பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

John  யோவான்  Ἰωάννην

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

யோவான் 17 | John 17

Prayer for the Son

1Ἰησοῦς ἐλάλησεν Ταῦτα καὶ ἐπάρας αὐτοῦ τοὺς ὀφθαλμοὺς εἰς τὸν οὐρανὸν εἶπεν Πάτερ ἡ ὥρα ἐλήλυθεν δόξασόν σου τὸν Υἱόν ἵνα ὁ Υἱὸς δοξάσῃ σέ

1 இயேசு இவைகளைச் சொன்ன பின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து:
1 When Jesus had spoken these things, He lifted up His eyes to heaven and said, “Father, the hour has come. Glorify Your Son, that Your Son may glorify You.
1 இவ்வாறு பேசியபின் இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: "தந்தையே, நேரம் வந்து விட்டது. உம் மகன் உம்மை மாட்சிப் படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும்.

2καθὼς ἔδωκας αὐτῷ ἐξουσίαν πάσης σαρκός ἵνα δώσῃ αὐτοῖς αἰώνιον ζωὴν πᾶν ὃ δέδωκας αὐτῷ

2 பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.
2 For You granted Him authority over all people,a so that He may give eternal life to all those You have given Him.
2 ஏனெனில், நீர் அவரிடம் ஒப்படைத்தவர்கள் அனைவருக்கும் அவர் நிலைவாழ்வை அருளுமாறு மனிதர் அனைவர்மீதும் அவருக்கு அதிகாரம் அளித்துள்ளீர்.1

3δέ αὕτη ἐστιν αἰώνιος ἡ ζωὴ ἵνα γινώσκωσιν σὲ τὸν μόνον ἀληθινὸν Θεὸν καὶ Ἰησοῦν Χριστόν ὃν ἀπέστειλας

3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
3 Now this is eternal life, that they may know You, the only true God, and Jesus Christ, whom You have sent.
3 உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு.2

4ἐγώ ἐδόξασα σε ἐπὶ τῆς γῆς τελειώσας τὸ ἔργον ὃ δέδωκάς μοι ἵνα ποιήσω

4 பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்.
4 I have glorified You on earth by accomplishing the work You gave Me to do.
4 நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்.3

5καὶ νῦν Πάτερ σύ δόξασόν με παρὰ σεαυτῷ τῇ δόξῃ ᾗ εἶχον παρὰ σοί πρὸ τὸν κόσμον τοῦ εἶναι

5 பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.
5 And now, Father, glorify Me in Your presence with the glory I had with You before the world existed.
5 தந்தையே, உலகம் தோன்றும் முன்பே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர். இப்போது உம் திருமுன் அதே மாட்சியை எனக்குத் தந்தருளும்.

Prayer for the Disciples

6Ἐφανέρωσά σου τὸ ὄνομα τοῖς ἀνθρώποις οὓς ἔδωκάς μοι ἐκ τοῦ κόσμου ἦσαν σοὶ ἔδωκας αὐτοὺς κἀμοὶ καὶ τετήρηκαν σου τὸν λόγον

6 நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.
6 I have revealed Your name to those You have given Me out of the world. They were Yours; You gave them to Me, and they have kept Your word.
6 நீர் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன். உமக்கு உரியவர்களாய் இருந்த அவர்களை நீர் என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்தார்கள்.

7νῦν ἔγνωκαν ὅτι πάντα ὅσα δέδωκάς μοι εἰσιν παρὰ σοῦ

7 நீர் எனக்குத் தந்தவைகளெல்லாம் உம்மாலே உண்டாயினவென்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள்.
7 Now they know that everything You have given Me comes from You.
7 நீர் எனக்குத் தந்தவை அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தவை என்பது இப்போது அவர்களுக்குத் தெரியும்.

8ὅτι δέδωκα αὐτοῖς τὰ ῥήματα ἃ ἔδωκάς μοι καὶ αὐτοὶ ἔλαβον καὶ ἔγνωσαν ἀληθῶς ὅτι ἐξῆλθον παρὰ σοῦ καὶ ἐπίστευσαν ὅτι σύ ἀπέστειλας με

8 நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர், என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்.
8 For I have given them the words You gave Me, and they have received them. They knew with certainty that I came from You, and they believed that You sent Me.
8 ஏனெனில், நீர் என்னிடம் சொன்னவற்றையே நான் அவர்களிடமும் சொன்னேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு நான் உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையில் அறிந்துகொண்டார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்பதையும் நம்பினார்கள்.

9Ἐγὼ ἐρωτῶ περὶ αὐτῶν οὐ ἐρωτῶ περὶ τοῦ κόσμου ἀλλὰ περὶ ὧν δέδωκάς μοι ὅτι εἰσιν σοί

9 நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே.
9 I ask on their behalf. I do not ask on behalf of the world, but on behalf of those You have given Me; for they are Yours.
9 அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். அவர்கள் உமக்கு உரியவர்கள்.

10καὶ πάντα τὰ ἐμὰ ἐστιν σά καὶ τὰ σὰ ἐμά καὶ ἐν αὐτοῖς δεδόξασμαι

10 என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்,
10 All I have is Yours, and all You have is Mine; and in them I have been glorified.
10 "என்னுடையதெல்லாம் உம்முடையதே; உம்முடையதும் என்னுடையதே. அவர்கள் வழியாய் நான் மாட்சி பெற்றிருக்கிறேன்.

11καὶ εἰμὶ οὐκέτι ἐν τῷ κόσμῳ καὶ αὐτοὶ εἰσίν ἐν τῷ κόσμῳ κἀγὼ ἔρχομαι πρὸς σὲ ἅγιε Πάτερ τήρησον αὐτοὺς ἐν σου τῷ ὀνόματί ᾧ δέδωκάς μοι ἵνα ὦσιν ἓν καθὼς ἡμεῖς

11 நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.
11 I will no longer be in the world, but they are in the world, and I am coming to You. Holy Father, protect them by Your name, the name You gave Me,b so that they may be one as We are one.
11 இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன். தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்.

12ὅτε ἤμην μετ’ αὐτῶν ἐγὼ ἐτήρουν καὶ ἐφύλαξα αὐτοὺς ἐν σου τῷ ὀνόματί ᾧ δέδωκάς μοι καὶ οὐδεὶς ἐξ αὐτῶν ἀπώλετο εἰ μὴ ὁ υἱὸς τῆς ἀπωλείας ἵνα ἡ γραφὴ πληρωθῇ

12 நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.
12 While I was with them, I protected and preserved them by Your name, the name You gave Me. Not one of them has been lost, except the son of destruction, so that the Scripture would be fulfilled.
12 நான் அவர்களோடு இருந்தபோது நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்து வந்தேன்; நன்கு பாதுகாத்தேன். அவர்களுள் எவரும் அழிவுறவில்லை. மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறும் வண்ணம் அழிவுக்குரியவன் மட்டுமே அழிவுற்றான்.4

13δὲ Νῦν ἔρχομαι πρὸς σὲ καὶ λαλῶ ταῦτα ἐν τῷ κόσμῳ ἵνα ἔχωσιν τὴν ἐμὴν τὴν χαρὰν πεπληρωμένην ἐν ἑαυτοῖς

13 இப்பொழுது நான் உம்மிடத்திற்கு வருகிறேன்; அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாய் அடையும்படி உலகத்தில் இருக்கையில் இவைகளைச் சொல்லுகிறேன்.
13 But now I am coming to You; and I am saying these things while I am in the world, so that they may have My joy fulfilled within them.
13 "இப்போது உம்மிடம் வருகிறேன். என் மகிழ்ச்சி அவர்களுள் நிறைவாக இருக்கும்படி நான் உலகில் இருக்கும்போதே இதைச் சொல்கிறேன்.

14ἐγὼ δέδωκα αὐτοῖς σου τὸν λόγον καὶ ὁ κόσμος ἐμίσησεν αὐτούς ὅτι εἰσὶν οὐκ ἐκ τοῦ κόσμου καθὼς ἐγὼ εἰμὶ οὐκ ἐκ τοῦ κόσμου

14 நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.
14 I have given them Your word and the world has hated them; for they are not of the world, just as I am not of the world.
14 உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால், உலகம் அவர்களை வெறுக்கிறது.

15Οὐκ ἐρωτῶ ἵνα ἄρῃς αὐτοὺς ἐκ τοῦ κόσμου ἀλλ’ ἵνα τηρήσῃς αὐτοὺς ἐκ τοῦ πονηροῦ

15 நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
15 I am not asking that You take them out of the world, but that You keep them from the evil one.c
15 அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை; தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன்.5

16εἰσὶν οὐκ ἐκ τοῦ κόσμου καθὼς ἐγὼ εἰμὶ οὐκ ἐκ τοῦ κόσμου

16 நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.
16 They are not of the world, just as I am not of the world.
16 நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.

17ἁγίασον αὐτοὺς ἐν τῇ ἀληθείᾳ ὁ σὸς ὁ λόγος ἐστιν ἀλήθειά

17 உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
17 Sanctify them by the truth; Your word is truth.
17 உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை.

18καθὼς ἀπέστειλας ἐμὲ εἰς τὸν κόσμον κἀγὼ ἀπέστειλα αὐτοὺς εἰς τὸν κόσμον

18 நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்.
18 As You sent Me into the world, I have also sent them into the world.
18 நீர் என்னை உலகிற்கு அனுப்பியது போல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன்.6

19καὶ ὑπὲρ αὐτῶν ἐγὼ ἁγιάζω ἐμαυτόν ἵνα αὐτοὶ καὶ ὦσιν ἡγιασμένοι ἐν ἀληθείᾳ

19 அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.
19 For them I sanctify Myself, so that they too may be sanctified by the truth.
19 அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன்.7

Prayer for All Believers

20δὲ Οὐ ἐρωτῶ περὶ τούτων μόνον ἀλλὰ καὶ περὶ τῶν πιστευόντων εἰς ἐμέ διὰ αὐτῶν τοῦ λόγου

20 நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
20 I am not asking on behalf of them alone, but also on behalf of those who will believe in Me through their message,
20 "அவர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன்.8

21ἵνα πάντες ὦσιν ἓν καθὼς σύ πάτερ* ἐν ἐμοὶ κἀγὼ ἐν σοί ἵνα αὐτοὶ καὶ ὦσιν ἐν ἡμῖν ἵνα ὁ κόσμος πιστεύῃ ὅτι σύ ἀπέστειλας με

21 அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
21 that all of them may be one, as You, Father, are in Me, and I am in You. May they also be in Us, so that the world may believe that You sent Me.
21 எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்.

22Κἀγὼ δέδωκα αὐτοῖς τὴν δόξαν ἣν δέδωκάς μοι ἵνα ὦσιν ἓν καθὼς ἡμεῖς ἕν

22 நாம் ஒன்றாயிருக்கிறதுபோல: அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
22 I have given them the glory You gave Me, so that they may be one as We are one—
22 நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன்.

23ἐγὼ ἐν αὐτοῖς καὶ σὺ ἐν ἐμοί ἵνα ὦσιν τετελειωμένοι εἰς ἕν ἵνα ὁ κόσμος γινώσκῃ ὅτι σύ ἀπέστειλας με καὶ ἠγάπησας αὐτοὺς καθὼς ἠγάπησας ἐμὲ

23 ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
23 I in them and You in Me—that they may be perfectly united, so that the world may know that You sent Me and have loved them just as You have loved Me.
23 இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்து கொள்ளும்.9

24Πάτερ* θέλω ἵνα ὃ δέδωκάς μοι κἀκεῖνοι ὦσιν μετ’ ἐμοῦ ὅπου ἐγὼ εἰμὶ ἵνα θεωρῶσιν τὴν ἐμὴν τὴν δόξαν ἣν δέδωκάς μοι ὅτι ἠγάπησάς με πρὸ καταβολῆς κόσμου

24 பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்.
24 Father, I want those You have given Me to be with Me where I am, that they may see the glory You gave Me because You loved Me before the foundation of the world.
24 "தந்தையே, உலகம் தோன்றுமுன்னே நீர் என்மீது அன்புகொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.10

25δίκαιε Πάτερ* καὶ ὁ κόσμος οὐκ ἔγνω σε δέ ἐγὼ ἔγνων σε καὶ οὗτοι ἔγνωσαν ὅτι σύ ἀπέστειλας με

25 நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.
25 Righteous Father, although the world has not known You, I know You, and they know that You sent Me.
25 நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்து கொண்டார்கள்.11

26καὶ ἐγνώρισα σου τὸ ὄνομά αὐτοῖς καὶ γνωρίσω ἵνα ἡ ἀγάπη ἣν ἠγάπησάς με ᾖ ἐν αὐτοῖς κἀγὼ ἐν αὐτοῖς

26 நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.
26 And I have made Your name known to them and will continue to make it known, so that the love You have for Me may be in them, and I in them.”
26 நான் அவர்களோடு இணைந்திருக்கவும் நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்கள்மீது இருக்கவும் உம்மைப்பற்றி அவர்களுக்கு அறிவித்தேன்; இன்னும் அறிவிப்பேன்."


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

John Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
2 a Literally all flesh
11 b Literally Your name, which You gave Me ; TR Your name. These You have given Me ; similarly in verse 12
15 c Or from evil

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.