαν ὅτι ἐστίν γεγραμμένον Ὁ ζῆλος τοῦ σου οἴκου καταφάγεταί με

17 அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள்.
17 His disciples remembered that it is written: “Zeal for Your house will consume Me.”c
17 அப்போது அவருடைய சீடர்கள். ⦃"உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் § என்னை எரித்துவிடும்"⦄ என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள்.4

18οὖν οἱ Ἰουδαῖοι Ἀπεκρίθησαν καὶ εἶπαν αὐτῷ Τί σημεῖον δεικνύεις ἡμῖν ὅτι ποιεῖς ταῦτα

18 அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள்.
18 On account of this, the Jews demanded, “What sign can You show us to prove Your authority to do these things?”
18 யூதர்கள் அவரைப் பார்த்து, "இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?" என்று கேட்டார்கள்.

19Ἰησοῦς Ἀπεκρίθη καὶ εἶπεν αὐτοῖς Λύσατε τοῦτον τὸν ναὸν καὶ ἐν τρισὶν ἡμέραις ἐγερῶ αὐτόν

19 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்.
19 Jesus answered, “Destroy this temple, and in three days I will raise it up again.”
19 இயேசு மறுமொழியாக அவர்களிடம், "இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்" என்றார்.5

20οὗτος ὁ ναὸς Τεσσεράκοντα καὶ ἓξ ἔτεσιν οἰκοδομήθη οὖν οἱ Ἰουδαῖοι Εἶπαν καὶ σὺ ἐγερεῖς αὐτόν ἐν τρισὶν ἡμέραις

20 அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம்சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள்.
20 “This temple took forty-six years to build,” the Jews replied, “and You are going to raise it up in three days?”
20 அப்போது யூதர்கள், "இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ?" என்று கேட்டார்கள்.

21δὲ Ἐκεῖνος ἔλεγεν περὶ τοῦ ναοῦ αὐτοῦ τοῦ σώματος

21 அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார்.
21 But Jesus was speaking about the temple of His body.
21 ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார்.

22οὖν ὅτε ἠγέρθη ἐκ νεκρῶν αὐτοῦ οἱ μαθηταὶ ἐμνήσθησαν ὅτι ἔλεγεν τοῦτο καὶ ἐπίστευσαν τῇ γραφῇ καὶ τῷ λόγῳ ὃν ὁ Ἰησοῦς εἶπεν

22 அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள்.
22 After He was raised from the dead, His disciples remembered that He had said this. Then they believed the Scripture and the word that Jesus had spoken.
22 அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்து மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.

23δὲ Ὡς ἦν ἐν τοῖς Ἱεροσολύμοις ἐν τῷ πάσχα ἐν τῇ ἑορτῇ πολλοὶ θεωροῦντες αὐτοῦ τὰ σημεῖα ἃ ἐποίει ἐπίστευσαν εἰς αὐτοῦ τὸ ὄνομα

23 பஸ்காபண்டிகையிலே அவர் எருசலேமிலிருக்கையில், அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு, அவருடையநாமத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
23 While He was in Jerusalem at the Passover Feast, many people saw the signs He was doing and believed in His name.
23 பாஸ்கா விழாவின்போது இயேசு எருசலேமில் இருந்த வேளையில் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டு பலர் அவரது பெயரில் நம்பிக்கை வைத்தனர்.

24δὲ Ἰησοῦς αὐτὸς οὐκ ἐπίστευεν αὑτὸν αὐτοῖς διὰ αὐτὸν τὸ γινώσκειν πάντας

24 அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை.
24 But Jesus did not entrust Himself to them, for He knew them all.
24 ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை; ஏனெனில் அவருக்கு அனைவரைப்பற்றியும் தெரியும்.

25καὶ ὅτι εἶχεν οὐ χρείαν ἵνα τις μαρτυρήσῃ περὶ τοῦ ἀνθρώπου γὰρ αὐτὸς ἐγίνωσκεν τί ἦν ἐν τῷ ἀνθρώπῳ

25 மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை.
25 He did not need any testimony about man, for He knew what was in a man.
25 மனிதரைப்பற்றி அவருக்கு யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் மனித உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

John Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
6 a Greek two or three metretae ; that is, approximately 20.8 to 31.2 gallons (78.8 to 118.1 liters)
14 b Literally the temple ; also in verse 15
17 c Psalm 69:9

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.