பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

John  யோவான்  Ἰωάννην

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

யோவான் 15 | John 15

Jesus the True Vine (Isaiah 27:1–13)

1Ἐγώ εἰμι ἡ ἡ ἀληθινή ἄμπελος καὶ ὁ μου Πατήρ ἐστιν ὁ γεωργός

1 நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர்.
1 “I am the true vine, and My Father is the keeper of the vineyard.
1 "உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர்.

2αἴρει αὐτό πᾶν κλῆμα ἐν ἐμοὶ μὴ φέρον καρπὸν καὶ πᾶν τὸ φέρον καρπὸν καθαίρει αὐτὸ ἵνα φέρῃ πλείονα καρπὸν

2 என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.
2 He cuts off every branch in Me that bears no fruit, and every branch that does bear fruit, He prunes to make it even more fruitful.
2 என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார்.1

3ὑμεῖς ἐστε ἤδη καθαροί διὰ τὸν λόγον ὃν λελάληκα ὑμῖν

3 நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.
3 You are already clean because of the word I have spoken to you.
3 நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள்.

4μείνατε ἐν ἐμοί κἀγὼ ἐν ὑμῖν καθὼς τὸ οὐ κλῆμα δύναται φέρειν ἀφ’ καρπὸν ἑαυτοῦ ἐὰν μὴ μένῃ ἐν τῇ ἀμπέλῳ οὕτως οὐδὲ ὑμεῖς ἐὰν μὴ μένητε ἐν ἐμοὶ

4 என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.
4 Remain in Me, and I will remain in you. Just as no branch can bear fruit by itself unless it remains in the vine, neither can you bear fruit unless you remain in Me.
4 நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது.

5Ἐγώ εἰμι ἡ ἄμπελος ὑμεῖς τὰ κλήματα ὁ μένων ἐν ἐμοὶ κἀγὼ ἐν αὐτῷ οὗτος φέρει πολύν καρπὸν ὅτι χωρὶς ἐμοῦ οὐ δύνασθε ποιεῖν οὐδέν

5 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
5 I am the vine and you are the branches. The one who remains in Me, and I in him, will bear much fruit. For apart from Me you can do nothing.
5 நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.2

6ἐὰν τις μή μένῃ ἐν ἐμοί ὡς τὸ κλῆμα ἐβλήθη ἔξω καὶ ἐξηράνθη καὶ αὐτὰ συνάγουσιν καὶ βάλλουσιν εἰς τὸ πῦρ καὶ καίεται

6 ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம்.
6 If anyone does not remain in Me, he is like a branch that is thrown away and withers. Such branches are gathered up, thrown into the fire, and burned.
6 என்னோடு இணைந்து இராதவர் கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.3

7ἐὰν μείνητε ἐν ἐμοὶ καὶ τὰ μου ῥήματά μείνῃ ἐν ὑμῖν αἰτήσασθε ὃ ἐὰν θέλητε καὶ γενήσεται ὑμῖν

7 நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.
7 If you remain in Me and My words remain in you, ask whatever you wish, and it will be done for you.
7 நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.4

8ἐν τούτῳ ὁ μου Πατήρ ἐδοξάσθη ἵνα φέρητε πολὺν καρπὸν καὶ γένησθε* ἐμοὶ μαθηταί

8 நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.
8 This is to My Father’s glory, that you bear much fruit, proving yourselves to be My disciples.
8 நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.

No Greater Love

9Καθὼς ὁ Πατήρ ἠγάπησέν με κἀγὼ ἠγάπησα ὑμᾶς μείνατε ἐν τῇ ἐμῇ τῇ ἀγάπῃ

9 பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.
9 As the Father has loved Me, so have I loved you. Remain in My love.
9 என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்.

10ἐὰν τηρήσητε τὰς μου ἐντολάς μενεῖτε ἐν τῇ μου ἀγάπῃ καθὼς ἐγὼ τετήρηκα «τοῦ μου» Πατρός «τὰς ἐντολὰς» καὶ μένω ἐν τῇ αὐτοῦ ἀγάπῃ

10 நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.
10 If you keep My commandments, you will remain in My love, just as I have kept My Father’s commandments and remain in His love.
10 நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.

11λελάληκα ὑμῖν Ταῦτα ἵνα ἡ ἐμὴ ἡ χαρὰ ᾖ ἐν ὑμῖν καὶ ἡ ὑμῶν χαρὰ πληρωθῇ

11 என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
11 I have told you these things so that My joy may be in you and your joy may be complete.
11 என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.

12Αὕτη ἐστὶν ἡ ἐμὴ ἡ ἐντολὴ ἵνα ἀγαπᾶτε ἀλλήλους καθὼς ἠγάπησα ὑμᾶς

12 நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.
12 This is My commandment, that you love one another as I have loved you.
12 "நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.

13μείζονα ἀγάπην ἔχει οὐδεὶς ταύτης ἵνα τις τὴν θῇ αὐτοῦ ψυχὴν ὑπὲρ τῶν αὐτοῦ φίλων

13 ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.
13 Greater love has no one than this, that he lay down his life for his friends.
13 தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.

14Ὑμεῖς ἐστε μού φίλοι ἐὰν ποιῆτε ἃ* ἐγὼ ἐντέλλομαι ὑμῖν

14 நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.
14 You are My friends if you do what I command you.
14 நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.

15οὐκέτι λέγω ὑμᾶς δούλους ὅτι ὁ δοῦλος οὐκ οἶδεν τί αὐτοῦ ὁ κύριος ποιεῖ δὲ εἴρηκα ὑμᾶς φίλους ὅτι πάντα ἃ ἤκουσα παρὰ μου Πατρός ἐγνώρισα τοῦ ὑμῖν

15 இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.
15 No longer do I call you servants, for a servant does not understand what his master is doing. But I have called you friends, because everything I have learned from My Father I have made known to you.
15 இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில், தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில், என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.

16ὑμεῖς οὐχ ἐξελέξασθε με ἀλλ’ ἐγὼ ἐξελεξάμην ὑμᾶς καὶ ἔθηκα ὑμᾶς ἵνα ὑμεῖς ὑπάγητε καὶ φέρητε καρπὸν καὶ ὁ ὑμῶν καρπὸς μένῃ ἵνα ὅ¦τι ἂν αἰτήσητε τὸν Πατέρα ἐν μου τῷ ὀνόματί δῷ ὑμῖν

16 நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.
16 You did not choose Me, but I chose you. And I appointed you to go and bear fruit—fruit that will remain—so that whatever you ask the Father in My name, He will give you.
16 நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே, நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.5

17ταῦτα ἐντέλλομαι ὑμῖν ἵνα ἀγαπᾶτε ἀλλήλους

17 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன்.
17 This is My command to you: Love one another.
17 நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.

The Hatred of the World

18Εἰ ὁ κόσμος μισεῖ ὑμᾶς γινώσκετε ὅτι μεμίσηκεν ἐμὲ πρῶτον ὑμῶν

18 உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.
18 If the world hates you, understand that it hated Me first.
18 "உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்கு முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.6

19εἰ ἦτε ἐκ τοῦ κόσμου ὁ κόσμος ἂν ἐφίλει τὸ ἴδιον δὲ τοῦτο ὁ κόσμος μισεῖ ὑμᾶς ὅτι διὰ ἐστέ οὐκ ἐκ τοῦ κόσμου ἀλλ’ ἐγὼ ἐξελεξάμην ὑμᾶς ἐκ τοῦ κόσμου

19 நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.
19 If you were of the world, it would love you as its own. Instead, the world hates you, because you are not of the world, but I have chosen you out of the world.
19 நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில் உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே, உலகு உங்களை வெறுக்கிறது.

20Μνημονεύετε τοῦ λόγου οὗ ἐγὼ εἶπον ὑμῖν Οὐκ δοῦλος ἔστιν μείζων τοῦ αὐτοῦ κυρίου εἰ ἐδίωξαν ἐμὲ διώξουσιν ὑμᾶς καὶ εἰ ἐτήρησαν μου τὸν λόγον τηρήσουσιν τὸν ὑμέτερον καὶ

20 ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்.
20 Remember the word that I spoke to you: ‘No servant is greater than his master.’a If they persecuted Me, they will persecute you as well; if they kept My word, they will keep yours as well.
20 பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள். என் வார்த்தையைக் கடைப்பிடித்திருந்தால் தானே உங்கள் வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்!7

21ἀλλὰ ποιήσουσιν πάντα εἰς ὑμᾶς ταῦτα διὰ μου τὸ ὄνομά ὅτι οὐκ οἴδασιν τὸν πέμψαντά με

21 அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள்.
21 But they will treat you like this because of My name, since they do not know the One who sent Me.
21 என் பெயரின் பொருட்டு உங்களை இப்படியெல்லாம் நடத்துவார்கள். ஏனெனில், என்னை அனுப்பியவரை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.

22εἰ μὴ ἦλθον καὶ ἐλάλησα αὐτοῖς οὐκ εἴχοσαν ἁμαρτίαν νῦν δὲ ἔχουσιν οὐκ πρόφασιν περὶ αὐτῶν τῆς ἁμαρτίας

22 நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்துப் போக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை.
22 If I had not come and spoken to them, they would not be guilty of sin. Now, however, they have no excuse for their sin.
22 "நான் வந்து அவர்களிடம் பேசியிராவிட்டால் அவர்களுக்குப் பாவம் இராது. ஆனால், இப்போது அவர்கள் தங்கள் பாவத்துக்குச் சாக்குப் போக்குச் சொல்ல வழியில்லை.

23Ὁ μισῶν ἐμὲ μισεῖ μου τὸν Πατέρα καὶ

23 என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.
23 Whoever hates Me hates My Father as well.
23 என்னை வெறுப்போர் என் தந்தையையும் வெறுக்கின்றனர்.

24εἰ μὴ ἐποίησα ἐν αὐτοῖς τὰ ἔργα ἃ οὐδεὶς ἄλλος ἐποίησεν οὐκ εἴχοσαν ἁμαρτίαν δὲ νῦν καὶ ἑωράκασιν καὶ μεμισήκασιν καὶ ἐμὲ καὶ μου τὸν Πατέρα

24 வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள்.
24 If I had not done among them the works that no one else did, they would not be guilty of sin; but now they have seen and hated both Me and My Father.
24 வேறு யாரும் செய்திராத செயல்களை நான் அவர்களிடையே செய்யவில்லையென்றால் அவர்களுக்குப் பாவம் இராது. ஆனால், இப்போது அவர்கள் என்னையும் என் தந்தையையும் கண்டும் வெறுத்தார்கள்.

25ἀλλ’ ἵνα πληρωθῇ ὁ λόγος ὁ γεγραμμένος ἐν αὐτῶν τῷ νόμῳ ὅτι Ἐμίσησάν με δωρεάν

25 முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று.
25 But this is to fulfill what is written in their Law: ‘They hated Me without reason.’b
25 'காரணமின்றி என்னை வெறுத்தார்கள்' என்று அவர்களுடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது இவ்வாறு நிறைவேறிற்று.8

26Ὅταν ὁ Παράκλητος ἔλθῃ ὃν ἐγὼ πέμψω ὑμῖν παρὰ τοῦ Πατρός τὸ Πνεῦμα τῆς ἀληθείας ὃ ἐκπορεύεται παρὰ τοῦ Πατρὸς ἐκεῖνος μαρτυρήσει περὶ ἐμοῦ

26 பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்.
26 When the Advocatec comes, whom I will send to you from the Father—the Spirit of truth who proceeds from the Father—He will testify about Me.
26 தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார்.

27δὲ ὑμεῖς καὶ μαρτυρεῖτε ὅτι ἐστε μετ’ ἐμοῦ ἀπ’ ἀρχῆς

27 நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.
27 And you also must testify, because you have been with Me from the beginning.
27 நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில், நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்துவருகிறீர்கள்.9


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

John Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

Footnotes:
20John 13:16
25 b See Psalm 35:19, Psalm 38:19, and Psalm 69:4.
26 c Or Comforter  or Helper  or Counselor ; Greek Paraclete

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.